கிசாடியா பறவைகள் சரணாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேம்படுத்தல் using AWB
அடையாளம்: 2017 source edit
வரிசை 8: வரிசை 8:


== பறவைகள் ==
== பறவைகள் ==
[[File:Lesser Flamingo.JPG|thumb|Flying pattern of lesser flamingos]]

[[File:File. Pelicans.jpg|thumb|Great white pelicans preening]]
கடல் மற்றும் கரையோர பறவைகள் இரண்டையும் இங்கே காணலாம். இங்கே கறுப்பு கழுத்து நாரை, [[கருங்கொண்டை முக்குளிப்பான்]], [[வைரி]] , புள்ளிகள் கொண்ட இந்திய கழுகு, [[கரிய அரிவாள் மூக்கன்]], [[செம்பருந்து]], [[நீளவால் தாழைக்கோழி]], [[முசல் கின்னாத்தி]], [[பச்சைக்காலி]] ஆகிய பறவையினங்கள் பொதுவாக காணப்படுகின்றன. மற்ற வனவிலங்குகளில் [[நீலான்]], [[குள்ள நரி|குள்ளநரி]] , [[ஓநாய்]], [[காட்டுப்பூனை|காட்டுப் பூனை]], [[கீரி|கீரிப்பிள்ளை]] , இந்திய முயல் மற்றும் பாம்புகள் என்பனவும் காணப்படுகின்றன.<ref name=":2" />
கடல் மற்றும் கரையோர பறவைகள் இரண்டையும் இங்கே காணலாம். இங்கே கறுப்பு கழுத்து நாரை, [[கருங்கொண்டை முக்குளிப்பான்]], [[வைரி]] , புள்ளிகள் கொண்ட இந்திய கழுகு, [[கரிய அரிவாள் மூக்கன்]], [[செம்பருந்து]], [[நீளவால் தாழைக்கோழி]], [[முசல் கின்னாத்தி]], [[பச்சைக்காலி]] ஆகிய பறவையினங்கள் பொதுவாக காணப்படுகின்றன. மற்ற வனவிலங்குகளில் [[நீலான்]], [[குள்ள நரி|குள்ளநரி]] , [[ஓநாய்]], [[காட்டுப்பூனை|காட்டுப் பூனை]], [[கீரி|கீரிப்பிள்ளை]] , இந்திய முயல் மற்றும் பாம்புகள் என்பனவும் காணப்படுகின்றன.<ref name=":2" />



06:36, 2 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

கிசாடியா பறவைகள் சரணாலயம் என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலயம் ஆகும். சுமார் 300 வகையான பறவைகளின் வலசை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

சரணாலயம்

இந்த சரணாலயம் நன்னீர் ஏரிகள், உவர் நீர் மற்றும் நன்னீர் சதுப்பு நிலங்களை கொண்டுள்ளது. சரணாலயம் 6.05 கிமீ 2 பரப்பளவில் பரவியுள்ளது.[2][3] இப்பகுதியில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு ரூபரேல் நதியின் நீரை கடலில் நுழைவதற்கு சற்று முன்பு சேமித்து வைப்பதற்காக தடுப்பணை கட்டப்பட்டது. இங்கு மழை மற்றும் நதியின் நன்னீர் ஒரு புறமும், மறுபுறம் கடலின் உவர் நீருமாக தனித்துவமான பகுதி இங்கு உருவாக்கப்பட்டது. கட்ச் வளைகுடாவிலிருந்து பாயும் சிற்றோடைகள் கண்டல் தாவரங்களையும் மற்றும் பிற கடல் தாவரங்களையும் ஆதரிக்கின்றன. சரணாலயத்தின் நிலப் பரப்பில் உள்நாட்டு தாவரங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இந்த சரணாலயம் கட்ச் வளைகுடாவில் ஜாம்நகர் மாவட்டத்தின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ரூபரேல் நதி மற்றும் கலிந்திரியின் நீர்நிலைகளில் அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த மற்றும் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் கிசாடியா சரணாலயம் நராரா தீவுக்கு அருகில் அமைந்திருப்பதால் அழகான மற்றும் உயிர் பல்வகைமையுள்ள பவளப்பாறைகளையும் கொண்டுள்ளது.[4] இந்த சரணாலயம் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் அவதானிப்பதற்கான சிறந்த இடமாகும்.

இருப்பிடம்

கிசாடியா சரணாலயம் ஜாம் நகரில் இருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜாம்நகரில் அமைந்துள்ளது. ஜாம் நகரில் இருந்து தினமும் மும்பைக்கு நேரடி விமானம் உள்ளது. கிசாடியா சரணாலயம் 1982 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[5] இது குஜராத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாகும்.[6] சரணாலயத்திற்குச் செல்வதற்கு பேருந்துகள் மற்றும் வாடகையுந்துகள் கிடைக்கின்றன. சரணாலயத்திற்குள் செல்ல 3 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த சரணாலயம் இரு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரு முக்கிய பகுதிகளும் நன்னீர், உவர் நீர் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.

பறவைகள்

Flying pattern of lesser flamingos
Great white pelicans preening

கடல் மற்றும் கரையோர பறவைகள் இரண்டையும் இங்கே காணலாம். இங்கே கறுப்பு கழுத்து நாரை, கருங்கொண்டை முக்குளிப்பான், வைரி , புள்ளிகள் கொண்ட இந்திய கழுகு, கரிய அரிவாள் மூக்கன், செம்பருந்து, நீளவால் தாழைக்கோழி, முசல் கின்னாத்தி, பச்சைக்காலி ஆகிய பறவையினங்கள் பொதுவாக காணப்படுகின்றன. மற்ற வனவிலங்குகளில் நீலான், குள்ளநரி , ஓநாய், காட்டுப் பூனை, கீரிப்பிள்ளை , இந்திய முயல் மற்றும் பாம்புகள் என்பனவும் காணப்படுகின்றன.[5]

அனைத்து வகையான கூடுகளையும் இங்கே காணலாம். மரத்திலும், தரையிலும் கட்டும் கூடுகளையும், தண்ணீரில் மிதக்கும் கூடுகளையும் இங்கே காணலாம்.. வாத்துகளின் சில வகைகள் மிதக்கும் கூடுகளை உருவாக்குகின்றன. இந்தியாவில் எங்கும் எளிதில் காணப்படாத கறுப்பு-கழுத்து நாரைகள் இங்கு ஏராளமாகக் காணப்படுகின்றன.[7]

கிசாடியா பறவைகள் சரணாலயத்திற்கு குறைந்தது 257 முதல் 300 வகையான இடம்பெயரும் பறவைகள் வருகை தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இந்திய பறவையியலாளர் சலீம் அலி 1984 ஆம் ஆண்டில் சரணாலயத்திற்கு விஜயம் செய்தபோது ​​ஒரே நாளில் 104 பறவை இனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.[8]

சுற்றுலா

இப்போது சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமமாக மாறியுள்ள சரணாலயத்தை மக்கள் பார்வையிடுகின்றனர். பறவைகளை செப்டம்பர் முதல் பிப்ரவரி-மார்ச் வரை இங்கு காணலாம்.[2][4] 2010 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் கிசாடியாவில் ஒரு சர்வதேச பறவை பார்வையாளரின் மாநாடு நடைபெற்றது.

சான்றுகள்

  1. "Gujarat's Khijadia bird sanctuary is haven for over 300 migratory bird species - Hindustan Times (New Delhi, India) | HighBeam Research". web.archive.org. 2014-06-11. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
  2. 2.0 2.1 "Khijadiya Bird Sanctuary | Around Jamnagar, India Around Jamnagar". www.lonelyplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
  3. "Brief of Khijadiya Bird Sanctuary". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. 4.0 4.1 "Bird watchers increase at Khijadiya Sanctuary". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. 5.0 5.1 "WildGujarat - A Team to help you explore Wildlife of Gujarat". WildGujarat (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "Gujarat's Khijadia bird sanctuary is haven for over 300 migratory bird species | TopNews". www.topnews.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-24.
  8. "Migrantwatch". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)