சுந்தரானந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: 2017 source edit
வரிசை 44: வரிசை 44:
==மேற்கோள்==
==மேற்கோள்==
<references/>
<references/>
{{சித்தர்கள்}}

[[பகுப்பு:சித்தர்கள்]]
[[பகுப்பு:சித்தர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]

06:22, 26 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்

சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.(பிரசன்னா)

கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.[1]

வரலாறு

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

சமாதி

இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

நூல்கள்

இவர் இயற்றிய நூல்கள்
  • சோதிட காவியம்
  • வைத்தியத் திரட்டு
  • தண்டகம்
  • முப்பு
  • சிவயோக ஞானம்
  • அதிசய காராணம்
  • பூசா விதி
  • தீட்சா விதி
  • சுத்த ஞானம்
  • கேசரி
  • வாக்கிய சூத்திரம்
  • காவியம்
  • விச நிவாரணி

சுந்தரானந்தர் பாடல்

இவரது பாடல்களில் ஒன்று எடுத்துக்காட்டு.[2]

ஆதி ஆந்தம் மிக நிறைந்த சட்டைநாதர்க்கு

அன்பான சோதி என்ற பிள்ளை ஆகிச்

சோதி அந்தத்துள் இருக்கும் சுடரைப் போற்றிச்

சுந்தரம் என்றே பேரும் இட்டார் எங்கள்

நாதாந்த திருமூலர் பிண்ணாக்கு ஈசர்

நாதர் அகத்தீஞர் பாதம் போற்றியே தான்

மேதினியில் அன்புடனே வாதம் பார்த்தேன்

வேதாந்த சிற்பரை தாள் காப்பதாமே [3]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

மேற்கோள்

  1. "சொல்லவே சுந்தரானந்த ரப்பா
    தொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னை
    புல்லவே அதீதமென்ற மாண்பருக்கு
    புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"- போகர்
  2. பொருள் பிரிப்பு செய்து தரப்படுகிறது
  3. சுந்தரானந்தர் சூத்திரம் 110-ல் முதல் பாடல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரானந்தர்&oldid=2901142" இலிருந்து மீள்விக்கப்பட்டது