கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 3: வரிசை 3:


'''கர்ணபாரம்''' என்பது ஒரு [[சமசுகிருதம்|சமஸ்கிருத]] நாடகமாகும். இந்நாடகம் ''பாசா'' என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள [[கர்ணன்|கர்ணனின்]] மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்டாதவாறு வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.
'''கர்ணபாரம்''' என்பது ஒரு [[சமசுகிருதம்|சமஸ்கிருத]] நாடகமாகும். இந்நாடகம் ''பாசா'' என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள [[கர்ணன்|கர்ணனின்]] மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்டாதவாறு வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.

[[File:Karna in Kurukshetra.jpg|thumbnail|குருஷேத்திரத்தில் கர்ணன்]]
[[File:The Fight between Arjuna and Karna.jpg|thumbnail|அர்ஜூனனுக்கும் கர்ணனுக்குமிடையேயான போர்]]
[[File:Raja Pandu and Matakunti LACMA M.69.13.6.jpg|thumbnail|கர்ணனின் தாய் குந்தி தேவி தன் கணவர் பாண்டுவுடன்]]


==பிற வடிவங்கள்==
==பிற வடிவங்கள்==

03:53, 11 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

கர்ணனின் மரணம்

கர்ணபாரம் என்பது ஒரு சமஸ்கிருத நாடகமாகும். இந்நாடகம் பாசா என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள கர்ணனின் மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்டாதவாறு வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.

குருஷேத்திரத்தில் கர்ணன்
அர்ஜூனனுக்கும் கர்ணனுக்குமிடையேயான போர்
கர்ணனின் தாய் குந்தி தேவி தன் கணவர் பாண்டுவுடன்

பிற வடிவங்கள்

கர்ணபாரம் கதையை ஒட்டி 13 நாடகங்களின் கையெழுத்துப் பிரதிகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில பாசா எழுதியதும் மாறுபட்ட கதையமைப்பினை உடையவை. இந்த நாடகங்களின் மலையாள வரிவடிவம் 105 பனை ஓலைகளில் காணப்பட்டது. இது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. மகாமஹோபாத்ய டி. கணபதி சாஸ்திரி தனது கள ஆய்வின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மணலிகரை என்ற இடத்தில் தனது கள ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். இது இப்போது திருவனந்தபுரம் நகரத்திற்குள் உள்ளது. இந்த கையெழுத்துப் பிரதிகளின் கண்டுபிடிப்பு 1909 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் பத்து நாடகங்களும் பதினொன்றாவது நாடகத்தின் சில பகுதிகளும் காணப்பட்டன. இவற்றில் எதிலும் இதை எழுதிய ஆசிரியரின் பெயர் காணப்படவில்லை. பின்னர் மேலும் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் நாடகங்களின் எண்ணிக்கையை 13 ஆக ஆனது.

சுருக்கம்

பாசா எழுதிய நாடகங்களில் கர்ணபரம் மிகசிறிய நாடகமாகும். இந்த நாடகத்தின் முக்கிய கூறுகள்

  • மங்கள ஸ்லோகம்
  • முன்னுரை
  • சிப்பாயின் நுழைவு
  • கர்ணனின் மனச்சுமை
  • பரசுராமரின் சாபம்
  • கர்ணனால் உள்ளார்ந்த புத்திசாலித்தனத்தைக் கண்டறிதல்
  • கவசம் மற்றும் குண்டல நன்கொடை
  • விமலா சக்தியைப் பெறுதல்
  • பாரத வாக்கியம்

ஆகியனவாகும்.

நாடகம்

நாடகதின் காட்சியில் துரியோதனன் அனுப்பிய ஒரு சிப்பாய் கர்ணனுக்கு போர்க்களத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவிக்கிறான். கர்னனின் முழு நடத்தைகளிலிருந்து கர்ணன் மிகுந்த வேதனையுடனும், வருத்தத்துடனும் நிரம்பியிருப்பதைக் காண்கிறான். ஒரு பெரிய போரின் இந்நாள் முரண்பாடானது என கர்ணன் எண்ணினான். (ஸ்லோகம் -6). சமீபத்தில்தான் கர்ணன் தான் குந்தியின் (ஸ்லோகம் -7) மூத்த மகன் என்ற உண்மையை அறிந்திருந்தான். எனவே தான் கொல்லப்போவது எதிரிகளை அல்ல தன் சகோதரர்களை என எண்ணினான்.(ஸ்லோகம் -8) . தனது குருவின் சாபம் சம்பந்தப்பட்ட நிகழ்வையும் கர்ணன் நினைவு கூர்ந்தார். இந்த விஷயங்களை கர்ணனின் தேரோட்டியுமான சல்லியனிடம் அவர் விவரிக்கையில், இந்திரன் தோன்றி கர்ணனிடம் ஒரு பெரிய உதவியைக் கோருகிறான். இந்திரன் தன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒரு பிராமணரின் உடையில் இருக்கிறான். கர்ணன் அவனுக்கு பல பொருட்களைத் தானமாக வழங்குகிறான், இவை அனைத்தும் இந்திரனால் மறுக்கப்பட்டன. கர்ணன் தனது கவசத்தையும் காதணிகளையும் வழங்கியதும் இந்திரன் ஏற்றுக்கொண்டு போய்விடுகிறான். "இந்திரன் உன்னை ஏமாற்றினான்!", என்று சல்லியன் கர்ணனிடம் கூறுகிறான். "இல்லை, இந்திரனை நான் ஏமாற்றினேன்" , என்று கர்ணன் பதிலளித்தார். கர்ணன் இந்திரனை எப்படி ஏமாற்றினான் என்று வாசகர் ஆச்சரியப்படுவதால் இது இந்நாடகத்தின் சிந்தனையைத் தூண்டும் பகுதி.

இந்திரனுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுப்பதாக கர்ணன் வாக்குறுதி அளிக்கும்போது, இந்திரன் அவனுக்கு "மரணமில்லா நிலையை" கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். வழக்கமாக 'நீண்ட காலம் வாழ்க' எனும் வழக்கமான வாழ்த்தினை ஏன் வழங்கவில்லை என்று கர்ணன் ஆச்சரியப்படுகிறான். கர்ணன் எந்த நிபந்தனையின்றி, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கவச - குண்டலங்களைக் கொடுத்த சிறிது நேரம் கழித்து, பிராமணர் (இந்திரன்) அனுப்பிய ஒரு தூதர் வந்து, (பிராமணர்) இந்திரன் கொடுத்ததாக விமலா எனும் இலக்கினைச் சரியாகக் கொல்லும் ஆயுதத்தை கர்ணனுக்கு அளிக்கிறான். "நான் பரிசளித்ததைத் பதிலாக எதையும் பெற ஒருபோதும் விரும்பவில்லை" என்று கர்ணன் வீரியமாக பதிலளிப்பார். ஆனால், "ஒரு பிராமணரின் (இந்திரன்) வேண்டுகோளின் காரணமாக" அதை வைத்திருக்குமாறு தூதர் வலியுறுத்துகிறார். கர்ணன் ஏற்றுக்கொண்டு சல்லியனிடம் அர்ஜுனன் நிற்கும் இடத்திற்கு தனது ரதத்தை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறான். இவ்வாறு, நாடகம் துரியோதனனின் தூதருடன் தொடங்கி இந்திரனிடமிருந்து வந்த தூதர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியுடன் முடிகிறது.

கர்ணன்

மகாபாரதத்தின்படி பண்டைய இந்தியாவின் மிகப் பெரிய வீரர்களில் கர்ணன் ஒருவர். அவர் அங்க நாட்டின் மன்னன். மகாபாரதத்தின்படி, அர்ஜுனனுடன் கர்ணன் இணைந்து உலகம் முழுவதையும் கைப்பற்றும் திறன் கொண்ட ஒரே போர்வீரர்கள்.

கர்ணனின் சித்தரிப்பு

குருக்ஷேத்ரா போருக்கு ஒரு நாள் முன்பு கர்ணனின் மன வேதனையை இந்த நாடகம் சித்தரிக்கிறது. கர்ணன் தனது கடந்த காலத்தையும் அவரது நம்பிக்கையையும் பற்றி நினைப்பதாகவும், பிறப்பு பற்றி தெரியாத தெரியாத ஒரு மனிதனின் மரண வேதனையையும் இந்த நாடகம் முன்வைக்கிறது. ஒருபுறம் சமூக சக்திகள் கேலி செய்வதற்கும், போற்றுவதற்கும், மறுபுறம் விதியின் கேவலமான சவால்களுக்கும் இடையில் தனது இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் கர்ணன் வீரத்திற்கும் பரிதாபத்திற்குரியவர்.

கதை

மகாபாரதப் போர்க்களத்தின் பதினொன்றாம் நாளிலிருந்து நாடகம் தொடங்குகிறது. சூரியனின் மகன் பெரிய போர்வீரன் கர்ணன், வலிமைமிக்கவனாகவும், சக்திவாய்ந்தவனாகவும் இருப்பதற்குப் பதிலாக போர்க்களத்தில் மனச்சோர்வடைந்து காணப்படுகிறான். இதற்கான காரணங்களை இந்நாடகம் பகுப்பாய்வு செய்கிறது.

கர்ணன், தனது பிறப்பு, தனது சாதி மற்றும் தனது சமூக அந்தஸ்தைப் பற்றி கவலைப்படுகிறார். அவர் குந்தி மற்றும் சூரியனின் மகனா? சமுதாயத்தின் கேலிக்கூத்தும், புகழும், விதியும் கர்ணனை வடிவமைக்கின்றன. ஆண்கள் ஒருவருக்கொருவரைக் கொல்லும் போரின் அர்த்தமற்ற தன்மையால் சிறிது காலத்திற்கு கர்ணன் காத்திருக்கிறார். தனது வெற்றி அல்லது தோல்வியைப் பொருட்படுத்தாமல், போரிடவது எப்படியும் வீணாகும் என்பதை அறிந்து மனச் சஞ்சலமடைகிறார்.

கர்ணன் தனது குருவான பரசுராமர் கொடுத்த சாபத்தைப் பற்றி சல்லியனிடம் சொல்கிறார். இந்த அத்தியாயம் நிகழ்காலத்தின் கதைகளை கடந்த காலத்துடன் தொடர்புபடுத்துவதன் மூலம் நிகழ்த்தப்படுகிறது. பரசுராமர் அறிவுறுத்தியபடி அஸ்திரமானது தேவையான நேரத்தில் சக்தியற்றதாகிறது.

பிராமணர் வேடமிட்ட இந்திரன் தெய்வீக கவசத்தையும் குண்டலத்தையும் தந்திரமாக கர்ணனிடமிருந்து எடுத்துச் செல்லும் சதித்திட்டத்தின் சூத்திரதாரி புத்திசாலித்தனமான கிருஷ்ணரால் என்பதை கர்ணன் புரிந்துகொண்டு தனது தலைவிதியை ஏற்றுக்கொள்கிறார். இந்திரனின் தூதர் விமலா என்ற சக்திவாய்ந்த ஆயுதத்தை வழங்குகிறார். இது பாண்டவர்களில் ஒருவரை அழிக்கக்கூடும். அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணரிடமிருந்து வந்த சவாலை ஏற்றுக்கொண்டு புத்துயிர் பெற்ற கர்ணன் இந்த இறுதி விதியை வீரமாக தொடர்கிறான். இத்துடன் பாசாவின் கர்ணபாரம் நாடகம் முடிவடைகிறது.

வியாசரின் மகாபாரதத்திலிருந்து விலகல்

இந்த நாடகம் அசல் மகாபாரதத்திலிருந்து சில முக்கிய காரனங்களுக்காக பல விலகல்களைக் கொண்டுள்ளது.

  • இந்த நாடகம் கர்ணனுக்கும் அவரது தேரோட்டி சல்லியனுக்கும் இடையிலான நட்பு உரையாடலால் வகைப்படுத்தப்படுகிறது. சல்லியன் தொடர்ந்து கர்ணனிடம் பரிவு காட்டுகிறார். மேலும் அவரது நலன்களைப் பற்றியும் கவலைப்படுகிறார். பிராமணர் தோற்றமுள்ள அந்நியருக்கு தனது கவசத்தையும் காதணிகளையும் கொடுக்க வேண்டாம் என்று கர்ணனை எச்சரிக்கிறார்.
  • அசல் கதையில், ஷால்யா மன்னனாகவும், பாண்டவர்களிடம் அனுதாபமாகவும் இருந்தார். சல்லியன் தனது தேரை ஓட்டிச் சென்றால் மட்டுமே கெளரவ இராணுவத்தின் தளபதியாவேன் என கர்ணன் சொன்னார். துர்யோதனனின் வேண்டுகோளை சல்லியனால் மறுக்க முடியவில்லை. எனவே, ஒரு நிபந்தனையை விதிக்கிறான். அதன்படி, கர்ணன் அவனிடம் என்ன சொன்னாலும் அதற்கு பதில் சொல்ல மாட்டேன். கர்ணன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
  • போர்க்களத்தில் சல்லியன் தொடர்ந்து கர்ணனை விமர்சிக்கிறான். அவனுடைய தாழ்ந்த பிறப்பு மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட பிற தோல்விகளை நினைவுபடுத்துகிறான். மஹாபாரதத்தின் கர்ணன் (கர்ணபர்வத்தில்) சல்லியனை கடுமையாக விமர்சித்தாலும் தைரியமாக போராடுகிறார். கர்ணபாரத்தில் சல்லியன் கர்ணனின் கூட்டாளியாகக் காட்டப்படுகிறான்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணபாரம்&oldid=3019213" இலிருந்து மீள்விக்கப்பட்டது