கொழும்பு றோயல் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி மாற்றல்: en:Royal College Colombo |
|||
வரிசை 87: | வரிசை 87: | ||
[[பகுப்பு:கொழும்புப் பாடசாலைகள்]] |
[[பகுப்பு:கொழும்புப் பாடசாலைகள்]] |
||
[[en:Royal College |
[[en:Royal College Colombo]] |
||
[[ja:ロイヤル・コロンボ大学]] |
[[ja:ロイヤル・コロンボ大学]] |
18:06, 31 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்
வேத்தியர் கல்லூரி | ||||
| ||||
குறிக்கோள் | Disce aut Discede, (கல் அன்றேல் வெளியேறு) | |||
அமைவிடம் | ||||
நாடு | இலங்கை | |||
மாகாணம் | மேல் மாகாணம் | |||
மாவட்டம் | கொழும்பு | |||
நகரம் | கொழும்பு | |||
அமைவிடம் | 6°54′0″N 79°81′0″E / 6.90000°N 80.35000°E Coordinates: longitude minutes >= 60 {{#coordinates:}}: invalid longitude | |||
இதர தரவுகள் | ||||
அதிபர் | உபாலி குணசேகரா | |||
துணை அதிபர் | பீ. யூ. மூகாந்திரம் | |||
மாணவர்கள் | 7000 (2007) | |||
ஆசிரியர்கள் | 275(2007) | |||
உதவி ஊழியர்கள் | 100(2007) | |||
ஆரம்பம் | 1835 | |||
www.royalcollege.lk/ |
வேத்தியர் கல்லூரி அல்லது ரோயல் கல்லூரி, (Royal College, கொழும்பு) 1835ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இலங்கை அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள தேசியப் பாடசாலையான இது இலங்கையின் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாகும்.
வரலாறு
இக்கல்லூரி, இலங்கையின் அப்போதைய ஆட்சியாளர்களான பிரித்தானியரால் தொடக்கப்பெற்றது. இங்கிலாந்தின் ஈட்டன் கல்லூரியை (Eton College) மாதிரியாகக் கொண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. கொழும்பு அகடெமி (Colombo Academy) என தொடக்கத்தில் அழைக்கப்பட்ட இக்கல்லூரி இலங்கையின் மூன்றாவது பழைய அரசாங்கப் பாடசாலையாகும். இது அந்தக் காலப்பகுதியில் பலராலும் அறியப்பட்ட இலங்கையரின் பிள்ளைகளுக்கு, அவர்கள் பிரித்தானியக் குடிமக்களாகத் தகுதி பெறும் பொருட்டு உயர்தரக் கல்வியை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ கல்லூரியின் (Christian College) ஆசிரியராக பணியாற்றிய வண. மார்ஷ் (Rev Marsh) அவர்கள் கல்லூரியின் முதல் அதிபராக நியமிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் மருதானை அல்ஸ்டொஃப்க்கு (Hulstdorf) அருகிலிருந்த கல்லூரி 20ஆம் நூற்றாண்டில் றீட் வீதியிலிருந்த அரச பண்ணை நிலத்துக்கு மாற்றப்பட்டது. இது இப்போதும் அதே இடத்திலேயே அமைந்துள்ளது.
இல்லங்கள்
மாணவர்கள் ஹார்ட்லி (Hartley), ஹவார்ட் (Howard), மார்ஷ் (Marsh), போக் (Boake), றீட் (Reid) என ஐந்து இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.
றோயல்-தோமியன்
கல்கிசை புனித தோமையர் கல்லூரிக்கு (St Thomas College, Mt Lavinia) எதிரான துடுப்பெடுத்தாட்ட ஆண்டுப் போட்டி, உலகில் இடைவிடாது நடைபெற்றுவரும் இவ்வகை ஆட்டத் தொடர்களில் இரண்டாவது நீளமானதாகும். இத்தொடரின் முதலாவது ஆட்டம் 1879 ஆம் ஆண்டு, கொழும்பு அகடெமிக்கும் புனித தோமையார் கல்லூரிக்குமிடையே நடைபெற்றதோடு இதில் ஆசிரியர், மாணவர் இரு சாராருமே கலந்து கொண்டனர். 1880 ஆண்டு முதல் மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கபட்டனர்.
பலரும் அறிந்த பழைய மாணவர்கள்
- அனகாரிகா தர்மபாலா
- கலாநிதி சீ. ஏ. ஹெவாவிதாரன
- சேர் பொன்னம்பலம் அருணாசலம்
- சேர் பொன்னம்பலம் இராமநாதன்
- என். எஸ். ஜோசஃப்
- கொல்வின் ஆர். டி. சில்வா
- பீற்றர் கெனமன்
- ஜே. ஆர். ஜயவர்த்தனா
- Gnr கென்னத் ஆர். போறிட்
- பேராசிரியர் ஒஸ்மொண்ட் ஜயரட்னா
- அனில் முனசிங்கா
- மங்கள முனசிங்கா
- சுசில் முனசிங்கா
- நீலன் திருச்செல்வம்
- லலித் அத்துலத்முதலி
- மேஜர் ஜெனரல் பி.ஆர்.எயின்
- அனுரா பண்டாரநாயக்கா
- தினேஷ் குணவர்தனா
- ரணில் விக்கிரமசிங்க
- றவுஃப் ஹக்கீம்
கவனிக்கத்தக்க ஆசிரியர்கள்
- அன்றுவ் நிக்கோள் ஆர்.எச்.ஏ.
- குணசேகரா ஈ.சீ. ('Kataya')
- விஜித்த வீரசிங்கா ('Viji')
- ஏ. கே. சர்மா
வெளி இணைப்புகள்
- உத்தியோக பூர்வ தளங்கள்
- பழைய மாணவர் சங்கங்கள்