கண்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox royalty | succession = சாதவாகனர்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:17, 4 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

கண்கன்
சாதவாகன அரசன்
ஆட்சிக்காலம்அண். கி.மு. 100-70
முன்னையவர்சிமுகன்
பின்னையவர்சிறீ சதகர்ணி (புராணங்களின் படி)
அரசமரபுசாதவாகனர்
மன்னன் கண்கனின் கல்வெட்டு (கி.மு. 100-70)
நாசிக் குகைகளிலுள்ள சாதவாகன அரசன் கண்கனின் கல்வெட்டு காணப்படும் குகை எண் 19, கி.மு. 1ம் நூற்றாண்டு.[1]
நாசிக் குகைகளிலுள்ள குகை எண் 19ல் காணப்படும் அரசன் கண்கனின் கல்வெட்டு. அண். கி.மு. 100-70 காலப்பகுதிக்குரிய இக் கல்வெட்டே அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையான சாதவாகனர்களின் கல்வெட்டாகும்.[2]
பிராமி எழுத்தில்:𑀲𑀸𑀤𑀯𑀸𑀳𑀦𑀓𑀼𑀮𑁂 𑀓𑀦𑁆𑀳𑁂𑀭𑀸𑀚𑀺𑀦𑀺 𑀦𑀸𑀲𑀺𑀓𑁂𑀦 𑀲𑀫𑀡𑁂𑀦 𑀫𑀳𑀸𑀫𑀸𑀢𑁂𑀡 𑀮𑁂𑀡 𑀓𑀸𑀭𑀢
சாதவாகனகுலே கண்கே ராசினி நாசிககேன சமணேன மகாமாதேண லேண காரித
"சாதவாகன குடும்பத்தைச் சேர்ந்த மன்னன் கண்கனின்[3] கீழ் நாசிக்கில் உள்ள, சமணர்களுக்குப் பொறுப்பான அலுவலனால் இந்தக் குகை அமைத்துக் கொடுக்கப்பட்டது".[4][3]

கண்கன் (பிராமி எழுத்துமுறை:𑀓𑀦𑁆𑀳, Ka-nha, அண். கி.மு. 1ம் நூற்றாண்டு) என்பவன் இந்தியாவின் சாதவாகன வம்சத்தின் ஆட்சியாளனாவான். வரலாற்றாய்வாளர் இமான்சு பிரபா ராய் இவனது காலத்தை கி.மு. 100-70 என முடிவு செய்துள்ளார்.[5][1]

கண்கன், புராணங்களில் "கிருசுணா" (IAST: Kṛṣṇa) எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். புராண மரபு வழியின் படி இவன் முதலாவது சாதவாகன அரசனான சிமுகனின் (இவனது பெயர் வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) தம்பியாவான்.[6][7]

நாசிக் குகை

மரபு வழிப் புராணக் குறிப்புகளுக்கு மேலதிகமாக, நாசிக் குகைகளிலுள்ள குகை எண் 19ல் உள்ள ஒரு கல்வெட்டும் கண்கன் எனும் மன்னனின் இருப்பை உறுதிப்படுத்துகிறது. நாசிக் குகைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "சாதவாகன-குல"த்தின் "கண்க-ராச" (மன்னன் கண்கன்) இவனே என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[8] கண்கனின் ஆட்சியின் போது, சிரமணர்களுக்குப் (வைதீக மறுப்புத் துறவிகள்) பொறுப்பான மகா-மாத்ர (பொறுப்பான அலுவலன்) என்பவனால் இக்குகை வெட்டப்பட்டது என இக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இதன் அடிப்படையில், கண்கன் பௌத்தத்தை ஆதரித்தானெனவும், பௌத்தத் துறவிகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஒரு நிர்வாகப் பிரிவை உருவாக்கியிருந்தானெனவும் சுதாகர் சட்டோபாத்தியா முடிவு செய்துள்ளார். மேலும், அசோகனின் கல்வெட்டுக்களில் பரவலாகக் காணப்படும் சொல்லான மகா-மாத்ர எனும் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம், முற்காலச் சாதவாகனர் மௌரியரின் நிர்வாக அமைப்பு மாதிரியையே பின்பற்றியுள்ளமையும் அறியக்கூடியதாயுள்ளது.[6]

நாசிக் குகைகளிலுள்ள குகை எண் 19, குகைத் தொகுதியின் கீழ்த்தளத்தில், குகை எண் 18ன் வாயிலுக்கு இடப்புறத்திலும், குகை எண் 20க்கு நேர்கீழாகவும் அமைந்துள்ளது. குகை எண் 19ல், சாதவாகனர்களின் மன்னனான கிருசுணனின் ஆட்சியின் போது அரசு அலுவலன் ஒருவனால் வழங்கப்பட்ட தானம் குறித்த ஒரு கல்வெட்டு காணப்படுகிறது.:

𑀲𑀸𑀤𑀯𑀸𑀳𑀦𑀓𑀼𑀮𑁂 𑀓𑀦𑁆𑀳𑁂𑀭𑀸𑀚𑀺𑀦𑀺 𑀦𑀸𑀲𑀺𑀓𑁂𑀦 𑀲𑀫𑀡𑁂𑀦 𑀫𑀳𑀸𑀫𑀸𑀢𑁂𑀡 𑀮𑁂𑀡 𑀓𑀸𑀭𑀢
சாதவாகனகுலே கண்கே ராசினி நாசிககேன சமணேன மகாமாதேண லேண காரித
"சாதவாகன குடும்பத்தைச் சேர்ந்த மன்னன் கண்கனின் கீழ் நாசிக்கில் உள்ள, சமணர்களுக்குப் பொறுப்பான அலுவலனால் இந்தக் குகை அமைத்துக் கொடுக்கப்பட்டது."

—குகை எண் 19லுள்ள கல்வெட்டு[9]

இதன் மூலம், குகை எண் 19 நாசிக் குகைகளில் முதலில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட குகைகளில் ஒன்றாக இடம்பெறுகிறது.[10]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Empires: Perspectives from Archaeology and History by Susan E. Alcock p.168
  2. Carla M. Sinopoli 2001, ப. 168.
  3. 3.0 3.1 Alcock, Susan E.; Alcock, John H. D'Arms Collegiate Professor of Classical Archaeology and Classics and Arthur F. Thurnau Professor Susan E.; D'Altroy, Terence N.; Morrison, Kathleen D.; Sinopoli, Carla M. (2001) (in en). Empires: Perspectives from Archaeology and History. Cambridge University Press. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521770200. https://books.google.com/books?id=MBuPx1rdGYIC&pg=PA168. 
  4. Burgess. Epigraphia Indica Vol 8. பக். 93. https://archive.org/details/EpigraphiaIndica. 
  5. Carla M. Sinopoli (2001). "On the edge of empire: form and substance in the Satavahana dynasty". in Susan E. Alcock. Empires: Perspectives from Archaeology and History. Cambridge University Press. பக். 166–168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521770200. https://books.google.com/books?id=MBuPx1rdGYIC&pg=PA166. 
  6. 6.0 6.1 Sudhakar Chattopadhyaya (1974). Some Early Dynasties of South India. Motilal Banarsidass. பக். 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120829411. https://books.google.com/books?id=78I5lDHU2jQC&pg=PA37. 
  7. rao 1994, ப. 10.
  8. D. S. Naidu (1970). Andhra Satavahanas: Origins, Chronology, and History of the Early Rulers of the Dynasty. Bharath. பக். 80. https://books.google.com/books?id=hLkBAAAAMAAJ. 
  9. Epigraphia Indica p.93 Inscription No.22
  10. Archaeological survey of India [1] பரணிடப்பட்டது 26 செப்டெம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்

நூற்பட்டியல்

  • rao (1994), History and Culture of Andhra Pradesh: From the Earliest times to the present Day, Sterling Publishers, ISBN 81-207-1719-8


வார்ப்புரு:India-royal-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்கன்&oldid=3128767" இலிருந்து மீள்விக்கப்பட்டது