இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 147: வரிசை 147:
===தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு===
===தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு===
{{இலங்கை தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு, 2020}}
{{இலங்கை தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு, 2020}}

==முடிவுகள்==
[[சிறிலங்கா பொதுசன முன்னணி]] 59.09% வாக்குகளுடன் 145 இருக்கைகளைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. [[ஐக்கிய மக்கள் சக்தி]] 23.9% வாக்குகளுடன் 54 இடங்களைக் கைப்பற்றியது.<ref>{{cite news|title=பொதுத் தேர்தல் இறுதி முடிவு-நாடளவிய ரீதியில் கட்சிகள் வென்ற ஆசன விபரம்|url=https://www.tamilwin.com/politics/01/252916?ref=home-imp-parsely}}</ref><ref>{{cite news|title=
Final Islandwide Results|https://results.elections.gov.lk/}}</ref>


==குறிப்புகள்==
==குறிப்புகள்==

06:20, 7 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

இலங்கையின் 16-வது
நாடாளுமன்றத் தேர்தல்

← 2015 5 ஆகத்து 2020

இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும்
பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை
 
தலைவர் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராசபக்ச சஜித் பிரேமதாச
கட்சி ஐக்கிய தேசியக் கட்சி சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு ஐக்கிய மக்கள் சக்தி
தலைவரான
ஆண்டு
1994 2019 2020
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கொழும்பு மாவட்டம் குருணாகல் மாவட்டம் கொழும்பு மாவட்டம்
முந்தைய
தேர்தல்
106[a] 95[b] புதிய கட்சி

 
தலைவர் இரா. சம்பந்தன் அனுர குமார திசாநாயக்க
கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய மக்களின் சக்தி
தலைவரான
ஆண்டு
2001 2019
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
திருகோணமலை மாவட்டம் கொழும்பு மாவட்டம்
முந்தைய
தேர்தல்
16 6

நடப்பு பிரதமர்

மகிந்த ராசபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி



2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் (2020 Sri Lankan parliamentary election) 2020 ஆகத்து 5 இல் நடைபெற்றது.

2018 நவம்பரில், அன்றைய அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தினார்.[1] பின்னர் மீயுயர் நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பை இரத்துச் செய்து, அடுத்த தேர்தல் தேதியை 2020 இற்கு மீண்டும் தள்ளிப் போட்டது.[2] 2020 மார்ச் 2 இல் 15-வது நாடாளுமன்றம் புதிய அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் கலைக்கப்பட்டு, மார்ச் 12 முதல் 19 வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவிடு-19 பெருந்தொற்று காரணமாக தேர்தலுக்கான நாள் பிற்போடப்பட்டு,[3][4] புதிய நாள் சூன் 20 என அறிவிக்கப்பட்டது. கொரோனாவைரசுத் தொற்று நீங்காதமையால், மீண்டும் 2020 ஆகத்து 5 இற்கு தேர்தல் தள்ளிப்போடப்பட்டது.[5][6]

காலக்கோடு

2018
  • 9 நவம்பர் 2018 - அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து 2019 சனவரி 5 இற்குத் தேர்தல் தேதியை அறிவித்தார்.[7]
  • 13 திசம்பர் 2018 - மீயுயர் நீதிமன்றம் அரசுத்தலைவரின் கட்டளை அரசியலமைப்புக்கு எதிரானதெனத் தீர்ப்பளித்து, நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்தது.[8]
  • 16 திசம்பர் 2018 - மகிந்த ராசபக்ச பிரதமராகப் பதவியேற்றதை மீயுயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார்.[9][10]
2019
2020
  • 30 சனவரி 2020 - ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது.[12]
  • 10 பெப்ரவரி 2020 - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய தேர்தல் கூட்டணியை அறிவித்தார்.[13]
  • 17 பெப்ரவரி 2020 - சிறீலங்கா பொதுசன சுதந்திரக் கூட்டமைப்பு மகிந்த ராசபக்சவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியாகப் பதிவு செயப்பட்டது.[14]
  • 2 மார்ச் 2020 - 15-வது நாடாளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படுவதாக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச சிறப்பு வர்த்தமானி மூலம் அறிவித்தார்.[3] வேட்புமனுக்கள் 2020 மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.[3]
  • 3 மார்ச் 2020 - நாடாளுமன்றம் அரசுத்தலைவரினால் கலைக்கப்பட்டது. 2020 ஏப்ரல் 25 இல் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கடைசி நாள் மார்ச் 18.[15]
  • 19 மார்ச் 2020 - கோவிடு-19 தொற்றின் காரணமாக தேர்தல்கள் காலவரயறையின்றித் தள்ளிப்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆனையாளர் அறிவித்தார்.[16]
  • 20 ஏப்ரல் 2020 - 2020 சூன் 20 ஐ புதிய தேர்தல் நாளாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார்.[17] [18]
  • 6 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[19]
  • 9 மே 2020 - தேர்தல்கள் சூன் 20 இல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பிக்க ரணவக்க (ஜாதிக எல உறுமய), குமார வெல்கம ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது.[20]
  • 18 மே 2020 - சூன் 20 தேர்தல் நாளுக்கு எதிரான 8 மனுக்கள் மீதான வழக்குகள் மீயுயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.[21]
  • 22 மே 2020 – தேர்தலுக்கு எதிரான முறைப்பாடுகளை விசாரணையின்றித் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் மீயுயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.[22]
  • 2 சூன் 2020 – மீயுயர் நீதிமன்றம் தேர்தலுக்கு எதிரான வழக்குகளை விசாரனையின்றித் தள்ளுபடி செய்தது.[23]
  • 10 சூன் 2020 – தேர்தலுக்கான புதிய தேதியாக ஆகத்து 5 ஐ தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.[24]
  • 30 சூலை 2020 - தேர்தல் பரப்புரைகள் அனைத்தும் 2020 ஆகத்து 2 நள்ளிரவுடன் முடிவடைய வேண்டும் என தேர்தல் ஆணையகம் அறிவித்தது.[25]

பின்னணி

2018 அரசியலமைப்பு நெருக்கடியின் போது, மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்து, மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார். ராசபக்ச தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.[1]

ஆனாலும், நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து மீயுயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2018 திசம்பர் 13 இல், நாடாளுமன்றக் கலைப்பு சட்ட விரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[26]

கோவிடு-19

2020 மார்ச் 19 இல், இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்று அதிகரித்திருந்தாலும், திட்டமிட்டபடி வேட்பு மனுக்கள் 2020 மார்ச் 18 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[27] வேட்பு மனுக்கள் தாக்கல் முடிவடைந்த அடுத்த நாள் மார்ச் 19 இல் தேர்தல்கள் ஆணையகம் தேர்தலை ஒத்தி வைத்தது.[28] 2020 ஏப்ரல் 25 தேர்தல் நாள் 2020 சூன் 20 இற்குத் தள்ளிப் போடப்பட்டது. கோவிட்-19 தாக்கம் குறையாததனால், மீண்டும் 2020 ஆகத்து 5 வரை தள்ளிப்போடப்பட்டது.

தேர்தல் விபரங்கள்

9-வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2019 ஆம் ஆண்டின் தேர்தல் வாக்காளர் பட்டியலிற்கமைய 16,263,885 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இவர்களில் கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்களும் (1,785,964), வன்னியில் அதி குறைந்த வாக்காளர்களும் (287,024) வாக்களிக்கத் தகுதி பெற்றனர். அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 வேட்பாளர்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.[29]

தேர்தல் முறைமை

பல-அங்கத்தவர்கள் கொண்ட 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[30][31] ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி நியமிக்கப்படுகின்றனர்[32]

18 வயதிற்கு மேற்பட்ட இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் சூன் 1 அன்று எந்த இடத்தில் சாதா­ரண வதி­வா­ள­ராக இருக்­கின்­றாரோ அந்த இடத்தில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்­ளலாம்.[33] தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமல்ல. ஒவ்­வொரு வாக்­கா­ளரும் தத்தம் ஆளடை­யா­ளத்தை செல்­லு­ப­டி­யான ஆளடை­யாள ஆவணம் ஒன்றின் மூலம் நிரூ­பிக்க வேண்டும்.[33] வாக்காளர் ஒருவர் தமக்கு விருப்பமான ஒரு கட்சிக்கும், அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஆகக்கூடியது மூவருக்கு தனது விருப்பத்தேர்வுகளையும் இடலாம். ஆனாலும் வேட்பாளர் விருப்பத்தேர்வு கட்டாயமானது அல்ல.[33]

தேர்தல் மாவட்ட அடிப்படையில் இட ஒதுக்கீடு

மாகாணம் தேர்தல் மாவட்டம் ஒதுக்கப்பட்ட
இடங்கள்[34]
வடக்கு யாழ்ப்பாணம்

வன்னி

07

06

வடமத்தி அனுராதபுரம்

பொலன்னறுவை

09

05

வடமேல் குருநாகல்

புத்தளம்

15

08

கிழக்கு மட்டக்களப்பு

அம்பாறை (திகாமடுல்ல)

திருகோணமலை

05

07

04

மத்திய கண்டி

மாத்தளை

நுவரெலியா

12

05

08

மேல் கொழும்பு

கம்பகா

களுத்துறை

19

18

10

ஊவா பதுளை

மொனராகலை

09

06

சப்ரகமுவ இரத்தினபுரி

கேகாலை

11

09

தென் காலி

மாத்தறை

அம்பாந்தோட்டை

09

07

07

மொத்தம் 196

முடிவுகள்

சிறிலங்கா பொதுசன முன்னணி 59.09% வாக்குகளுடன் 145 இருக்கைகளைக் கைப்பற்றி முதலாவதாக வந்தது. ஐக்கிய மக்கள் சக்தி 23.9% வாக்குகளுடன் 54 இடங்களைக் கைப்பற்றியது.[35][36]

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Bastians, Dharisha; Goel, Vindu (9 November 2018). "Sri Lanka President Dissolves Parliament Amid Power Struggle". New York Times. https://www.nytimes.com/2018/11/09/world/asia/sri-lanka-dissolves-parliament.html. பார்த்த நாள்: 26 November 2018. 
  2. "Sri Lanka Supreme Court overturns dissolution of parliament". Al Jazeera and news agencies. 13 November 2018. https://www.aljazeera.com/news/2018/11/sri-lanka-supreme-court-overturns-dissolution-parliament-181113125340789.html. பார்த்த நாள்: 26 November 2018. 
  3. 3.0 3.1 3.2 "Sri Lankan parliament dissolved; elections set for April". அல் ஜசீரா. 3 மார்ச் 2020. https://www.aljazeera.com/news/2020/03/sri-lankan-parliament-dissolved-elections-set-april-200302193858515.html. பார்த்த நாள்: 3 மார்ச் 2020. 
  4. "General Election will be held on June 20". MSN.
  5. "Sri Lanka Parliamentary General Election to be held on Aug 5". EconomyNext. 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  6. "Sri Lanka's General Election on August 05". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
  7. https://www.bbc.com/news/world-asia-46156303
  8. https://news.yahoo.com/sri-lanka-court-verdict-expected-parliaments-dissolution-090205031.html
  9. https://www.tamilguardian.com/content/ranil-sworn-back-prime-minister
  10. https://news.yahoo.com/sri-lanka-court-denies-rajapakse-authority-act-pm-105810542.html
  11. "Ranil Wickremesinghe to resign as Sri Lanka's prime minister, Mahinda to take over | Tamil Guardian". tamilguardian.com.
  12. http://www.colombopage.com/archive_20A/Jan30_1580399088CH.php
  13. https://english.theleader.lk/news/654-sajith-s-alliance-to-be-named-samagi-jana-balawegaya-with-the-heart-as-its-symbol
  14. http://www.adaderana.lk/news/60849/slpp-and-slfp-to-contest-general-election-under-new-alliance-with-mahinda-as-leader
  15. https://www.hindustantimes.com/world-news/sri-lankan-parliament-dissolved-elections-on-april-25/story-qkVWPKjcJAQDX2E75P40kL.html
  16. http://www.adaderana.lk/news/61545/sri-lankas-general-election-postponed
  17. https://www.newsfirst.lk/2020/04/20/prof-hoole-objects-proposal-to-conduct-poll-on-may-28/
  18. https://www.msn.com/en-xl/news/other/general-election-will-be-held-on-june-20/ar-BB12VUiK
  19. https://colombogazette.com/2020/05/06/samagi-jana-balawegaya-files-petition-against-20-june-polls/
  20. https://colombogazette.com/2020/05/09/champika-and-welgama-file-petitions-against-polls/
  21. http://www.adaderana.lk/news/63692/five-member-judge-bench-to-hear-fr-petitions-against-elections-date
  22. Sooriyagoda, Lakmal. "AG requests court to dismiss petitions in limine". Daily News.
  23. "SC dismisses petitions against polls date: Elections back on track – Sri Lanka News". The Morning – Sri Lanka News. 6 June 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
  24. "Sri Lanka's parliamentary elections fixed for August 5". Sri Lanka News – Newsfirst (in ஆங்கிலம்). 10 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 June 2020.
  25. "Election campaign ends at midnight on Aug. 2". dailynews. பார்க்கப்பட்ட நாள் July 30, 2020.
  26. Rasheed, Zaheena; Kuruwita, Rathindra (13 December 2018). "Sri Lanka's Supreme Court overturns sacking of parliament". Al Jazeera. https://www.aljazeera.com/news/2018/12/sri-lanka-supreme-court-overturns-sacking-parliament-181213113720319.html. பார்த்த நாள்: 14 December 2018. 
  27. "Sri Lanka : Curfew in Puttalam area lifted temporarily for nomination process". colombopage.com.
  28. "Sri Lanka's General Election postponed". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
  29. "அடுத்த ஞாயிறுடன் பிரசாரப் பணிகள் நிறைவு". வீரகேசரி. 26-07-2020. 
  30. Blanc, Jarrett; Hylland, Aanund; Vollan, Kare (2006). State Structure and Electoral Systems in Post-Conflict Situations. International Foundation for Electoral Systems. பக். 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1931459177. https://books.google.com/books?id=1EXgwebG5oEC. 
  31. "Report of the Post-Election Assessment of Sri Lanka Mission: November 28 – December 2, 2000" (PDF). National Democratic Institute for International Affairs. 28 டிசம்பர் 2000. p. 10. {{cite web}}: Check date values in: |date= (help)
  32. Thilakarathne, N. M. C. (1997). "Parliament Library of Sri Lanka". in Brian, Rob. Parliamentary Libraries and Information Services of Asia and the Pacific: Papers prepared for the 62nd IFLA Conference Beijing, China August 25-31, 1996. Walter de Gruyte. பக். 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3110947633. https://books.google.com/books?id=rlohAAAAQBAJ. 
  33. 33.0 33.1 33.2 "Qualifications to register as an Elector". தேர்தல் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.
  34. வீரகேசரி, கொழும்பு, 20 மார்ச் 2020
  35. "பொதுத் தேர்தல் இறுதி முடிவு-நாடளவிய ரீதியில் கட்சிகள் வென்ற ஆசன விபரம்". https://www.tamilwin.com/politics/01/252916?ref=home-imp-parsely. 
  36. "Final Islandwide Results". 

வெளி இணைப்புகள்