தார் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 22°36′N 75°18′E / 22.600°N 75.300°E / 22.600; 75.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 47: வரிசை 47:
===மொழிகள்===
===மொழிகள்===
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]] மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி|இந்தி மொழியுடன்]], [[உருது மொழி|உருது]] மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
==இதனையும் காண்க==
*[[மத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்]]
* [[தார் இரும்புத் தூண்]]
* [[மத்தியப் பிரதேச மாவட்டப் பட்டியல்]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

09:15, 20 மே 2020 இல் நிலவும் திருத்தம்


தார் மாவட்டம்
धार जिला
தார்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்இந்தூர் கோட்டம்
தலைமையகம்தார்
பரப்பு8,153 km2 (3,148 sq mi)
மக்கட்தொகை2185793 (2011)
மக்கள்தொகை அடர்த்தி268/km2 (690/sq mi)
படிப்பறிவு59%
பாலின விகிதம்964
வட்டங்கள்7
மக்களவைத்தொகுதிகள்தார் நாடாளுமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை7
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தார் மாவட்டம் (Dhar district - இந்தி|धार जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் தார் ஆகும். இந்த மாவட்டம் இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பண்டைய தார் இரும்புத் தூண் துண்டுகள் கிடைத்துள்ளது.

மாவட்ட எல்லைகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் கிழக்கில், 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தார் மாவட்டத்தின் வடக்கில் ரத்லாம் மாவட்டம், வடகிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், கிழக்கில் இந்தூர் மாவட்டம், தென் கிழக்கில் கார்கோன் மாவட்டம், தெற்கில் பர்வானி மாவட்டம், மேற்கில் ஜாபூவா மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

புவியியல்

தார் மாவட்டத்தின் கிழக்கு மேற்காக விந்தியத் மலைத்தொடர்கள் செல்கின்றன. மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் மால்வா பீடபூமியில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் மாகி ஆறு பாய்கிறது. மாவட்டத்தின் வடகிழக்கு பகுதியில் சம்பல் ஆறு பாய்ந்து யமுனை ஆற்றுடன் கலந்து பின் கங்கையில் கலக்கிறது. மாவட்டத்தின் தென் பகுதியில் பாயும் நர்மதை ஆறு மாவட்டத்தின் எல்லையாக அமைகிறது.

மாவட்ட நிர்வாகம்

தார் மாவட்டம் தார், சர்தார்பூர், பட்னாவர், மனாவர் மற்றும் குக்சி என ஐந்து உட்கோட்டங்களையும், இந்த ஐந்து உட்கோட்டங்களில் தார், பட்னாவர், தரம்புரி, சர்தார்பூர், பட்னாவர், மனவார், குக்சி மற்றும் காந்தவானி என ஏழு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்

இம்மாவட்டத்தில் சர்தார்பூர், காந்தவானி, குக்சி, மனாவர், தரம்புரி, தார் மற்றும் பட்னாவர் என ஏழு மத்தியப் பிரதேச சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த ஏழு சட்டமன்ற தொகுதிகளும் தார் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,185,793 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 81.10% மக்களும்; நகரப்புறங்களில் 18.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,112,725 ஆண்களும் மற்றும் 1,073,068 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 964 பெண்கள் வீதம் உள்ளனர். 8,153 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 268 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 59.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 68.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 359,949 ஆக உள்ளது. [1]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,051,219 (93.84 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 116,202 (5.32 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,261 (0.10 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,607 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 12,199 (0.56 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 328 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 88 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,889 (0.09 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்_மாவட்டம்&oldid=2973979" இலிருந்து மீள்விக்கப்பட்டது