1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13: வரிசை 13:


[[பகுப்பு:1966 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:1966 நிகழ்வுகள்]]
[[பகுப்பு:இந்திரா காந்தி ஆட்சி]]

08:25, 4 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்

1966 பசுக் கொலை எதிர்ப்புப் போராட்டம் என்பது 1966-இல் இந்திய அரசியலமைப்பின் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுள் பேணப்பட்டுள்ளபடி பசுக் கொலையைத் தடுக்க வேண்டி இந்து சமய அமைப்புகள் முன்னின்று நடத்திய போராட்டம் ஆகும். சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலர் இதன் பொருட்டு உண்ணா விரதம் மேற்கொண்டனர். இப்போராட்டம் இந்துக்கள் கோபாஷ்டமி என்று கருதும் (இந்து பஞ்சாங்கப்படி) நாளான நவம்பர் 7, 1966 அன்று இந்திய நாடாளுமன்றம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டமாக மாறியது.

அப்போதைய பிரதம மந்திரியான இந்திரா காந்தி பசு வதைத் தடுப்புக்கான கோரிக்கையை ஏற்கவில்லை. ஒரு இந்து புனிதனின் தலைமையில் சுமார் பத்தாயிரம் வழக்குரைஞர்கள் அடங்கிய கூட்டம் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முனைந்தது; பின்னர் அது தடுக்கப்பட்டது. அக்கூட்டம் புது தில்லி எங்கும் பல்வேறு கலவரங்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நாற்பத்தெட்டு மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்துக் கூட்டங்களும் தடை செய்யப்பட்டன [1]. கலகக் கும்பல் ஒன்று அன்றைய காங்கிரஸ் தலைவரான காமராஜரின் புது தில்லி இல்லத்தைத் தாக்கி தீ வைத்தனர்.

இதனால் நேர்ந்த சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குப் பொறுப்பேற்று அன்றைய உள்துறை அமைச்சர் திரு. குல்சாரிலால் நந்தா பதவி விலகினார்.

மேற்கோள்கள்