எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
changed an English word to a Tamil word
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
வரிசை 88: வரிசை 88:


== இறப்பு ==
== இறப்பு ==
இவருக்கு ஆகத்து 5, 2020 அன்று, [[கொரோனாவைரசு|கோவிட்-19]] தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு uyire பிரிந்தது.<ref name="spb death">{{cite web |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/legendary-singer-sp-balasubrahmanyam-dies-at-74-in-chennai-1725054-2020-09-25|title=SP Balasubramahmanyam dies at age 74 |accessdate=25 September 2020|author=Abishek Jerold}}</ref><ref>{{cite web |url=https://www.aljazeera.com/news/2020/9/25/legendary-indian-singer-sp-balasubramanyam-passes-away|title=Legendary Indian singer SP Balasubramanyam passes away |work=அல்-ஜசீரா |accessdate=25 September 2020}}</ref>
இவருக்கு ஆகத்து 5, 2020 அன்று, [[கொரோனாவைரசு|கோவிட்-19]] தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, [[சென்னை]]யில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு உயிர் பிரிந்தது.<ref name="spb death">{{cite web |url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/legendary-singer-sp-balasubrahmanyam-dies-at-74-in-chennai-1725054-2020-09-25|title=SP Balasubramahmanyam dies at age 74 |accessdate=25 September 2020|author=Abishek Jerold}}</ref><ref>{{cite web |url=https://www.aljazeera.com/news/2020/9/25/legendary-indian-singer-sp-balasubramanyam-passes-away|title=Legendary Indian singer SP Balasubramanyam passes away |work=அல்-ஜசீரா |accessdate=25 September 2020}}</ref>


== பெற்ற விருதுகள் ==
== பெற்ற விருதுகள் ==

09:16, 26 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

எஸ். பி. பாலசுப்ரமணியம்
2013 இல், எஸ். பி. பாலசுப்ரமணியம்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்
பிறப்பு(1946-06-04)4 சூன் 1946 [1]
நெல்லூர், சென்னை மாகாணம்
(தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா)[2][3][4]
இறப்பு25 செப்டம்பர் 2020(2020-09-25) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர்[1]
தொழில்(கள்)பாடகர், பின்னணிப் பாடகர், பின்னணி பேசுபவர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்1966–2020[5]
இணையதளம்இணையத்தளம்

எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam, 4 சூன், 1946 – 25 செப்டம்பர், 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் எஸ். பி. பாலு என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார்.[6] 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 40,000 இற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[7]

இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கருநாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.[8][9] அத்துடன், பிலிம்பேர் விருது, ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றையும் வென்றுள்ளார்.[10][11] உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.[12][13][14][15] 2012 ஆம் ஆண்டில், இந்தியத் திரைத்துறைப் பங்களிப்புகளுக்காக என்.டி.ஆர் தேசிய விருது இசருக்கு வழங்கப்பட்டது.[16] 2016 ஆம் ஆண்டில் இவருக்கு ஆண்டின் இந்தியத் திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.[17][18][19][20] இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ (2001), பத்ம பூசண் (2011) விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தது.[21]

பாலசுப்பிரமணியம் 2020 செப்டம்பர் 25 இல் கோவிடு-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.[22][23]

தொடக்கம்

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ். பி. பாலசுப்ரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.[24][25][26][27][28] இவர் தமிழில் முதலில் பாடியது ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர்௭ம்.௭ஸ்.வி இசையில் எல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார்.[29] ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் . ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது.[30][31][32]

சாதனைகள்

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.[7][33][34] ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார்.[35][36] எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.[37][38]

ஆரம்ப கால வாழ்க்கை

பாலசுப்பிரமணியம், தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த, எஸ். பி. சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.[39][40][41][42][43][44][45] இவருடைய தந்தை எஸ். பி சம்பமூர்த்தி, ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா[46] இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[47][48]

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார்.இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[49] அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.[50]

குடும்ப வாழ்க்கை

பாலசுப்பிரமணியம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண், சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.[51][52]

திரையிசை வரலாறு (1960-1970)

எஸ் பி பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ். பி. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார். இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ௭ல். ஆர். ஈஸ்வரியோடு இணைந்து அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை.[29] அடுத்ததாக ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இயற்கையெனும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.அதற்குப்பிறகு எம். ஜி. ராமச்சந்திரன் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலையும் பாடினார். மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் "இ கடலும் மறு கடலும்" பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.[53] இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.[54][55] தமிழ் திரைப்பட நடிகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.[56] இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.[57] தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.[58][59]

1980-உலகளாவிய வெற்றி

௭ஸ். பி பாலசுப்பிரமணியம்-1985

எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ் பி பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே. வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ் பி பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.[60]. இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.[61]

எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடககிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.[62][63][64] தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ் பி பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.[65]

1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ் பி பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ் பி பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.[66][67][68]

1990களில்

௭ஸ் பி பாலசுப்பிரமணியம் 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.[69] ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.

பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு

2017-ஆம் ஆண்டு தனது 50 ஆண்டுகாலப்பணிக் கொண்டாட்டத்துக்காகப் பலநாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாகச் சிங்கப்பூரில்

எஸ் பி பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.[70][71][72]

எஸ் பி பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் "நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்" தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.[73]

பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.[74] இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்[75][76][77]

பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு

எஸ் பி பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[78] கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ். பி. பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார் குறிப்பாக கமல்ஹாசன், ரசினிகாந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.[79] நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமயா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[80][81] தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.[82][83][84].[85]

இறப்பு

இவருக்கு ஆகத்து 5, 2020 அன்று, கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மோசமடைந்த அவரது உடல்நிலை, பின்பு கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்தது மற்றும் வாய் வழியே சாப்பிடும் அளவுக்கு இவருடைய உடல்நிலை தேறியது. ஆனால் திடீரென்று செப்டம்பர் 24, 2020 அன்று, இவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை தொடர்ந்து, இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 25, 2020 அன்று, இவருடைய உயிர் மதியம் 1:04 மணிக்கு உயிர் பிரிந்தது.[86][87]

பெற்ற விருதுகள்

இந்திய தேசிய விருதுகள்

வருடம் திரைப்படம் பாடல் மொழி
1996 மின்சார கனவு தங்க தாமரை தமிழ்
1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்சற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னடம்
1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி தெலுங்கு
1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுங்கு
1981 ஏக் தூஜே கே லியே தேரே மேரே பீச் மேனி இந்தி
1979 சங்கராபரணம் ஓம் கார நதானு தெலுங்கு

திரைப்பட பட்டியல்

நடித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படங்கள் மொழி கதாப்பாத்திரம் குறிப்பு
1969 பெல்லண்டி நூரெல்ல பந்த தெலுங்கு
1972 முகமது பின் துக்ளக் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
1980 பக்கிண்டி அம்மாயி தெலுங்கு பால ராஜு
1982 பாலூன்டு சதுரங்க கன்னடம்
மல்லே பந்திரி தெலுங்கு சேக் மொசஸஷ் மூர்த்தி
1983 பாரத் 2000 கன்னடம்
திருகு பான கன்னடம் பாடலில் சிறப்பு தோற்றம் "இதே நாடு இதே பாஷே"
1987 மனதில் உறுதி வேண்டும் தமிழ் மருத்துவர் தமிழில் முதல் திரைப்படம்
1988 பிரேம தெலுங்கு வெங்கடேஷ்க்கு ஆலோசகராக
விவாஹ பூஜனம்பூ தெலுங்கு சிறப்புத் தோற்றம்
கல்லு தெலுங்கு
1990 கேளடி கண்மணி தமிழ் ஏ. ஆர். ரங்கராஜ்
பாலைவன ராகங்கள் தமிழ்
1991 சிகரம் தமிழ் தாமோதர்
1992 தியாகு தமிழ்
குணா தமிழ் காவல் அதிகாரி
பர்வதலு பானக்கலு தெலுங்கு பானக்கலு
தலைவாசல் தமிழ் சண்முகசுந்தரம்
பரதன் தமிழ் ராமகுமார்
1993 திருடா திருடா தமிழ் லட்சுமி நாராயணன் சி பி ஐ அதிகாரி
முதின மாவ கன்னடம் ராமய்யா
1994 காதலன் தமிழ் கதிரேசன்
1995 ராஜ ஹம்ச தெலுங்கு மருத்துவர், குடும்ப நண்பன்
பாட்டு பாடவா தமிழ் கிரிதரன்
1996 துரோகி தெலுங்கு
காதல் தேசம் தமிழ் தபுவின் தந்தை
மைனா தெலுங்கு
பவித்ர பந்தம் தெலுங்கு வெங்கடேஷின் தந்தை
அவ்வை சண்முகி தமிழ் சிறப்புத்தோற்றம்
கண்டேன் சீதையை தமிழ் காவல் அதிகாரி
1997 தேவல்லு தெலுங்கு கடவுள் விநாகர்
பெல்லிவரமண்டி தெலுங்கு கதாநாயகனின் தந்தை
பிரேன தெலுங்கு
உல்லாசம் தமிழ் தங்கய்யா
ரட்சகன் தமிழ் எல் ஐ சி பத்மநாபன்
மின்சார கனவு தமிழ் தங்கதுரை
பெரிய மனுஷன் தமிழ் மருத்துவர்
நந்தினி தமிழ்/தெலுங்கு அவரே / பிரகாஷ் ராஜுக்கு நண்பன்
1998 சந்தர்ப கன்னடம்
உய்யாலா தெலுங்கு மருத்துவர்
பெல்லடி ஜுப்பிஸ்டா தெலுங்கு அவரே, ரோஜாவின் குரு
மாங்கல்யம் தந்துநானேநா கன்னடம் ரவிசசந்திரனின் தந்தை
ஜாலி தமிழ் ஆசிரியர்
ஃவைப் ஆப் வி. வரபிரசாத் தெலுங்கு வினித்தின் தாத்தா
1999 ஆரோ பிரனம் தெலுங்கு கதாநாயகனின் தந்தை (வினித்)
தீர்க்க சுமங்கலி பவ தெலுங்கு தசரி குடும்பத்திற்கு நண்பன்
மெக்கானிக் மாவய்யா தெலுங்கு விஞ்ஞானி
பாடுடா தீயாக தெலுங்கு கதாநாயகியின் தந்தை (ஹீரா)
பெத்த மனசுலு தெலுங்கு
மாயா தமிழ்/தெலுங்கு/கன்னடம் பாபா
2000 கோபிண்டி அல்லுடு தெலுங்கு பாலகிருஷ்ணனின் தந்தை
மனசு பத்தனு கன்னி தெலுங்கு ராசியின் தந்தை
பிரியமானவளே தமிழ் விஜயின் தந்தை விஷ்வநாத்
2001 சிரிச்சலு தெலுங்கு ரிச்சாவின் தந்தை
2002 இந்தரா தெலுங்கு அவரே சிறப்பு தோற்றம்
பதரெல்ல அம்மாயி தெலுங்கு
ஏப்ரல் மாதத்தில் தமிழ் அவரே சிறப்பு தோற்றம்
2003 மேஜிக் மேஜிக் 3D தமிழ் ஆச்சர்யா
ஃபூல்ஸ் தெலுங்கு சிறப்பு தோற்றம்
மகா ஏதபிதங்கி கன்னடம்
2006 மாயாபஜார் தெலுங்கு கடவுள் குபேரா
ரூம்மேட்ஸ் தெலுங்கு அவரே சிறப்பு தோற்றம்
2007 என் உயிரினும் மேலான தமிழ் என். திருமுருகன்
கல்யோனதவச கன்னடம் ஒய்வுபெற்ற ராணுவதளபதி
மல்லே பந்தரி தெலுங்கு
அஸ்ட்ரம் தெலுங்கு ராஜு கிர்வாணி
கெத்தரி கென்னன்னே கெரபெகு கன்னடம் Dr.தசரி நாராயண ராவ்
2010 நாணயம் தமிழ் சியுஓ விஸ்வநாத்
2011 சக்தி தெலுங்கு
2012 தேவஸ்தானம் தெலுங்கு
மிதுனம் தெலுங்கு அப்பா தாஸு
2014 திருடன் போலீஸ் தமிழ் பேராசிரியர்
சந்திரா கன்னடம்/தமிழ்
2015 மூணே மூணு வார்த்தை தமிழ்
மூடு முக்கலோ செப்பலண்டி தெலுங்கு
2018 தேவதாஸ் தெலுங்கு

இசையமைத்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் மொழி இயக்குனர் தயாரிப்பாளர்/பேனர்
1977 கன்னியா குமரி தெலுங்கு தசரி நாராயண ராவ் சரிகம ஆர்ட்ஸ்
1978 சந்தர்ப கன்னடம்
1979 கேப்டன் கிருஷ்ணா தெலுங்கு கே. எஸ். ஆர். தாஸ்
ரா ரா கிருஷ்ணய்யா தெலுங்கு
'தூர்ப்பு வெள்ள ரயிலு தெலுங்கு பாபு
1980 ஹம் பஞ்ச் (பின்னணி இசை) ஹிந்தி பாபு எஸ்.கே. ஃபிலிம்ஸ்
1981 ஒஹம்ம கத தெலுங்கு வசந்த சென்
சங்கீதா தெலுங்கு
1983 துடிக்கும் கரங்கள் தமிழ் சி வி ஸ்ரீதர் கே. ஆர். கங்காதரன்
உருண்ட சங்கரண்டி தெலுங்கு தசரி நாராயண ராவ்
1984 பர்யாமணி தெலுங்கு விஜய பாபிநீது ஸ்ரீநிவாசா தயாரிப்பு
சீதாம்மா பெல்லி தெலுங்கு பாபு முத்து ஆர்ட் மூவிஸ்
1985 பங்காரு சிலகா தெலுங்கு மகேஸ்வரி மூவிஸ்
புல்லெட் தெலுங்கு
தேவரல்லதனே கன்னடம் சாமுண்டி தயாரிப்பு
தூங்கல்லோ தூரா தெலுங்கு
ஜாக்கி தெலுங்கு முத்து ஆர்ட் மூவிஸ்
கொங்குமுடி தெலுங்கு விஜய பாபிநீது ராகவேந்திரா சினி கிரியேசன்ஸ்
மயூரி தமிழ் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் பீ.ஆர். கிரியேசன்ஸ் உஷாகிரண் மூவிஸ் கூட்டணியில்
மயூரி தெலுங்கு சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் உஷாகிரண் மூவிஸ்
முத்துலா மனவரலு தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி முத்து ஆர்ட் மூவிஸ்
1986 பெடெ கன்னடம் வஜ்ரகிரி ஃபிலிம்ஸ்
மஹதீருடு தெலுங்கு ஸ்யாம் பிரசாத் ஆர்ட்ஸ்
நாச்சி மயூரி (பின்னணி இசை) ஹிந்தி டி. ராமா ராவ் லட்சுமி தயாரிப்பு
பதமதி சந்திய ராகம் தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி குமலூரி சாஸ்திரி, மீர் அப்துல்லா
சௌபாக்கியலட்சுமி கன்னடம் பார்கவ வாசு சித்ரா
1987 கௌதமி தெலுங்கு ராதா மாதவ ஃபிலிம்ஸ்
லாயர் சுகாசினி தெலுங்கு வம்சி ஜெயகிருஷ்ணா கம்பைன்ஸ்
பிரதீமா தெலுங்கு
ராமு தெலுங்கு சுரேஷ் தயாரிப்பு
1988 சின்னூடு பெட்டூடு தெலுங்கு ரெலங்கி நரசிம்ம ராவ் ஸ்ரீதேவி மூவிஸ்
கல்லு தெலுங்கு எம். வி. ரகு மகாசக்தி ஃபிலிம்ஸ்
நீக்கு நாக்கு பெல்லண்ட தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி ஜே.ஜே. மூவிஸ்
ஓ பார்ய கத தெலுங்கு மௌலி உஷாகிரண் மூவிஸ்
பிரம்மயானம் தெலுங்கு உஷாகிரண் மூவிஸ்
ரமண சமண கன்னடம் பீ. சுப்பாராவ் வாசு சித்ரா
விவாஹ போஜனம்பூ தெலுங்கு ஜந்த்யல சுப்பிரமண்ய சாஸ்திரி ஜே.ஜே. மூவிஸ்
1990 சித்தார்த்தா தெலுங்கு
உலகம் பிறந்தது எனக்காக (இணை இசை) தமிழ் எஸ். பி. முத்துராமன் ஏவி௭ம்
1991 மகாயானம் தெலுங்கு
சிகரம் தமிழ் அனந்து கவிதாலயா தயாரிப்பு
தையல்காரன் தமிழ் எஸ். பி. முத்துராமன் கலைப்புலி இன்டர்நேஷனல்
ஜெய்தர யாத்ரா தெலுங்கு ஸ்ரவந்தி மூவிஸ்
1992 பெல்லியப்பா பனகாரப்பா கன்னடம் பூர்ண பிரஜ்ன மது பங்காரப்பா
கிஸீர சஹார கன்னடம் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ்
ஊர்பஞ்சாயத்து தமிழ் மகேந்திரன் முத்தமிழ் மூவி கிரியேஷன்ஸ்
போங்கடா நீங்களும் உங்க அரசியலும் தமிழ் நாராயணன் ஆர். ஆர். இன்டர்நேஷனல்
1993 முதின மாவ கன்னடம் ஓம் சாய் பிரகாஷ் விஜய ஸ்ரீதேவி கம்பைன்ஸ்
2003 உன்னை சரணடைந்தேன் தமிழ் சமுத்திரக்கனி கேபிடல் சினி ஒர்க்ஸ்

பின்னணிக்குரல் தந்த திரைப்படங்கள்

(இதுவொரு முழுமையான பட்டியல் அல்ல)

வருடம் திரைப்படம் மொழி நடிகர் குறிப்புகள்
1982 காந்தி தெலுங்கு பென் கிங்ஸ்லி
1983 ஆனந்த பைரவி தெலுங்கு கிரிஷ் கர்னாட்
1988 சத்யா தமிழ் கிட்டி
1991 ஆதித்யா 369 தெலுங்கு தினு ஆனந்த்
1997 அன்னமய்யா தெலுங்கு சுமன்
1997 அன்னமாச்சாரியா தமிழ்
2005 அத்தடு தெலுங்கு நாசர்
2008 சிலம்டாக் மில்லியனர் தமிழ் அணில் கபூர்
2012 ஸ்ரீ ராம ராஜ்ஜியம் தமிழ் நந்தாமுரி பாலகிருஷ்ணா தமிழ் மொழியில் மட்டும்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

பெயர் மொழி குறிப்புகள்
நதி எங்கே போகிறது தமிழ் நெடுந்தொடர்
சன்னல் தமிழ் நெடுந்தொடர்
வானம்பாடி தமிழ் இசை நிகழ்ச்சி
பாடுதே தீயாக தெலுங்கு இசை நிகழ்ச்சி
பாடலானி உந்தி தெலுங்கு இசை நிகழ்ச்சி
என்டரு மஹனுபவலு தெலுங்கு நெடுந்தொடர்
என்னோடு பாட்டுப் பாடுங்கள் தமிழ் இசை நிகழ்ச்சி
இதே தம்பி ஹாடுவேனு கன்னடம் இசை நிகழ்ச்சி
இசைவானில் இளையநிலா, ஏர்டல் சூப்பர் சிங்கர் தமிழ் இசை நிகழ்ச்சி, சிறப்பு நடுவர்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Wish singer SPB on his birthday today – Times Of India". web.archive.org. 2 January 2014.
  2. S., Murali (25 September 2020). "S.P. Balasubrahmanyam: The end of an era". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "SPB donates his ancestral home in Nellore to kanchi math". The Times of India.
  4. V, NARAYANAN (25 September 2020). "SPB: The voice that captivated millions will never be stilled". The Hindu Businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Singer SP Balasubrahmanyam passes away in Chennai". Mumbai Live. https://mumlive.co/aHLmYoh. பார்த்த நாள்: 25 September 2020. 
  6. "S P Balasubramaniam". FilmiBeat.
  7. 7.0 7.1 "Singer S.P. Balasubrahmanyam honoured". The Hindu. 11 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/singer-sp-balasubrahmanyam-honoured/article3513621.ece. பார்த்த நாள்: 22 July 2013. 
  8. "SPB to be honoured". Sify.com. 24 March 2009. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.
  9. "Entertainment Hyderabad / Events : In honour of a legend". The Hindu. 3 February 2006. http://www.hindu.com/fr/2006/02/03/stories/2006020301430200.htm. பார்த்த நாள்: 2 May 2011. 
  10. "Pehla Pehla Pyar by S.P. Balasubramaniam – Songfacts". www.songfacts.com.
  11. "Friday Review Hyderabad / Events : The stars shimmered bright". The Hindu. 8 August 2008. http://www.hindu.com/fr/2008/08/08/stories/2008080850380200.htm. பார்த்த நாள்: 1 May 2011. 
  12. "SP Balasubrahmanyam: Legendary Indian singer dies" (in en-GB). BBC News. 25 September 2020. https://www.bbc.com/news/world-asia-india-53789574. 
  13. "Happy Birthday SP Balasubramaniam: Five interesting unknown facts about the fabulous singer". The Times of India (in ஆங்கிலம்). 4 June 2020. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  14. "Have lost count of songs sung, says record holder S.P. Balasubrahmanyam". The Indian Express (in ஆங்கிலம்). 20 November 2016. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  15. "SP Balasubrahmanyam Dies At 74: 5 Facts About The Guinness Record Holder". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  16. Correspondent, Special (5 April 2017). "S.P. Balasubrahmanyam, Hema Malini bag NTR awards". The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/spb-hema-malini-bag-ntr-awards/article17821614.ece. 
  17. "Who will be the Indian Film Personality of the Year at IFFI 2017?". 8 November 2017.
  18. "Waheeda receives Indian Film Personality of the Year award at IFFI". 20 November 2013.
  19. India, Press Trust of (20 November 2016). "SP Balasubrahmanyam honoured with centenary award". Business Standard India. http://www.business-standard.com/article/pti-stories/sp-balasubrahmanyam-honoured-with-centenary-award-116112000607_1.html. 
  20. "Have lost count of songs sung, says record holder S.P. Balasubrahmanyam". 20 November 2016.
  21. 26 January 2011 DC Correspondent New Delhi (26 January 2011). "SPB wins Padma Bhushan, no Bharat Ratna this year". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  22. Kolappan, B. (25 September 2020). "'Paadum Nila' S.P. Balasubrahmanyam no more". The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/paadum-nila-sp-balasubrahmanyam-no-more/article32693844.ece. 
  23. "SP Balasubrahmanyam: Legendary Indian singer dies". பிபிசி. 25 September 2020. https://www.bbc.com/news/world-asia-india-53789574. 
  24. "திரையுலகில் 50வது ஆண்டில் ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் - ETR.NEWS".
  25. "திரையுலகில் 50 வது ஆண்டில் ௭ஸ். பி.பாலசுப்பிரமணியம்". http://www.tamilmithran.com/article-source/NTI1MjI3/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-50%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d. 
  26. "SP Balasubrahmanyam completes 50 years: Baahubali musician Keeravaani pays tribute to SPB". http://m.ibtimes.co.in/sp-balasubrahmanyam-completes-50-years-baahubali-musician-keeravaani-pays-tribute-spb-video-659565. 
  27. "பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார்". http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2016/12/31012256/Balasubramaniam-Foot-performed-puja.vpf. 
  28. "New York Composer Dedicates Album to SP Balasubrahmanyam". http://www.indiawest.com/entertainment/global/new-york-composer-dedicates-album-to-sp-balasubrahmanyam/article_f774042a-94ec-11e7-b5a9-c7fa4023949a.html. 
  29. 29.0 29.1 "பாடும் நிலாவின் முதல் பாடல்". https://m.youtube.com/watch?v=S3K9Z50_QnM. 
  30. "பாடும் நிலா பாலு". {{cite web}}: Cite has empty unknown parameter: |2= (help); Text "Lakshman Sruthi-100% Manual Orchestra" ignored (help)
  31. "எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம்". http://m.tamil.thehindu.com/cinema/tamil-cinema/எஸ்பிபி-50-பாடும்-நிலாவை-உருகவைத்த-யேசுதாஸின்-புகழாரம்/article9451588.ece. 
  32. "‘I know what I don’t know’". http://www.thehindu.com/features/metroplus/society/sp-balasubrahmanyam-talks-about-his-singing-experiences/article6298959.ece. 
  33. http://www.lokvani.com/lokvani/article.php?article_id=3493
  34. http://entertainment.oneindia.in/celebs/s-p-balasubramaniam/biography.html
  35. "SPB presented Gurajada Visishta Puraskar". http://www.thehindu.com/news/cities/Vijayawada/spb-presented-gurajada-visishta-puraskar/article21236420.ece. 
  36. "மொழியின் அழகை எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன்: எழுத்தாளர் மாலன் புகழாரம்". http://www.dinamani.com/tamilnadu/2018/jun/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2946440.html. 
  37. [http://www.filmibeat.com/tamil/news/2015/amazing-unknown-facts-about-the-legendary-sp-balasubrahmanyam-spb/articlecontent-pf88657-185618.html "Unknown Facts About The Legendary SP Balasubrahmanyam (S.P.B) Read more at: http://www.filmibeat.com/tamil/news/2015/amazing-unknown-facts-about-the-legendary-sp-balasubrahmanyam-spb-185618.html"]. http://www.filmibeat.com/tamil/news/2015/amazing-unknown-facts-about-the-legendary-sp-balasubrahmanyam-spb/articlecontent-pf88657-185618.html. 
  38. "ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் எஸ்.பி.பி.யின் இசை நிகழ்ச்சி". http://www.thinakkural.lk/article.php?cinema/sexngxvybk4482cc8b6a16d720860oyje34a2462a1be02e79a57fb95fkrcv. 
  39. "எஸ்.பி.பி.யின் தாயார் காலமானார்". https://www.thanthitv.com/News/Cinema/2019/02/05095326/1024235/SPB-Mother-passed-Away.vpf. 
  40. Naidu, M. Venkaiah (2020-09-25). "'I can’t believe Balu’s voice has fallen silent'" (in en-IN). Press Bureau of India. https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1658959. 
  41. Murali, S. (2020-09-25). "S.P. Balasubrahmanyam: The end of an era" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/sp-balasubrahmanyam-the-end-of-an-era/article32695994.ece. 
  42. "Veteran singer SP Balasubrahmanyam donates his ancestral home to Shri Kanchi Kamakoti Math – The Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  43. "S.P.Bala Subramanyam". Swara Maadhuri – సంకీర్తనా నిధి (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  44. "SP Balasubrahmanyam honoured with centenary award". Deccan Herald (in ஆங்கிலம்). 20 November 2016. பார்க்கப்பட்ட நாள் 27 August 2020.
  45. "Telugu | Andhra Cultural Portal | Page 16" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-25.
  46. "பாடகர் பாலசுப்பிரமணியம்". http://news.lankasri.com/entertainment/03/132203. 
  47. "உடல்நிலை சரியில்லை என வதந்தி: பாடகர் எஸ்.பி.பி வருத்தம்". http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19637331.ece. 
  48. "Rumours Rife on SPB Health". https://www.mirchi9.com/movienews/rumours-rife-s-p-balasubrahmanyam-health/. 
  49. "சுனாமி நிவாரணம்: 14 மணி நேர 'மாரத்தான்' இசை நிகழ்ச்சி!". http://www.lakshmansruthi.com/orchestra/tsunami.asp. 
  50. "A singing phenomenon". http://m.deccanherald.com/articles.php?name=http:%2F%2Fwww.deccanherald.com%2Fcontent%2F585903%2Fa-singing-phenomenon.html. 
  51. "SPB பற்றிய சுவையான சிறுகுறிப்புகள்". {{cite web}}: Cite has empty unknown parameter: |2= (help); Text "Lakshman Sruthi - 100% Manual Orchestra" ignored (help)
  52. "Not seeing kids growing up my biggest regret: SPB". http://m.thehindu.com/entertainment/not-seeing-kids-growing-up-my-biggest-regret-sp-balasubrahmanyam/article8018217.ece. 
  53. "பாடும் நிலா பாலு". {{cite web}}: Cite has empty unknown parameter: |2= (help); Text "Lakshman Sruthi - 100% Manual Orchestra" ignored (help)
  54. "இன்று நினைத்தாலும் இனிக்கும்!".
  55. "எம்.எஸ்.விஸ்வநாதன்". {{cite web}}: Text "பாடும் நிலா பாலு" ignored (help)
  56. "சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்".
  57. "எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஜோடி பாடல்கள்". http://priyatamilsongs.blogspot.ae/p/blog-page_2361.html?m=1. 
  58. "எஸ். பி. பாலசுப்பிரமணியம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  59. "காதலிப்போம் பாடும் நிலாவை:July 2009".
  60. "கேட்ட ஞானத்தை வைத்தே பாடுகிறேன் -எஸ்.பி.பாலசுப்பிரமணியம்". {{cite web}}: Text "Webdunia Tamil" ignored (help)
  61. "உதவி இயக்குநராக பணியாற்ற விரும்பிய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |2= (help); Text "Athavan News" ignored (help)
  62. "More than 25 years later, SPB and KJ Yesudas to come together for a duet". http://www.thenewsminute.com/article/more-25-years-later-spb-and-kj-yesudas-come-together-duet-65889. 
  63. "Ayya Sami song: KJ Yesudas, SP Balasubrahmanyam's melody is all praise for Tamil Nadu and Kerala". https://www.indiatoday.in/movies/regional-cinema/story/ayya-sami-song-kinar-kj-yesudas-s-p-balasubrahmanyam-1162723-2018-02-07. 
  64. "Legendary singers KJ Yesudas, SP Balasubrahmanyam sing together after 27 years". https://m.hindustantimes.com/regional-movies/legendary-singers-kj-yesudas-sp-balasubrahmanyam-sing-together-after-27-years/story-E4x1u4UefIye6BBK0mueCO.html. 
  65. "அமெரிக்காவில் கலக்கும் SPB இசை நிகழ்ச்சி".
  66. "S P Balasubramanyam: The voice that made Salman Khan sing". https://www.saddahaq.com/s-p-balasubramanyam-the-voice-that-made-salman-khan-sing. 
  67. "Popular Indian playback singer S P B thanks fans with 50th anniversary world tour". http://www.straitstimes.com/lifestyle/entertainment/the-singing-voice-of-a-superstar. 
  68. "Never tire or retire: The staggeringly successful journey of SP Balasubrahmanyam". http://www.thenewsminute.com/article/never-tire-or-retire-staggeringly-successful-journey-sp-balasubrahmanyam-40246. 
  69. "எஸ்.பி.பி பாடிய பாடல்கள்". {{cite web}}: Text "தமிழ் இசை" ignored (help)
  70. "Bollywood Cinema News, Latest Movies Online-Tamilbay-இமான் இசையில் பாட்டு பாடிய எஸ்.பி.பி".
  71. "பட்ஜெட்டை பார்க்காமல் பாடும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!-S.P.Balasubramaniam sang also for low budjet films".
  72. "புதுமுக இசையமைப்பாளருக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்த்து! - தினமணி சினிமா".
  73. "ஒற்றைப் பாடகரின் செல்வாக்கு - அன்றும் இன்றும்". https://tamil.filmibeat.com/news/one-singer-domination-055134.html. 
  74. "SPB is now clean India ambassador".
  75. "News View- NewIndiaNews.com".
  76. "கேரள அரசின் விருதுக்கு பாடகர் எஸ்.பி.பி.தேர்வு-Dinamani-Tamil Daily News".
  77. . http://www.dinamalar.com/news_detail.asp?id=1279795. 
  78. "கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-Kamalhassan is a multitalented person:s.p.Balasubramanian".
  79. "ரஜினி, கமலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள்".
  80. "Fashion--Cinema Express".
  81. "மூணே மூணு வார்த்தை : சிங்கிள் டிராக்கை வெளியிடும் எஸ்.பி.பி - 'Paadum nila' to launch the single track".
  82. "பாட்டும், நடிப்பும் இரு கண்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - Acting, singing are like my two eyes says sp.Balasubramaniyam".
  83. "பாடும் நிலா பாலு". {{cite web}}: Cite has empty unknown parameter: |2= (help); Text "Lakshman Sruthi- 100% Manual Orchestra" ignored (help)
  84. "கேளடி கண்மணி மூலம் கதாநாயகன் ஆனார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்". http://www.maalaimalar.com/2014/04/01212632/keladi-kanmani-hero-sp-balasub.html. (மாலைமலர் செய்தி)
  85. "திரை இசைத்துறையில் 30 வருட முடிசூடா மன்னன்". http://www.puthiyathalaimurai.com/news/special-news/23490-puthiyathalaimurai-tamilan-award-2017-industrial-arts.html. 
  86. Abishek Jerold. "SP Balasubramahmanyam dies at age 74". பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.
  87. "Legendary Indian singer SP Balasubramanyam passes away". அல்-ஜசீரா. பார்க்கப்பட்ட நாள் 25 September 2020.