கம்போடியாவின் மக்கள் தொகையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Cambodia_ethnic_map.svg with File:Cambodia_ethnic_map-en.svg (by CommonsDelinker because: File renamed:).
வரிசை 504: வரிசை 504:
== இனக் குழுக்கள் ==
== இனக் குழுக்கள் ==


[[File:Cambodia ethnic map.svg|thumb|450px|கம்போடியாவின் ஓர் இனக்குழு வரைபடம்]]
[[File:Cambodia ethnic map-en.svg|thumb|450px|கம்போடியாவின் ஓர் இனக்குழு வரைபடம்]]
கம்போடியா இன குழுக்களில் பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன.
கம்போடியா இன குழுக்களில் பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன.



11:10, 12 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

{{{place}}}-இன் மக்கள் தொகையியல்
மக்கள் தொகை 15,205,539 (2013 est.)
வளர்ச்சி வீதம் 1.63% (2014)
பிறப்பு வீதம்24.4 பிறப்புகள்/1,000 மக்கள் தொகை
(2014 est.)
இறப்பு வீதம்7.78 இறப்புகள்/1,000 மக்கள் தொகை
(2014 est.)
ஆயுள் எதிர்பார்ப்பு69.50 ஆண்டுகள் (2010) [1]<nowiki>
 • ஆண்66.80 ஆண்டுகள்
 • பெண்72.10 ஆண்டுகள்
கருவள வீதம்2.66 குழந்தைகள் பிறப்பு/பெண்ணுக்கு
(2014 est.)
குழந்தை இறப்பு வீதம்51.36 இறப்புகள்/1,000 வாழும் பிறப்புகள்
(2014 est.)
நிகர குடி பெயர்தல் வீதம் 0.32 இடம்பெயர்ந்தவர்கள்/1,000 மக்கள் தொகை (2014 est.)
வயது அமைப்பு
0–14 ஆண்டுகள்31.9%
15–64 ஆண்டுகள்64.3%
65 மற்றும் அதற்கு மேல்3.8%
பாலின விகிதம்
மொத்தம்0.94 ஆண்கள்/பெண் (2013)
பிறக்கும்போது1.05 ஆண்கள்/பெண்
65 மற்றும் அதற்கு மேல்0.6 ஆண்கள்/பெண்
நாட்டினம்
நாட்டினம்பெயர்ச்சொல்: கம்போடியா
பெயரடை: கம்போடியர்
பெரும்பான்மை இனக்குழுகெமர்
சிறுபான்மை இனக்குழுசீனர்கள், வியட்நாமியர்கள்,
சாம், தாய்லாந்தர், லாவோக்கள்
மொழி
அலுவல்கெமர்

கம்போடியா மக்கள் தொகையியல் (Demographics of Cambodia) என்ற இக்கட்டுரையில் கம்போடியா நாட்டின் மக்கள் தொகையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, இனம், கல்வி நிலை, மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை, மதச் சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்து அலசப்படுகிறது.

மக்கள் தொகை

மக்கள் தொகை வரலாறு
ஆண்டும.தொ.±%
1876 8,90,000—    
1901 11,03,000+23.9%
1911 14,87,900+34.9%
1921 24,02,600+61.5%
1931 28,06,000+16.8%
1947 32,96,000+17.5%
1951 42,61,000+29.3%
1961 55,10,000+29.3%
1971 72,70,000+31.9%
1981 66,82,000−8.1%
1991 88,10,000+31.8%
2001 1,23,53,000+40.2%
2011 1,47,01,717+19.0%
Source:https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cb.html

1874 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கம்போடியா நாட்டின் மக்கள் தொகை 946,000 இல் இருந்து 2.4 மில்லியன் மக்கள் தொகையாக உயர்ந்தது.1950 ஆம் ஆண்டில் இத்தொகை 3,710,107 மற்றும் 4,073,967 என்பதாக உயர்ந்தது. 1962 இல் இத்தொகையின் அளவு 5.7 மில்லியனாக உயர்ந்தது. 1962 களில் 1975 ஆம் ஆண்டு வரையிலும் கம்போடியாவின் மக்கள் தொகை ஆண்டு 2.2 சதவீதம் என்ற வீதத்தில் உயர்ந்தது. இந்த உயர்வு சதவீதம் தென்கிழக்கு ஆசியாவில் மிகக்குறைவான உயர்வு வீதம் என்பது கவனிக்கத் தக்கதாகும். 1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் ஆட்சிக்கு வந்தபொழுது இந்த உயர்வு 7.3 சதவீதமாக இருந்ததாக கணக்கிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக கணக்கிடப்பட்ட மக்கள் தொகையில் 1975 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 1 முதல் 2 மில்லியன் கணக்களவில் மக்கள் இறந்துள்ளதாகவும் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 1981 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மக்கள் தொகை சுமார் 6.7 மில்லியன் இருந்ததாக கம்பூச்சியசு மக்கள் குடியரசு கட்சி தெரிவித்தது. இருந்தாலும் இத்தொகை அநேகமாக மிகச்சரியாக 6.3 மில்லியன் முதல் 6.4 மில்லியனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1978 முதல் 1985 வரையிலான காலத்தில் சராசரி மக்கள் தொகைப்பெருக்கம் 2.3 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டது. (பார்க்க: அட்டவணை 2 பின்னிணைப்பு அ) கெமர் ரூச் ஆட்சிக்குப் பிறகு குழந்தைப் பெருக்கம் உயர்ந்ததைத் தொடர்ந்து மக்கள் தொகை 10 மில்லியனுக்கு அதிகமாகப் பெருகியது. பின்னர் சமீப காலங்களில் இப்பெருக்க வீதம் மெதுவாகக் குறையத் தொடங்கியது.

1959 இல் மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் 15 வயதிற்கு குறைவானவர்களாகக் காணப்பட்டனர். 1962 இல் இச்சதவீதம் சற்று அதிகாமாகி 46 சதவீதமாக உயர்ந்தது. 1962 இல் மொத்த மக்கள் தொகையில் 52 சதவீதம் பேர் 15 மற்றும் 64 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 2 சதவீதத்தினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். இம்மூன்று குழுக்களிலும் ஆண்கள், பெண்கள் சதவீதம் கிட்டத்தட்ட சமமாகவே காணப்பட்டது.

மக்கள் தொகை மற்றும் வயதுப் பங்கீடு [2]

கம்போடிய மக்கள் தொகை பட்டைக்கூம்பு-2005
மொத்த மக்கள் தொகை (ஆயிரங்கள்) 0–14 வயதினரின் மக்கள் தொகை (%) 15–64 வயதினரின் மக்கள் தொகை (%) 65+ வயதினரின் மக்கள் தொகை (%)
1950 4 346 42.2 55.1 2.7
1955 4 840 42.3 55.0 2.7
1960 5 433 42.5 54.8 2.7
1965 6 141 42.8 54.4 2.7
1970 6 938 43.2 54.0 2.8
1975 7 098 42.3 54.9 2.8
1980 6 506 39.0 58.1 2.9
1985 7 920 42.1 55.0 2.9
1990 9 532 43.8 53.4 2.8
1995 11 169 47.5 49.7 2.8
2000 12 447 41.6 55.4 3.0
2005 13 358 36.4 60.3 3.3
2010 14 138 31.9 64.3 3.8

மக்கள் தொகை அமைப்பு [3]

மக்கள் தொகை அமைப்பு (01.07.2013) (மதிப்பீடுகள்) (2008 -மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தவிர்த்த. தரவுகள்):

வயதுக் குழு ஆண்கள் பெண்கள் மொத்தம் %
மொத்தம் 7 320 112 7 642 479 14 962 591 100
0-4 806 531 777 854 1 584 385 10,59
5-9 721 480 693 339 1 414 819 9,46
10-14 768 899 735 963 1 504 862 10,06
15-19 878 612 830 980 1 709 592 11,43
20-24 848 931 800 737 1 649 668 11,03
25-29 678 825 712 044 1 390 869 9,30
30-34 613 674 637 973 1 251 647 8,37
35-39 338 735 363 397 702 132 4,69
40-44 411 072 441 415 852 487 5,70
45-49 344 372 395 214 739 586 4,94
50-54 295 645 352 214 648 347 4,33
55-59 190 528 288 806 479 334 3,20
60-64 153 721 218 867 372 588 2,49
65-69 105 605 147 502 253 107 1,69
70-74 76 017 108 069 184 086 1,23
75-79 47 601 72 558 120 159 0,80
80+ 39 864 65 059 104 923 0,70
வயதுக் குழு ஆண் பெண் மொத்தம் சதவீதம்
0-14 2 296 910 2 207 156 4 504 066 30,10
15-64 4 754 115 5 042 135 9 796 250 65,47
65+ 269 087 393 188 662 275 4,43

முக்கியப் புள்ளிவிவரங்கள்

ஐ.நா. மதிப்பீடுகள் [2]

காலம் ஓராண்டுக்கு பிறப்புகள் ஓராண்டுக்கு இறப்புகள் ஓராண்டுக்கு இயற்கை மாற்றம் தோ.பி.வீ1 தோ.இ.வீ1 இ.மா1 மொ.க.வி1 கு.இ.வி1
1950-1955 208 000 109 000 99 000 45.4 23.8 21.6 6.29 165.1
1955-1960 232 000 113 000 119 000 45.2 22.1 23.1 6.29 152.0
1960-1965 260 000 118 000 142 000 44.9 20.4 24.5 6.29 139.5
1965-1970 287 000 127 000 160 000 43.9 19.4 24.5 6.22 130.0
1970-1975 280 000 158 000 122 000 39.9 22.5 17.4 5.54 180.9
1975-1980 227 000 272 000 - 45 000 33.4 40.0 -6.6 4.70 263.2
1980-1985 410 000 127 000 283 000 56.9 17.7 39.2 7.00 134.0
1985-1990 407 000 115 000 292 000 46.7 13.2 33.5 6.00 97.9
1990-1995 417 000 121 000 296 000 40.3 11.3 29.0 5.44 90.0
1995-2000 358 000 121 000 237 000 30.3 10.2 20.1 4.32 83.3
2000-2005 323 000 117 000 206 000 25.1 9.1 16.0 3.41 72.9
2005-2010 321 000 113 000 207 000 23.3 8.3 15.0 2.80 62.4
1 தோ.பி.வீ = தோராய பிறப்பு வீதம்(1000 பேருக்கு); தோ.இ.வீ = தோராய இறப்பு வீதம்(1000பேருக்கு); இ.மா = இயற்கையான மாற்றம்(1000 பேருக்கு); மொ.க.வி = மொத்த கருத்தரிப்பு விகிதம் (ஒரு பெண்ணுக்கு குழந்தைகள்); கு.இ.வி = குழந்தை இறப்பு விகிதம், ஆயிரம் பிறப்புகளுக்கு

கருவுறுதல்

2010 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மொத்த இனப்பெருக்க விகிதம் ஒரு பெண்ணுக்கு 3.0 குழந்தைகளாக[4] இருந்தது.2000 ஆம் ஆண்டில் இந்த இனப்பெருக்க விகிதம் ஒரு பெண்ணுக்கு 4.0 குழந்தைகளாக[4] இருந்தது. நகர்புறத்தில் உள்ள பெண்களுக்கு சராசரியாக 2.2 குழந்தைகள் என்ற விகிதம், கிராமப்புறப் பெண்களுடன் ஒப்பிடுகையில் 3.3 குழந்தைகளாக[4] இருக்கிறது. மண்டோல் கிரி மற்றும் ரட்டனாக் கிரி மாகாணங்களில் உள்ள பெண்களின் இனப்பெருக்க விகிதம் அதிகபட்சமாக 4.5 குழந்தைகளாகவும், புனோம் பென்னில் குறைந்த பட்சமாக 2.0 குழந்தைகளாகவும் இருக்கிறது[4].

கருவுறுதல் மற்றும் பிறப்புகள்

மொத்த கருத்தரிப்பு விகிதம் (மொ.க.வி) மற்றும் தோராய பிறப்பு வீதம் (தோ.பி.வீ):[5] [6]

ஆண்டு தோ.பி.வீ (மொத்தம்) மொ.க.வீ (மொத்தம்) தோ.பி.வீ (நகர்புறம்) மொ.க.வீ (நகர்புறம்) தோ.பி.வீ (கிராமப்புறம்) மொ.க.வீ (கிராமப்புறம்)
1995-1998 29,0 4,11 25,0 3,31 29,0 4,25
2000 27,7 4,0 (3,1) 23,9 3,1 (2,5) 28,3 4,2 (3,2)
2005 25,6 3,4 (2,8) 23,8 2,8 (2,3) 25,9 3,5 (2,9)
2010 24,2 3,0 (2,6) 21,0 2,2 (2,0) 25,0 3,3 (2,8)
2014 22,0 2,7 (2,4) 20,2 2,1 (1,9) 22,4 2,9 (2,6)

குழந்தை மற்றும் குழந்தைப்பருவ இறப்பு

கம்போடியாவில் குழந்தைப்பருவ இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது[4]. ஐந்தாண்டு காலத்திற்கான தற்போதைய குழந்தை இறப்பு விகிதம் 1000 பிரசவங்களுக்கு 45 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1000 பிரசவங்களுக்கு 66 குழந்தைகளாகவும் 2000 – இல் 95 குழந்தைகளாகவும் இருந்துள்ளது. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் இறப்பு விகிதம் 2000 ஆண்டில் 1000 குழந்தைகளுக்கு 124 குழந்தைகள் என்ற விகிதமும் 2005 இல் 83 இறப்புகள் 2010 இல் 54 இறப்புகள் எனப் படிப்படியாக குறைந்துள்ளது.

தாயின் கல்வி மற்றும் செல்வச்செழிப்பு காரணத்தால் குழந்தைப்பருவ இறப்பு குறிப்பிடும்படியாக குறைகிறது. உதாரணமாக, படித்த பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் படிக்காத பெண்களின் குழந்தைகள் இறப்பு விகிதம் இரண்டு மடங்காக இருக்கிறது. (72 க்கு 31) . இவ்வாறே செல்வச் செழிப்பில் உள்ள பெண்களின் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ஏழைப் பெண்களின் குழந்தை இறப்பு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. (77 க்கு 23).

நகர்ப்புற பகுதிகளை விட கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது., எடுத்துக்காட்டாக, குழந்தை இறப்பு நகர்ப்புறங்களில் 1000 க்கு 22 என்பதை ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 1000 க்கு 64 மரணங்களாக உள்ளது. இவ்விறப்பு விகிதம் மாகாணத்திற்கு மாகாணம் கூட வேறுபடுகிறது. புனோம் பென்னில் 1000 க்கு 13 மரணங்கள் என்ற அளவு கம்பூங் சினாங் மற்றும் சிவேய் ரியிங் பகுதிகளில் 1000 க்கு 78 மரணங்களாக வேறுபடுகிறது.

ஆயுட்காலம்

1959 இல், கம்போடியா மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 44.2 ஆண்டுகளாகவும் பெண்களுக்கு 43.3 ஆண்டுகளாகவும் இருந்தது. 1970 ஆம் ஆண்டு இந்த சராசரி 2.5 ஆண்டுகள் மேலும் அதிகரித்தது. பெண்களின் நீண்ட ஆயுட்காலம் அவர்களின் பேறுகாலம் மற்றும் பிரசவம் முதலியவற்றில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வையும் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது.

இனக் குழுக்கள்

கம்போடியாவின் ஓர் இனக்குழு வரைபடம்

கம்போடியா இன குழுக்களில் பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன.

மீகாங் நதிக்கு அருகில் தெற்கு கோராட் பீடபூமியில் இருந்து தொடங்கும் ஒரு தொடர்ச்சியான வில் போன்ற நிலப்பகுதியில் கெமர் இன மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இப்பகுதியில் நவீன கால தாய்லாந்து லாவோசு மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் வடகிழக்கில் சந்திக்கின்றன. தொன்லே சாப் ஏரியில் இருந்து ஏலக்காய் மலைகள் வரையிலும் உள்ள நிலப்பகுதி தென்மேற்கில் நீண்டு பின்னர் தென்கிழக்காக மீண்டும் தொடர்ந்து தென்கிழக்கு வியட்நாமில் உள்ள மீகாங் ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் காணப்படுகிறது.

அரசியல் மற்றும் சமூக ஆதிக்கம் மிகுந்த கெமெர் இனக்குழுவைத் தவிர மற்ற கம்போடியா இன மக்களை, " பழங்குடியின சிறுபான்மையினர்" அல்லது " பழங்குடியினர் அல்லாத சிறுபான்மையினர்" என்று வகைப்படுத்தப்பட்டிருந்தனர் மேலும் உள்நாட்டு பழங்குடியின சிறுபான்மையினரை பொதுவாக கெமர் லோயு (மேட்டுநிலக் கெமர்) என்று அழைத்தனர். இவர்கள் பெரும்பாலும் ரத்தாநாக்கிரி, மாண்டுல்கிரி மற்றும் சிடங் திரங் போன்ற மிகச்சிறிய மலைப்பிரதேச மாகாணங்களில் கணிசமாக வாழ்ந்தனர்.

தோராயமாக கம்போடியாவில் 17 முதல் 21 வரையிலான தனி இனக்குழுக்கள் காணப்பட்டன, அக்குழுக்கள் பெரும்பாலும் கெமர் மொழியுடன் தொடர்புடைய தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் குயி மற்றும் தம்புவன் மொழிகள் உள்ளிட்ட கெமர் லோயு குழுவினர் எனப்பட்டனர். இத்தகைய மக்களை அந்நிலப்பகுதியில் வாழ்வதற்குரிய தொன்மையான பழங்குடியினராக கெமர் இனத்தவர் கருதினர். ரேடு மற்றும் யாராய் என்ற இரு மேட்டு நிலக்குழுவினரும் சாம் மக்கள் எனப்பட்டனர். பண்டைய சாம் பகுதியில் இருந்து வந்த இவர்கள் தெற்காசிய மொழிகளைப் பேசினர். இவர்கள் கெமர் இனத்தவர் கலாச்சாரத்துடன் ஒன்றுபடாமல் அவர்களுடைய பாரம்பரிய ஆவியுலக நம்பிக்கைகளைப் பின்பற்றினர்.

மொழிகள்

அலுவலக மொழி
கெமர்
கல்வி பயிற்றுமொழி
ஆங்கிலம், பிரெஞ்சு[7] (3%, 423,000 பிரெஞ்சு பேசுபவர்கள் [8]).
சிறுபான்மை மொழிகள்
சாம் (2.2%), வியட்நாமீசு (0.8%), தும்பூன் (0.4%);[9]
லாவோ, யாராய், யூயி சீனம், மற்றும் பல சிறு மொழிகள் மோன்–கெமர் மொழி < 0.25%
சைகை மொழிகள்
கம்போடியன் சைகை மொழி, அமெரிக்கன் சைகை மொழி

படிப்பறிவு

வரையரை: 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள்
மொத்த மக்கள்தொகை: 73.6%
ஆண்கள்: 84.7%
பெண்கள்: 64.1% (2004 திட்டம்.)

கல்வித்துறை செலவு

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் - 1.7% (2004)

அயல்நாடுகளில் கம்போடியர்கள் மக்கள் தொகை

கம்போடியர்கள் வழும் அயல்நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
People of Cambodia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

 This article incorporates public domain material from the த வேர்ல்டு ஃபக்ட்புக் document "2008 edition".