பண்டத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43: வரிசை 43:
தீவகம் என இருந்த யாழ்ப்பாணபகுதிகளை 32 கோயிற்பற்றுக்களாக பிரித்தனார் அதில் வலிகாமம் பகுதியில் பிரிக்கப்பட்ட 14 கோயிற்பற்றுக்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு கிராமம் விளங்கியதுடன் பண்டத்தரிப்பு கோயிற் பற்று என்பது பிரான்பற்று,வடலியடைப்பு,சில்லாலை,மாதகல்,பெரியவிளான்,சிறுவிளான்,

மாரீசங்கூடல்,இளவாலை, பனிப்புலம் ஆகிய பலகிராமங்களை குறிப்பதாக இருந்ததினால் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை அக்கிராமங்களின் பிரதேசரீதியான பெயராக பண்டத்தரிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்ற தன்மையினை இனங்காணமுடிகிறது.

போர்த்துக்கேயர் தேவாலயம் ஒன்றை அமைத்து அதனை அண்டிய ஒரு வணிக மைய வளாகத்துடன் வணிக மையமாக பண்டத்தரிப்பு விளங்கியது இத்தகு தன்மை பின் வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்தது.
போர்த்துக்கேயர் தேவாலயம் ஒன்றை அமைத்து அதனை அண்டிய ஒரு வணிக மைய வளாகத்தையும் அமைத்தனார்.இதனால் அக்காலத்திலும் வணிக மையமாக பண்டத்தரிப்பு விளங்கியது இத்தகு தன்மை பின் வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்தது.
ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த மறைப்பரப்பாளரும் வைத்தியருமான ஜோன் ஸ்கூட்டர்
ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த மறைப்பரப்பாளரும் வைத்தியருமான ஜோன் ஸ்கூட்டர்
(DR. John Scudder ) தெற்க்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்க்கத்தேய மருந்தகத்தினை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் . அது மட்டுமல்லாமல் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடிய மகளீர் கல்லூரி யாக பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியும் அமைக்கப்பட்டது.

16:08, 20 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

பண்டத்தரிப்பு

பண்டத்தரிப்பு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°46′22″N 79°58′03″E / 9.772897°N 79.967561°E / 9.772897; 79.967561
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பண்டத்தரிப்பு பண்டத்தரிப்பு_கிராம_அமைவிட அறிமுகம்

பண்டத்தரிப்பு (Pandatharippu) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ் மாவட்டத்திற்குட்பட்ட வலிகாமம் தென்மேற்கு பிரதேசசெயலகம்(சண்டிலிப்பாய் ) ஆளுகைக்குள் அமைந்துள்ளதும் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்காக

J/146( யா/146) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தனித்துவமான நிலப்பரப்பும் சனத்தொகையும் உடையதாக நகர கட்டமைப்புடன் காணப்படும் ஒரு அழகிய கிராமம் ஆகும். பண்டத்தரிப்பானது முன்னைய காலங்களில் பட்டினசபை எனப்படும் உள்ளூராட்சி கட்டமைப்பை கொண்டதாக  அதனையண்டிய அயல் கிராமங்களான   சில்லாலை, வடலியடைப்பு,  பிரான்பற்று, ஆகியவற்றை  அப்பட்டின சபையின் ஆளுகைக்குள் உள்ளடக்கியதாக காணப்பட்டது பிற்பட்ட காலங்களில் 1987ஆம் ஆண்டுகளில் பட்டின,கிராம சபைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பிரதேசசபைகள் என்னும் புதிய உள்ளூராட்சி கட்டமைப்பின் கீழ் வலிதென்மேற்கு  மானிப்பாய் பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட கிராமமாகவும் அப்பிரதேசசபையில் நகரகட்டமைப்புடன் காணப்படும் மானிப்பாய் கிராமத்திற்கு அடுத்து நகரகட்டமைப்புடைய ஒரே ஒரு கிராமமாகவும் பண்டத்தரிப்பு விளங்கி வருகின்றது. 

பண்டத்தரிப்பு_என்னும்_பெயரின் வரலாற்று_பின்னனியும்_கிராமத்தின் வரலாற்று_சுருக்கமும்.

"பண்டத்தரிப்பு" என்கிற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாராலும் தெளிவாக கூறமுடியாவிட்டாலும் வெவ்வேறு காரணங்கள் ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன. ஒருசிலர் பண்டைய காலங்களில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்றும் இதனால் தான் பண்டங்கள் தரித்து நிற்கும் ஊர் என்கிற காரணப் பெயரின் அடிப்படையில் பண்டத்தரிப்பு என பெயர் வந்திருக்கலாம் என கூறுகிறார்கள் . இதனை உறுதிப்படுத்துவதை போன்று வரலாற்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தனது யாழ்ப்பாண இராச்சியம் ஒரு சுருக்க வரலாறு என்னும் நூலில் 149ஆம் பக்கத்தில் யாழ்ப்பாண மன்னர் காலத்திலேயே பண்டத்தரிப்பு ஒரு வணிகமையமாக இருந்தது என்கிறார் அத்துடன் ஒல்லாந்தர் கால குறிப்புக்களை உள்ளடக்கிய பால்தேஸ் பாதிரியார் எழுதிய A_Description_of_the_East-India_Coasts_of_Malabar_and_Coromandel என்கிற புத்தககுறிப்புக்களில் பண்டத்தரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதோடு பண்டத்தரிப்பை குறிப்பிடும் ஓவிய மாதிரியில் ஒல்லாந்த தேவாலயம் மற்றும் வணிககூடம் வியாபாரிகள் யானை, போன்ற விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே வணிக மையம் என்கிற அடிப்படையில் கடல் போக்குவரத்து மார்க்கமான மாதகல் துறைக்கு மிக அருகே அமைந்து இருந்த கிராமம் என்கிற அடிப்படையில் பன்னெடுங்காலமாகவே பண்டத்தரிப்பு என்னும் பெயர் இக்கிராமத்தின் பெயராக அமைந்தது எனலாம் . வேறு சிலர் பாண்டியர்களின் இலங்கை மீதான படையெடுப்பின்போது பாண்டியரின் படைகள் தரித்துச்செல்லும் இடமாக இருந்ததினால் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு என மருவியதாகவும் சில கர்ணபரம்பரை கதைகள் கூறுகின்றன.

இவ்வாறு பன்னெடுங்காலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவொரு கிராமங்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு திகழ்ந்து வந்துள்ளமையின் தொடர்ச்சியை இலங்கை மீதான அல்லது யாழ்ப்பாணத்தின் மீதான அந்நியராட்சி கால பகுதிகளிலும் இனங்காணக்கூடியதாக உள்ளது. 1616இல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்த பின் தமது நிர்வாக வசதிக்காக வலிகாமம்,தென்மராட்சி,வடமராட்சி, தீவகம் என இருந்த யாழ்ப்பாணபகுதிகளை 32 கோயிற்பற்றுக்களாக பிரித்தனார் அதில் வலிகாமம் பகுதியில் பிரிக்கப்பட்ட 14 கோயிற்பற்றுக்களில் ஒன்றாக பண்டத்தரிப்பு கிராமம் விளங்கியதுடன் பண்டத்தரிப்பு கோயிற் பற்று என்பது பிரான்பற்று,வடலியடைப்பு,சில்லாலை,மாதகல்,பெரியவிளான்,சிறுவிளான், மாரீசங்கூடல்,இளவாலை, பனிப்புலம் ஆகிய பலகிராமங்களை குறிப்பதாக இருந்ததினால் அதன் தொடர்ச்சியாக இன்றுவரை அக்கிராமங்களின் பிரதேசரீதியான பெயராக பண்டத்தரிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்ற தன்மையினை இனங்காணமுடிகிறது.

போர்த்துக்கேயர்  தேவாலயம் ஒன்றை அமைத்து அதனை அண்டிய ஒரு வணிக மைய வளாகத்தையும் அமைத்தனார்.இதனால் அக்காலத்திலும் வணிக மையமாக பண்டத்தரிப்பு விளங்கியது இத்தகு தன்மை பின் வந்த ஒல்லாந்தர் காலத்திலும் தொடர்ந்தது. 
    ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் வந்த ஆங்கிலேயர் காலத்தில் 1820ஆம் ஆண்டில் பண்டத்தரிப்பு பகுதியில் மதம்பரப்பு பணிக்காக அமெரிக்காவில் இருந்து வந்த  மறைப்பரப்பாளரும் வைத்தியருமான  ஜோன் ஸ்கூட்டர்

(DR. John Scudder ) தெற்க்காசியாவினதும் இலங்கையினதும் முதல் மேற்க்கத்தேய மருந்தகத்தினை அமைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் . அது மட்டுமல்லாமல் உடுவில் மகளீர் கல்லூரிக்கு அடுத்ததான விடுதிவசதியுடன் கூடிய மகளீர் கல்லூரி யாக பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரியும் அமைக்கப்பட்டது.

1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டத்தரிப்பு&oldid=3200380" இலிருந்து மீள்விக்கப்பட்டது