சூழ்நிலை நகைச்சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஒரு '''சூழ்நிலை நகைச்சுவை''' அல்லது '''சூழல் நகைப்பு''' (ஆங்கிலத்தில் en:Sitcom), என்பது நகைச்சுவையின் ஒரு வகையாகும். இவ்வகை நகைச்சுவையில், ஒரு நில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

11:27, 31 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

ஒரு சூழ்நிலை நகைச்சுவை அல்லது சூழல் நகைப்பு (ஆங்கிலத்தில் en:Sitcom), என்பது நகைச்சுவையின் ஒரு வகையாகும். இவ்வகை நகைச்சுவையில், ஒரு நிலையான கதாபாத்திரம் (அ) கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டும், கதை நீண்டு அத்தியாயத்திலிருந்து அத்தியாயமாக கொண்டு செல்லப்படும். சுழ்நிலை நகைச்சுவைகள் முதன்முதலில் வானொலியில் தோன்றின, ஆனால் இன்று அது தொலைக்காட்சியில் ஆதிக்கம் செலுத்திவரும் கதை வடிவங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

ஒரு சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்புகூடத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்படலாம் அல்லது நேரடி பார்வையாளர்கள் இருப்பது போன்ற விளைவை ஒரு சிரிப்பொலி தடத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.

பல சமகால அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவைகள், ஒற்றை படக்கருவி அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் சிரிப்பொலி தடத்தை கொண்டிப்பதில்லை, இதனால் தற்கால சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சிகள், பாரம்பரிய சூழ்நிலை நகைச்சுவைகளை காட்டிலும் 1980 மற்றும் 1990களின் நாடக நிகழ்ச்சிகளை ஒத்து காணப்படுகிறது.

வரலாறு

"சூழ்நிலை நகைச்சுவை" என்ற சொல் 1950 களில் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லை. வானொலியில் உதாரணங்களாக இருந்தன. முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட சூழ்நிலை நகைச்சுவையாக "பின்ரைட்ஸ் புரோக்ரஸ்" என்று கூறப்படுகிறது, 1946 மற்றும் 1947 க்கு இடையில் ஐக்கிய இராச்சியத்தில் பிபிசியில் ஒளிபரப்பப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழ்நிலை_நகைச்சுவை&oldid=3208306" இலிருந்து மீள்விக்கப்பட்டது