அசோகர் கல்வெட்டுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:

{{Infobox artefact
{{Infobox artefact
| name =அசோகரின் கல்வெட்டுக்கள்
| name =அசோகரின் கல்வெட்டுக்கள்
வரிசை 70: வரிசை 69:
==சபாஷ் கார்கி கல்வெட்டு==
==சபாஷ் கார்கி கல்வெட்டு==
{{முதன்மை|சபாஷ் கார்கி}}
{{முதன்மை|சபாஷ் கார்கி}}
[[File:A closer view of the rock.JPG|thumb|[[கரோஷ்டி எழுத்துமுறை|கரோஷ்டி எழுத்து முறையில்]] எழுதப்பட்டசபாஷ் கார்கியின் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டு]], [[பெஷாவர்]]]]
[[File:A closer view of the rock - Ashoka Major Rock Edict.jpg|thumb|[[கரோஷ்டி எழுத்துமுறை|கரோஷ்டி எழுத்து முறையில்]] எழுதப்பட்டசபாஷ் கார்கியின் [[அசோகர் கல்வெட்டுக்கள்|அசோகரின் கல்வெட்டு]], [[பெஷாவர்]]]]


[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] வடமேற்கில் அமைந்த [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தின்]], [[மார்தன் மாவட்டம்|மார்தன் மாவட்டத்தில்]], [[சபாஷ் கார்கி]] ஊரில், [[அசோகர்]] [[கரோஷ்டி எழுத்துமுறை]]யில் நிறுவிய கல்வெட்டு உள்ளது.<ref>[https://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html The Edicts of King Ashoka]</ref><ref>[https://www.youtube.com/watch?v=bfN_cREuC7g சபாஷ் கார்கி தொல்லியல் களம்]</ref>
[[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] வடமேற்கில் அமைந்த [[கைபர் பக்துன்வா மாகாணம்|கைபர் பக்துன்வா மாகாணத்தின்]], [[மார்தன் மாவட்டம்|மார்தன் மாவட்டத்தில்]], [[சபாஷ் கார்கி]] ஊரில், [[அசோகர்]] [[கரோஷ்டி எழுத்துமுறை]]யில் நிறுவிய கல்வெட்டு உள்ளது.<ref>[https://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html The Edicts of King Ashoka]</ref><ref>[https://www.youtube.com/watch?v=bfN_cREuC7g சபாஷ் கார்கி தொல்லியல் களம்]</ref>

10:41, 7 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

அசோகரின் கல்வெட்டுக்கள்
செய்பொருள்மணற்கல், பாறைகள், கல்தூண்கள், கற்பலகைகள்
அளவுதூபி, ரொசெட்டாக் கல்
எழுத்துபிராமி, கரோஷ்டி, கிரேக்கம், அரமேயம்
உருவாக்கம்கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
இந்திய துணைக்கண்டத்தில் அசோகர் நிறுவிய தூபிகள் மற்றும் கல்வெட்டுகளைக் காட்டும் வரைபடம்

அசோகர் கல்வெட்டுக்கள் என்பன பேரரசர் அசோகர் ஆட்சியின் போது வடிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் குறிக்கும். இவரது கல்வெட்டுக்கள் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன.[1]

குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்கள்

இவரது கல்வெட்டுக்களில் குறிப்பிடத்தக்க சில பின்வருமாறு:

  • பதினான்கு பாறை வெட்டுக்கள்
  • கலிங்க பாறை வெட்டுக்கள்
  • சிறு பாறை வெட்டுக்கள்
  • ஏழு தூண் வெட்டுக்கள்
  • சிறு தூண் வெட்டுக்கள்

பதினான்கு பாறை வெட்டுக்கள்

புகழ் பெற்ற பதினான்கு பாறை வெட்டின் ஆறாம் கருத்து மன்னர் மக்களின் பிரச்னைகளை உடனடியாக கவனிப்பதை உணர்த்துகிறது.

"கடவுளுக்குப் பிரியமான மன்னர் பிரியதர்சி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது."

ஜூனாகத் - கிர்நார் கல்வெட்டுகள்

அசோகரின் ஜூனாகத் கல்வெட்டு

குஜராத் மாநிலத்தில் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் காணப்படுகிறது.[2]

தௌலி கல்வெட்டுக்கள்

தௌலி மலையில் பிராமி எழுத்தில் அசோகரின் கல்வெட்டு

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்குத் தெற்கில், 8 கிமீ தொலைவில் உள்ள தௌலி மலைப் பகுதியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.[3][4] இக்கல்வெட்டுகளில் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கடைபிடிக்க வேண்டிய துறவற வாழ்க்கை நெறிகள் குறித்தும் மற்றும் அரசு அதிகாரிகளின் நன்னடைத்தைகள் குறித்தும் செதுக்கப்பட்டுள்ளது.

சன்னதி கல்வெட்டு

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில், சித்தபூர் வருவாய் வட்டத்தில், பீமா ஆற்றின் கரையில் அமைந்த சன்னதி கிராமத்தில் அசோரின் பெயர் கொண்ட பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கொண்டது[5][6][7][8] மேலும் அசோகர் மற்றும் அவரது மனைவிமார்களுடன் கூடிய சுண்ணாம்புக் கல் சிற்பம் இங்கு கிடைத்துள்ளது. [7]

சன்னாதி கிராமத்தின் பட்டத்து அரசிகளுடன் அசோகரின் சுண்ணாம்புக் கல் சிற்பம், கிபி 1 - 3-ஆம் நூற்றாண்டு .[9]
பிராமி எழுத்துமுறையில் அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டு. [10]

பாக்ராம் கல்வெட்டு

கிரேக்க-அரமேய மொழிகளில் அசோகரின் பாக்ராம் கல்வெட்டு, காபூல் அருங்காட்சியகம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பார்வான் மாகாணத்தில் [11]உள்ள பாக்ராம் [12] நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது.

காந்தாரக் கல்வெட்டுக்கள்

ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரம் நகரத்தில் கிரேக்கம் மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது.

சபாஷ் கார்கி கல்வெட்டு

கரோஷ்டி எழுத்து முறையில் எழுதப்பட்டசபாஷ் கார்கியின் அசோகரின் கல்வெட்டு, பெஷாவர்

பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், சபாஷ் கார்கி ஊரில், அசோகர் கரோஷ்டி எழுத்துமுறையில் நிறுவிய கல்வெட்டு உள்ளது.[13][14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. The Edicts of King Asoka
  2. "This excerpt from a new book demolishes Emperor Ashoka's reputation as a pacifist".
  3. The Edicts of King Asoka
  4. Dhauli edicts
  5. "Authority set up to develop Sannati Buddhist centre". பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
  6. "Facelift for Sannati monuments at Rs 5 crore (US$ 1.23 mil)". பார்க்கப்பட்ட நாள் 2008-11-13.
  7. 7.0 7.1 "When I met Emperor Ashoka in Sannathi". Yahoo.
  8. "Buddhist sites at Sannati lie neglected, says report". தி இந்து. 20 January 2009. http://www.hindu.com/2009/01/20/stories/2009012050610200.htm. 
  9. Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131711200. https://books.google.co.in/books?id=H3lUIIYxWkEC&pg=PA333. 
  10. Thapar, Romila (2012) (in en). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199088683. https://books.google.com/books?id=NoAyDwAAQBAJ&pg=PT27. 
  11. Parwan Province
  12. Bagram
  13. The Edicts of King Ashoka
  14. சபாஷ் கார்கி தொல்லியல் களம்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோகர்_கல்வெட்டுக்கள்&oldid=3044222" இலிருந்து மீள்விக்கப்பட்டது