சீமைக்காரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:सीमेंट
சி தானியங்கி மாற்றல்: an:Zimento
வரிசை 13: வரிசை 13:
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:வேதியியல்]]


[[an:Zemient]]
[[an:Zimento]]
[[ar:إسمنت]]
[[ar:إسمنت]]
[[bg:Цимент]]
[[bg:Цимент]]

16:37, 26 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

சிமெந்து என்பது, முக்கியமான ஒரு கட்டிடப் பொருள் ஆகும். இது ஒரு சிறந்த இணைபொருள் (binder). தூள் வடிவில் உள்ள இது நீருடன் கலக்கும்போது, இறுகிக் கடினமாவதுடன், ஏனைய பொருட்களையும் இணைக்கும் தன்மையைப் பெறுகிறது. பழங்காலத்திலேயே உரோமர் எரிமலைச் சாம்பல், செங்கல் துண்டுகள், சுடப்பட்ட சுண்ணாம்பு ஆகியவற்றைச் சேர்த்து ஒருவகைச் சிமெந்தைச் செய்து பயன்படுத்தினர்.

தற்காலத்தில் சிமெந்தின் மிக முக்கியமான பயன்பாடு, காங்கிறீற்று மற்றும் சிமெந்துச் சாந்து தயாரிப்பு ஆகும். இயற்கையாகக் கிடைக்கின்ற அல்லது செயற்கையாகத் தயாரிக்கப்படும் சேர்பொருட்களைச் சிமெந்துடன் கலந்து செய்யப்படும் இப்பொருட்கள் பொதுவான சூழல் நிலைமைகளில் நீடித்து உழைக்கக்கூடிய கட்டிடப்பொருளாகும். சிமெந்து நீரியற் சிமெந்து (Hydraulic cements), நீரியலில் சிமெந்து (non-hydraulic cements) என இருவகைப்படுகின்றன.

நீரியற் சிமெந்துகள்

நீரியற் சிமெந்துகள் என்பன, நீருடன் கலக்கும்போது வேதியியல் தாக்கமுற்று இறுகிக் கடினமாகும் தன்மையுள்ள சிமெந்துகளாகும். இவை, இவ்வாறு இறுகிக் கடினமான பின்னர் நீருக்கு அடியிலும்கூட வலுவை இழப்பதில்லை. நீருடன் தாக்கமுறும்போது உடனடியாகவே உருவாகும் ஐதரேட்டுக்கள் (hydrates) நீரில் கரையாத் தன்மை கொண்டனவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான சிமெந்துகள் நீரியற் சிமெந்துகளாகும். அத்துடன் இவை, சுண்ணக்கல், களிமண், ஜிப்சம் போன்றவற்றை மூலப்பொருள்களாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் போட்லண்ட் சிமெந்து வகையைச் சேர்ந்தவை.

நீரியலில் சிமெந்துகள், நீரற்ற சுண்ணாம்பு, ஜிப்சம் சாந்து போன்றவற்றை உள்ளடக்கியவை. இவை வலுப் பெறுவதற்கு உலர்வாக வைத்திருக்கவேண்டியது அவசியம். ஆக்சிக்குளோரைட்டு சிமெந்துகள் நீர்மக் கூறுகளைக் கொண்டவை. சுண்ணாம்புச் சாந்து நீரியற் சிமெந்துகள் போல் நீருடனான வேதியியற் தாக்கத்தினால் இறுகிக் கடினமாவதில்லை. உலர்வதன் மூலமே கடினத்தன்மை பெறுவதுடன், மிகமெதுவாகவே வளியிலுள்ள காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து கல்சியம் காபனேட்டை (கல்சியம் காபனேற்று) உருவாக்குவதன்மூலம் பலம் பெறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைக்காரை&oldid=293808" இலிருந்து மீள்விக்கப்பட்டது