சுரேஷ் சம்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
அடையாளம்: 2017 source edit
சி புற இணைப்புகள் சேர்க்கை
அடையாளம்: 2017 source edit
வரிசை 63: வரிசை 63:
* '''2019:''' இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது<ref>{{cite news|last1=Soni|first1=Virendra|title=7 biggest announcements at Interop 2019|url=https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019|work=Daily Host News|date=6 June 2019}}</ref>
* '''2019:''' இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது<ref>{{cite news|last1=Soni|first1=Virendra|title=7 biggest announcements at Interop 2019|url=https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019|work=Daily Host News|date=6 June 2019}}</ref>
*'''2019:''' ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது<ref>{{cite news|url=https://awards.vikatan.com/nanayam-awards/details.php?data=2019-startup-chamipon-award}}</ref>
*'''2019:''' ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது<ref>{{cite news|url=https://awards.vikatan.com/nanayam-awards/details.php?data=2019-startup-chamipon-award}}</ref>

== வெளி இணைப்புகள் ==
* [https://orangescape.com/ ஆரஞ்சுஸ்கேப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்]
* [https://kissflow.com/ கிஸ்ஃபுலோ இணையதளம்]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

09:09, 25 மே 2020 இல் நிலவும் திருத்தம்

சுரேஷ் சம்பந்தம்
திரு. சுரேஷ் சம்பந்தம் - 2020 ஆண்டு
பிறப்புபுதுச்சேரி
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிமுதன்மை செயல் அதிகாரி(CEO), ஆரஞ்சுஸ்கேப்.
பணியகம்ஆரஞ்சுஸ்கேப்
அறியப்படுவதுஆரஞ்சுஸ்கேப்(OrangeScape), கிஸ்ஃபுலோ(kissflow)
சமயம்இந்து

சுரேஷ் சம்பந்தம் ஆரஞ்சுஸ்கேப்(ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃபுலோ-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்[1][2][3] . இவர் தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஒரு முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆவார்.

கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை

சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில் பிறந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை கடலூர் புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்[1].

சுரேஷ் சம்பந்தம் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களான ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ஹெவ்லட்-பேக்கர்ட்(HP) நிறுவனத்தில் மென்பொருள் பகுப்பாய்வாளராகப் 1997-ம் வருடம் பணியில் சேர்ந்த இவர் அங்கு 2000-ம் ஆண்டு வரை பணியில் இருந்தார். பின்னர் செலக்டிகா(selectica) நிறுவனத்தில் குழுத்தலைவராக காப்பீட்டுத்துறை தொடர்பான மென்பொருள் உருவாக்கத்தில் தன் சொந்த நிறுவனமான ஆரஞ்சுஸ்கேப்-ஐ தொடங்கும் வரை பணியாற்றினார்.

ஆரஞ்சுஸ்கேப்

சுரேஷ் சம்பந்தம் தன்னுடன் முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து 2003-ம் ஆண்டு ஆரஞ்சுஸ்கேப்-ஐ நிறுவினார். ஆரஞ்சுஸ்கேப் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பணியிட தானாக்க மென்பொருள்(workplace automation platform), சாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a Service) எனப்படும் மென்பொருளை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தனது அலுவலகங்களைக் கொண்டுள்ளது. 2012-ம் ஆண்டு கூகிளின், கூகுள் மேகக்கணிம தளத்தை(Google Cloud Platform) அடிப்படையாகக்கொண்டு கிஸ்ஃபுலோ(ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டது. இது இந்நிறுவனத்தின் முதன்மையான மற்றும் இத்துறையின் முன்னோடி மென்பொருள் ஆகும்.

2012-ம் ஆண்டு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய ஆரம்ப நிலை முதலீட்டாளர்களிடமிருந்து(Angel investors) முதலீடாகப் பெற்றது[4].

பொது வாழ்க்கை

சுரேஷ் சம்பந்தம் சாஸ் தொடர்பான சாஸ்பூமி(SaaSBoomi) எனப்படும் ஆசியாவின் பெரிய சாஸ் கலந்தாய்வு மாநாட்டின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார்[5]. மேலும் தொழில் முனைவு குறித்து இவர் பல தொழில் சார் மன்றங்களிலும், கல்லூரிகளிலும் 'சங்கே முழங்கு' உள்ளிட்ட தலைப்புகளில் தொடர்ந்து உரையாற்றிவருகிறார். ஃபோர்ப்ஸ்(Forbes), ஆந்த்ரப்புரூனர் இதழ்(Entrepreneur magazine), மீடியம்-இணையதளம்(Medium-website), ஆங்கில நாளிதழான தி இந்து உள்ளிட்டவற்றில் தொழில் சார்ந்த தலைப்புகளில் எழுதிவருகிறார்.

விருதுகள்

  • 2018: சிஐஐ(CII - Confederation of Indian Industries)-யிடமிருந்து '2018-ம் ஆண்டுக்கான தொழில் முனைவோர் விருது'[6]
  • 2018: கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
  • 2019: இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது[7]
  • 2019: ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது[8]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 N, Ramakrishnan (21 August 2012). "The inspiring story of a million-dollar company". Rediff.com. https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm. 
  2. Ravindranath, Sushila (19 February 2018). "Food Cafe: Banking on a steady revenue stream". The Financial Express. https://www.financialexpress.com/opinion/food-cafe-banking-on-a-steady-revenue-stream/1070962/. 
  3. Hariharan, Sindhu (11 June 2019). "Chennai-based startup Kissflow unveils unified digital workplace solution". The Times of India. https://timesofindia.indiatimes.com/business/india-business/chennai-based-startup-kissflow-unveils-unified-digital-workplace-solution/articleshow/69740521.cms. 
  4. Das, Nandana (5 May 2012). "OrangeScape Raises $1M Angel Funding From IAN". https://www.vccircle.com/orangescape-raises-1m-angel-funding-ian. 
  5. Kumar, Sajan (16 January 2019). "Chennai To host SaaS BooMi, Asia’s largest SaaS conference". The Financial Express. https://www.financialexpress.com/industry/chennai-to-host-saas-boomi-asias-largest-saas-conference/1444882/. 
  6. . https://ciiconnect.org/awards/#menu3. 
  7. Soni, Virendra (6 June 2019). "7 biggest announcements at Interop 2019". Daily Host News. https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019. 
  8. . https://awards.vikatan.com/nanayam-awards/details.php?data=2019-startup-chamipon-award. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்_சம்பந்தம்&oldid=2976692" இலிருந்து மீள்விக்கப்பட்டது