ஜாரி நடனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
#WLF
வரிசை 19: வரிசை 19:
== நடனக்கருவிகள் ==
== நடனக்கருவிகள் ==
நாகடா, தோலாக், தோல் [[ஆர்மோனியம்|ஹார்மோனியம்]], [[தாலி]] (ஒரு தன்னியக்க கருவி) மற்றும் பாங்கியா ஆகியவற்றுடன் ஜாரி நடனம் ஆடப்படுகிறது. ''பாங்கியா'' பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவி ஆகும். இது திறமையானவா்களின் கைகளால் சக்திவாய்ந்த, வினோதமான ஒலியை உருவாக்குகிறது. <ref name="doi">{{Cite web|url=http://www.dancesofindia.co.in/folk-dances-india/rajasthan/chari.html|title=Dances of India|website=Dancesofindia.co.in|archive-url=https://archive.is/20150411213140/http://www.dancesofindia.co.in/folk-dances-india/rajasthan/chari.html|archive-date=11 April 2015|access-date=14 April 2015}}</ref>
நாகடா, தோலாக், தோல் [[ஆர்மோனியம்|ஹார்மோனியம்]], [[தாலி]] (ஒரு தன்னியக்க கருவி) மற்றும் பாங்கியா ஆகியவற்றுடன் ஜாரி நடனம் ஆடப்படுகிறது. ''பாங்கியா'' பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவி ஆகும். இது திறமையானவா்களின் கைகளால் சக்திவாய்ந்த, வினோதமான ஒலியை உருவாக்குகிறது. <ref name="doi">{{Cite web|url=http://www.dancesofindia.co.in/folk-dances-india/rajasthan/chari.html|title=Dances of India|website=Dancesofindia.co.in|archive-url=https://archive.is/20150411213140/http://www.dancesofindia.co.in/folk-dances-india/rajasthan/chari.html|archive-date=11 April 2015|access-date=14 April 2015}}</ref>
[[File:Chari dance.jpg|thumb|இது ராஜஸ்தானின் புகழ்பெற்ற குஜார் பெண்கள். இந்த நடனத்தில், பருத்தி விதை, பானைக்குள் எரிக்கப்பட்டு, நடனம் நிகழ்த்தப்படுகிறது.]]

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
{{Reflist|30em}}

13:12, 30 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்


ஜாரி நடனம்
ஜாரி நடனம்
ஜாரி நடன உடை
வகைநாட்டுப்புற நடனம்
கருவி(கள்)
  • டோலக்
  • நகடா
  • ஹார்மோனியம்
  • பங்கியா
  • தாளி
தோற்றம்ராஜஸ்தான், இந்தியா

ஜாரி நடனம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒருவகை நாட்டுப்புற நடனம் ஆகும். [1] ஜாரி நடனம் பெண்களால் ஆடப்படும் ஒரு குழு நடனம் ஆகும். இது ராஜஸ்தானின் அஜ்மீர் மற்றும் கிஷன்கர் பகுதிகளில் ஆடப்படும் பாரம்பாிய நடனம் ஆகும். [2] குஜ்ஜார் மற்றும் கிஷன்கரின் சைனி சமூகம்மற்றும் அஜ்மீர் புான்ற பகுதிகளில் பிரதானமாகவும் மற்றும் ஏனைய ராஜஸ்தான் பகுதிகளில் பரவலாகவும் இந்த நடனம் ஆடப்படுகிறது. மேலும் திருமண கொண்டாட்டங்களிலும், ஆண் குழந்தையின் பிறப்புக் கொண்டாட்டங்கள் மற்றும் நன்மைப் பண்டிகைகளிலும் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது.

நிகழ்த்துமுறை

ஜாரி நடனத்தின் போது, வண்ணமயமான உடைகளையும், நகைகளையும் அணிந்துகொண்டு பெண்கள் தங்கள் தலையில் மண் பாண்டங்கள் அல்லது பித்தளை ஜாரி பானைகளை வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் இந்தப் பானைகள் ஜாரி விளக்கு (எண்ணெய் விளக்கு) அல்லது எண்ணெயில் மூழ்கிய பருத்தி விதைகளுடன் விளக்கேற்றப்பட்டு உருவாக்கப்படுகிறது. நடனக் கலைஞர்கள் தலையில் ஒளிவிளக்குப் பானைகளை தொடாமல் எடுத்துச் செல்கிறார்கள், அதே நேரத்தில் கை கால்களின் அழகிய அசைவுகளையும் முழங்கால்களால் சுழன்று சுழல் போன்று நடனம் ஆடுகின்றனர். [3] நடனத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, நடனக் கலைஞர்கள் தரையைச் சுற்றி அமைதியாக நகரும்போது ஒளிரும் வடிவங்களின் கோடுகள் உருவாக்கப்படுகின்றன.

தோற்றம்

ராஜஸ்தான் ஒரு பாலைவனமாகும், அங்கு பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் சேகரிக்க பல மைல்கள் தொலைவிற்கு நடந்து செல்கின்றனர். அவர்கள் தினசரி தண்ணீரை ஜாரி என்றழைக்கப்படும் பானைகளில் சேகரிக்கின்றனர். நீர் சேகரிக்கும் இந்த வாழ்நாள் சடங்கை நடனம் மூலமாகக் கொண்டாடுகிறார்கள்

ஆடைகள் மற்றும் அணிகலன்கள்

நடனக் கலைஞர்கள் ஹன்ஸ்லி ஹன்ஸ்லி, டிம்னியா, மோக்ரி, புஞ்சி, பாங்கி, கஜ்ரா, கைவளையல், கார்லி, கங்கா மற்றும் நவ்ர் என்ற ராஜஸ்தானி தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டு நடனமாடுகின்றனா். [4]

நடனக்கருவிகள்

நாகடா, தோலாக், தோல் ஹார்மோனியம், தாலி (ஒரு தன்னியக்க கருவி) மற்றும் பாங்கியா ஆகியவற்றுடன் ஜாரி நடனம் ஆடப்படுகிறது. பாங்கியா பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவி ஆகும். இது திறமையானவா்களின் கைகளால் சக்திவாய்ந்த, வினோதமான ஒலியை உருவாக்குகிறது. [4]

இது ராஜஸ்தானின் புகழ்பெற்ற குஜார் பெண்கள். இந்த நடனத்தில், பருத்தி விதை, பானைக்குள் எரிக்கப்பட்டு, நடனம் நிகழ்த்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Art and culture of Rajasthan". Rajasthan.gov.in. Archived from the original on 30 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
  2. "Dance Forms of Rajasthan". Pinkcity.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
  3. "Dance festivals in Udaipur". Hotelsatudaipur. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
  4. 4.0 4.1 "Dances of India". Dancesofindia.co.in. Archived from the original on 11 April 2015. பார்க்கப்பட்ட நாள் 14 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாரி_நடனம்&oldid=3041096" இலிருந்து மீள்விக்கப்பட்டது