மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
linked with English Wikipedia
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:Q107104807
வரிசை 181: வரிசை 181:


குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாவிட்டால் [[பிடியாணை]] பிறப்பிக்கப்படும். அதற்குப் பயந்து கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்கு வருவார்கள்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/567257-corona-seizes-lawyers-jobs-when-will-the-judiciary-return-to-normal.html|title=வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பையும் பறித்த கரோனா: நீதித்துறை இயல்புக்குத் திரும்புவது எப்போது?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2020-12-30}}</ref> இதன் மூலம் வழக்கு விசாரணைகள் விரைந்து நடக்கும். இதற்காக [[வழக்குத் தகவல் அமைப்பு]] (சி. ஐ. எஸ்) ல் [[ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (ஐ. சி. ஜெ. எஸ்)]] வளைதளம்<ref>{{Cite web|url=https://hasgeek.com/kaarana/introduction-to-integrated-criminal-justice-system/|title=Introduction to Integrated Criminal Justice System – Kaarana|website=hasgeek.com|language=en|access-date=2020-12-30}}</ref> இணைக்கப்பட்டுள்ளது. [[காவல் நிலையங்கள்]] இணைப்பு முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு குற்றவியல் வழக்குகளிலும் தொலைபேசி வழியாக செயல்படுத்த முடியும். இப்போது [[பிடிவாரண்ட்]] தொடர்பான நடவடிக்கைகள் மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு மூலமாக பிடியாணைகள் உருவாக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஒப்புதல் ஆவணம் பெறப்படுவதால் பிடியாணைகளை செயல்படுத்தும் நடைமுறை எளிதக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாவிட்டால் [[பிடியாணை]] பிறப்பிக்கப்படும். அதற்குப் பயந்து கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்கு வருவார்கள்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/567257-corona-seizes-lawyers-jobs-when-will-the-judiciary-return-to-normal.html|title=வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பையும் பறித்த கரோனா: நீதித்துறை இயல்புக்குத் திரும்புவது எப்போது?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2020-12-30}}</ref> இதன் மூலம் வழக்கு விசாரணைகள் விரைந்து நடக்கும். இதற்காக [[வழக்குத் தகவல் அமைப்பு]] (சி. ஐ. எஸ்) ல் [[ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (ஐ. சி. ஜெ. எஸ்)]] வளைதளம்<ref>{{Cite web|url=https://hasgeek.com/kaarana/introduction-to-integrated-criminal-justice-system/|title=Introduction to Integrated Criminal Justice System – Kaarana|website=hasgeek.com|language=en|access-date=2020-12-30}}</ref> இணைக்கப்பட்டுள்ளது. [[காவல் நிலையங்கள்]] இணைப்பு முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு குற்றவியல் வழக்குகளிலும் தொலைபேசி வழியாக செயல்படுத்த முடியும். இப்போது [[பிடிவாரண்ட்]] தொடர்பான நடவடிக்கைகள் மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு மூலமாக பிடியாணைகள் உருவாக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஒப்புதல் ஆவணம் பெறப்படுவதால் பிடியாணைகளை செயல்படுத்தும் நடைமுறை எளிதக்கப்பட்டுள்ளது.

[[en:National_Service_and_Tracking_of_Electronic_Process]]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

13:04, 14 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு[1] என்பது (National Service and Tracking of Elecronic Process- NSTEP) ஒரு இந்திய நீதிமன்றத்தின் அழைப்பாணை மற்றும் அறிவிப்புகளை விரைந்து வழங்கும் நடைமுறையாகும்.[2] இந்த புதிய நடைமுறையானது ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையினை விரைவாக செயல்படுத்தும் நோக்கத்தில் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.[3]

இந்திய உச்ச நீதிமன்றம்
இந்திய உச்ச நீதிமன்றம் லோகோ

தொடக்கம்

படிமம்:Innauguration of NSTEP.png
மின்னணு செயல்முறை தொடக்க விழா காணொலி காட்சி வாயிலாக.

இந்த நடைமுறையானது கடந்த 2018 ம் ஆண்டு இந்தியாவில் ஈ-கமிட்டி[4], இந்திய உச்ச நீதிமன்றத்தால்[5] தொடங்கப்பட்டது[6]. தமிழ் நாட்டில் இந்த சேவை 17.09.2020 அன்று தொடங்கப்பட்டது.[7] 17.09.2020 அன்று புதிதாக ஐந்து சேவைகள், மெய்நிகர் துவக்கம் மூலமாக, இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் (தலைவர், மின் குழு, இந்திய உச்ச நீதிமன்றம்) அவர்களால்,தொடங்கப்பட்டன[8]. அவை: 1. என்.எஸ்.டி.இ.பி (மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு ), 2. ஏற்காடு ஈ-சேவா மையம், 3. ஈ-கோர்ட் சேவைகள் (தமிழக அரசு இ-சேவா மையம் மூலம்), 4. மாவட்ட நீதித்துறையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு மற்றும் 5. மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கைக்கான மின்னணு வழிகாட்டி ஆகியவைகள் ஆகும். இந்த நிகழ்வானது மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாஹி, மற்றும் கணினி குழுவின் தலைவர் நீதிபதி டி.எஸ். சிவஞானம், மற்றும் கணினி குழுவின் உறுப்பினர்கள் நீதிபதி. புஷ்பா சத்தியநாராயணா, நீதிபதி. எம்.சுந்தர், நீதிபதி. ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, நீதிபதி. சி.சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தேறியது. தமிழ் நாட்டில் சுமார் ரூபாய் மூன்று கோடி செலவில் சிறப்பு வசதிகள் கொண்ட 2900 கைபேசிகள் விலைக்கு வாங்கப்பட்டு கட்டளைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. [9]

மற்ற நாடுகளில் நடைமுறை

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

அமெரிக்க நீதிமன்றங்களில் மின்னணு செயல்முறையின் சேவையானது தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது[10]. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சிவில் நீதிமன்றங்களின் சம்மன்களை அனுப்புவதற்கு தனி வழிமுறைகள் உள்ளன.

செயல்முறை சேவை சட்டங்கள் (அமெரிக்கா)

பல மாநிலங்களில் செயல்முறை சேவைச் சட்டங்கள் உள்ளன. இந்த வேறுபாடுகள் பரந்ததாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, நியூயார்க்கில், செயல்முறை சேவைக்கு செயல்முறை சேவையகத்தின் உரிமம் தேவைப்படலாம்; பென்சில்வேனியாவில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஷெரிப் அல்லது ஷெரிப்பின் துணைவரால் மட்டுமே செயல்முறை வழங்கப்படலாம். பொதுவாக, உள்ளூர் சிறிய உரிமைகோரல் நீதிமன்றங்கள் முதல் யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றங்கள் வரை பெரும்பாலான நீதிமன்றங்களுக்கு குறிப்பிட்ட நடைமுறைகள் மற்றும் விதிகள் உள்ளன. ஒவ்வொரு நீதிமன்றத்திலும் குறிப்பிட்ட விதிகள், படிவங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன, அவை செயல்முறை சேவையை வெற்றிகரமாக செயல்படுத்த பின்பற்றப்பட வேண்டும். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃபெடரல் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, செயல்முறை விதிகளின் சேவை சிவில் நடைமுறைகளின் பெடரல் விதிகளில் உள்ளது, அதன் அடிப்படையில் செயல்முறை சட்டங்களின் பெரும்பாலான மாநில சேவை அடிப்படையாகக் கொண்டது

இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டின் நீதிமன்றங்களின் நடைமுறையும்[11] இந்திய நீதிமன்றங்களின் நடைமுறையும் ஒன்றாகவே காணப்படுகின்றன. ஏனெனில், இந்திய நீதிமன்றங்கள் முதலில் இங்கிலாந்து அரசின் சட்டங்களின்படி செயல்பட்டவை ஆகும். அதே நடைமுறைச் சட்டங்கள் சிறிய திருத்தங்களுடன் தற்போதும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன.

நார்வே

நார்வே நாட்டின் நீதிமன்றங்களில்[12] மின்னணு செயல்முறையின் சேவையானது தனி நடைமுறையினை கொண்டுள்ளது[13].

பாக்கிஸ்தான்

பாக்கிஸ்தான் நீதிமன்றங்களின் நடைமுறையும் இந்திய நீதிமன்றங்களின் நடைமுறையும் ஒன்றாகவே காணப்படுகின்றன. ஏனெனில், பாக்கிஸ்தான் நீதிமன்றங்கள் முதலில் இங்கிலாந்து அரசின் சட்டங்களின்படி செயல்பட்டவை ஆகும். அதே நடைமுறைச் சட்டங்கள் சிறிய திருத்தங்களுடன் தற்போதும் நடைமுறையில் உள்ளன.

இலங்கை

இலங்கை நீதிமன்றங்கள் முதலில் இங்கிலாந்து அரசின் சட்டங்களின்படி செயல்பட்டவை ஆகும். எனவே, அதே நடைமுறைச் சட்டங்கள் சிறிய திருத்தங்களுடன் தற்போதும் நடைமுறையில் உள்ளன.

கனடா

கனடா நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் சம்மன் மற்றும் அறிவிப்புகளை அனுப்ப நடைமுறை சட்டம் இயற்றி உள்ளது[14]. கனடா நாட்டின் நீதிமன்றங்களில் மின்னணு செயல்முறையின் சேவையானது தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் நடைமுறை

இந்தியாவில் சம்மன் மற்றும் அறிவிப்புகளை சார்பு செய்வதற்கு என சிவில் வழக்குகளுக்கு என தனி சட்டமும் குற்றவியல் வழக்குகளுக்கு என தனி சட்டமும் உள்ளன. அவை உரிமையியல் நடைமுறைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவை ஆகும்.

உரிமையியல் நடைமுறைச் சட்டம்[15]

உரிமையியல் நடைமுறைச் சட்டதின் படி சம்மன் மற்றும் அறிவிப்புகளை கட்டளை நிறைவேற்றுனர்கள் சார்பு செய்கின்றனர். தற்போது, மின்னணு சம்மன்கள் மற்றும் மின்னணு அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன. இதற்காக, கட்டளை நிறைவேற்றுனர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் கூடிய 2900 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.

குற்றவியல் நடைமுறைச் சட்டம்[16]

குற்றவியல் நடைமுறைச் சட்டதின் படி அழைப்பாணை மற்றும் பிடியாணைகளை காவல் துறை அதிகாரிகள் சார்பு செய்கின்றனர். தற்போது, மின்னணு அழைப்பாணை மற்றும் பிடியாணைகள் காவல் துறை அதிகாரிகளுக்கு நகல் எடுத்து அனுப்பப்படுகின்றன.

மின்னணு செயல்முறை (NSTEP)[17]

படிமம்:மின்னணு செயல்முறையை பெற்றதற்கான புகைபடம் (மாதிரி).png
மின்னணு செயல்முறையை பெற்றதற்கான புகைப்படம் (மாதிரி)

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு நடைமுறையானது சென்னை உயர் நீதிமன்றம் [18]அமைத்துள்ள கணினி குழுவின் மூலம் கடந்த 17.09.2020 ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக தமிழ் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பணிபுரியும் கட்டளைப் பணியாளர்களுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட 2900 கைபேசிகள் சுமார் ரூபாய் மூன்று கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இருந்து தேசிய அளவில் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் உரிமையியல் நடைமுறைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் குறிப்பிடும் வகையில் அழைப்பாணை, அறிவிப்பு, பிடியாணை ஆகியவைகளை அனுப்பி சார்பு செய்யப்படுகிறது. சாதரணமாக ஒரு மாதகாலம் தேவைப்பட்ட இந்த சேவை தற்பொழுது ஒரே நாளில் சார்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

படிமம்:மின்னணு செயல்முறையை பெற்றதற்கான கையொப்பம் புகைபடம் (மாதிரி).png
மின்னணு செயல்முறையை பெற்றதற்கான கையொப்பம் புகைப்படம் (மாதிரி)

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு என்பது வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS-ல் உள்ளமைக்கப்பட்ட ஒரு பொறிமுறை ஆகும், இது மின்னணு செயல்முறையை சார்பு செய்வதற்கும் அதைக் கண்காணிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டின் மூலம், மின்னணு செயல்முறைகளை தரப்பினர்களுக்கு விரைந்து சார்பு செய்யலாம் மற்றும் மின்னணு செயல்முறைகளின் சார்புக்கான ஒப்புதல்களை நீதிமன்றங்கள் குறுகிய காலத்திற்குள் பெறலாம். இந்தியாவில் கிட்டத்தட்ட 15,000 மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்கள் உள்ளன. இந்திய உச்சநீதிமன்றம் அதன் கொள்கைகளால் குடிமக்கள் மைய சேவை களை விரிவுபடுத்த ஈ-கோர்ட்டு[19] சேவைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் கணினி குழு இந்த சேவைக்காக அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடனும் கூடிய கைபேசிகளை கட்டளைப் பணியாளர்களுக்கு வழங்கி உள்ளது.

நீதிபதியின் கண்காணிப்பு

அனைத்து வழக்குகளிலும், நீதிபதி தரப்பினர்களுக்கு அழைப்பாணை அல்லது அறிவிப்பு அல்லது பிடியாணை அனுப்ப உத்தரவிடுகிறார். செயல்முறைகள் சார்பு செய்யப்படுவதைப் பொறுத்து, நீதிபதி வழக்கின் அடுத்த கட்டத்திற்கு வழக்கை கொண்டு செல்கிறார்.

கணினி அதிகாரிகளின் பங்கு

மாவட்ட நீதிமன்றங்களின் கணினி அதிகாரிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மாவட்ட நீதிமன்றங்களின் கணினி அதிகாரியானவர் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS மற்றும் மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பின் ஒருங்கிணைப்பை உள்ளமைக்கின்றனர். வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல், கட்டமைப்புகளை கணினி அதிகாரிகள் பராமரிக்கின்றனர். கணினி அதிகாரிகள் கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு, வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS ல் உள்ள கட்டமைப்பு பகுதியை திறக்க வேண்டும். பின்னர் அவர்கள் ஒருங்கிணைப்பு என்கிற துணை பகுதியை திறக்க வேண்டும். பின்னர் அவர்கள் மின்னணு செயல்முறை தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.பின்னர் அவர்கள் வளைதளத்தை உள்ளிட வேண்டும். இதன் மூலம், வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS ஆனது போர்ட்டலுடன் இணைகிறது. இந்த ஒருங்கிணைப்புக்குப் பிறகு மட்டுமே மின்னணு செயல்முறைக்கான தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு செயல்படும்.

தரவு நுழைவு

தரவு நுழைவு பணியாளர்கள்:

தட்டச்சர் அல்லது சுருக்கெழுத்தர் அல்லது நீதிமன்ற எழுத்தர் அனைத்து தரவுகளையும் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ஸில் உள்ளிடுகின்றனர். ஒரு நீதிமன்றத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், பணிச்சுமையைப் பொறுத்தும், திறந்த நீதிமன்ற வேலையைப் பொறுத்தும், தரவு நுழைவு பணியாளர்கள் அவ்வப்போது வேறுபடலாம்.

வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்)

அனைத்து தரவுகளும் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் முழுமையாக உள்ளிடப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தரவு நுழைவு பணியாளர்கள் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ஸில் உள்ள சில புலங்களை நிரப்பாமல் தவிர்க்கிறார்கள். அவசரமாக ஒரு வழக்கு அல்லது கேவியட் எண் வழங்கும்போது இந்த தவறுகள் ஏற்படுகின்றன. இந்த தவறுகள் வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பாதிக்கும்.

குற்றவியல் வழக்கில்

குறிப்பிடப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கில் பதிவுஎண் வழங்கும் போது குற்றம் சாட்டப்பட்ட 20 பேர்களில், ​​தரவு நுழைவு ஊழியர்கள் வழக்கமாக 1 வது குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டும் நுழைத்து விட்டு மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர் மற்றும் முகவரிகளை தவிர்த்து விடுகிறார்கள். பின்னர் தரவு நுழைவு வேலையை முடிக்க வேண்டும். ஆனால், கடினமான வேலைப்பளு காரணமாகவும், பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாகவும், தரவு நுழைவு ஊழியர்கள் தரவு உள்ளீட்டை நிறைவு செய்யும் பணியை ஒத்திவைக்கின்றனர். கடைசியாக, அவர்கள் தரவு உள்ளீட்டை முடிக்க மறந்து விடுகிறார்கள். இதன் விளைவாக, வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் உள்ள வார்ப்புருக்களைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தால் வனைய முடியாது. அதேபோல், அழைப்பாணை அல்லது பிடியாணையை உருவாக்க முடியாது.

சிவில் வழக்கில்

அதே போல், ஒரு சிவில் வழக்கில், அனைத்து பிரதிவாதிகளின் பெயர்களும் முகவரிகளும் அவசியம். தரவு உள்ளீட்டில் சில பெயர்கள் மற்றும் முகவரிகள் தவிர்க்கப்பட்டால், சம்மன் அல்லது அறிவிப்பை வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் உருவாக்க முடியாது. இது மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பில் உள்ள செயல்பாட்டினை பாதிக்கும். இதன் வெற்றி என்பது வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் தரவு உள்ளீட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே, வழக்கு எண் வழங்கும் போது, ​​எல்லா தரவும், தரவு நுழைவு பணியாளர்களால் எந்தவொரு தவறும் இல்லாமல் உள்ளிடப்பட வேண்டும்.

வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் உள்ள வார்ப்புருக்களைப் பயன்படுத்துவதன் மூலமாக சேவைகள் விரைவாக நடக்கிறது. எனவே, தரவுகள் தவறின்றி அமைதல் அவசியம்.

மின்னணு செயல்முறை உருவாக்கம்

சிவில் வழக்கில்

சிவில் மின்னணு செயல்முறை உருவாக்க, வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) ல் தரவு நுழைவு பணியாளர்கள் வழக்கு வகைகளில் “சிவில்” அல்லது “கிரிமினல்” -லில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “வழக்கு எண்” ஐ கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் சரியான “செயல்முறை” -ஐ கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். “முகவரியைத் தேர்ந்தெடு” பகுதியில் “கட்டண வகை”, ஐ “கட்டண” அல்லது “இலவச / நீதிமன்ற இயக்கத்தில்” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “செயல்முறை கட்டணம்” ஐ உள்ளிட வேண்டும். பின்னர் “முகவரி வகை”, “முகவரி பெயர்”, “அடிக்குறிப்பு”, “வழக்கு தன்மை” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். “முகவரி விவரங்கள்” பகுதியின் உள்ளே, தரவு நுழைவு பணியாளர்கள் “முகவரி பெயர்”, “உறவு”, “முகவரி”, “முதன்மை” அல்லது “மாற்று முகவரி” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “மாநிலம்”, “மாவட்டம்”, “தாலுகா”, “கிராமம்”, “காவல் நிலையம்”, “அஞ்சல் குறியீடு”, “கைபேசி எண்”, “குறிப்புகள்”, “மின்னஞ்சல்” ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். “வரைவை உருவாக்கு” ​​பகுதியின் உள்ளே, தரவு நுழைவு பணியாளர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும். பின்னர் " செயல்முறை உருவாக்கு” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இப்போது உரிமையியல் வழக்கில் வரைவு தயாராக உள்ளது.

இதுவரை இருந்த நடைமுறையின் படி மனித கைகளால் செய்யப்பட்ட வேலைகள் தற்போது கணினி மூலமாக விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கைபேசி வாயிலாக சார்பு செய்யப்படுவதால் எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்கில்

குற்றவியல் வழக்கு மின்னணு செயல்முறைகளை உருவாக்குவதற்கு, தரவு நுழைவு பணியாளர்கள் "குற்றவியல்" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “வழக்கு எண்”, “செயல்முறை”, “மாநிலம்”, “மாவட்டம்”, “காவல் நிலையம்”, “மு.த.அ. எண்”, “ஆண்டு” ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும். “முகவரியைத் தேர்ந்தெடு” பகுதியின் உள்ளே, தரவு நுழைவு பணியாளர்கள் “கட்டண வகை”, “செயல்முறை கட்டணம்”, “முகவரி வகை”, “முகவரி பெயர்”, “அடிக்குறிப்பு”, “தன்மை” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். “முகவரி விவரங்கள்” பகுதியில், தரவு நுழைவு பணியாளர்கள் “முகவரி பெயர்”, “காவல் நிலையம்”, “மாநிலம்”, “மாவட்டம்”, “தாலுகா”, “கிராமம்”, “அஞ்சல் குறியீடு”, “கைபேசிஎண்”, “குறிப்புகள்”, “மின்னஞ்சல்” ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். “கட்சி சம்பந்தப்பட்ட” பகுதியில், தரவு நுழைவு பணியாளர்கள் “கட்சி வகை”, “கட்சி பெயர்”, பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் தரவு நுழைவு பணியாளர்கள் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பு: குற்றவியல் மின்னணு செயல்முறையில் “முகவரி பெயர்” என்பது காவல்துறை அதிகாரி ஆவார். இது குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் அல்ல. குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் “கட்சி சம்பந்தப்பட்டவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “கட்சி விவரங்களைத் தேர்ந்தெடு” பகுதியில் , தரவு நுழைவு பணியாளர்கள் “கட்சி பெயர்”, “உறவு”, “முகவரி”, “முதன்மை” அல்லது “மாற்று முகவரி”, “மாநிலம்”, “மாவட்டம்”, “தாலுகா”, “கிராமம்”, “காவல் நிலையம்”, “அஞ்சல் குறியீடு”, “கைபேசிஎண்”, “குறிப்புகள்”, “மின்னஞ்சல்” ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். “வரைவை உருவாக்கு” பகுதியில், தரவு நுழைவு பணியாளர்கள் விவரங்களை சரிபார்க்க வேண்டும். பின்னர் தரவு நுழைவு பணியாளர்கள் “வரைவை உருவாக்கு” ​​பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இப்போது குற்றவியல் மின்னணு செயல்முறையின் வரைவு தயாராக உள்ளது.

இதுவரை காவல் துறை அதிகாரிகள் சார்பு செய்து வரும் செயல்முறைகளும் இனி வருங்காலங்களில், அதாவது நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் இணையம் மூலம் இணைக்கப்பட்டுவிட்டதால், விரைவான சேவையை தரும்.

மின்னணு செயல்முறையை அச்சு எடுத்தல்

தரவு நுழைவு ஊழியர்கள் மின்னணு செயல்முறையின் அச்சு எடுக்க “சிவில்” ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது “குற்றவியல்” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் பின்னர் “தேதியிலிருந்து” மற்றும் “தேதி வரை” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “செல்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஒரு நகலை அச்சிடுவதற்கு “அச்சிடு” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதை ஒப்புதலுடன் பெறுவதற்கு கட்டத்தை "டிக்" செய்தபின் “அக்னோலெஜ்மென்ட்” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது செயல்முறையின் அச்சிடப்பட்ட நகல் தயாராக உள்ளது.

மின்னணு செயல்முறை வெளியிடு

சிவில் அல்லது குற்றவியல் மின்னணு செயல்முறையை வெளியிடுவதற்கு, “சிவில்” ஐ அல்லது "குற்றவியல்" ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “தேதியிலிருந்து” மற்றும் “தேதி வரை” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “செல்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் “வெளியிடு” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது சிவில் மின்னணு செயல்முறை வெற்றிகரமாக வெளியிடப் பட்டுள்ளது.

மின்னணு செயல்முறையின் நிலை

சிவில் அல்லது கிரிமினல் மின்னணு செயல்முறையின் நிலையைப் பெற, தரவு நுழைவு பணியாளர்கள் "ஸ்டேடஸ்" ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவின் கீழும் மின்னணு செயல்முறை நிலையைக் காண தரவு நுழைவு ஊழியர்கள் “அனைத்தும்” அல்லது “நிலுவையில்” அல்லது “சார்பு” அல்லது “சார்பு இல்லை” என்பவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “தேதியிலிருந்து” மற்றும் “தேதி வரை” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “செல்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது மின்னணு செயல்முறைகளின் நிலையைக் காண முடியும்.

மின்னணு செயல்முறையின் பதிவேற்றம்

சிவில் அல்லது கிரிமினல் மின்னணு செயல்முறையை போர்ட்டலில் பதிவேற்ற, தரவு நுழைவு ஊழியர்கள் “சிவில்” ஐ அல்லது "குற்றவியல்" ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “வழக்கு எண்” ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “செயல்முறை” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “முகவரி வகை”, “முகவரி பெயர்”, “உறவு”, “முகவரி”, “முதன்மை” அல்லது “மாற்று முகவரி” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “மாநிலம்”, “மாவட்டம்”, “தாலுகா”, “கிராமம்”, “காவல் நிலையம்” “அஞ்சல் குறியீடு”, “கைபேசி எண்”, “குறிப்புகள்”, “மின்னஞ்சல்” ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் “தேடு” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் கணினியின் உள்ளே கோப்பு இருக்கும் இடத்திலிருந்து கோப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். செயல்முறை சரிபார்ப்புக்கு “முன்னோட்டம்” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “சேமி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இப்போது மின்னணு செயல்முறை வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டுள்ளது.

முந்தைய மின்னணு செயல்முறையை நகலெடுத்தல்

மின்னணு செயல்முறை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தால், அடுத்த தேதிக்கு அதே மின்னணு செயல்முறை தேவைப்பட்டால், தரவு நுழைவு ஊழியர்கள் மீண்டும் மின்னணு செயல்முறையை உருவாக்க தேவையில்லை. அதற்கு பதிலாக முதலில் தரவு நுழைவு ஊழியர்கள் “சிவில்” அல்லது “குற்றவியல்” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “வழக்கு எண்” ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “வெளியிடப்பட்ட மின்னணு செயல்முறை” ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “வரைவை உருவாக்கு” ​​என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது நகல் தயாராக உள்ளது.

நாசர் பிரிவு

படிமம்:மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் உள்நுளைவு பக்கம்.png
மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் உள்நுளைவு பக்கம்

நாசர் பிரிவு போர்ட்டல்[20]

போர்ட்டலுக்குள் நுழைய, இணையம் வழியாக, நாசர் நிர்வாகிகள் வலைத்தளப் பக்கத்தில்[21] தங்கள் பயனர்பெயரை உள்ளிட வேண்டும். பின்னர் அவர்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். பின்னர் அவர்கள் “சமர்ப்பி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இப்போது நாசர் நிர்வாகிகள் போர்ட்டலுக்குள் உள்ளனர்.

நாசர் பயனர் நிர்வாகம்

படிமம்:மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் மெனு.png
மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் மெனு

போர்ட்டலில் நுழைந்த பிறகு, "டாஸ்போர்டை" க் காணலாம். அதன் மேல் பகுதியில், பயனர் பெயர் மற்றும் மாவட்டம் காண்பிக்கப்படும். அதற்குக் கீழே, நாசர் நிர்வாகி “நிலுவையில் உள்ள சேவை” அல்லது “சார்பு” அல்லது “சார்பு இல்லை” என்பதில் “நிலுவையிலுள்ள சேவை” விருப்பத்தில், நாசர் நிர்வாகி இன்னும் சார்பு செய்யப்படாத மின்னணு செயல்முறை விவரங்களைக் காணலாம். “சார்பு" விருப்பத்தில், நாசர் நிர்வாகி சார்புசெய்த மின்னணு செயல்முறையின் விவரங்களைக் காணலாம். “சார்பு இல்லை” விருப்பத்தில், சார்பு செய்ய முடியாத மின்னணு செயல்முறைகளின் விவரங்களை நாசர் நிர்வாகி பார்க்கலாம்.

தரவு நுகர்வு

தரவு நுகர்வில், நாசர் நிர்வாகி “நீதிமன்ற நிறுவனம்” மற்றும் “நீதிமன்றம்” ஆகியவற்றை “டிக் மார்க்” உடன் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நாசர் நிர்வாகி “இழு” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இப்போது மின்னணு செயல்முறைகள் வெற்றிகரமாக நுகரப்படுகின்றன.

படிமம்:மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் தரவு நுளைவு.png
மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் தரவு நுகர்வு

செயல்முறை ஒதுக்கீடு

படிமம்:மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் பகிர்தல்.png
மின்னணு செயல்முறை வலைதளத்தில் நாசர் பகிர்வு

மின்னணு செயல்முறை ஒதுக்கீட்டில், நாசர் நிர்வாகி “சிவில் செயல்முறை” அல்லது “குற்றவியல் செயல்முறை” விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், "கட்டளை பணியாளர்" அல்லது "பிற மின்னணு செயல்முறை தூதர்" அல்லது "மாநிலத்திற்குள்" அல்லது "மாநிலத்திற்கு வெளியே" ஒதுக்கப்பட்ட எந்தவொரு விருப்பத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரே மாவட்டத்திற்குள்

பின்னர் நாசர் நிர்வாகி “தேதி முதல்” மற்றும் “தேதி வரை” தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “செல்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது நாசர் நிர்வாகி சேவைக்கு நிலுவையில் உள்ள மின்னணு செயல்முறைகளைக் காணலாம். செயல்முறை ஒதுக்கீட்டிற்கு, நாசர் நிர்வாகி கட்டளை பணியாளரின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், “டேக்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் “சமர்ப்பி” பொத்தானைதேர்வு செய்ய வேண்டும். இப்போது மின்னணு செயல்முறை வெற்றிகரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட கட்டளை பணியாளர், அவருக்கு உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள கைபேசியில் இந்த மின்னணு செயல்முறையைக் காணலாம்.

ஒரே மாநிலத்திற்குள்

மின்னணு செயல்முறை மாநிலத்திற்குள் வழங்கப்பட வேண்டுமானால், நாசர் நிர்வாகி “மாநிலத்திற்குள்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் “மாவட்டம்” மற்றும் “ஸ்தாபனம்” ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “டேக்” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் “சமர்ப்பி” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இப்போது மின்னணு செயல்முறை "மாநிலத்திற்குள்" வெற்றிகரமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திற்கு வெளியே

மின்னணு செயல்முறை மாநிலத்திற்கு வெளியே சேவை செய்யப்பட வேண்டுமானால், நாசர் நிர்வாகி “மாநிலத்திற்கு வெளியே” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பின்னர் “மாநிலம்”, “மாவட்டம்” மற்றும் “ஸ்தாபனம்” ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் “டேக்” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் “சமர்ப்பி” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.இப்போது மின்னணு செயல்முறை வெற்றிகரமாக "மாநிலத்திற்கு வெளியே" ஒதுக்கப்பட்டுள்ளது.

செயல்முறை ஒதுக்கீடு ரத்து

மின்னணு செயல்முறை ஒதுக்கீட்டில், நாசர் நிர்வாகி ஒவ்வொரு கட்டளை பணியாளர்களுக்கும் ஒதுக்கப்பட்ட மின்னணு செயல்முறையைக் காணலாம். நாசர் இந்த மின்னணு செயல்முறையை ரத்து செய்து வேறு ஏதேனும் ஒரு கட்டளை பணியாளர்களுக்கு ஒதுக்க விரும்பினால், நாசர் நிர்வாகி கட்டளை பணியாளரின் பெயரைத் தேர்ந்தெடுத்து “ஒதுக்கீடு ரத்து” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். முன்னர் ஒதுக்கப்பட்ட கட்டளை பணியாளரிடம் இருந்து இப்போது மின்னணு செயல்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் இது புதிய ஒதுக்கீட்டில் கிடைக்கிறது. இப்போது நாசர் நிர்வாகி மின்னணு செயல்முறை ஒதுக்கீட்டின் படி வேறு சில கட்டளை பணியாளர்களுக்கு இந்த மின்னணு செயல்முறையை ஒதுக்க முடியும். மின்னணு செயல்முறை வழங்கப்படுவதற்கு முன்புதான் இந்த கட்டளை பணியாளர் மின்னணு செயல்முறை பரிமாற்றம் செய்ய முடியும்.

கட்டளை பணியாளர் செயல்முறை பரிமாற்றம்

கட்டளை பணியாளர் மின்னணு செயல்முறை பரிமாற்றத்தில், நாசர் நிர்வாகி இந்த மின்னணு செயல்முறையை வேறு சில கட்டளை பணியாளர்களுக்கு மாற்ற முடியும், நாசர் இந்த மின்னணு செயல்முறையை வேறு சில கட்டளை பணியாளர்களுக்கு ஒதுக்க விரும்பினால், நாசர் நிர்வாகி கட்டளை பணியாளர் பெயரை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது நாசர் நிர்வாகம் மின்னணு செயல்முறை ஒதுக்கீட்டிற்குச் செல்லாமல் வேறு சில கட்டளை பணியாளர்களுக்கு இந்த யல்முறையை ஒதுக்க முடியும். மின்னணு செயல்முறை வழங்கப்படுவதற்கு முன்புதான் இந்த கட்டளை பணியாளர் மின்னணு செயல்முறை பரிமாற்றம் செய்ய முடியும்.

செயல்முறை வழங்கல்

மின்னணு செயல்முறை வழங்கலில், நாசர் நிர்வாகி ஒவ்வொரு கட்டளை பணியாளர்களுக்கும் வழங்கப்பட்ட மின்னணு செயல்முறைகளைக் காணலாம். கட்டளை பணியாளரின் பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நாசர் நிர்வாகி, கட்டளை பணியாளர் செய்த வேலையை கண்காணிக்க முடியும்.

செயல்முறை நிலை

மின்னணு செயல்முறை நிலைகளில், நாசர் நிர்வாகி மின்னணு செயல்முறையின் நிலைகளின் விவரங்களைக் காணலாம். நாசர் நிர்வாகி அனைத்து மின்னணு செயல்முறைகளையும் அவற்றின் தற்போதைய நிலையுடன் பார்க்க முடியும். மின்னணு செயல்முறைகள் எந்த காரணத்தால் சார்பு செய்ய முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் நாசர் நிர்வாகி காணலாம்.

முந்தைய ஆண்டின் தரவை நுகருதல்

முந்தைய ஆண்டின் தரவு நுகர்வுகளில், நாசர் நிர்வாகி முந்தைய ஆண்டுகளின் மின்னணு செயல்முறைகளை சார்புக்கு எடுத்துக்கொள்ளலாம். நாசர் நிர்வாகி முந்தைய ஆண்டு தரவை புதிதாக சார்புக்கு எடுத்துக்கொள்ள முடியும், மேலும் இது முன்னர் சார்பு செய்யப்படாவிட்டால் ஒதுக்கீட்டிற்கும் பயன்படுத்தப்படலாம். இது மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய தட்டச்சு வேலையை குறைக்கும்.

கட்டளை பணியாளர் சார்பு செய்தல்

படிமம்:5.1 PS Login.png
கட்டளை பணியாளர் கைபேசியில் உள்நுளைவு

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு நடைமுறையானது சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள கணினி குழுவின் மூலம் கடந்த 17.09.2020 ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக தமிழ் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பணிபுரியும் கட்டளைப் பணியாளர்களுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட 2900 கைபேசிகள் சுமார் ரூபாய் மூன்று கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன

மின்னணு செயல்முறை நீதிமன்ற கட்டளை பணியாளருக்கு கைபேசியில் கிடைக்கிறது. அதனை நீதிமன்ற கட்டளை பணியாளர் தரப்பினருக்கு நேரில் சார்பு செய்கிறார். கட்டளை பணியாளர்கள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கணினி குழு, கைபேசிகளில் மின்னணு செயல்முறை வசதியைப் பின்பற்றி சேவை செய்வதற்காக ஸ்மார்ட் போன்களை கட்டளை பணியாளர்களுக்காக வழங்கி உள்ளது.

படிமம்:5.2 PSView.png
கட்டளை பணியாளர் கைபேசியில் செயல்முறைகலை பார்வையிடுதல்

கைபேசியின் உதவியுடன், கட்டளை பணியாளர்கள் மின்னணு செயல்முறைகளை விரைவாக சார்பு செய்ய முடியும், தரப்பினர்களின் புகைப்படத்தை எடுக்க முடியும், தரப்பினர்களின் கையொப்பத்தை மின்னணு முறையில் பெற முடியும், மேலும் மின்னணு செயல்முறை வழங்கப்பட்ட இடத்தை ஜி.பி.எஸ். உதவியுடன் இருப்பிடத்தை சேமிக்க முடியும்.

படிமம்:5.3 PS photo.png
செயல்முறையை பெற்றதற்கான புகைப்படம் எடுத்தல் (மாதிரி)

முதலில், கட்டளை பணியாளர்கள் தங்கள் கைபேசிகளை இயக்க வேண்டும். கட்டளை பணியாளர்கள் பயன்பாட்டைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் கட்டளை பணியாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். பின்னர் கட்டளை பணியாளர்கள் "மின்னணு செயல்முறையைக் காட்டு" பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். மின்னணு செயல்முறையில் உள்ள பெயர், முகவரி ஆகியவற்றைச் சரிபார்த்த பிறகு, கட்டளை பணியாளர்கள் மின்னணு செயல்முறை சார்பு செய்ய வேண்டிய இடத்திற்குச் செல்ல வேண்டும்.

சார்பு செய்யும் இடத்தில்

  • படிமம்:5.4 PS Sign.png
    செயல்முறையை பெற்றதற்கான கையொப்பம் பெறுதல் (மாதிரி)
    கட்டளை பணியாளர் தரப்பினரின் அடையாளத்தை சரிபார்த்து, மின்னணு செயல்முறையின் நகலை ஒப்படைக்க வேண்டும். மின்னணு செயல்முறையின் நகலை வழங்கும்போது, அதனைப் பெற்ற தரப்பினரின் புகைப்படத்தை கட்டளை பணியாளர் மொபைல் போன் மூலம் எடுக்க வேண்டும்.
  • படிமம்:5.5 PS Location.png
    செயல்முறையை சார்பு செய்த இடத்தினை புலப்படத்தில் குறியீடு செய்தல் (மாதிரி)
    பின்னர் கைபேசியில் கிடைக்கும் தொடுதிரை வசதியைப் பயன்படுத்தி கட்டளை பணியாளர் தரப்பினரின் கையொப்பத்தைப் பெற வேண்டும். இந்த வசதி மூலம், தரப்பினர் தனது கையொப்பத்தை ஸ்மார்ட் தொலைபேசியின் திரையில் இடலாம்.
  • படிமம்:5.6 PS Service.png
    செயல்முறையை சார்பு செய்த விதத்தினை குறிப்பிடுதல்
    பின்னர் கட்டளை பணியாளர் “டிக்” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும்.
  • படிமம்:5.7 PSUpload.png
    செயல்முறையை சார்பு செய்த பின்னர் பதிவேற்றம் செய்தல்
    பின்னர் கட்டளை பணியாளர் “இருப்பிடம்” பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். இந்த விருப்பத்தின் மூலம், ஸ்மார்ட் போன் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை மற்றும் ஸ்மார்ட் தொலைபேசியில் வழங்கப்பட்ட ஜி.பி.எஸ். வசதியைப் பயன்படுத்தி மின்னணு செயல்முறை வழங்கப்பட்ட பகுதி ஆகியவற்றைப் சேமிக்கிறது.
  • பின்னர் கட்டளை பணியாளர் "சார்பு" அல்லது "சார்பு இல்லை" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மின்னணு செயல்முறை வழங்கப்பட்டிருந்தால்,"சார்பு" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்வதன் மூலம் சார்பு விபரத்தை கட்டளை பணியாளர் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • மின்னணு செயல்முறை வழங்கப்படவில்லை என்றால், "சார்பு இல்லை" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்வதன் மூலம் மின்னணு செயல்முறை சார்பு செய்யாததற்கான காரணத்தை கட்டளை பணியாளர் தேர்வு செய்ய முடியும். பின்னர் கட்டளை பணியாளர் “பதிவேற்று” பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

மின்னணு செயல்முறை வழங்கப்பட்டதும் உடனே அது வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் பிரதிபலிக்கும். இப்போது, ​​சார்புக்கான மின்னணு செயல்முறையை அனுப்பும் நீதிமன்றம் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ல் மின்னணு செயல்முறையின் நிலையைக் காணலாம்.

இதற்கு முன்பு, செயல்முறைளை சார்பு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது என்ற காரணத்தால் வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தன. சென்னை உயர் நீதிமன்றத்தின் கணினி குழு எடுத்த முயற்சியால் இந்த நிலை இனி மாறும்.

பயிற்சிகள்

கடந்த 17.09.2020 ந் தேதி முதல் மின்னணு செயல்முறை திட்டமானது தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.[22] இந்த சேவைக்காக தமிழ் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பணிபுரியும் கட்டளைப் பணியாளர்களுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட 2900 கைபேசிகள் சுமார் ரூபாய் மூன்று கோடி செலவில் வழங்கப்பட்டுள்ளன. இந்த கைபேசிகளை பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.[23][24]

தட்டச்சர் அல்லது சுருக்கெழுத்தர் அல்லது நீதிமன்ற எழுத்தர் அனைத்து தரவுகளையும் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS -ஸில் உள்ளிடுகின்றனர். எனவே அவர்களுக்கும் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற மேலாளர்கள்

நீதிமன்ற மேலாளர்கள் உயர் நீதிமன்றத்தால் ஒவ்வொரு மாவட்ட நீதி மன்றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டத்திற்க்கான முதன்மை மாவட்ட நீதிபதிகளின் உத்தரவுகளின்படி உயர் நீதிமன்றத்திற்கும் ஏனைய நீதிமன்றங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS மூலமாக வழக்கு கோப்புகளின் கண்காணிப்பு, தகவல் சேகரிப்பு, முன்மாதிரி திட்டங்கள் தயாரித்தல், மேலும் நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் செய்கின்றனர்.

கணினி ஆய்வாளர்கள்

கணினி ஆய்வாளர்கள் ஒவ்வொரு மாவட்ட நீதி மன்றங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டத்திற்கான முதன்மை மாவட்ட நீதிபதிகளின் உத்தரவுகளின்படி கணினிகள் பராமரிப்பு, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு, தகவல் சேகரிப்பு, வெளியீடு, தரவு பதிவேற்றம், தகவல் வழங்கள் போன்ற கணினி சம்பந்தப்பட்ட அனைது பணிகளையும் செய்கின்றனர். மாவட்ட நீதிமன்றங்களின் கணினி ஆய்வாளர்கள் வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) CIS மற்றும் மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பின் ஒருங்கிணைப்பை உள்ளமைக்கின்றனர். இந்த ஒருங்கிணைப்புக்குப் பிறகு மட்டுமே மின்னணு செயல்முறைக்கான தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு செயல்படுகிறது.

வழக்கறிஞர்கள்[25]

மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு மூலமாக அழைப்பாணைகள், பிடியாணைகள், அறிவிப்புகள் விரைவாக சார்புசெய்யப்படுவதால் வழக்கு விசாரணைகள் விரைந்து முடிகின்றன. இதனால் வழக்கறிஞர்கள் தங்களது தரப்பினருக்கு விரைவாக நீதி கிடைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது என மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு திட்டத்தினை வரவேற்றுள்ளனர்.

குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும். அதற்குப் பயந்து கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்கு வருவார்கள்.[26] இதன் மூலம் வழக்கு விசாரணைகள் விரைந்து நடக்கும். இதற்காக வழக்குத் தகவல் அமைப்பு (சி. ஐ. எஸ்) ல் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (ஐ. சி. ஜெ. எஸ்) வளைதளம்[27] இணைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் இணைப்பு முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு குற்றவியல் வழக்குகளிலும் தொலைபேசி வழியாக செயல்படுத்த முடியும். இப்போது பிடிவாரண்ட் தொடர்பான நடவடிக்கைகள் மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு மூலமாக பிடியாணைகள் உருவாக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஒப்புதல் ஆவணம் பெறப்படுவதால் பிடியாணைகளை செயல்படுத்தும் நடைமுறை எளிதக்கப்பட்டுள்ளது.


மேற்கோள்கள்

  1. "NSTEP". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "NSTEP | Official Website of e-Committee, Supreme Court of India | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  3. "Giant step towards digitisation of courts! SC launches 3 apps – Check what all now litigants can do through smartphones". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  4. "NSTEP | Official Website of e-Committee, Supreme Court of India | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  5. "Home | SUPREME COURT OF INDIA". main.sci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  6. "Court notices go digital, to be served through mobile apps". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  7. "Madras High Court - Virtual Inauguration of NSTEP, Biometric Attendance etc... 17.09.2020 - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  8. "Biometric Attendance for all courts in District Judiciary and – SEKAR REPORTER" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
  9. "Court notices go digital, to be served through mobile apps". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  10. "Service of Process". LII / Legal Information Institute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  11. "PART 6 - SERVICE OF DOCUMENTS - Civil Procedure Rules". www.justice.gov.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  12. "Supreme Court of Norway". Norges Domstoler (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  13. "Process Service in Norway | Norway Process Servers". www.processservers.asia. பார்க்கப்பட்ட நாள் 2020-11-24.
  14. "How to Serve Process in Canada | Hague Law Blog". www.haguelawblog.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  15. "Code of Civil Procedure 1908" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  16. "Code of Criminal Procedure 1978" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  17. "NSTEP - National Service and Tracking of Electronic Processes". www.nstep.ecourts.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  18. "HC spells out new dress code; lawyers to wear white shirts, plain neckband". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  19. "Home - eCourt India Services". services.ecourts.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  20. "NSTEP - National Service and Tracking of Electronic Processes". www.nstep.ecourts.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  21. "NSTEP - National Service and Tracking of Electronic Processes". www.nstep.ecourts.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  22. "Madras High Court - Virtual Inauguration of NSTEP, Biometric Attendance etc... 17.09.2020 - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  23. "NSTEP application to the staff of Subordinate Courts in the Kancheepuram and Madurai District - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  24. "Training for NSTEP Application for the Service of Summons and Notices by the Bailiffs - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  25. "Bar Council of Tamilnadu and Puducherry - Official Website". barcounciloftamilnadupuducherry.org. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  26. "வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பையும் பறித்த கரோனா: நீதித்துறை இயல்புக்குத் திரும்புவது எப்போது?". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.
  27. "Introduction to Integrated Criminal Justice System – Kaarana". hasgeek.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-30.