விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கல்வியியல் நோக்கில் கேள்விகள்: எனது முன்மொழிவு விக்கிமூலம், மொழிபெயர்ப்பு கருவி அறிமுக நிலையில் வேண்டாம்
வரிசை 67: வரிசை 67:


::சரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)
::சரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)

:::கட்டற்ற தரவுகளின் அளவு தமிழில் குறைவாகவே உள்ளதெனக் கற்குங்கருவியியலில் (Machine learning) செயற்படும் ஆய்வறிஞர்களின் கலந்துரையாடலில் தெரிய வருகிறது. பலவகையான காலக்கட்டங்களில் பயன்படுத்தச் சொற்களை விக்கிமூலத்திட்டத்தின் வழியே மட்டுமே கொண்டுவர இயலும். தற்போது மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளில், குறிப்பிட்ட சொற்களே சுழன்று வருகின்றன. எனவே, வளர்ந்து வரும் நுட்பங்களுக்கு விக்கித்திட்டங்களிலேயே தரவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனவே, சொற்களின் செழுமையைக் கூட்ட வேண்டியது நமது கடமையென்றே எண்ணுகிறேன். புதியவர்களுக்கு விக்கிமூலம் எளிது. '''படத்தைப் பார்த்து பங்களி''' என்ற பரப்புரை, தமிழ் வளம் பெருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நூல்களைச் சார்ந்து எழுதுதல் மேலோங்க வேண்டும். [[s:அட்டவணை:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf]] என்ற நூல் சில ஆண்டுகள் பயணப்பட்டு எழுதிய நூல். இதில் தமிழகத்தின் மலைவளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு எழுதும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளன. அது சீர்தரமற்ற பல துப்புரவு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவே அவற்றினை பயிலரங்குளில் தவிர்ப்பது நல்லது.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:34, 20 அக்டோபர் 2020 (UTC)

01:34, 20 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

வரைவு

உள்ளகப்பயிற்சித் திட்டத்திற்கான வரைவை உருவாக்கியுள்ளேன். விக்கித் திட்டமாகவும் இல்லாமல் வெறும் பயிற்சிப்பட்டறையாக மட்டுமில்லாமல் இலக்குடன் கூடிய நெடிய பயிற்சியாக இருக்கும். இதற்கும் முன் நிகழ்ந்த பரப்புரைகளின் படிப்பினையைக் கொண்டு தான்தோன்றித் தனமாகக் கட்டுரைகள் உருவாகாத வண்ணம் கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு இலக்கிற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களை அமைக்கலாம். விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா? வேறு மாற்றங்களையோ திருத்தங்களோ வரைவில் செய்யலாம். மாணவர்களுக்கும் விக்கிச் சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் இந்தப் பயிற்சியினைத் திட்டமிடலாம். கல்லூரியின் பருவத்தேர்வின் அடிப்படையில் நவம்பர்க்குள் பயிற்சியினை முடிக்க வேண்டும். எனவே அதற்குள் பயிற்சிக்கான நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைவரின் வழிகாட்டலை எதிர்பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:08, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

சி.ஐ.எஸ். அமைப்பிடம் சான்றிதழுக்கும் இணையச் செலவிற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் நடத்தவுள்ள சுமார் பத்து அமர்வுகளில் தொடர்ந்து பங்கெடுக்க யாருக்கேனும் இணையச் செலவிற்கு உதவி வேண்டினால் இங்கே குறிப்பிடலாம். மேலும் ஆதரவையும் கருத்தையும் அங்கேயும் இடலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 06:46, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
  1. கூடுதலாக பொறுப்பாளர்களை நியமிக்கலாம். அல்லது, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு குழுவாக நியமிக்கலாம். உதாரணமாக விக்கிமூலத்திற்க்கு ஒரு குழு, விக்கிப்பீடியாவிற்கு ஒரு குழு இதே போல மற்றதற்கும். காரணம் பணிகள் பிரித்துக் கொடுக்கும் போது வேலை சுலபமாகும் என்பது என் கருத்து.
  2. //விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா?// இது சரியாக எனக்குப் புரியவில்லை. துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்கலாமா? எனக் கேட்டுள்ளீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன். பொதுவாகத் துப்புரவு என்பது சற்று விக்கிப்பீடியாவினைப் புரிந்து கொண்ட பின்னர் செய்யப்படுவது என்பது என் கருத்து. எனவே துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.
ஸ்ரீ (✉) 16:01, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
ஆமாம் முந்தைய நிகழ்வு போல திட்டங்களுக்கான பொறுப்பாளர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். விரும்பும் பொறுப்பைப் பயனர்கள் இங்கே கருத்திட்டு முன்னெடுக்கலாம். விதிமுறைகளில் எத்தகைய மாற்றங்களையும் அவர்கள் சொல்லலாம். வழமை போல மற்றவர்களும் பங்கெடுக்கலாம். விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித் தரவு, விக்கிசெய்திகள், விக்கிநூல், விக்கி மேற்கோள், இதர என்று விரும்பும் திட்டங்களில் பொறுப்பை எடுக்கலாம். பயிற்சியளித்தல், இலக்கு நோக்கிப் பங்களிக்க வைத்தல், பங்களிப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தல் ஆகியவை முக்கியப் பணியாக இருக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 07:38, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கருத்துகள் - ஞா. ஸ்ரீதர்

மிகச் சிறப்பான முயற்சி இதனை முன்னெடுத்த மகாலிங்கம் மற்றும் நீச்சல்காரனுக்கு வாழ்த்துகள்.

  1. மாணவர்கள் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்பதனை உறுதிபடுத்த வேண்டும். பொதுவாக நிறுவனங்களில் நடக்கும் நிகழ்விற்கு சிறு தொகை பெறப்படுவது வழக்கம். எனவே கட்டணம் செலுத்தவில்லை என அவர்களிடம் சான்று பெற்றால் அது இந்தத் திட்டத்திற்கும் விக்கிப்பீடியாவிற்கும் நல்லது எனக் கருதுகிறேன்.
  1. மாணவர்களுக்கு இறுதித் தேர்வு முடிந்து விட்டதா? அல்லது இந்தப் பயிற்சியினால் மாணவர்களது மற்ற தேர்விற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயிற்சி நாட்களை அமைக்க வேண்டும்.
  2. ஒரு மாணவரை விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களிலும் பங்களிக்கச் செய்ய வேண்டுமா?
  3. விக்கி மேற்கோள்களையும் சேர்க்கலாம்.
  4. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கச் செய்யலாம் என்பது இந்த முதல் முயற்சிக்கு குழப்பத்தினை ஏற்படுத்தலாம். ஸ்ரீ (✉) 16:29, 15 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
இந்தத் திட்டத்தின் முன்னுரையில் கட்டணமில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். அதைக் கல்லூரித் தரப்பிலும் தெரிவித்துள்ளோம். அது கட்டாயக் கொள்கை. மாணவர்களுக்குத் தேர்வு எதுவும் இக்காலகட்டத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப முன்பின் நமது பயிற்சியை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்ப நேரத்தில் பங்களிக்கலாம். ஏழாவது விதியில் அனைத்து இதர திட்டங்களும் சேர்த்து 50 தொகுப்பு என்றுள்ளது. விக்கிமேற்கோள் என்று தனியாக இலக்கு கொடுக்க வேண்டுமா?. எட்டாவது விதியாக உள்ளது விருப்பத்தேர்வுதான். ஆங்கில விக்கியில்/விக்சனரியில் தமிழ்ப் பக்கங்களை மொழிபெயர்க்க, மேம்படுத்த என்று அவர்களுக்குக் கூடுதல் அனுபவங்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாணவர்களின் பங்களிப்பைத் தரவரிசைப்படுத்த இவை கூடுதல் காரணங்களாகக் கொள்ளாமுடியும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை திட்டமிடலாம். இலக்குகளை முடிப்பவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ் வழங்குவோம். கல்லூரித் தரப்பில் இந்தப் பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் இட்டுக் கொள்ள உதவும். -நீச்சல்காரன் (பேச்சு)
  • விக்கிமூலம் 2ஆவது அமர்வில் விக்கிமூல நிரல்கள் பற்றி கூறலாம்.
  • விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கும் போது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எப்படி உருவாக்குவது , நாமாகவே சான்று சேர்த்து எப்படி உருவாக்குவது எனும் இரு முறைகளையும் சொல்லிக் கொடுப்பது நல்லது.
  • ஒவ்வொரு நாள் அமர்விற்கும் பிறகு அவர்களுக்குப் பயிற்சியாக கொடுக்க வேண்டும் தானே. அவ்வாறு கொடுக்கப்படும் பயிற்சியினை விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்த வேண்டும்.
  • சான்றிதழ் கொடுப்பதோடு நமது பணி முடிவடைகிறதா? எனில் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும்? மதிப்பெண் வழங்குவதில் விக்கி சமூகத்திற்கு பொறுப்பு இல்லை எனில் அதனையும் திட்டப் பக்கத்தில் தெரிவிப்பது நல்லது. ஸ்ரீ (✉) 10:39, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

சஞ்சீவி சிவகுமார்

# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
# விதிமுறைகளில் இப்படி எழுதினால் தெளிவாயிருக்கும் // 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்).சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

பயிற்சி அளிக்க விரும்புவோர்

பயிற்சி அளிக்க விரும்பும் பயனர்கள் தாங்கள் எந்த அமர்வில் அல்லது விக்கிமீடியாவின் எந்தத் திட்டத்தில் பயிற்சி அளிக்க விரும்புகிறீர்கள் எனத் தெரிவித்தால் நிகழ்ச்சி நிரல் அமைக்க ஏதுவாக இருக்கும்.

நீச்சல்காரனிடமிருந்து அழைப்பைப் பெற்றதிலிருந்து சற்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நான் மொழிபெயர்ப்புத் தொடர்பில் சற்றுப் பயிற்சி வழங்கலாம். அதற்குரிய நேர காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 14:18, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்புத் தொடர்பான பயிற்சியில் ஏற்கனவே இருக்கும் விக்கிப்பீடியர்களிலும் விருப்பமுள்ளோர் கலந்து கொள்வது பிழைகளைக் குறைக்க உதவும். அவற்றைத் திருத்த நேரத்தைச் செலவழிப்பதும் குறையும். எனவே, மொழிபெயர்ப்பைத் தனிப் பயிற்சியாக நடத்தினால் நல்லதென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 14:42, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

@Fahimrazick: சிறப்பு. ஆமாம் இணையவழி என்பதால் யாவரும் கலந்து கொள்ளலாம். இன்னும் மூன்று வாரமுள்ளதால் நீங்கள் நிதானமாகவே தயார் செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:33, 16 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

எனக்குரிய தேதியையும் நேரத்தையும் சரியாக அறியத் தாருங்கள். மொழிபெயர்ப்புப் பயிற்சியிற் சேர ஏற்கனவேயுள்ள விக்கிப்பீடியர்களுக்கும் நேரகாலத்துடனேயே அறிவித்தால் நல்லது. இங்கே கிட்டத்தட்ட எல்லோரும் மொழிபெயர்ப்புச் செய்ய முயல்கிறார்களல்லவா.--பாஹிம் (பேச்சு) 05:02, 17 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

வணக்கம் பாஹிம், நீங்கள் கூடுதலாக கட்டுரையின் தலைப்பிடல் பற்றிக் கூற இயலுமா? அண்மைக் காலமாக நீங்கள் தலைப்பிடல் பற்றி பல கட்டுரைகளில் கூறி வருவதனைப் பார்க்கிறேன். எனவே நீங்கள் இந்த பயிற்சியில் இது பற்றி கூறினால் என் போன்றவர்களுக்கும் , மாணவர்களுக்கும் தலைப்பிடல் பற்றி அறிவதில் பேருதவியாக இருக்கும். நன்றி ஸ்ரீ (✉) 09:03, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கட்டாயம். அதைப் பற்றிக் கூறத்தான் வேண்டும். இங்கே கிட்டத்தட்ட எல்லாமே மொழிபெயர்ப்புத்தான். அவை எங்கள் மொழிக்கேற்றவாறு அமைவதன்றோ முறை. ஒரு பயிற்சியளிப்பவருக்கு எத்தனை மணி நேரம் வழங்கப்படும்? அதற்கேற்றவாறு தானே திட்டமிட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:10, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

ஒரு மணி நேரம் அதில் 40 நிமிடங்கள் பயிற்சி அளிப்பதற்கும் 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், பயிற்சியாளர் விரும்பினால் சற்று நேரத்தினை அதிகரித்துக்கொள்ளலாம். ஸ்ரீ (✉) 14:07, 18 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

நல்கை

தொடர்ந்து பல கல்லூரிகளுக்காகவும், தனியார் அறக்கட்டளைகளிலும் விக்கிப்பரப்புரை செய்வதால் இணைய இணைப்புக்கும், சில குறும்பயணங்களுக்கும் உதவித்தொகை வேண்டும். தற்போது செய்துவரும் பணப்பணி, நிலையற்றதாகவும், போதிய வருமானம் இல்லாமலும் இருக்கிறது. திட்டப்பணி மூலம் நல்கைப் பெற்று, உதவக் கோருகிறேன் --உழவன் (உரை) 06:04, 17 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

குறும்பயணங்கள் செய்ய வேண்டாம். கொரோனா காலத்தில் நல்கையில் விக்கிப் பரப்புரைக்குப் பயணங்கள் செய்யக் கூடாது. இணையக் கட்டண உதவி கிடைக்கலாம் காத்திருப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:31, 17 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

இற்றை

கல்லூரித் தரப்பில் வழங்கப்படும் கூகிள் மீட் பயன்படுத்தலாம். இதுவரை 60 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலக்காகக் கொடுத்த பங்களிப்புகள் செய்யும்பட்சத்தில் மட்டுமே பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்கள் கலந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. பல பயனர்கள் பயிற்சியளிக்க இசைவு தெரிவித்ததனடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கலாம். இன்னும் பலர் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டால், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனிப் பொறுப்பாளர்கள் என்று பிரிக்கும் வகையில் செய்யலாம். இன்னும் சில தினங்கள் காத்திருந்து தேதியை இறுதி செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:55, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கல்வியியல் நோக்கில் கேள்விகள்

இந்த உள்ளகப் பயிற்சி சான்றிதழின் கல்விப்புல பெறுமதி என்ன? அந்த மாணவர்கள் கட்டாயம் முடிக்க வேண்டிய பயிற்சி, மதிப்பெண், creditக்கு ஈடாக இது ஏற்றுக் கொள்ளப்படுமா? ஆம் எனில், இதற்கு அக்கல்லூரியின் முதல்வர், பல்கலை முறையான ஏற்பு அளித்துள்ளதா? Wikipedia in Education திட்டம் Christ பல்கலையில் இப்படி முறையான ஏற்பு பெற்று நடத்தப்படுகிறது.

முறையான ஏற்பு எனில், முதுகலை தமிழ் மாணவர்கள் இந்த உள்ளகப் பயிற்சியில் பெற வேண்டிய பயிற்சி, learning outcome என்னவென்று அவர்கள் பாடத்திட்டம் வரையறுக்கிறது? அதனைக் கருத்தில் கொண்டு நமது பயிற்சி எப்படி அமைக்கப்பட்டுள்ளது?

இதற்கு அக்கல்லூரியில் இருந்து பொறுப்பேற்கும் ஆசிரியர்(கள்) யார்?

விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம்.

பாடத்திட்டம் படி, ஒரு மாதத்தில் அவர்கள் பயிற்சியில் எத்தனை மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்று உள்ளது? அதற்கு ஏற்ப deliverables இருக்க வேண்டும். விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றின் படி நிறைய எதிர்பார்ப்பு உண்டு.

இது பல்கலை ஏற்பு பெற்ற பயிற்சி இல்லை ஏதோ நாம் விருப்பத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்றால் மேலே உள்ள கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 13:40, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

இது பல்கலைக்கழக ஏற்போ, கல்லூரியின் கட்டாயமோ அல்ல. விருப்பத்தின் பெயரில் நடைபெறும் உள்ளகப்பயிற்சி மட்டுமே. ஏதேனும் ஒரு இணைய ஊடகத்தில் பயிற்சியை விரும்பினர். மற்றொரு தனியார் ஊடகத்திலும் அழைப்பு வந்தது ஆனால் அவர்கள் விக்கித் திட்டங்களில் பயிற்சி பெறவே முடிவு செய்தனர். ஏற்கனவே மதுரையில் வேங்கைத் திட்டப் போட்டிக்கு நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள் மூலமே இத்தகைய முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. -நீச்சல்காரன் (பேச்சு) 15:25, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
சரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --இரவி (பேச்சு) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
கட்டற்ற தரவுகளின் அளவு தமிழில் குறைவாகவே உள்ளதெனக் கற்குங்கருவியியலில் (Machine learning) செயற்படும் ஆய்வறிஞர்களின் கலந்துரையாடலில் தெரிய வருகிறது. பலவகையான காலக்கட்டங்களில் பயன்படுத்தச் சொற்களை விக்கிமூலத்திட்டத்தின் வழியே மட்டுமே கொண்டுவர இயலும். தற்போது மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளில், குறிப்பிட்ட சொற்களே சுழன்று வருகின்றன. எனவே, வளர்ந்து வரும் நுட்பங்களுக்கு விக்கித்திட்டங்களிலேயே தரவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனவே, சொற்களின் செழுமையைக் கூட்ட வேண்டியது நமது கடமையென்றே எண்ணுகிறேன். புதியவர்களுக்கு விக்கிமூலம் எளிது. படத்தைப் பார்த்து பங்களி என்ற பரப்புரை, தமிழ் வளம் பெருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நூல்களைச் சார்ந்து எழுதுதல் மேலோங்க வேண்டும். s:அட்டவணை:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf என்ற நூல் சில ஆண்டுகள் பயணப்பட்டு எழுதிய நூல். இதில் தமிழகத்தின் மலைவளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு எழுதும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளன. அது சீர்தரமற்ற பல துப்புரவு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவே அவற்றினை பயிலரங்குளில் தவிர்ப்பது நல்லது.--உழவன் (உரை) 01:34, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]