மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில்''' [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் உள்ள [[சிவன்]] கோயிலாகும்.
'''மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில்''' [[மயிலாடுதுறை]] மாவட்டத்தில் உள்ள [[சிவன்]] கோயிலாகும்.


==அமைவிடம்==
==அமைவிடம்==

05:57, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இக்கோயில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் தீர்த்தம் காவிரி ஆகும்.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வதாரண்யேசுவரர் உள்ளார். இறைவி ஞானாம்பிகை ஆவார்.[1]

அமைப்பு

சிவன் கோயில்களில் நந்தியை மூலவரான லிங்கத்திருமேனி முன்பு காணமுடியும். இக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுகிறது.இந்த தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். காவிரியில் நந்தி நீராடிய இடம் ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோயில் உள்ளது.இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்குமென்று நம்புகின்றனர். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்த பலனுக்கு நிகர் கிடைக்கும் என்கின்றனர். சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலமாகும்.கோயிலின் வடக்கில் ஞான புஷ்கரணி உள்ளது.[1]

வரலாறு

முன்பொரு முறை தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை அழைத்துச்சென்ற காலகட்டத்தில் பார்வதி மயில் உருவமெடுத்து சிவனுக்கு பூசை செய்து கொண்டிருந்தார். இந்த அரிய காட்சியை காண பிரம்மா அன்னத்திலும், பெருமாள் கருடன்மீதும், தேவர்கள் குதிரை மீதும் வந்தனர். மற்றவர்களைவிட வேகமாகச் சென்ற ரிஷபத்திற்கு தான் வேகமாகச் செல்கிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இதை உணர்ந்த சிவன் தன் முடி ஒன்றை எடுத்து அதன்மீது வைத்து அதன் வேகத்தை அடக்கியதாகக் கூறுவர்.இப்பாவத்தைப் போக்க நந்தியை காவிரிக்கரையில் தவம் செய்ய இறைவன் கூறினார். பின்னர் ஞானத்தைப் பெற்ற நந்தி சிவனுடையே இருக்கவேண்டும் என்ற தன் ஆவலைப் வெளிப்படுத்தியது. அவரும் நந்தியின் எண்ணத்தைப் பூர்த்தி செய்தார்.[1]

திருவிழாக்கள்

ஐப்பசியில் துலா மாத விழா, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை கடைசி வியாழன் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[1]

மேற்கோள்கள்