நகக்‌ஷதங்கள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Ramkumar Kalyani பக்கம் நாகக்‌ஷாதங்கள் (திரைப்படம்) என்பதை நகக்‌ஷதங்கள் (திரைப்படம்) என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
(வேறுபாடு ஏதுமில்லை)

08:31, 21 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

நாகக்‌ஷாதங்கள்
இயக்கம்Hariharan
கதைஎம். டி. வாசுதேவன் நாயர்
திரைக்கதைஎம். டி. வாசுதேவன் நாயர்
நடிப்புமோனிஷா உண்ணி
வினீத்
பி. ஜெயச்சந்திரன்
ஒளிப்பதிவுஷாஜி என். கருண்
வெளியீடுஏப்ரல் 11, 1986 (1986-04-11)
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நாகக்‌ஷாதங்கள் (Nakhakshathangal) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இதன் கதை, மற்றும் திரைக்கதை உருவாக்கியவர் எம். டி. வாசுதேவன் நாயர் ஆவார். இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ஆவார். இப்படத்தில் நடித்தற்காக நடிகை மோனிஷாவுக்கு சிறந்த இளம் நடிகைக்கான விருது கிடைத்தது.[1][2]

கதை

குருவாயூர் கோவிலில் தன் மாமாவுடன் (திலகன்) பிரார்த்தனைக்காக வரும் 16 வயது பையனுக்கு (வினீத்) வயதான முதலாளியம்மாவின் துணைக்கு வந்திருக்கும் பெண்ணுடன் (மோனிஷா உண்ணி) அறிமுகம் கிடைக்கிறது. தன் மாமா கொடுக்கும் துன்பம் தாங்காமல் நம்பூதிரியின் (பி. ஜெயச்சந்திரன்) துணையுடன் அப்பெண்ணின் ஊருக்கே சென்று கல்லூரியில் படிக்கிறான். பின்னர் நம்பூதிரி இவனைமட்டும் விட்டுவிட்டு சென்றுவிட அப்பெண்ணின் முதலாளியின் வீட்டில் வேலைசெய்து கொண்டே படிக்கிறான். பல வேலைகளில் சாதூரியமாக நடந்துகொள்வதுகண்டு அந்த வீட்டு முதலாளியே படிக்கவைத்து தன் காது கேட்காத, பேசமுடியாத பெண்ணுக்கு (சலீமா) இவனைக் கேட்காமலே திருமணம் நிச்சயிக்கிறார். ஆனால் அவன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் காதல் கொண்டுள்ளான் என்று தெரிந்து திட்டுகிறார். முதலாளியின் மகள் வேலைக்காரப் பெண்ணுக்காக விட்டுக்கொடுக்கிறாள். அதே நேரத்தில் வேலைக்காரப்பெண் முதலாளி மகளுக்காக விட்டுக்கொடுக்கிறாள். ஆனால் கடேசியில் சோகத்தில் முடிகிறது.[3] இது ஒரு முக்கோணக்காதல் கதையாகும்.

விருதுகள்

1987 தேசிய திரைப்பட விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Nakhakshathangal". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-22.
  2. "Nakhakshathangal". spicyonion.com. Archived from the original on 22 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2014. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  3. "IMDB". Nakhashathangal.
  4. http://malayalasangeetham.info/s.php?7852

மேலும் பார்க்க