பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 25: வரிசை 25:
== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
{{commonscat|Pachmarhi|<br/>Pachmarhi Biosphere Reserve}}
{{commonscat|Pachmarhi|<br/>Pachmarhi Biosphere Reserve}}
*[http://envfor.nic.in/news/may99/pachmar.html "Pachmarhi - New Biosphere Reserve"]
*[http://envfor.nic.in/news/may99/pachmar.html "Pachmarhi - New Biosphere Reserve"] {{Webarchive|url=https://web.archive.org/web/20070927183513/http://envfor.nic.in/news/may99/pachmar.html |date=2007-09-27 }}
*[http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm Biosphere Reserves of India] {{Webarchive|url=https://web.archive.org/web/20070128002515/http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm |date=2007-01-28 }}
*[http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm Biosphere Reserves of India] {{Webarchive|url=https://web.archive.org/web/20070128002515/http://cpreec.org/04_phamplets/21_biosphere%20reserves/biosphere%20reserve.htm |date=2007-01-28 }}
*[http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni#5342994372020799474 Enviro News, May 1999] {{Webarchive|url=https://archive.today/20130108083254/http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni%235342994372020799474#5342994372020799474 |date=2013-01-08 }}
*[http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni#5342994372020799474 Enviro News, May 1999] {{Webarchive|url=https://archive.today/20130108083254/http://picasaweb.google.co.in/dineshnema/Anhoni%235342994372020799474#5342994372020799474 |date=2013-01-08 }}

11:46, 20 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

பச்மரி பள்ளத்தாக்கு- பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்

பச்மரி உயிர்க்கோளக் காப்பகம்(Pachmarhi Biosphere Reserve) என்பது இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகமாகும். இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் போரி வனப்பகுதியில் 1862ஆம் ஆண்டு அறிவியல் முறைப்படி வனப்பாதுகாப்பு மற்றும் மேலாண்மை மேற்கொண்டதின் விளைவாக இந்தியாவில் முதன் முதலாக வனத்துறை நிறுவ அடிகோலிடப்பட்டது. அதன் பின்னர் 4,926 ச.கி.மீட்டரில் பரவியுள்ள இப்பகுதியினை 1999 ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. 2009 இல் யுனெஸ்கோ இப்பகுதியினை உயிர்க்கோளக் காப்பகமாக அறிவித்தது.

அமைவிடம்

பச்மரி உயிர்க்கோளக் காப்பகத்திலுள்ள ஓர் அருவி

பச்மரி உயிர்கோளக் காப்பக மத்திய பிரதேசத்தில் ஹொசங்காபாத், பீட்டல், சிந்த்வாரா ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது. சாத்பூரா மலைத்தொடரில் இக்காப்பகம் அமைந்துள்ளது. போரி வன விலங்கு சரணாலயம் (485.72 ச.கி.மீ) பச்மரி வனவிலங்கு சரணலாயம்(417.87 ச.கி.மீ) மற்றும் சாத்புரா தேசியப்பூங்காவையும்(524.37ச.கி.மீ) 510 கிராமங்களையும் உள்ளடக்கியது. இக்காப்பகத்தில் உள்ள பாதல்கோட் என்ற பழங்குடியினக் குக்கிராமம் மாந்தரியல் வல்லுனர்களின் ஆய்வுக்கு உகந்ததாகத் திகழ்கிறது. சாத்பூரா தேசியப் பூங்கா இவ்வுயிர்க்கோளத்தின் மையமண்டலப் பகுதியிலும், மீதமுள்ள 4401.91 கி.மீ2 பகுதி போரி மற்றும் பச்மரி வனவிலங்கு சரணாலயங்கள் தாங்கல் மண்டலப் பகுதியிலும் அமைந்துள்ளன.[1]

தாவரங்கள்

இங்கு பகுதி பசுமைமாறாக்காடுகள், வெப்பமண்ண்டல ஈரக்காடுகள் மற்றும் வறண்டநிலக் காடுகள், இலையுதிர்க்காடுகள் ஆகிய பலவகைக்காடுகள் காணப்படுகின்றன. டாவா, டென்வா, நைனி, வேகவதி, சோன்பத்ரா ஆகிய நர்மதை நதியின் கிளையாறுகள் இப்பகுதியில் ஓடுவதால் மாறுபட்ட வகையுடைய காலநிலையையும், மத்திய இந்தியாவிற்கே உரிய பலவகைத் தாவர வளங்களையும் உயிரினப் பல்தன்மை வளத்தையும் கொண்டுள்ளது.[2]

தேக்கு, சால், மூங்கில் போன்ற மரவகைகள் இக்காப்பகத்தில் மிகுந்து காணப்படுகின்றன.[3] இவ்வுயிர்க்கோளத்தில் 30 வகையான தாலோபைட்டுகள், 83 வகையான பாசிகள், 21 வகையான விதைகளற்ற தாவரங்கள் மற்றும் 7 வகையான பூவா தாவரங்கள் காணப்படுகின்றன. இது தாவரவியலாளர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. விதைகளற்ற 71 தாவர வகைகளில், 48 வகையான பெரணிகள் காணப்படுகின்றன.[4] நறுமணப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான மருத்துவத் தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன.[5]

விலங்குகள்

இக்காப்பகத்தில் 50 வகையான பாலூட்டிகள், 254 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான ஊர்வன போன்றவை இங்கு கண்டறியப்பட்டள்ளன. பாம்புதிண்ணிக் கழுகு, கருங்கழுகு, சிகப்பு காட்டுக்கோழி, மலபார் மலை மொங்கான், பறக்கும் அணில், கடமான், புள்ளிமான், காட்டெருமை, நரி, லங்கூர் குரங்கு, முள்ளம்பன்றி, காட்டுநாய், இந்திய ஓநாய், கழுதைப்புலி, சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்கினங்கள் காணப்படுகின்றன.[6]

தொல்லியல்

இக்காப்பகத்திலுள்ள அனேக குகைகளில் காணப்படும் சுமார் 250 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களிலிருந்து இங்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. இப்பாறை ஓவியங்கள் தற்போது கேட்பாரற்று அழிந்து வரும் தருவாயில் உள்ளது. பச்மரியைச் சுறறியுள்ள மலைகள் புனித சிவதலமாகக் கருதப்படுகின்றன.நாகபஞ்சமி மற்றும் மகாசிவராத்திரியின் பொழுது சுமார் 12,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிவனை தரிசிக்க வருகிறார்கள். [4]

அச்சுறுத்தல்கள்

அரிதான மூலிகை செடிகள் அகற்றுதல், உண்ணு போன்ற களைச்செடிகள் அதிகரிப்பு, மண்அரிப்பு, நீர்நிலைகள் தூர்ந்து போதல் மற்றும் வேட்டையாடுதல் போன்றவை பெரும் அச்சுறுத்தல்களாகும்.

மேற்கோள்கள்

  1. National Council of Educational Research and Training. "Science: Textbook for Class VIII". Publication Department, 2010, p.80.
  2. "Pachmarhi Biosphere Reserve". Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 8, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  3. National Council of Educational Research and Training. "Science: Textbook for Class VIII". Publication Department, 2010, p.80.
  4. 4.0 4.1 "BIOSPHERE RESERVES OF INDIA". C.P.R. ENVIRONMENTAL EDUCATION CENTRE. Archived from the original on 2011-08-21. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 8, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |dead-url= ignored (help) பிழை காட்டு: Invalid <ref> tag; name "பச்மரி" defined multiple times with different content
  5. "Kala, Chandra Prakash 2011. Journal of Environmental Protection". Scirp.org. 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
  6. "Wild life of India". நவம்பர் 13, 2014. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 8, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,

Pachmarhi Biosphere Reserve

என்பதில் ஊடகங்கள் உள்ளன.