தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்சிகள் பெற்ற வாக்குகள்
வரிசை 1,434: வரிசை 1,434:

{{தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2021}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2021}}

=== கட்சிகள் பெற்ற வாக்குகள் ===
=== கட்சிகள் பெற்ற வாக்குகள் ===
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியின் வாக்குகளும் அதன் சதவீதமும் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியின் வாக்குகளும் அதன் சதவீதமும் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள்

{{தமிழ்நாடு பேரவை தேர்தல் கட்சிகளின் வாக்குகள், 2021}}

21:32, 16 மே 2021 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

← 2016 6 ஏப்ரல் 2021 2026 →

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான 234 தொகுதிகளில்
118 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்72.81% ( 2.00%)[1][2]
First party Second party
படிமம்:Stalinmk.png படிமம்:Edappadi K. Palaniswami.png
கட்சி திமுக

அஇஅதிமுக
கூட்டணி ம.மு.கூ[3] தே.ச.கூ[4]
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கொளத்தூர் எடப்பாடி
வென்ற
தொகுதிகள்
159 75
மாற்றம் 61 61
மொத்த வாக்குகள் 20,983,103 18,364,826
விழுக்காடு 45.39% 39.72%
மாற்றம் 5.54 2.16

தேர்தல் வரைபடம் (தொகுதிகள் மூலம்)

முந்தைய முதலமைச்சர்

எடப்பாடி க. பழனிசாமி
அஇஅதிமுக

முதலமைச்சர் -தெரிவு

மு. க. ஸ்டாலின்
திமுக

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின், 234 தொகுதிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய 2021 ஏப்ரல் 6 இல் நடைபெற்றது.[5][6] இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அஇஅதிமுக தலைவர் எடப்பாடி க. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 15-வது சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் மே 3, 2021இல் முடிவடைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.[7][8]

மு. க. இசுட்டாலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசு, கம்யூனிஸ்டுக் கட்சிகள், மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (ம.மு.கூ) கூட்டமைப்பில் திமுக போட்டியிட்டது. பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பாமக, பாஜக மற்றும் சிறிய கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ச.கூ) என்ற கூட்டமைப்பில் அஇஅதிமுக போட்டியிட்டது. கோவிடு-19 வழிகாட்டி முறைகளுடன் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 72.81% வாக்குகள் பதிவாயின. தேர்தலுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள், இசுட்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணித்தன. 2021 மே 2 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன; ம.மு.கூ 159 இடங்களைக் கைப்பற்றியது, இவற்றில் திமுக 125 தொகுதிகளில் வெற்றியைப் பதிவு செய்து, தனிப் பெரும்பான்மையைப் பெற்றது. தே.ச.கூ 75 இடங்களை வென்றது, இதில் 65 இடங்களை அதிமுக வென்றது. பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் பிறகு, ஆறாவது முறையாக திமுக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது. ஸ்டாலினும் அவரது அமைச்சரவையும் மே 7, 2021 அன்று பொறுப்பேற்றது.

பின்னணி

தமிழ்நாடு அரசியலில் மாநிலத்தின் இரண்டு முன்னணித் திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) ஆகியவை கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2011 தேர்தலில், ஜெ. ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக, மு. கருணாநிதி தலைமையிலான திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. 2016 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தனது பெரும்பான்மையை 135 இடங்களுடன் தக்க வைத்துக் கொண்டது. திமுக 98 இடங்களைக் கைப்பற்றியது.[9] 2021 இன் 16-வது சட்டமன்றத் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறப்பின் பின்னர் நடைபெறும் முதலாவது மாநிலத் தேர்தல் ஆகும்.

2016 இல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 2017 ல் கட்சியின் சட்டமன்றத் தலைவர் எடப்பாடி க. பழனிசாமி, பதில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் கீழ் இணைத் தலைமையை அஇஅதிமுக ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, பழனிசாமி முதலமைச்சராகவும், பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் ஆயினர்.

2018 இல் மு. கருணாநிதியின் இறப்பின் பின்னர், அவரது மகன் மு. க. ஸ்டாலின் திமுகவின் தலைமையை ஏற்றார். 2019 மக்களவைத் தேர்தலில், திமுக-தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளில் 38 ஐக் கைப்பற்றியது. இதே காலப்பகுதியில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்களில், திமுக 13 இடங்களையும், அஇஅதிமுக 10 இடங்களையும் கைப்பற்றின.

தேர்தல் குறிப்புகள்

• தேர்தல் நடத்துவது குறித்து 2021 பிப்ரவரி 11 அன்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சென்னையில் நடத்திய கூட்டத்தில் அறிவித்தார்.[10][11]
• 6 ஏப்ரல் 2021 அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்.
• வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்படும்.[10]
• கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக சட்டமன்ற தேர்தலுடன் ஒரே கட்டமாக நடத்தப்படும்.
• கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 88,936 ஆக அதிகரிக்கப்படும்.[12]
• 80 வயது முதியோர்கள் வழக்கமான வாக்குப் பதிவு செய்வதுடன், விருப்பப்பட்டவர்கள் தபால் வாக்கும் செலுத்த அனுமதிக்கப்படுவர்.[13]
• தேர்தலில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
• மின்னணு இயந்திரம் வைக்கப்படும் அறையில் உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கையின்போது வீடியோ பதிவு செய்யப்படும்.
• வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து 24 மணி நேரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
• திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது. [14]

தேர்தல் அட்டவணை

சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நாட்கள்:[15]

நிகழ்வு நாள்
வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 12
வேட்புமனு தாக்கல் முடிவு மார்ச் 19
வேட்புமனு பரிசீலனை மார்ச் 20
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22
வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6
வாக்கு எண்ணிக்கை (தேர்தல் முடிவுகள்) மே 2

வாக்காளர் புள்ளிவிவரங்கள்

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி,[16][17] சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிகபட்சமாக 694,845 வாக்காளர்கள் உள்ளனர்.[18][19]

பொது வாக்காளர்கள் சேவை வாக்காளர்கள் வெளிநாட்டு வாக்காளர்கள் மொத்தம் வாக்காளர்கள்
6,27,47,653 72,853 3,243 6,28,23,749

மொத்தம் வாக்காளர்கள் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்

ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்காளர்கள்
3,09,95,440 3,19,40,880 7,192 6,29,43,512

தேர்தல் வாக்குறுதிகள்

அதிமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 163 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும்[20][21], திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500 நலத்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாகவும் வழங்கியுள்ளது.[22] [23]

அரசியல் நிலவரம்

• தமிழ்நாட்டில் சுமார் 50 வருடமாக வென்று ஆட்சி அமைக்கும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் முதலமைச்சர்களான மு. கருணாநிதி மற்றும் ஜெ. ஜெயலலிதா என்கிற பெரும் அரசியல் ஆளுமை தலைவர்களின் மரணத்திற்கு பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
• அதிமுக கூட்டணியில் இதுவரை இருந்த தேமுதிக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் தரப்படாததால் கூட்டணியிலிருந்து விலகியது. [24]
• அதிமுக கூட்டணியில் பாசக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [25]
• அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள் முடிவாகியது. [26]
• அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல்கட்டமாக அதிமுக 6 தொகுதிகளுக்கும், அமமுக 15 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிகள் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்றன. [27][28]
• அதிமுக கூட்டணியில், செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது..[29]
• ஆண்டிப்பட்டி தொகுதியில் இரண்டாவது முறையாக எதிரெதிர் அணியில் சகோதரர்கள் களம் இறங்குகின்றனர். .2019-ல் ஆண்டிபட்டியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மகாராஜன், தனது தம்பி லோகிராஜனை 2ஆயிரத்து 323 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [30]
• திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளும் அதன் வேட்பாளர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டது [31]
• தொகுதி வழங்கப்படாததால் பாசகவில் சேர்ந்த தற்போதைய திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர், மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். [32]
• ஆ. ராசா முதல்வரை பற்றி கூறிய சர்ச்சைக்குரிய பேச்சின் விளக்கத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. ஆ. ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ. ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்தும், ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.[33] [34]
• வேளச்சேரி தொகுதியின் 92ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தேர்தல் விதி மீறல் என்பதால் அந்த வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.[35]
• அமமுக கூட்டணியில், ஒவைசியின் அகில இந்திய மச்லிசு-இ-இத்தாதுல் முசுலிமின் கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. [36]

அதிமுக கூட்டணி ஆதரவு

• ஜெயலலிதா கூறியபடி நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.[37]
• சாதி மத சார்பற்ற நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக தமிழ் மாநில முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.[38]
• நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.[39]
• ஜாதி இனம் பாகுபாடின்றி ஆட்சிபுரியும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக, தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவித்துள்ளது.[40]
• தமிழக விவசாயிகளின் தேவை அறிந்து செய்வதால் அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.[41]
• மேலும் மூவேந்தர் முன்னணிக் கழகம், பசும்பொன் தேசிய கழகம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, இந்தியத் தேசிய குடியரசு கட்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி, செங்குந்தர் அரசியல் அதிகாரம் போன்ற அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.[42]

திமுக கூட்டணி ஆதரவு

• ஐந்து கோரிக்கையுடன் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு அதரவு அறிவித்தது.[43][44]
• விஸ்வகர்மா சமூகத்தினருக்கு ஏற்ற தேர்தல் வாக்குறுதியினால் கைவினைஞர் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.[45]
• தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த திமுக கூட்டணியை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.[46]
• மதச்சாா்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகத் தமிழக மக்கள் முன்னணி தெரிவித்தது[47]
• மத ரீதியாகப் பிளவுபடுத்தி, இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவித்துள்ளது.[48]
• மேலும் புதிய திராவிட கழகம்[49], திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு கோயில் பூசாரிகள் நலச் சங்கம்[50], புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி[51] போன்ற அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கட்சிகளும் கூட்டணிகளும்

தேசிய ஜனநாயகக் கூட்டணி

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுக்கு இடையில், ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வரைபடம்.
கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக படிமம்:Edappadi K. Palaniswami.png எடப்பாடி கே. பழனிச்சாமி 179
பாட்டாளி மக்கள் கட்சி பாமக ச. இராமதாசு 23
பாரதிய ஜனதா கட்சி பாஜக எல். முருகன் 20
தமிழ் மாநில காங்கிரசு தமாகா ஜி. கே. வாசன் 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி பெதமக என். ஆர். தனபாலன் 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமமுக பெ. ஜான் பாண்டியன் 1
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மூமுக ஸ்ரீதர் வாண்டையார் 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் அஇமூமுக சேதுராமன் 1
புரட்சி பாரதம் புபாக ஜெகன்மூர்த்தி 1
பசும்பொன் தேசிய கழகம் பதேக ஜோதி முத்துராமலிங்கம் 1

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுக்கு இடையில், ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வரைபடம்.
கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக படிமம்:Stalinmk.png மு. க. ஸ்டாலின் 173
இந்திய தேசிய காங்கிரசு இதேகா கே. எஸ். அழகிரி 25
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிபிஐ இரா. முத்தரசன் 6
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம் கே. பாலகிருஷ்ணன் 6
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக தொல். திருமாவளவன் 6
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுக வைகோ 6
இந்திய யூனியன் முசுலீம் லீக் இயூமுலீ கே. எம். காதர் மொகிதீன் 3
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொமதேக ஈ. ஆர். ஈஸ்வரன் 3
மனிதநேய மக்கள் கட்சி மமக ஜவாஹிருல்லா 2
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு அஇபாபி பி. வி. கதிரவன் 1
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தவாக தி. வேல்முருகன் 1
மக்கள் விடுதலைக் கட்சி மவிக சு. க. முருகவேல் ராஜன் 1
ஆதித்தமிழர் பேரவை ஆதபே
இரா. அதியமான் 1

அமமுக கூட்டணி

கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமமுக படிமம்:Pressure Cooker symbol.png டி. டி. வி. தினகரன் 161
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக விசயகாந்து 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இசஜக படிமம்:Pressure Cooker symbol.png வி. எம். எஸ். முகமது முபாரக் 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் அஇமஇமு டி. எஸ். வகீல் அகமது 3
கோகுல மக்கள் கட்சி கோமக படிமம்:Pressure Cooker symbol.png எம். வி. சேகர் யாதவ் 1
மருது சேனை சங்கம் மசேச கரு. ஆதிநாராயணன் 1
விடுதலை தமிழ் புலிகள் கட்சி விதபுக குடந்தை அரசன் 1
மக்கள் அரசு கட்சி மஅக எஸ். இரஜினிகாந்த் (எ)
அருண்மொழி வர்மன்
1

மக்கள் நீதி மய்யம்

கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
மக்கள் நீதி மய்யம் மநீம கமல்ஹாசன் 142
இந்திய ஜனநாயகக் கட்சி இஜக படிமம்:Indian Election Symbol Auto Rickshaw.png பச்சமுத்து பாரிவேந்தன் 40
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சமக சரத்குமார் 33
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தமஜக படிமம்:TMJK Head.jpg கே. எம். சரீப் 9
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஜத(ச) தேவ கௌடா 3

சகாயம்+

வ. எண் கட்சி சின்னம் படம் தலைவர் தொகுதி பங்கீடு
1. சகாயம் அரசியல் பேரவை உ. சகாயம் 20
2. தமிழ்நாடு இளைஞர் கட்சி 15
3. வளமான தமிழக கட்சி 1

எந்த கூட்டணியிலும் இல்லாத கட்சிகள்

கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
நாம் தமிழர் கட்சி நாதக சீமான் 234
பகுஜன் சமாஜ் கட்சி பசக ஆம்ஸ்ட்ராங் 160
புதிய தமிழகம் கட்சி புதக க. கிருஷ்ணசாமி 60
இந்தியக் குடியரசுக் கட்சி இகுக சி. கே. தமிழரசன் 16

வேட்பாளர் பட்டியல்

வேட்புமனு தாக்கல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலவரங்கள்:

தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட மனுக்கள்
7,255 4,274 2,543 438

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள்

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் பரப்புரைகள், அவற்றின் தேர்தல் அறிக்கைகள் குறித்த தகவல்கள் இங்கு ஆவணப்படுத்தப்படுகின்றன. உலக சேப்பர்சு சென்னை, அரசியல் பாகுபாடற்ற அமைப்பு இந்த அமைப்பு உலக பொருளாதார மன்றம் இயக்கப்படுகிறது TN Election Promises 2021 [52] இந்த தளமானது வாக்களர்களுக்கு தேவையான வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தொகுத்துள்ளது.

கருத்துக் கணிப்புகள்

வெளியிட்ட நாள் நிறுவனம் திமுக

அதிமுக

பாஜக
முன்னணி இழுபறி
மமுகூ தேஜகூ அமமுக மநீம மற்றவை
6 சனவரி 2021 Lok Poll[53] 180 – 185 45 – 50 1 – 3 0 – 1 130-140 -
18 சனவரி 2021 ABP News C-Voter 158 – 166 60 – 68 2 – 6 0 – 4 0 – 4 90-106 -
18 சனவரி 2021 IANS [54] 162 65 2 0 2 98 -
27 பெப்ரவரி 2021 ABP News- CVoter[55] 154 - 162 58 - 68 1 - 5 2-6 2 - 5 88 - 96 -
8 மார்ச் 2021 Times Now - CVoter[56] 158 65 3 5 3 93 -
15 மார்ச் 2021 ABP - CVoter[57] 161 - 169 53 - 61 1 - 5 2 - 6 3-7 100 - 116
22 மார்ச் 2021 புதியதலைமுறை - APT [58] 151-158 76-86 65 -
24 மார்ச் 2021 Spick Media - MCV [59] 158 74 2 0 0 84 -
24 மார்ச் 2021 டைம்ஸ் நௌவ் - CVoter [60] 177 49 3 3 2 128 -
25 மார்ச் 2021 ஜனநாயகம் டைம்ஸ் நெட்வொர்க் [61] 182 51 1 0 0 131 -
31 மார்ச் 21 ஜூனியர் விகடன்[62] 163 52 0 1 0 111 18
02 ஏப்ரல் 21 மாலை முரசு[63] 151 54 1 1 0 97 27
02 ஏப்ரல் 21 தந்தி டிவி[64] 124 52 72 58
04 ஏப்ரல் 21 நக்கீரன்[65] 172 22 150 40

வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 71.78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இது முந்தைய 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலை விட 2.03% குறைவு. இதில் மாவட்ட வாரியாக அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் (83.92%) சதவீத வாக்குப் பதிவும், குறைந்தபட்சமாக சென்னையில் (59.06%) சதவீத வாக்குகளும் பதிவானது.[66] தொகுதி வாரியாக, அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவானது.

மாவட்ட வாரியாக வாக்குகளின் சதவீதம்

எண் மாவட்டம் வாக்குப்பதிவு %
1 திருவள்ளூர் 70.56%
2 சென்னை 59.06%
3 காஞ்சிபுரம் 71.98%
4 செங்கல்பட்டு 68.18%
5 இராணிப்பேட்டை 77.92%
6 வேலூர் 73.73%
7 திருப்பத்தூர் 77.33%
8 கிருட்டிணகிரி 77.30%
9 தர்மபுரி 82.35%
10 திருவண்ணாமலை 78.62%
11 விழுப்புரம் 78.56%
12 கள்ளக்குறிச்சி 80.14%
13 சேலம் 79.22%
14 நாமக்கல் 79.72%
15 ஈரோடு 77.07%
16 திருப்பூர் 70.12%
17 நீலகிரி 69.68%
18 கோயம்புத்தூர் 68.70%
19 திண்டுக்கல் 77.13%
20 கரூர் 83.92%
21 திருச்சிராப்பள்ளி 73.79%
22 பெரம்பலூர் 79.09%
23 அரியலூர் 82.47%
24 கடலூர் 76.50%
25 நாகப்பட்டினம் 75.48%
26 திருவாரூர் 76.53%
27 தஞ்சாவூர் 74.13%
28 புதுக்கோட்டை 76.41%
29 சிவகங்கை 68.94%
30 மதுரை 70.33%
31 தேனி 71.75%
32 விருதுநகர் 73.77%
33 இராமநாதபுரம் 69.60%
34 தூத்துக்குடி 70.20%
35 தென்காசி 72.63%
36 திருநெல்வேலி 66.65%
37 கன்னியாகுமரி 68.67%
அதிகபட்சம் குறைந்தபட்சம்

முடிவுகள்

வாக்கு எண்ணும் பணி 2021 மே 2 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது, முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்கு அரை மணிநேரம் கழித்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேர்தல் முன்னணி நிலவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் இசீநே காலை 9 மணி முதல் அறிவிக்கத் துவங்கியது. திமுக 125 தொகுதிகளைக் கைப்பற்றி, தனித்து ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. அதன் கூட்டணி ம.மு.கூ மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றியது. இதேவேளை ஆளும் தே.ச.கூ 75 இடங்களைக் கைப்பற்றியது. இதில் அஇஅதிமுக 65 இடங்களில் வென்றது. ஏனைய கட்சிகளோ அல்லது சுயேச்சை வேட்பாளர்களோ எந்த ஒரு தொகுதியையும் கைப்பற்றவில்லை. பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த திமுக 2011 முதல் 2021 வரை ஆட்சியில் இருந்த அஇஅதிமுக இடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.[67]

கூட்டணி வாரியாக முடிவுகள்

கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும் கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை
தேசகூ தொகுதிகள் மாற்றம் மமுகூ தொகுதிகள் மாற்றம்
அஇஅதிமுக 66 -70 திமுக 133[i] +44
பாமக 5 +5 இதேகா 18 +10
பாசக 4 +4 விசிக 4 +4
இபொக 2 +2
இபொக(மா) 2 +2
மொத்தம் 75 -61 மொத்தம் 159 +61

கூட்டணிகள் வாரியாக முடிவுகள்

மமுகூ (67.95%)
தேசகூ (33.5%)

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

வரிசை எண் கூட்டணி கட்சிகள் வாக்குகள் % போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள்
01 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திமுக 17,431,558 37.70% 188 133
இந்திய தேசிய காங்கிரஸ் 1,976,527 4.28% 25 18
சி‌பி‌ஐ 504,537 1.09% 6 2
விடுதலை சிறுத்தைகள் கட்சி 457,763 0.99% 6 4
சிபிஎம் 390,455 0.84% 6 2
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 222,263 0.48% 3 0
மொத்தம் 20,983,103 45.39% 234 159
02 தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக 15,392,542 33.29% 191 66
பாமக 1,758,774 3.80% 23 5
பாஜக 1,213,510 2.62% 20 4
மொத்தம் 18,363,258 39.71% 234 75
03 நாம் தமிழர் கட்சி 3,108,906 6.85% 234 0
04 அமமுக+ அமமுக 1,085,915 2.34% 165 0
தேமுதிக 200,156 0.43% 60 0
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 28,051 0.06% 6 0
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 3,134 0.00% 3 0
மொத்தம் 1,317,256 2.85% 234 0
05 2021 புதிய கூட்டணி மநீம 1,058,847 2.45% 154 0
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 89,220 0.21% 33 0
இந்திய ஜனநாயக கட்சி 39,288 0.085% 40 0
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 22,156 0.05% 7 0
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) 1,189 0.003% 3 0
மொத்தம் 1,210,700 2.80% 234 0
06 மற்றவர்கள் 929,060 2.01% 234 0
07 நோட்டா 345,538 0.75% 234 0
மொத்தம் 46,236,492 100.0% 234 234

மமுகூ (45.39%)
தேசகூ (39.72%)
நாதக (6.72%)
அமமுக+ (2.84%)
மநீம+ (2.73%)
மற்றவை (1.86%)
நோட்டா (0.75%)

மாவட்ட வாரியாக

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், கூட்டணி கட்சிகளாலும் வென்ற இடங்களின் எண்ணிக்கை
மாவட்டம் மொத்த தொகுதிகள் மமுகூ தேசகூ மற்றவை
திருவள்ளூர் 10 10 0 0
சென்னை 16 16 0 0
காஞ்சிபுரம் 4 4 0 0
செங்கல்பட்டு 7 6 1 0
இராணிப்பேட்டை 4 3 1 0
வேலூர் 5 4 1 0
திருப்பத்தூர் 4 3 1 0
கிருட்டிணகிரி 6 3 3 0
தர்மபுரி 5 0 5 0
திருவண்ணாமலை 8 6 2 0
விழுப்புரம் 7 4 3 0
கள்ளக்குறிச்சி 4 3 1 0
சேலம் 11 1 10 0
நாமக்கல் 6 4 2 0
ஈரோடு 8 3 5 0
நீலகிரி 3 2 1 0
திருப்பூர் 8 3 5 0
கோயம்புத்தூர் 10 0 10 0
திண்டுக்கல் 7 4 3 0
கரூர் 4 4 0 0
திருச்சிராப்பள்ளி 9 9 0 0
பெரம்பலூர் 2 2 0 0
அரியலூர் 2 2 0 0
கடலூர் 9 7 2 0
மயிலாடுதுறை 3 3 0 0
நாகப்பட்டினம் 3 2 1 0
திருவாரூர் 4 3 1 0
தஞ்சாவூர் 8 7 1 0
புதுக்கோட்டை 6 5 1 0
சிவகங்கை 4 3 1 0
மதுரை 10 5 5 0
தேனி 4 3 1 0
விருதுநகர் 7 6 1 0
இராமநாதபுரம் 4 4 0 0
தூத்துக்குடி 6 5 1 0
தென்காசி 5 3 2 0
திருநெல்வேலி 5 3 2 0
கன்னியாகுமரி 6 4 2 0
மொத்தம் 234 159 75 0

தொகுதி வாரியாக முடிவுகள்

கட்சிகள் பெற்ற வாக்குகள்

திமுக கூட்டணி அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியின் வாக்குகளும் அதன் சதவீதமும் மட்டும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இவற்றையும் காண்க

குறிப்புகள்

1. இந்த 133 பேரில் திமுக (125), மதிமுக (4), மநேமக (2), கொமதேக (1), தவாக (1) அனைவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மேற்கோள்கள்

1. Mariappan, Julie (7 April 2021). "Tamil Nadu assembly election: This constituency has recorded highest voter turnout | Chennai News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-assembly-election-this-district-comes-first-in-high-voter-turnout/articleshow/81946109.cms.
2. "TN records 72.78 percent polling: EC" (in en-IN). in.news.yahoo.com. https://in.news.yahoo.com/tn-records-72-78-percent-075057482.html.
3. "Tamil Nadu Assembly polls | DMK to field candidates in 174 seats" (in en-IN). The Hindu. 2021-03-09. https://www.thehindu.com/elections/tamil-nadu-assembly/tamil-nadu-assembly-polls-dmk-to-field-candidates-in-174-seats/article34030202.ece.
4. Writer, Staff (2021-03-07). "Shah exudes confidence of NDA 'coalition govt' in Tamil Nadu post assempolls". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
5. "Will Modi remain the Shah of Indian politics in 2020?". India Today.
6. "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019". @businessline.
7. "Will Modi remain the Shah of Indian politics in 2020?". India Today.
8. "Ruling AIADMK faced first electoral rout in 8 years in 2019". @businessline.
9. "Victorious Jayalalithaa hails people's faith in AIADMK". தி இந்து. 19 May 2016.
10. 10.0 10.1 தமிழகத்தில் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு: சுனில் அரோரா
11. தமிழக சட்டசபை தேர்தல்: பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
12. தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன
13. 80 வயது மேற்பட்ட முதியோர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம்
14. திமுக சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார்?- முழு விவரம்
15. தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு
16. [1]
17. "TamilNadu Final Electoral list,2021". பார்க்கப்பட்ட நாள் 20 January 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
18. "EC Releases Electoral Roll for Tamil Nadu Assembly Elections 2021". News18 (in ஆங்கிலம்). 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
19. [2]
20. அதிமுக தேர்தல் அறிக்கை: 163 அறிவிப்புகள் முழு விவரம்
21. அதிமுக தேர்தல் அறிக்கையில் அசத்தலான அறிவிப்புகள்
22. திமுக தேர்தல் அறிக்கை
23. திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
24. BREAKING: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
25. #BREAKING பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகள் பட்டியல் வெளியானது!
26. #BREAKING: பா.ம.க போட்டியிடும் 23 தொகுதிகள் எவையெவை? - வெளியானது பட்டியல்!
27. அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
28. #BREAKING அ.தி.மு.க-வின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியானது!
29. 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாமக: பென்னாகரத்தில் ஜி.கே.மணி; ஜெயங்கொண்டானில் கே.பாலு போட்டி
30. உதயசூரியன்; தம்பி இரட்டை இலை: ஆண்டிபட்டியில் 2-வது முறையாக கோதாவில் இறங்கிய சகோதரர்கள்!
31. திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - முழு நிலவரம்!
32. பாஜக வேட்பாளர் பட்டியல்... காலையில் கட்சியில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு சீட்
33. பிரசாரம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து ஆ. ராசா மனு - அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு
34. ஆ.ராசா 2 நாட்களுக்கு பிரசாரம் செய்ய தடை- தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
35. தமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு
36. அமமுக கூட்டணி; ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
37. "அ.தி.மு.க. 100 ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடும் - ஏ.சி.சண்முகம் அறிக்கை". மாலைமலர். https://www.maalaimalar.com/news/district/2021/03/15160750/2439582/Tamil-news-AC-Shanmugam-says-ADMK-100-Years-of-Success.vpf. பார்த்த நாள்: 17 March 2021.
38. "தலைமை நிலைய செய்தி வெளியீடு". தமிழ் மாநில முஸ்லீம் லீக். https://twitter.com/Tmmlsheik/status/1368223854229737476. பார்த்த நாள்: 17 March 2021.
39. "நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!". சமயம். https://tamil.samayam.com/elections/assembly-elections/tamil-nadu/news/actor-karthik-extends-his-support-to-aiadmk/articleshow/81449055.cms. பார்த்த நாள்: 17 March 2021.
40. "அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவு : தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிவிப்பு :". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/645774-.html. பார்த்த நாள்: 17 March 2021.
41. "அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தமிழக விவசாயிகள் சங்கம் சேலத்தில் அறிவிப்பு.". சமயம். https://tamil.samayam.com/news-video/news/tamil-nadu-farmers-association-announces-support-for-aiadmk-led-alliance-in-salem/videoshow/81553134.cms. பார்த்த நாள்: 17 March 2021.
42. "அதிமுக கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் ஆதரவு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/election-2021/642807-13-small-parties-supports-admk.html. பார்த்த நாள்: 17 March 2021.
43. "திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு: தமிமுன் அன்சாரி கடிதம்". நியூஸ்18. https://tamil.news18.com/news/tamil-nadu/humanitarian-democratic-party-supports-dmk-alliance-sur-424419.html. பார்த்த நாள்: 17 March 2021.
44. "5 கோரிக்கைகளுடன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மஜக.. ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு வேண்டும்.... Read more at: https://tamil.asianetnews.com/politics/mjk-expressed-support-for-the-dmk-alliance-with-5-demands-if-he-comes-to-power-he-wants-a-complete-ban-on-tasmacl-ansari--qpsnvu". ஆசிய நெட் நியூஸ். https://tamil.asianetnews.com/politics/mjk-expressed-support-for-the-dmk-alliance-with-5-demands-if-he-comes-to-power-he-wants-a-complete-ban-on-tasmacl-ansari--qpsnvu. பார்த்த நாள்: 17 March 2021.
45. "கைவினைஞா் முன்னேற்றக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2021/mar/15/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3581999.html. பார்த்த நாள்: 17 March 2021.
46. "திமுக கூட்டணிக்கு ஆதரவு; ஒவைசியால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/642490-support-for-the-dmk-alliance-owaisi-cannot-make-an-impact-in-tamil-nadu-indian-tawheed-jamaat-announcement.html. பார்த்த நாள்: 17 March 2021.
47. "திமுக கூட்டணிக்கு ஆதரவு: தமிழக மக்கள் முன்னணி முடிவு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/mar/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3583353.html. பார்த்த நாள்: 17 March 2021.
48. "தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அறிவிப்பு". தமிழ் இந்து. https://www.hindutamil.in/news/tamilnadu/645504-support-for-dmk-alliance-in-elections-unity-muslim-jamaat-announcement.html. பார்த்த நாள்: 17 March 2021.
49. "வேட்டுவ கவுண்டர்களின் புதிய திராவிட கழகம் உட்பட 50 இயக்கங்கள் - சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு". இன் இந்தியா. https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-assembly-election-50-movements-assosiciations-support-to-dmk-alliance-415122.html. பார்த்த நாள்: 17 March 2021.
50. "திமுக கூட்டணிக்கு பூசாரிகள் நலச் சங்கம் ஆதரவு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/regional03/646446-.html. பார்த்த நாள்: 17 March 2021.
51. "திமுக கூட்டணிக்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆதரவு". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/todays-paper/regional03/646126-.html. பார்த்த நாள்: 17 March 2021.
52. "Election Promises Platform - Tamil Nadu". Global Shapers.
53. https://twitter.com/LokPoll/status/1349699846601469953?s=19
54. Bureau, IANS News (2021-01-18). "IANS Election 2021 Opinion Poll LIVE: The ruling #AIADMK-led #NDA alliance will face a major setback in the Assembly polls in #TamilNadu scheduled later this yr, as the #DMK-led #UPA is predicted to win 162 seats in the 234-member Assembly". twitter and Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
55. Bureau, ABP News (2021-02-27). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
56. "https://twitter.com/timesnow/status/1368951697398136834". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09. {{cite web}}: External link in |title= (help)
57. "ABP CVoter Opinion Poll 2021". ABP Website (in ஆங்கிலம்).
58. "Puthiyathalaimurai - APT Opinion Poll 2021". Puthiyathalaimurai Website (in ஆங்கிலம்).
59. "Spick Media MCV Network Opinion Poll 2021". SpickMedia (in ஆங்கிலம்).
60. "https://twitter.com/timesnow/status/1374729085025284103". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-24. {{cite web}}: External link in |title= (help)
61. "Tweet". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
62. "மெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி?". ஜூனியர் விகடன்.
63. "தேர்தலில் 151 இடங்களை திமுக கைப்பற்றும் – மாலை முரசு கருத்துக்கணிப்பில் தகவல்". மாலை முரசு.
64. "மக்கள் யார் பக்கம் | தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு". தந்தி டிவி.
65. "உங்கள் தொகுதியில் யாருக்கு வெற்றி? - நக்கீரன் மெகா சர்வே ரிசல்ட்". nakkheeran. 4 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
66. "தமிழகத்தில் 72.78 சதவீத வாக்குப்பதிவு; கரூரில் அதிகம், சென்னையில் குறைவு".
67. "Tamil Nadu Election Results 2021 Live: DMK leader Stalin to take oath as CM on May 7". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-04.

வெளி இணைப்புகள்