சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SUBRAMANIAM VELUCHAMYஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இவரின் [[காவல் கோட்டம்]] புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], [[அரசியல்வாதி|அரசியலரும்]] ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இவரின் [[காவல் கோட்டம்]] புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.


== வாழ்க்கை சுருக்கம் ==
== வாழ்க்கை சுருக்கம் ==

08:46, 18 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

சு. வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளரும், அரசியலரும் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

வாழ்க்கை சுருக்கம்

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.

இவரின் படைப்புகள்

குற்றச்சாட்டுகள்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் சு.வெங்கடேசன் மறுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[1]

அரசியல் செயல்பாடுகள்

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[2] 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு,1.39 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மதுரை மக்களவை உறுப்பினராக செயல்பாடுகள்

  • மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரசாயனம்- உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை சந்தித்து மனு அளித்ததுள்ளார் .[5]
  • தமிழ் நாகரிகம் உருவான காலத்தை பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு ஆறாம் நூற்றாண்டு என மாற்ற செய்திடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.[6]
  • மத்திய ரயில்வே துறை ஆலோசனைக்குழுவில் தமிழக எம்.பி.க்கள் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். 27 பேர் கொண்ட இந்த குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.[7]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. மதுரை, மதுரை பதிப்பு (December 27, 2011). "மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்". தினமலர் (மதுரை). http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795. 
  2. செல்வ புவியரசன் (2019 மார்ச் 19). "தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி". தினத்தந்தி (மே 24, 2019)
  4. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  5. தீக்கதிர் நாளிதழ் , 21 நவம்பர் 2019 , பக்கம் :8
  6. http://loksabhaph.nic.in/Debates/uncorrecteddebate.aspx, 17th Loksabha , November 21 , 2019 , 12-1 PM
  7. தீக்கதிர் நாளிதழ் , 23 நவம்பர் 2019 , பக்கம் :1

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வெங்கடேசன்&oldid=3002561" இலிருந்து மீள்விக்கப்பட்டது