தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி SivakumarPPஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 81: வரிசை 81:


== நோய்கள் ==
== நோய்கள் ==
புற்று நோய், வெறிநாய் கடி, அம்மை நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் கார்சினோமா,கொரோனா போன்ற நோய்கள் வைரசுகளினால் உண்டாகின்றன. சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம். அப்போது தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
சில புற்று நோய்கள், வெறிநாய் கடி, அம்மை நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் கார்சினோமா,கொரோனா போன்ற நோய்கள் வைரசுகளினால் உண்டாகின்றன. சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம். அப்போது தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

11:05, 3 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்

தீநுண்மி
எச்.ஐ.வி தீநுண்மம்
உயிரியல் வகைப்பாடு

தீநுண்மி அல்லது வைரசு (virus) என்பது ஒரு தொற்றுநோய் கிருமியாகும். இது நச்சுயிரி, அல்லது நச்சுநுண்மம் என்றும் அழைக்கப்படுகிறது. மிக நுண்ணிய அளவுகளில் 20-300 நானோமீட்டர் அளவு கொண்டவையாக வைரசுகள் காணப்படுகின்றன. செயற்கை ஊடகங்களில் தாமாக வளர்கின்ற திறனற்ற உயிரினங்களாகும். தாவர அல்லது விலங்கு செல்களில் மட்டுமே இவை வாழக்கூடியவையாகும். தாம் வாழும் ஓம்புயிர்களின் உயிரணுக்களில் மட்டுமே தம்மைப் பெருக்கிக்கொண்டு இனப்பெருக்கம் அடைகின்றன. [1]. தீ நுண்மங்களிடம் இனப்பெருக்கம் செய்வதற்கான நுண்ணுறுப்பு கட்டமைப்பு இல்லாததாலும், அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாதவை என்பதனால், இவை உயிரற்றவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது[2]. இன்னொரு உயிரினத்தின் உயிரணுக்களைத் தாக்கி, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன[3]. சில நுண்ணியலாளர்கள் தீ நுண்மத்தை ஒரு நுண்ணுயிர் என அழைத்தபோதிலும், அவை உயிரற்றவையாக இருப்பதனாலும், வேறு உயிரினங்களில் நோயை ஏற்படுத்துவதனாலும், வேறு சிலர் இதனை நோய்த் தொற்றுக் காரணி என்றே குறிப்பிடுகின்றனர்.[4]

தாவரங்கள், விலங்குகள், பாக்டீரியா, ஆர்க்கியா போன்ற அனைத்து வகையான உயிரினங்களையும் வைரசுகள் பாதிக்கின்றன [5] வைரசு என்ற சொல் மெய்க்கருவுயிரியைத் தாக்கும் துகள்களைக் குறிக்கும். நிலைக்கருவிலிகளைத் தாக்கும் துகள்களை நுண்ணுயிர் தின்னி என்று அழைக்கிறோம். புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத தொற்று நோய் கிருமிகளைப் பற்றி 1892 ஆம் ஆண்டில் திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது. 898 ஆம் ஆண்டில் மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரசைக் கண்டுபிடித்தார்[6]. சுமார் 5,000 வைரசு இனங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன[7] இவற்றோடு மில்லியன் கணக்கில் வைரசு இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது[8]. பூமியிலுள்ள ஒவ்வொரு சுற்றுச்சூழலிலும் வைரசுகள் காணப்படுகின்றன மேலும் மிக அதிகமான உயிரியல் வகை உயிரினமாகவும் வைரசு அறியப்படுகிறது [9]. வைரசுகள் பற்றிய ஆய்வு வைரசுவியல் என்று அழைக்கப்படுகிறது, நுண்ணுயிரியலின் துணைப் பிரிவாகவும் இதைக் கருதுகிறார்கள்.

ஒரு பாதிக்கப்பட்ட செல்லுக்குள் அல்லது ஒரு செல்லைப் பாதிக்கும் செயல்பாட்டில் இல்லை என்றாலும், வைரசுகள் தன்னிச்சையான துகள்களாக இருக்கின்றன. வைரசுகள் என்று அறியப்படும் இந்த வைரியனில் இரண்டு அல்லது மூன்று பாகங்களைக் உள்ளன.

  • டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. அமிலங்களால் உருவாக்கப்பட்ட ஒரு மரபியல் பொருள் மற்றும் அதைக் கொண்டு செல்லும் ஒரு நீண்ட மூலக்கூறு ஒரு பாகமாகும்
  • கேப்சிட் எனப்படும் ஒரு புரத உறை: இது மரபியல் பொருளை சூழ்ந்து அதைப் பாதுகாக்கின்றது.
  • லிப்பிடுகளால் ஆன ஒரு உறை: செல்லுக்கு வெளிப்புறத்தில் உள்ளபோது புரத உறையைச் சூழ்ந்து இவ்வுறை காணப்படும்.

இந்த வைரசு துகள்களின் வடிவங்கள் எளிய சுருள் வடிவத்திலிருந்து பதினான்கு பக்கங்கள் கொண்ட பட்டக வடிவம் வரைக்கும் வேறுபடுகின்றன. சில வைரசு இனங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்புகள் கொண்டவையாகவும் உள்ளன. வைரசுகளின் மிகச்சிறிய பகுதியான வைரியன்களை ஒளியியல் நுண்ணோக்கிகளால் மட்டுமே காணக்கூடியனவாக உள்ளன. சராசரியாக வைரியன்கள் பாக்டீரியாவில் நூறில் ஒரு பங்கு அளவே உள்ளன.

வாழ்வின் பரிணாம வரலாற்றில் வைரசுகளின் தோற்றம் குறித்து தெளிவாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. மரபியல் பொருளைக் கொண்டு செல்லும் அமைப்பான பிளாசுமிட்டுகளில் இருந்து வைரசுகள் தோன்றியிருக்கலாம். செல்களுக்கு இடையில் நகரும் டி.எம்.ஏ. துண்டுகள் பிளாசுமிட்டுகள் எனப்படும். சில வைரசுகள் பாக்டிரியாக்களில் இருந்து தோன்றியிருக்கலாம். பரிணாம வளர்ச்சியில் கிடைமட்ட மரபணு மாற்றத்திற்கான முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன.[10] வைரசுகளை ஒரு சிலர் ஓர் உயிரினமாகக் கருதுகின்றனர். ஏனென்றால் அவை மரபணு மூலப்பொருட்களை எடுத்துச்செல்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன மற்றும் இயற்கை தேர்வு மூலம் உருவாகின்றன. இருப்பினும் பொதுவாக உயிரினம் என்று எண்ணப்படுவதற்கு ஆதாரமான செல் கட்டமைப்பு போன்ற முக்கிய பண்புகளை இவை பெற்றிருக்கவில்லை. உயிரினங்கள் என்பதற்கான சில பண்புகளை கொண்டிருந்தாலும் அனைத்து குணங்களும் இல்லாததால், வைரசுகள் வாழ்க்கை விளிம்பு உயிரினங்கள் [11] மற்றும் பிரதிபலிப்புகள் [12] என விவரிக்கப்படுகின்றன.

இனப்பெருக்கம்

வைரசுகள்கட்டுப்பாடுடைய செல் உள் ஒட்டுண்ணிகள் எனப்படும் செல்களினுள் இரட்டிப்பாகி இனப்பெருக்கமடைகின்றன. இவ்வினப்பெருக்கத்தில் வைரசு பகுதிகளின் பிரதிகள் உருவாக்கப்பட்டு பின்னர் அப்பிரதிகள் ஒருங்கிணைதல் மூலம் சேய் வைரசுகள் தோற்றுவிக்கப்படுகின்றன. தங்களுக்கான சக்தியை அல்லது புரதத்தை உற்பத்தி செய்யக்கூடிய வளர்சிதை சாதனங்களை கொண்டிருப்பதில்லை. .

பரவுதல்

தீநுண்மங்கள் பூச்சிகளாலும் (இவை பரப்பி என்னும் பொருள் கொண்ட நோய்க்காவி என அழைக்கப்படும்), காற்றின், நீர், குருதிப் பரிமாற்றம் மூலம் பரவும். ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் மற்றும் பாதுகாப்பற்ற உடல் உறவு, தூய்மை இல்லாத ஊசிகள் மூலமும் பரவுகிறது. வெறி நாய்க்கடி நோய் (ராபீசு) நாய், பூனைகள் சில நேரங்களில் எலிகள் மூலமும் பரவ வாய்ப்புள்ளது. அண்மையில் வவ்வால்கள் மூலமும் ராபீசு பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைரசுகள் பல வழிகளில் பரவுகின்றன. தாவரங்களில் உள்ள வைரசுகள் தாவரத்திலிருந்து தாவரத்திற்கு பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள வைரசுகள் இரத்தம்-உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இந்த நோய் தாங்கி வாழும் உயிரினங்கள் கடத்திகளாக அறியப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மினால் இன்புளூயன்சா காய்ச்சல் வைரசுகள் பரவுகின்றன. நோரோவிரசு மற்றும் ரோட்டாவிரசு வகை வைரசுகள் வாய் வழி உணவுகள் வழியாகவோ அல்லது ஒருவரையொருவர் தொடுதல் மூலமோ பரவுகின்றன. எச்.ஐ.வி. வைரசு பாலியல் தொடர்பு மூலம் பரவும் பல நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். பொதுவாக வைரசுகளின் பாதிக்கும் அளவு குறுகியதாகவும் பரந்துபட்ட அளவிலும் இருக்கிறது [13].

விலங்குகளில் வைரசுகள் தொற்றுக்கள் பொதுவாக நோய்த்தடுப்பு வைரசை அகற்றுகின்றன. நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் தடுப்பூசிகளால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு வைரசு தொற்றுக்கு செயற்கையாக ஒரு எதிர்ப்பு சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு மற்றும் வைரசு நோய்களை ஏற்படுத்தும் சில வைரசு இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்த்து நீண்டகால நோய்த்தொற்றுகளால் விளைகின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வைரசுகளில் எந்த விளைவையும் கொண்டிருக்கவில்லை என்றாலும் பல வைரசு எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமைப்பு

வைரசு என்ற இலத்தீன் சொல்லுக்கு நஞ்சு, நச்சுப்பொருள் என்று பொருள். வைரசுகளை ஒரு வாழும் உயிரினம் என சொல்ல முடியாது, ஏனெனில் இவை வெளிப்புறத்தில் இருக்கும் வரை ஓர் உயிரற்ற பொருளாகவே (inert) இருக்கும், ஆனால் தக்கவோர் உயிரினத்தின் உள்ளே புகுந்தவுடன் பல்கிப் பெருகும் தன்மை உடையது. பொதுவாக அனைத்து தீ நுண்மங்களும் (வைரசுகளும்) ஒரு மரபணு பொருளையும் (டி.என்.ஏ அல்லது ஆர்.என்.ஏ ) அதனைச் சுற்றி புரத உறையாலான (coat protein) ஒரு கூடும் (capsid) இருக்கும். சில தீநுண்மங்களில் முள் (Spikes) போன்ற அமைப்பும் உள்ளன. இவை கிளைக்கோ புரதங்களாக ஆக்கப்பட்டு இருக்கும்.சுருள் வடிவ மேற்சீரமைப்புத் தோற்றம் புகையிலை வைரசுகளில் காணப்படுகிறது.விலங்கு வைரசுகளிலும் இவ்வகையான அமைப்பு கொண்ட வைரசுகளே காணப்படுகின்றன.

வகைப்பாட்டியல்

வைரசுகளை அவை தாக்கும் உயிரினம், மரபு இழை, மரபு இழைகளின் செயலாக்கம் (based on the transcription) பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம்.

தாக்கும் உயிர்களை பொறுத்து

மரபு இழைகளை பொறுத்து

டி.என்.ஏ வைரசுகள்

டி.என்.ஏ யின் இழை வடிவத்தைப் பொறுத்து, இவை மேலும் இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

ஓரிழை டி.என்.ஏ வைரசுகள் (ssDNA virus)
ஈரிழை டி.என்.ஏ வைரசுகள் (dsDNA virus)

எ.கா: மையோ வைரசு.

ஆர்.என்.எ வைரசுகள்

இவைகளும் ஒரிழையகவோ அல்லது ஈரிழையாக இருக்கின்றன.

ஓரிழை ஆர்.என்.எ வைரசுகள்

எ.கா: ரெட்ரோ வைரசு, போலியோ வைரசு, போட்டி வைரசு (poty virus)

ஈரிழை வைரசுகள்

ரியோ வைரசு, ரோட வைரசு, என ஆர்.என்.எ வைரசுகள் பகுக்கப்படுகிறது.

மரபு இழைகளின் செயலாக்கத்தைப் பொறுத்து

மரபு இழைகளின் செயல்படும் செயல்களைப் பொறுத்து வைரசுகள் நேர்மறை (+), எதிர்மறை (-) இழை வைரசுகளாக பிரிக்கப்படுகிறது. பொதுவாக இவைகள் ஓரிழை ஆர்.என்.எ வைரசுகளுக்கு பொருந்தும்.

சில வைரசுகள் (Ex. poty virus) தாவரங்களிலோ அல்லது விலங்குகளில் உட்சென்றவுடன் , வைரசின் ஓரிழை ஆர்.என்.எ நேரடியகாக மரபணுக்களை (direct expression) வெளிப்படுத்தும். இவகையான வைரசுகளுக்கு நேர்மறை (+) இழை வைரசு என அழைக்கப்படும்.

எதிர்மறையான (-) இழை வைரசுகள் (பாரமிக்சோ வைரசு இவைகள் அம்மை நோயெய் உண்டாக்குகின்றன) , தாவரகளிலோ அல்லது விலங்குகளில் உள்சென்றவுடன் நேரிடைய்காக தனது மரபணுவை வெளிபடுத்த முடியாது. இவைகளின் எதிர்மறை (Complementary strand) ஆர்.என்.எ நேர்மறை (virion strand) இழையாக மாற்றப்பட்டு, புரதமாக மாற்றப்படுகிறது.

வைரசு மரபியல்

வைரசுகளின் பகுதியான வைரியன்களின் நியூக்ளிக் அமிலம் நீள் வடிவிலோ, அல்லது வட்ட வடிவிலோ காணப்படும். விலங்கு வைரசுகளின் டி.என்.ஏ. பெரும்பாலும் நீள மூலக்கூறுகளாகும். சில தாவர வைரசுகளில் ஆர்.என்.ஏ. வட்ட வடிவில் காணப்படும். ஆனால் விலங்கு வைரசுகளில் ஆர்.என்.ஏ. இரட்டைச் சங்கிலியால் ஆக்கப்பட்டு நீள்வடிவிலோ அல்லது ஒற்றைச் சங்கிலி மூலக்கூறாகவோ காணப்படும்.

நோய்கள்

சில புற்று நோய்கள், வெறிநாய் கடி, அம்மை நோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் கார்சினோமா,கொரோனா போன்ற நோய்கள் வைரசுகளினால் உண்டாகின்றன. சிறு வயதில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது கண்டிப்பாக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறார்கள் சில விஞ்ஞானிகள். ஏனெனில் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் அவை செயல்படவும் காய்ச்சல், சளி போன்ற கேடு விளைவிக்காத நோய்கள் அவசியம். அப்போது தான் நோய் எதிர்ப்பு மண்டலம் சரிவர வேலை செய்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

மேற்கோள்கள்

  1. "Virus". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 21, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Viruses". USCB Science Line. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 21, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Viruses: Structure, Function, and Uses". Molecular Cell Biology. 4th edition. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 21, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Viruses: An Introduction". Medical News Today. Healthline Media. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 21, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Viruses". Encyclopedia Of Life. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 21, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. * Dimmock, N.J; Easton, Andrew J; Leppard, Keith (2007) Introduction to Modern Virology sixth edition, Blackwell Publishing, ISBN 1-4051-3645-6.
  7. Dimmock p. 49
  8. Breitbart M, Rohwer F (2005). "Here a virus, there a virus, everywhere the same virus?". Trends in Microbiology 13 (6): 278–84. doi:10.1016/j.tim.2005.04.003. பப்மெட்:15936660. 
  9. Lawrence CM, Menon S, Eilers BJ, et al.. Structural and functional studies of archaeal viruses. The Journal of Biological Chemistry. 2009;284(19):12599–603. doi:10.1074/jbc.R800078200. PubMed.
  10. Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H (2003). "Phage as agents of lateral gene transfer". Current Opinion in Microbiology 6 (4): 417–24. doi:10.1016/S1369-5274(03)00086-9. பப்மெட்:12941415. 
  11. name="ReferenceA">Rybicki, EP. The classification of organisms at the edge of life, or problems with virus systematics. South African Journal of Science. 1990;86:182–186.
  12. Koonin, E. V.; Starokadomskyy, P. (7 March 2016). "Are viruses alive? The replicator paradigm sheds decisive light on an old but misguided question". Studies in history and philosophy of biological and biomedical sciences 59: 125–34. doi:10.1016/j.shpsc.2016.02.016. பப்மெட்:26965225. 
  13. Shors pp. 49–50

புற இணைப்புகள்




.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீநுண்மி&oldid=2944716" இலிருந்து மீள்விக்கப்பட்டது