முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சில பிழை திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பலதரப்பட்ட சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18: வரிசை 18:
மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை<ref name=":0">{{Cite book|title=The Cholas|url=https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154722892256675|page=103|author=K.A.NilakantaSastri}}</ref> வழங்கியுள்ளார்.
மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை<ref name=":0">{{Cite book|title=The Cholas|url=https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154722892256675|page=103|author=K.A.NilakantaSastri}}</ref> வழங்கியுள்ளார்.


'''அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-'''இவன் மயிலையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒரு பொத்தப்பிச் சோழன்<ref>{{Cite book|title=கல்வெட்டு|author1=நடன.காசிநாதன்|author2=K.தாமோதரன்|url=https://tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=214|page=19}}</ref> ஆவான். இப்பகுதி தென்கிழக்கு அரையர் நாட்டுப்பகுதியாகும். பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்செப்பேடு வாயிலாக இவ்விவரங்களை அறிய முடிகிறது. இந்த சிறீ காந்தனின் மகளான 'அக்கள நிம்மடி' என்பவளே பராந்தக வீரநாராயணனின் தாய் ஆவாள்.
'''அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-'''இவன் மயிலையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒரு பொத்தப்பிச் சோழன்<ref name=":5">{{Cite book|title=கல்வெட்டு|author1=நடன.காசிநாதன்|author2=K.தாமோதரன்|url=https://tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=214|page=16, 19}}</ref> ஆவான். இப்பகுதி தென்கிழக்கு அரையர் நாட்டுப்பகுதியாகும். பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்செப்பேடு வாயிலாக இவ்விவரங்களை அறிய முடிகிறது. இந்த சிறீ காந்தனின் மகளான 'அக்கள நிம்மடி' என்பவளே பராந்தக வீரநாராயணனின் தாய் ஆவாள்.


இந்த சிறீ காந்தனின் முன்னோரைப்பற்றி அறிய, கீழைச்சாளுக்கியரின் பட்டயங்களும்<ref name=":1">{{Cite book|title=Epigraphia indica|volume=5|url=https://archive.org/details/epigraphiaindica014342mbp|page=123}}</ref>, சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும்<ref name=":2">{{Cite book|title=Epigraphia indica|volume=15|page=46|url=https://archive.org/details/in.ernet.dli.2015.108417/page/n69/mode/1up}}</ref> நமக்கு உதவுகின்றது. இவற்றை கொண்டு பார்க்கும்பொழுது,   இவன், அரையர்நாட்டு நந்திவருமனின் மூன்றாவது மகனான தனஞ்சயனின் இரண்டாவது பெயரனான எரியம்மாவின் வழியில் வந்தவன்<ref name=":2" /><ref name=":1" /><ref name=":0" /> என்று அறிய முடிகிறது. மேலும், முதலாம் பராந்தகனின் வேலஞ்சேரி பட்டயம்<ref name=":3">{{Cite web|url=http://www.tamilartsacademy.com/articles/article28.xml|title=Thiruttani and Velanjeri Copper Plates|website=www.tamilartsacademy.com|access-date=2020-06-10}}</ref> மற்றும் அன்பில் செப்பேட்டின் வழியே, இந்த சிறீ காந்தனே ஏகாதிபத்தியச் சோழ மரபை தோற்றுவித்த [[விசயாலய சோழன்|விசயாலயச் சோழனின்]] தந்தை<ref name=":3" /><ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=248|volume=27}}</ref><ref name=":2" /> என்பதையும் அறிய முடிகிறது. வேலஞ்சேரி பட்டயம் மற்றும் அன்பில் செப்பேடுகளை ஒப்பிட்டு பார்த்தால், சிறீ காந்தனுக்கு 'ஒற்றியூரான்'<ref name=":3" /><ref name=":2" /> என்று ஒரு குறிப்புப் பெயர் இருப்பதை அறிய முடிகிறது. ஒற்றியூர் என்பது இன்றைய திருவொற்றியூர்ப் பகுதியாகும். மயிலையும் ஒற்றியூரும் அருகருகே இருக்கும் ஊர்கள் என்பதை மணங்கொள்ள வேண்டும்.
இந்த சிறீ காந்தனின் முன்னோரைப்பற்றி அறிய, கீழைச்சாளுக்கியரின் பட்டயங்களும்<ref name=":1">{{Cite book|title=Epigraphia indica|volume=5|url=https://archive.org/details/epigraphiaindica014342mbp|page=123}}</ref>, சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும்<ref name=":2">{{Cite book|title=Epigraphia indica|volume=15|page=46|url=https://archive.org/details/in.ernet.dli.2015.108417/page/n69/mode/1up}}</ref> நமக்கு உதவுகின்றது. இவற்றை கொண்டு பார்க்கும்பொழுது,   இவன், அரையர்நாட்டு நந்திவருமனின் மூன்றாவது மகனான தனஞ்சயனின் இரண்டாவது பெயரனான எரியம்மாவின் வழியில் வந்தவன்<ref name=":2" /><ref name=":1" /><ref name=":0" /> என்று அறிய முடிகிறது. மேலும், முதலாம் பராந்தகனின் வேலஞ்சேரி பட்டயம்<ref name=":3">{{Cite web|url=http://www.tamilartsacademy.com/articles/article28.xml|title=Thiruttani and Velanjeri Copper Plates|website=www.tamilartsacademy.com|access-date=2020-06-10}}</ref> மற்றும் அன்பில் செப்பேட்டின் வழியே, இந்த சிறீ காந்தனே ஏகாதிபத்தியச் சோழ மரபை தோற்றுவித்த [[விசயாலய சோழன்|விசயாலயச் சோழனின்]] தந்தை<ref name=":3" /><ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|page=248|volume=27}}</ref><ref name=":2" /> என்பதையும் அறிய முடிகிறது. வேலஞ்சேரி பட்டயம் மற்றும் அன்பில் செப்பேடுகளை ஒப்பிட்டு பார்த்தால், சிறீ காந்தனுக்கு 'ஒற்றியூரான்'<ref name=":3" /><ref name=":2" /> என்று ஒரு குறிப்புப் பெயர் இருப்பதை அறிய முடிகிறது. ஒற்றியூர் என்பது இன்றைய திருவொற்றியூர்ப் பகுதியாகும். மயிலையும் ஒற்றியூரும் அருகருகே இருக்கும் ஊர்கள் என்பதை மணங்கொள்ள வேண்டும்.
வரிசை 27: வரிசை 27:


இதுகாரும் நாம் கண்ட செய்திகள் அடிப்படையிலும், கீழைச்சாளுக்கியர் செப்பேடுகள், தளவாய்புரம் மற்றும் அன்பில் செப்பேடுகள் அடிப்படையிலும், கீழை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் இரண்டாம் மகனான எரியம்மாவும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்திருப்பதை அறிய முடிகிறது. மேலை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் 'புண்ணியக்குமாரனின்' வழியினரும், சோழநாட்டை மூத்த இளவரசனான 'குணமுதிதன்' மற்றும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்துள்ளதை அறியமுடிகிறது.
இதுகாரும் நாம் கண்ட செய்திகள் அடிப்படையிலும், கீழைச்சாளுக்கியர் செப்பேடுகள், தளவாய்புரம் மற்றும் அன்பில் செப்பேடுகள் அடிப்படையிலும், கீழை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் இரண்டாம் மகனான எரியம்மாவும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்திருப்பதை அறிய முடிகிறது. மேலை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் 'புண்ணியக்குமாரனின்' வழியினரும், சோழநாட்டை மூத்த இளவரசனான 'குணமுதிதன்' மற்றும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்துள்ளதை அறியமுடிகிறது.

'''கள்வரும் களப்பிரரும் :'''

பொ.ஊ.மு நான்காம் நூற்றாண்டளவில் கருநாடக மாநிலத் தில் தற்போதுள்ள சிரவணபெளகொள என்று வழங்கப்படும் பகுதி 'கள்பப்புநாடு' என்று அழைக்கப்பட்டுள்ளது. மௌரிய மன்னன் அசோகப் பேரரசனின் பாட்டனாரான சந்திரகுப்த மௌரியர் தம் அரசைத் துறந்து சைனசமயத்தை ஏற்றுத் துறவு பூண்டு அக் களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் வந்து தங்கினார் என்று சைன சமய நூலான 'வட்டாரதனே' கூறுகிறது. தற்போதுள்ள சந்திரகிரி மலைக்குப் பழைய பெயர் 'களபப்புபெட்ட' என்பதாகும். ஆதலால் சிரவணபௌகொள பகுதியே களப்பிரர்களின் ஆதி இருப்பிடமாகும். நாளடைவில் அவர்கள் கோலாரிலுள்ள நந்திமலை, தமிழகத்தின் வடபகுதியான வேங்கடமலை ஆகிய பகுதிகளுக்குக் குடியேறி சிறுசிறு பகுதிகளுக்குத் தலைவர்களாகவும் விளங்கி யிருக்கின்றனர்<ref>{{Cite book|title=களப்பிரர்|url=https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219|page=6|author=நடன.காசிநாதன்}}</ref>. பொ.ஊ.பி மூன்றாம் நூற்றாண்டளவில் வேங்கடமலையை ஆட்சி செய்ததாகப் புல்லி குறிக்கப்படுகிறான்<ref>அகநானூறு - 61, 295</ref>. பொ.ஊ.பி. ஐந்தாம் நூற்றாண்டில், கதம்ப அரசனான காகுத்தன், களப்பிரருக்குப் பகைவன் என்று பேலூர் தாலுக்காவைச் சேர்ந்த ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு கூறுகிறது<ref>{{Cite book|title=Mysore archeological report|url=https://archive.org/details/in.ernet.dli.2015.501538/page/n41/mode/1up|page=16|year=1936}}</ref>. அதே காலத்தில் தமிழகத்தில் சோழ நாட்டில், அச்சுதவிக்ராந்தன் என்னும் களப்பிர மன்னன் ஆண்டு வந்ததாகப் புத்தமத நூல் ஒன்றினால் புலனாகிறது.

வேள்விக்குடிச் செப்பேட்டில்<ref>{{Cite book|title=பாண்டியர் செப்பேடுகள் பத்து|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8lupy.TVA_BOK_0009067/page/n85/mode/1up|Lines=39 - 46|chapter=வேள்விக்குடி செப்பேடு}}</ref>,

... .. ''அளவரிய ஆதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் '''களப்ர னென்னுங் கலி அரசன்''' கைகொண்டதனை இறக்கிய பின் படுகடல் முளைத்த பருதி போல... ..''

என்று களப்பிரர் பற்றிய தகவலை முதன் முதலாகத்தருகிறது.

தளவாய்புரச் செப்பேட்டில்<ref>{{Cite book|title=பாண்டியர் செப்பேடுகள் பத்து|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8lupy.TVA_BOK_0009067/page/n85/mode/1up|chapter=தளவாய்புச் செப்பேடு|Lines=97 - 102}}</ref>,

... ..''நன்கெய்தியும் கடி ஞாறு கவினலங்கற் '''களப்பாழர்''' குலங்களைந்தும் முடி சூடிய முரண் மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின் இடையா''

''றையும் எழில் வெண்பைக் குடி''

''யிலும் வெல்கொடி எடுத்த குடைவேந்தன் றிருக்குலத்''

''துக் கோமன்னர் பலர் கழிந்தபின் ..... ...''

''... ..'''களப்பாழரைக்''' களைகட் டமற்றிரண்டோண் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்.. ..''

என்று களப்பிரரைக் 'களப்பாழர்' என்று குறிக்கப்படுவதை அறியலாம்.

களப்ரர் - களப்பாழர் - கள்வர் இந்த மூன்றும் ஒரே இனம் தானா என்ற குழப்பம் பொன்னிவாடிக்கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.532805/page/n68/mode/1up|volume=38|page=39|Part=1}}</ref> கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்தது.

''ஸ்வஸ்திஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சார்வ பெளமன் '''கலி நிருவ ( ப ) கள்வனாயின''' கோக்கண்டன் இரவி... ..''

என்பதாகக் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘கலி நிருப கள்வனாயின கோக்கண்டன் இரவி' என்று வருவது கள்வனாயின கோக்கண்டன் இரவி என்னும் அரசன் கலி அரசன் தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 'கலி நிருப' எனும் சமற்கிருத பதம், 'கலி அரசன்' எனும் பொருளிடையது. இதே போன்றுதான் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் 'களப்ர னென்னும் கலி அரசன்' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே களப்ரர், கள்வர் ஆகியோர் ஒரே இனத்தவர் என்பது தெளிவாகிறது.

பல்லவ மன்னன் இராசசிம்மன் சூட்டியிருந்த பல பட்டப்பெயர்களில், 'காலகாலன்', 'காலவிக்ரமன்' என்பவைகளும் அடங்கும்<ref name=":5" />. 'காலகாலன்' என்பது கூற்றுவனுக்குக் கூற்றுவன் என்றும், காலவிக்ரமன் என்பது, கூற்றுவனையும் வெற்றி கண்டவன் என்றும் பொருள் கொள்ளப்படும். இங்கு கூற்றுவன் என்பது உயிர்களைப் பறிப்பதாகக் கருதப்படும் யமனைக் குறிக்கிறதா ? அல்லது கூற்றுவன் என்னும் பெயர் தாங்கியிருந்த ஒரு மன்னனைக் குறிக்கிறதா ? என்பது ஐயப்பாடே. ஆனாலும் சிலர் கூற்றுவன் என்னும் மன்னனையே குறிப்பிடுகிறது என்று பொருள் கொண்டு "கூற்றுவ நாயனார்" என்று நாயன்மார்களுள் ஒருவராகக் கருதப்படுபவரோடு தொடர்பு படுத்தியிருக்கின்றனர். இக்கூற்றுவர் களப்பாளர் ஆனதால் இராசசிம்மனும் களப்பிர அரசரை வென்றதாகக் கருதப்படுகிறது. இவ்வகையில் 'கள்வர கள்வன்' என்பதற்கு, கள்வருள் சிறந்த கள்வன், களப்பிரருள் சிறந்த களப்பிரன் என்று பொருள் வழங்கி, 'மன்னாதி மன்னன்', 'சூராதி சூரன்', 'வில்லாதி வில்லன்' என்ற சொற்களுடன் இணைத்து காட்டினார் இராசசேகரத்தங்கமணி. ஆனால் இது பொருளற்ற வாதமாக உள்ளது. ஏனெனில் மன்னாதி மன்னன், என்றால் பிற மன்னர்களுக்கெல்லாம் அவன் அரசன் என்றும், 'சூராதி சூரன்' என்றால் மற்ற சூரர்களுக்கெல்லாம் அவன் சூரன் என்றும், 'வில்லாதி வில்லன்' என்றால் மற்ற வில்லாளிகளெல்லாரையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்த வில்லாளி என்றும் பொருள் கொள்ளப்படும். அவ்வாறெனில் "கள்வர கள்வன்" என்பதைக் கள்வர்களையெல்லாம் வெல்லக்கூடிய கள்வன் என்றே பொருள்கொள்ள வேண்டும். 'காலகாலன்' என ஒரு சொல் உண்டு. அதனை எமனையெல்லாம் நடுங்கச் செய்யும் எமன் என்று தானே பொருள் கூறுகின்றனர்.. அதேபோன்று கண்டர் கண்டன் என்ற சொல்லுக்கு கண்டர்களை எல்லாம் வென்று அடக்கியவன் என்று தானே வரலாற்றாசிரியர்கள் பொருள் புகலுகின்றனர். இராசசேகரத்தங்கமணி அவர்கள் பொருள் கொள்வதைப் போன்று பார்த்தால் 'சோழ சோழன்', 'பாண்டிய பாண்டியன்', 'முத்தரைய முத்தரையன்' என்று மற்ற மன்னர்களும் பட்டம் சூட்டிக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு எந்த மன்னனும் பட்டம் சூட்டிக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பல்லவர் காவலன், சோழர் காவலன் என்று தங்களை அழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பல்லவர் குலத்துக்கு அவன் தலைவன், சிறந்தவன் என்றால் பல்லவர் காவலன் என்றுதான் கூறிக்கொள்வானே தவிர, 'பல்லவர் பல்லவன்' என்று கூறிக்கொள்ளமாட்டான்.

பாண்டிய மன்னன் கடுங்கோன், பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆகியோர் காலம் முதல் களப்பிரர்கள் பற்றிய தெள்ளிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. முதலாம் நரசிம்மவர்மன் காலத்திய ஒரு கல்வெட்டில் முத்தரையர், அவனுக்கு அடங்கிய சிற்றரசராக அவனது தலைமையை ஏற்றுக் கொண்டவராகக் காணப்படுகின்றனர்<ref>{{Cite book|title=செங்கம் நடுகற்கள்|author=இரா.நாகசாமி}}</ref>. ஆனால் அதே நேரத்தில் நரசிம்மவர்மன் களப்பிரர்களை வென்றதாகச் செப்பேடுகளில் குறிக்கப்படுகிறான்<ref name=":6">{{Cite book|title=Inscription of Pallavas|url=https://books.google.co.in/books/about/Inscriptions_of_the_Pallavas.html?id=B3aqQgAACAAJ&redir_esc=y|chapter=கூரம் செப்பேடுகள் & பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகள்|author=தி.வி.மகாலிங்கம்|page=(160, 161), (318, 319)}}</ref>. அதே போன்று இரண்டாம் நந்திவருமப் பல்லவனைக் காஞ்சிபுரத்தில் இருக்கையில் அமர்த்துவதற்குத் துணை புரிந்தவர்களிலே, காடக முத்தரையன் ஒருவனும் குறிக்கப்படுகிறான்<ref>{{Cite book|title=South indian inscriptions|url=https://archive.org/details/in.gov.ignca.73014/page/n25/mode/1up|page=10|number=135|volume=4}}</ref>. ஆனால் பட்டத்தாள் மங்கலச் செப்புப் பட்டயத்தில்<ref name=":6" />, நந்திவருமப் பல்லவ மன்னனின் கால்களில் வீழ்ந்து வணங்கும் சமயத்தை எதிர்பாத்திருந்தவர்களில் களப்பிரனும் ஒருவனாகக் குறிக்கப்படுகிறான். ஆகவே, தொடக்கம் முதல் களப்பிரர்கள் பல்லவர்களுக்கு எதிரிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்தரையர் ஆரம்ப கால முதல் பல்லவர்களுக்கு உதவுபவர்களாக, சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இதிலிருந்தே முத்தரையர்களும், களப்பிரர்களும் வெவ்வேறானவர் என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் செந்தலைக் கல்வெட்டில் குறிக்கப்படும் முத்தரைய மன்னர்கள் 'கலி அரைசர்' என்று குறிக்கப்படவில்லை. அதேபோன்று களப்பிரர்களும் களப்பாளர், கள்வர் குறிக்கப்படுகிறார்களே தவிர 'முத்தரையர்' என்று எந்த இடத்திலும் குறிக்கப்படுவதாகக் காணமுடியவில்லை.

செந்தலைத்தூண் கல்வெட்டு :

பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவரன் மாறன்,

● கொடும்பாளூர்,

● மணலூர்,

● திங்களூர்,

● காந்தளூர்,

● அழுந்தியூர்,

● காரை,

● மறங்கூர்,

● அண்ணல்வாயில்,

● செம்பொன் மாரி,

● வெண்கோடை,

● புகழி,

● கண்ணனூர்.

ஆகிய இடங்களில் போரிட்டுப் பகைவர்களை வென்றிருக்கிறான். இம்மன்னன் நியமத்தில் பிடாரிக்குக் கோயில் எடுப்பித்திருக்கிறான். அக்கோயில் எடுப்பித்த செய்தியைத் தெரிவிக்கையிலேயே, தான் வெற்றி கொண்ட ஊர்களின் பெயர்களையும், தனது பட்டப்பெயர்களையும் கல்லில் பொறிக்கும்படிக் கட்டளையிட்டிருக்கிறான்.

“''சுவரன் மாறனவன் எடுப்பித்த பிடாரி கோயில் அவனெறிந்த ஊர்களு மவன் பேர்களும் அவனைப் பாடினார் பேர்களும் இத்தூண்கண் மேலேழுதின இவை”''

என்று செந்தலையில் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதே தூணின் மறுபக்கத்தில் அவனது பட்டப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

அப்பட்டப் பெயர்களுள் ஒன்று தான் "கள்வர் கள்வன்" என்பதாகும். ஆதலால் அவன் களப்பிரரை வென்றிருத்தல் வேண்டும் என்பது புலப்படுகிறது.


மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர [[பாண்டியர்|முத்தரையர்கள்]] பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர [[பாண்டியர்|முத்தரையர்கள்]] பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}

18:10, 10 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சிலை, திருச்சி

முத்தரையர் என்பது, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் இருந்த அரச மரபுகளில் ஒன்றாகும். முத்தரையர்கள் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மண்டலங்களை கி.பி 600 முதல் கி.பி 900 வரை ஆட்சி செய்தனர்.

தமிழ்ச் செய்யுள்களான நாலடியார் மற்றும் முத்தொள்ளாயிரத்தில் முத்தரையர் குடித்தலைவர்களைப் பற்றிய பாராட்டுத் தகவல்கள் காணப்படுகின்றன.[1][2]

7 முதல் 8 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர், பல்லவர்கள் கீழ் குறுநில மன்னர்களாக, காவேரி ஆற்றின் வளமான சமவெளிகளைக் கட்டுப்படுத்தினர். காஞ்சிபுரத்தில் வைகுந்த பெருமாள் கோவிலில் ஒரு கல்வெட்டு ஒரு முத்தரைய அரசன் பற்றி கூறுகிறது. வரலாற்றாசிரியர் டி. ஏ. கோபினாத ராவ் படி, இந்த அரசன் சுவரன் மாறன். இந்தக் கல்வெட்டில் "கள்வர் கள்வன்" என்று அழைக்கப்படுகிறார். வரலாற்றாசிரியர் மகாகலிங்கத்தின் கூற்றுப்படி, சுவரன் மாறன், பல்லவ அரசன் இரண்டாம் நந்திவர்மனின் படைத் தலைவரான உதயச்சந்திராவுடன் சேர்ந்து சேரர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எதிராக குறைந்தது பன்னிரண்டு போர்களில் ஈடுபட்டார்.[3] தஞ்சாவூர் மற்றும் வல்லம் அவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததாக சுவரன் மாறன் செந்தலை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொ.ஊ.பி 850 களில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது விசயாலயச் சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினான்.[4]

முத்தரையர்களுள் நன்கறியப்பட்ட ஆட்சியாளர்கள் முதலாம் குவாவன் (குணமுதிதன்), பெரும்பிடுகு முத்தரையர் (குவாவன் மாறன்), மாறன் பரமேசுவரன் (இளங்கோவதிரையர்), இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) ஆகியோராவர் .[5][6]

முத்தரையரின் தோற்றம்

முத்தரையர்களின் தோற்றம் பற்றி அறிய, நாம் கருநாடகம் மற்றும் ஆந்திர நாட்டுச் சோழர் மரபைப் பற்றி விரிவாக விளக்கியாகவேண்டும். வேங்கடத்தை ஒற்றிய அருவா வடதலைநாடு மற்றும் அதை ஒற்றிய மேலை மற்றும் கீழை நாடுகள், சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்தேயமாகத் திரிந்திருந்தது[7].

அங்கே இன்றைய தும்கூர், கர்னூல், அனந்தப்பூர், கடப்பை, நெல்லூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், "அரையர் நாடு ( அ ) மகாராசபதி ( அ ) இரேநாடு 7000" என்று வழங்கப்பட்டிருந்தது. ( இன்றைய ராயல்சீமைப் பகுதி ). புகழ்பெற்ற கரிகால் சோழனின் கால்வழியினர் அப்பகுதியை ஆட்சி புரிந்திருப்பதை அங்கே நமக்கு கிடைக்கும் எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள் உணர்த்துகின்றன[8]. நமக்கு கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் கரிகாலன் வழியில் வந்த சோழர்களில், அரையர் நாட்டில் முதலாமவனாகக் கருத்தப்படுபவன் "நந்திவருமன்" என்பவன் ஆவான். இவன் பெயரை நோக்கின், பல்லவர் மேலாண்மை ஏற்றவன் என்பது தெளிவகிறது. இவனுக்கு முன்னரும் 'சோழ மகாராசா' என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைப்பினும், அவற்றைக் கொண்டு இவனுக்கு முந்தைய மன்னர்கள் பற்றி அறிய முடியவில்லை. இவன் காலம் தோராயமாக பொ.ஊ.பி. 500 ஆகும். இவன் காலத்தில் கடம்பர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி அரையர் நாடாகியிருந்தது. நந்திவருமனின் மரபினர் தும்கூரிலுள்ள எரிகால் (அ) நிடுகல் பகுதியிலிருந்து ஆட்சி புரிய ஆரம்பித்துள்ளனர்.

நந்திவருமனுக்கு மூன்று மகன்கள். முதலாமாவன் சிம்மவிஷ்ணு, இரண்டாமவன் சுந்தரநந்தன், மூன்றாமவன் தனஞ்சயன். சிம்மவிஷ்ணுவின் மகன் நல்லடி ஆவான். மூன்றாமவன் எரிகால் முத்துராசு தனஞ்சயன்[9] என்று அரையர் நாட்டை ஆள்பவனாக குறிக்கப்படுகிறான். புண்ணியக்குமாரனின் மேலப்படு பட்டயத்தின்[10] மூலம், மூவருமே சமாகலத்தில் வெவ்வேறு பகுதிகளை ஆட்சி புரிந்ததாக அறியமுடிகிறது. இந்த புண்ணியக்குமாரன், தனஞ்சயனுடைய மூன்று பெயரன்களுள் ஒருவனாவார். இவனுக்குப் 'பிரதிவல்லபன்' என்ற விருதுப்பெயரும், 'போறி சோழ மகாதேவி' என்ற இவன் அரசியின் பெயரும், இவன் சாளுக்கியருடன் தொடர்பு கொண்டுருந்தான் என்பதை உறுதி செய்கின்றன. தனஞ்சயனின் முதலிரண்டு பெயரன்கள் 'குணமுதிதன்' மற்றும் 'எரியம்மா' ஆவர். இந்த மூவருக்கும் தந்தை மற்றும் தனஞ்சயனுடைய மகன் என்று அறியப்படுபவர் 'நவராமன் (அ) மகேந்திர விக்கிரமச் சோழ மகாராசா' என்பவன் ஆவான். இவனுக்கு 'முடித்த சிலாக்ஷரன்' என்றும் ஒரு விருதுப்பெயர் உண்டு. இவனது காலம் தோராயமாக பொ.ஊ.பி (575 - 610) தனஞ்சயனுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பேற்றவன் இவனே.

மேலப்பாடு பட்டயத்தின் அடிப்படையில் வரலாற்றறிஞர் K.A. நீலகண்ட சாஸ்திரி, நந்திவருமனின் கால்வழிபட்டியலை[11] வழங்கியுள்ளார்.

அதிராச சிறீ காந்தன் ( சிறீ கண்டன் ) :-இவன் மயிலையை மையமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த ஒரு பொத்தப்பிச் சோழன்[12] ஆவான். இப்பகுதி தென்கிழக்கு அரையர் நாட்டுப்பகுதியாகும். பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச்செப்பேடு வாயிலாக இவ்விவரங்களை அறிய முடிகிறது. இந்த சிறீ காந்தனின் மகளான 'அக்கள நிம்மடி' என்பவளே பராந்தக வீரநாராயணனின் தாய் ஆவாள்.

இந்த சிறீ காந்தனின் முன்னோரைப்பற்றி அறிய, கீழைச்சாளுக்கியரின் பட்டயங்களும்[13], சுந்தரச் சோழனின் அன்பில் செப்பேடுகளும்[14] நமக்கு உதவுகின்றது. இவற்றை கொண்டு பார்க்கும்பொழுது,   இவன், அரையர்நாட்டு நந்திவருமனின் மூன்றாவது மகனான தனஞ்சயனின் இரண்டாவது பெயரனான எரியம்மாவின் வழியில் வந்தவன்[14][13][11] என்று அறிய முடிகிறது. மேலும், முதலாம் பராந்தகனின் வேலஞ்சேரி பட்டயம்[15] மற்றும் அன்பில் செப்பேட்டின் வழியே, இந்த சிறீ காந்தனே ஏகாதிபத்தியச் சோழ மரபை தோற்றுவித்த விசயாலயச் சோழனின் தந்தை[15][16][14] என்பதையும் அறிய முடிகிறது. வேலஞ்சேரி பட்டயம் மற்றும் அன்பில் செப்பேடுகளை ஒப்பிட்டு பார்த்தால், சிறீ காந்தனுக்கு 'ஒற்றியூரான்'[15][14] என்று ஒரு குறிப்புப் பெயர் இருப்பதை அறிய முடிகிறது. ஒற்றியூர் என்பது இன்றைய திருவொற்றியூர்ப் பகுதியாகும். மயிலையும் ஒற்றியூரும் அருகருகே இருக்கும் ஊர்கள் என்பதை மணங்கொள்ள வேண்டும்.

விசயாலையச் சோழன், முத்தரைய மன்னர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றினான் என்பது வரலாறு கூறும் உண்மை. முத்தரையர்கள் யார் என்று நோக்கின், தனஞ்சயனின் முதல் பெயரனான குணமுதிதனின் வழியினர் என்பதைச் செந்தலைத் தூண் கல்வெட்டு[17] மற்றும் புண்ணியக்குமாரனின் மேலப்பாடு[10] பட்டயத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

சுந்தரநந்தனுக்குப்பின் ஆட்சிப்பொறுப்பு, சுந்தரநந்தனின் தம்பி மகனான நவராமன் (அ) விக்கிரமச் சோழ மகாராசா ஏற்றது தெரிகிறது. எனவே சுந்தரநந்தனுக்கு மகப்பேறு இல்லை என்ற முடிவுக்கு வருவது தவறில்லை. துவக்கத்தில், மகேந்திர விக்கிரமச்சோழ மகாராசா, பல்லவ மன்னர்களான 'சிம்மவிஷ்ணு' மற்றும் 'முதலாம் மகேந்திரவருமனின்' மேலாண்மைக்குட்பட்டு ஆட்சி செய்துள்ளதாகத் தெரிகிறது. இவனின் 'மகாராசா' எனும் பெயரின் மூலம், இவனின் அண்ணன் சிம்மவிஷ்ணுச் சோழன் போல இவனும் பிற்பாடு பல்லவர் மேலாண்மையை உடைத்துள்ளது தெரிகிறது. இவனுக்கு எரிகாலில் ஒரு துகராசா ( யுவராசன் ) இருந்துள்ளான். அவன் இவ்வரசனின் மூத்த மகனான 'குணமுதிதன்' என்று கருதப்படுகிறது. இதே சமகாலத்தில், மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் புண்ணியக்குமாரன், எரிகால்லின் முத்துராசாவாக இருந்து, சிப்பிலியைத் தலைநகராகக் கொண்டு, அரையர் நாட்டின் தென்பகுதியை ஆண்டுள்ளார். குணமுதிதனுக்குப் பின்னர், புண்ணியக்குமாரனே மேலப்பாடை தலைநகராகக்கொண்டு, அரையர் நாட்டுக்கு மகாராசா ஆகியுள்ளது அறியமுடிகிறது[18]. இந்த காலகட்டத்தில் தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டைப் பகுதிகளை கைக்கொண்டு பல்லவரின் கீழ் குணமுதிதன் ஆண்டுள்ளது செந்தலைக் கல்வெட்டுகளால் தெரியவருகிறது.

இதுகாரும் நாம் கண்ட செய்திகள் அடிப்படையிலும், கீழைச்சாளுக்கியர் செப்பேடுகள், தளவாய்புரம் மற்றும் அன்பில் செப்பேடுகள் அடிப்படையிலும், கீழை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் இரண்டாம் மகனான எரியம்மாவும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்திருப்பதை அறிய முடிகிறது. மேலை அரையர் நாட்டுப்பகுதிகளை, மகேந்திரவிக்கிரமச்சோழ மகாராசாவின் கடைமகன் 'புண்ணியக்குமாரனின்' வழியினரும், சோழநாட்டை மூத்த இளவரசனான 'குணமுதிதன்' மற்றும் அவன் வழியினரும் ஆட்சி புரிந்துள்ளதை அறியமுடிகிறது.

கள்வரும் களப்பிரரும் :

பொ.ஊ.மு நான்காம் நூற்றாண்டளவில் கருநாடக மாநிலத் தில் தற்போதுள்ள சிரவணபெளகொள என்று வழங்கப்படும் பகுதி 'கள்பப்புநாடு' என்று அழைக்கப்பட்டுள்ளது. மௌரிய மன்னன் அசோகப் பேரரசனின் பாட்டனாரான சந்திரகுப்த மௌரியர் தம் அரசைத் துறந்து சைனசமயத்தை ஏற்றுத் துறவு பூண்டு அக் களபப்பு நாட்டில் உள்ள களபப்பு மலையில் வந்து தங்கினார் என்று சைன சமய நூலான 'வட்டாரதனே' கூறுகிறது. தற்போதுள்ள சந்திரகிரி மலைக்குப் பழைய பெயர் 'களபப்புபெட்ட' என்பதாகும். ஆதலால் சிரவணபௌகொள பகுதியே களப்பிரர்களின் ஆதி இருப்பிடமாகும். நாளடைவில் அவர்கள் கோலாரிலுள்ள நந்திமலை, தமிழகத்தின் வடபகுதியான வேங்கடமலை ஆகிய பகுதிகளுக்குக் குடியேறி சிறுசிறு பகுதிகளுக்குத் தலைவர்களாகவும் விளங்கி யிருக்கின்றனர்[19]. பொ.ஊ.பி மூன்றாம் நூற்றாண்டளவில் வேங்கடமலையை ஆட்சி செய்ததாகப் புல்லி குறிக்கப்படுகிறான்[20]. பொ.ஊ.பி. ஐந்தாம் நூற்றாண்டில், கதம்ப அரசனான காகுத்தன், களப்பிரருக்குப் பகைவன் என்று பேலூர் தாலுக்காவைச் சேர்ந்த ஹல்மிடி என்னும் ஊரிலுள்ள கல்வெட்டு கூறுகிறது[21]. அதே காலத்தில் தமிழகத்தில் சோழ நாட்டில், அச்சுதவிக்ராந்தன் என்னும் களப்பிர மன்னன் ஆண்டு வந்ததாகப் புத்தமத நூல் ஒன்றினால் புலனாகிறது.

வேள்விக்குடிச் செப்பேட்டில்[22],

... .. அளவரிய ஆதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ர னென்னுங் கலி அரசன் கைகொண்டதனை இறக்கிய பின் படுகடல் முளைத்த பருதி போல... ..

என்று களப்பிரர் பற்றிய தகவலை முதன் முதலாகத்தருகிறது.

தளவாய்புரச் செப்பேட்டில்[23],

... ..நன்கெய்தியும் கடி ஞாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் முடி சூடிய முரண் மன்னர் ஏனைப்பலரு முன்னிகந்தபின் இடையா

றையும் எழில் வெண்பைக் குடி

யிலும் வெல்கொடி எடுத்த குடைவேந்தன் றிருக்குலத்

துக் கோமன்னர் பலர் கழிந்தபின் ..... ...

... ..களப்பாழரைக் களைகட் டமற்றிரண்டோண் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்.. ..

என்று களப்பிரரைக் 'களப்பாழர்' என்று குறிக்கப்படுவதை அறியலாம்.

களப்ரர் - களப்பாழர் - கள்வர் இந்த மூன்றும் ஒரே இனம் தானா என்ற குழப்பம் பொன்னிவாடிக்கல்வெட்டு[24] கண்டுபிடிக்கும் வரை தொடர்ந்தது.

ஸ்வஸ்திஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சார்வ பெளமன் கலி நிருவ ( ப ) கள்வனாயின கோக்கண்டன் இரவி... ..

என்பதாகக் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் ‘கலி நிருப கள்வனாயின கோக்கண்டன் இரவி' என்று வருவது கள்வனாயின கோக்கண்டன் இரவி என்னும் அரசன் கலி அரசன் தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. 'கலி நிருப' எனும் சமற்கிருத பதம், 'கலி அரசன்' எனும் பொருளிடையது. இதே போன்றுதான் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் 'களப்ர னென்னும் கலி அரசன்' என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே களப்ரர், கள்வர் ஆகியோர் ஒரே இனத்தவர் என்பது தெளிவாகிறது.

பல்லவ மன்னன் இராசசிம்மன் சூட்டியிருந்த பல பட்டப்பெயர்களில், 'காலகாலன்', 'காலவிக்ரமன்' என்பவைகளும் அடங்கும்[12]. 'காலகாலன்' என்பது கூற்றுவனுக்குக் கூற்றுவன் என்றும், காலவிக்ரமன் என்பது, கூற்றுவனையும் வெற்றி கண்டவன் என்றும் பொருள் கொள்ளப்படும். இங்கு கூற்றுவன் என்பது உயிர்களைப் பறிப்பதாகக் கருதப்படும் யமனைக் குறிக்கிறதா ? அல்லது கூற்றுவன் என்னும் பெயர் தாங்கியிருந்த ஒரு மன்னனைக் குறிக்கிறதா ? என்பது ஐயப்பாடே. ஆனாலும் சிலர் கூற்றுவன் என்னும் மன்னனையே குறிப்பிடுகிறது என்று பொருள் கொண்டு "கூற்றுவ நாயனார்" என்று நாயன்மார்களுள் ஒருவராகக் கருதப்படுபவரோடு தொடர்பு படுத்தியிருக்கின்றனர். இக்கூற்றுவர் களப்பாளர் ஆனதால் இராசசிம்மனும் களப்பிர அரசரை வென்றதாகக் கருதப்படுகிறது. இவ்வகையில் 'கள்வர கள்வன்' என்பதற்கு, கள்வருள் சிறந்த கள்வன், களப்பிரருள் சிறந்த களப்பிரன் என்று பொருள் வழங்கி, 'மன்னாதி மன்னன்', 'சூராதி சூரன்', 'வில்லாதி வில்லன்' என்ற சொற்களுடன் இணைத்து காட்டினார் இராசசேகரத்தங்கமணி. ஆனால் இது பொருளற்ற வாதமாக உள்ளது. ஏனெனில் மன்னாதி மன்னன், என்றால் பிற மன்னர்களுக்கெல்லாம் அவன் அரசன் என்றும், 'சூராதி சூரன்' என்றால் மற்ற சூரர்களுக்கெல்லாம் அவன் சூரன் என்றும், 'வில்லாதி வில்லன்' என்றால் மற்ற வில்லாளிகளெல்லாரையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்த வில்லாளி என்றும் பொருள் கொள்ளப்படும். அவ்வாறெனில் "கள்வர கள்வன்" என்பதைக் கள்வர்களையெல்லாம் வெல்லக்கூடிய கள்வன் என்றே பொருள்கொள்ள வேண்டும். 'காலகாலன்' என ஒரு சொல் உண்டு. அதனை எமனையெல்லாம் நடுங்கச் செய்யும் எமன் என்று தானே பொருள் கூறுகின்றனர்.. அதேபோன்று கண்டர் கண்டன் என்ற சொல்லுக்கு கண்டர்களை எல்லாம் வென்று அடக்கியவன் என்று தானே வரலாற்றாசிரியர்கள் பொருள் புகலுகின்றனர். இராசசேகரத்தங்கமணி அவர்கள் பொருள் கொள்வதைப் போன்று பார்த்தால் 'சோழ சோழன்', 'பாண்டிய பாண்டியன்', 'முத்தரைய முத்தரையன்' என்று மற்ற மன்னர்களும் பட்டம் சூட்டிக் கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு எந்த மன்னனும் பட்டம் சூட்டிக் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. மாறாகப் பல்லவர் காவலன், சோழர் காவலன் என்று தங்களை அழைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பல்லவர் குலத்துக்கு அவன் தலைவன், சிறந்தவன் என்றால் பல்லவர் காவலன் என்றுதான் கூறிக்கொள்வானே தவிர, 'பல்லவர் பல்லவன்' என்று கூறிக்கொள்ளமாட்டான்.

பாண்டிய மன்னன் கடுங்கோன், பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு ஆகியோர் காலம் முதல் களப்பிரர்கள் பற்றிய தெள்ளிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. முதலாம் நரசிம்மவர்மன் காலத்திய ஒரு கல்வெட்டில் முத்தரையர், அவனுக்கு அடங்கிய சிற்றரசராக அவனது தலைமையை ஏற்றுக் கொண்டவராகக் காணப்படுகின்றனர்[25]. ஆனால் அதே நேரத்தில் நரசிம்மவர்மன் களப்பிரர்களை வென்றதாகச் செப்பேடுகளில் குறிக்கப்படுகிறான்[26]. அதே போன்று இரண்டாம் நந்திவருமப் பல்லவனைக் காஞ்சிபுரத்தில் இருக்கையில் அமர்த்துவதற்குத் துணை புரிந்தவர்களிலே, காடக முத்தரையன் ஒருவனும் குறிக்கப்படுகிறான்[27]. ஆனால் பட்டத்தாள் மங்கலச் செப்புப் பட்டயத்தில்[26], நந்திவருமப் பல்லவ மன்னனின் கால்களில் வீழ்ந்து வணங்கும் சமயத்தை எதிர்பாத்திருந்தவர்களில் களப்பிரனும் ஒருவனாகக் குறிக்கப்படுகிறான். ஆகவே, தொடக்கம் முதல் களப்பிரர்கள் பல்லவர்களுக்கு எதிரிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் முத்தரையர் ஆரம்ப கால முதல் பல்லவர்களுக்கு உதவுபவர்களாக, சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இதிலிருந்தே முத்தரையர்களும், களப்பிரர்களும் வெவ்வேறானவர் என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் செந்தலைக் கல்வெட்டில் குறிக்கப்படும் முத்தரைய மன்னர்கள் 'கலி அரைசர்' என்று குறிக்கப்படவில்லை. அதேபோன்று களப்பிரர்களும் களப்பாளர், கள்வர் குறிக்கப்படுகிறார்களே தவிர 'முத்தரையர்' என்று எந்த இடத்திலும் குறிக்கப்படுவதாகக் காணமுடியவில்லை.

செந்தலைத்தூண் கல்வெட்டு :

பெரும்பிடுகு முத்தரையர் எனும் சுவரன் மாறன்,

● கொடும்பாளூர்,

● மணலூர்,

● திங்களூர்,

● காந்தளூர்,

● அழுந்தியூர்,

● காரை,

● மறங்கூர்,

● அண்ணல்வாயில்,

● செம்பொன் மாரி,

● வெண்கோடை,

● புகழி,

● கண்ணனூர்.

ஆகிய இடங்களில் போரிட்டுப் பகைவர்களை வென்றிருக்கிறான். இம்மன்னன் நியமத்தில் பிடாரிக்குக் கோயில் எடுப்பித்திருக்கிறான். அக்கோயில் எடுப்பித்த செய்தியைத் தெரிவிக்கையிலேயே, தான் வெற்றி கொண்ட ஊர்களின் பெயர்களையும், தனது பட்டப்பெயர்களையும் கல்லில் பொறிக்கும்படிக் கட்டளையிட்டிருக்கிறான்.

சுவரன் மாறனவன் எடுப்பித்த பிடாரி கோயில் அவனெறிந்த ஊர்களு மவன் பேர்களும் அவனைப் பாடினார் பேர்களும் இத்தூண்கண் மேலேழுதின இவை”

என்று செந்தலையில் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். அதே தூணின் மறுபக்கத்தில் அவனது பட்டப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

அப்பட்டப் பெயர்களுள் ஒன்று தான் "கள்வர் கள்வன்" என்பதாகும். ஆதலால் அவன் களப்பிரரை வென்றிருத்தல் வேண்டும் என்பது புலப்படுகிறது.

மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர முத்தரையர்கள் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.[சான்று தேவை]

முத்தரைய அரசர்கள்

  • தனஞ்சய முத்தரையர்
  • பெரும்பிடுகு முத்தரையர் என்கிற குவாவன் மாறன் (கி.பி.655-கி.பி.680)
  • இளங்கோவதிரையர் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி.680-கி.பி.705)
  • இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சுவரன் மாறன் (கி.பி.705-கி.பி.745)
  • விடேல்விடுகு சாத்தன் மாறன் (கி.பி.745-கி.பி.770)
  • மார்பிடுகு என்கிற பேரடியரையன் (கி.பி.770-கி.பி.791)
  • விடேல்விடுகு முத்தரையர் என்கிற குவாவன் சாத்தன் (கி.பி.791-கி.பி.826)
  • சாந்தன் பழியிலி (கி.பி.826-கி.பி.851)

கல்வெட்டுக் குறிப்புகள்

முத்தரையர் குறித்த கல்வெட்டுச் செய்திகள்:[28] [29]

  • நார்த்தாமலைக் கல்வெட்டு - விடேல் விடுகு முத்தரையன் மகனான சாந்தன் பழியிலியானவனின் மகள் பழியிலி சிறிய-நங்கை என்பவள், மீனவன் தமிழதிரையன் ஆயின மல்லன்அனந்தனை மணந்தாள் – என்று நார்த்தாமலை கல்வெட்டு கூறுகிறது. இதனால் மீனவனாகிய தென்னவனும், முத்தரையரும் சமகாலத்தில் புதுக்கோட்டை நிலப்பகுதியை ஆண்டனர் எனத் தெரிகிறது.
  • குடுமியான் மலை கோயில் கல்வெட்டு “சத்ரு பயங்கர முத்தரையன்” என்னும் பெயரைக் குறிப்பிடுகிறது.
  • குவான் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி அரையன் மகனுமாகிய கவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையன் – என்பது தஞ்சாவூரை அடுத்துள்ள செந்தலை (சந்திரலேகை சதுர்வேதி மங்கலம்) கல்வெட்டு.
  • முத்தரைநல்லூர் – திருச்சியை அடுத்துள்ள ஊர்.
  • அங்காடி கொள்ளப்போம் யானை கண்டேன். கொங்காளும் முத்தரையர் தமைக் கண்டேன் – தமிழறியும் பெருமான் கதை.

பாடல் குறிப்புகள்

நாலடியார் பாடல்கள் முத்தரையரைப் பெருமுத்தரையர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் சிறந்த கொடையாளிகளாக விளங்கினர்.[30] [31]

கோவில்கள்

முத்தரையர்கள் ஆட்சிகாலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அறியப்பட்ட சில கோவில்கள்:

மேற்கோள்கள்

  1. Anthropological Survey of India. Bulletin, Volume 3, Issue 2. India. Dept. of Anthropology. பக். 8. 
  2. "Naladiyar". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help); Unknown parameter |Verse= ignored (help)
  3. "9th century temple gets facelift" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/9th-century-temple-gets-facelift/article15211350.ece. 
  4. Indian History. Tata McGraw-Hill Education. பக். B55. 
  5. Ve Pālāmpāḷ (1978). Feudatories of South India, 800-1070 A.D.. Chugh Publications. பக். 135. 
  6. Naṭan̲a Kācinātan̲ (1978). Hero-stones in Tamilnadu. Arun Publications. பக். 20. 
  7. ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.
  8. Epigraphia Indica. 11. பக். 339. https://archive.org/details/in.ernet.dli.2015.115919. 
  9. Epigraphia indica. 27. பக். 221. https://archive.org/details/in.ernet.dli.2015.56527. 
  10. 10.0 10.1 Epigraphia indica. 11. பக். 337. https://archive.org/details/in.ernet.dli.2015.115919. 
  11. 11.0 11.1 K.A.NilakantaSastri. The Cholas. பக். 103. https://www.rarebooksocietyofindia.org/postDetail.php?id=196174216674_10154722892256675. 
  12. 12.0 12.1 நடன.காசிநாதன்; K.தாமோதரன். கல்வெட்டு. பக். 16, 19. https://tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=214. 
  13. 13.0 13.1 Epigraphia indica. 5. பக். 123. https://archive.org/details/epigraphiaindica014342mbp. 
  14. 14.0 14.1 14.2 14.3 Epigraphia indica. 15. பக். 46. https://archive.org/details/in.ernet.dli.2015.108417/page/n69/mode/1up. 
  15. 15.0 15.1 15.2 "Thiruttani and Velanjeri Copper Plates". www.tamilartsacademy.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-10.
  16. Epigraphia indica. 27. பக். 248. https://archive.org/details/in.ernet.dli.2015.56527. 
  17. Epigraphia indica. 13. பக். 139. https://archive.org/details/in.ernet.dli.2015.56662. 
  18. A Comprehensive History of India. 3. பக். 381, 382. https://archive.org/details/dli.bengal.10689.12720/page/n405/mode/2up. 
  19. நடன.காசிநாதன். களப்பிரர். பக். 6. https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219. 
  20. அகநானூறு - 61, 295
  21. Mysore archeological report. 1936. பக். 16. https://archive.org/details/in.ernet.dli.2015.501538/page/n41/mode/1up. 
  22. "வேள்விக்குடி செப்பேடு". பாண்டியர் செப்பேடுகள் பத்து. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8lupy.TVA_BOK_0009067/page/n85/mode/1up. 
  23. "தளவாய்புச் செப்பேடு". பாண்டியர் செப்பேடுகள் பத்து. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8lupy.TVA_BOK_0009067/page/n85/mode/1up. 
  24. Epigraphia indica. 38. பக். 39. https://archive.org/details/in.ernet.dli.2015.532805/page/n68/mode/1up. 
  25. இரா.நாகசாமி. செங்கம் நடுகற்கள். 
  26. 26.0 26.1 தி.வி.மகாலிங்கம். "கூரம் செப்பேடுகள் & பட்டத்தாள் மங்கலம் செப்பேடுகள்". Inscription of Pallavas. பக். (160, 161), (318, 319). https://books.google.co.in/books/about/Inscriptions_of_the_Pallavas.html?id=B3aqQgAACAAJ&redir_esc=y. 
  27. South indian inscriptions. 4. பக். 10. https://archive.org/details/in.gov.ignca.73014/page/n25/mode/1up. 
  28. கொங்கு மண்டல சதகம், பாடல் 39, முனைவர் ந ஆனந்தி உரை, பக்கம் 46, 47, 48
  29. முத்தரசர்
  30. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயுங்
    கருனைச்சோ றார்வர் கயவர்; - கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும். 200

  31.  மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார். 296

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தரையர்&oldid=2984677" இலிருந்து மீள்விக்கப்பட்டது