துங்கபத்ரா அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 15°18′N 76°20′E / 15.300°N 76.333°E / 15.300; 76.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Use dmy dates|date=March 2019}} {{Infobox dam | name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

20:13, 31 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

துங்கபத்ரா அணை
அதிகாரபூர்வ பெயர்துங்கபத்ரா அணை
அமைவிடம்ஹொஸபேட்டே, பெல்லாரி மாவட்டம், கருநாடகம்,
இந்தியா
கட்டத் தொடங்கியது1949
திறந்தது1953
உரிமையாளர்(கள்)கர்நாடக அரசு
இயக்குனர்(கள்)துங்கபத்ரா வாரியம்
அணையும் வழிகாலும்
வகைதொகுப்பணை, வெள்ளக்கால் நீளம் (701 மீ)
தடுக்கப்படும் ஆறுதுங்கபத்திரை ஆறு
உயரம்49.50 m (162 அடி) பள்ளமான கட்டுமானத்திலிருந்து
நீளம்2,449 m (8,035 அடி)
வழிகால் அளவு650,000 cusecs
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்துங்கபத்ரா நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு101 tmcft at FRL 498 மீ msl
செயலில் உள்ள கொள் அளவு98.7 tmcft (at 498 m msl)
செயலற்ற கொள் அளவு2.3 tmcft (below 477.01 m msl)
நீர்ப்பிடிப்பு பகுதி28,180 km2 (10,880 sq mi)
மேற்பரப்பு பகுதி350 km2 (140 sq mi)
மின் நிலையம்
இயக்குனர்(கள்)கர்நாடக அரசு
நிறுவப்பட்ட திறன்127 மெகாவாட்
இணையதளம்
www.tbboard.gov.in

துங்கபத்ரா அணை அல்லது பம்பா சாகர் (ஆங்கில மொழி: Tungabhadra Dam) என்பது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தின் ஹொஸபேட்டே பகுதியிலுள்ள அணையாகும்.[1] வேளாண்மை, மின்சாரம், வெள்ளநீர் மேலாண்மை என இந்த அணை பல்நோக்கு பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் ஹைதராபாத் மாகாணமும், சென்னை மாகாணமும் இணைந்து அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.[2] சுதந்திரத்திற்குப் பின்னர் கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சேர்ந்து 1953 ஆம் ஆண்டு கட்டிமுடித்தனர். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிடையே அணை நீர் பங்கீட்டில் பிணக்கு நிலவுகிறது. ஹைதராபாத் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதன் தலைமைப் பொறியாளர் ஆவார். மண்ணும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்டதால் இதன் நிலைத்தன்மையும், நீடித்து நிற்கும் தன்மையும் கொண்டுள்ளது. இதைப் போல எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலைத்து நிற்கும் சிமெண்ட் அல்லாத அணை இதுவெனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] மாபெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டு இதைக் கட்டிமுடித்தனர், அதன் பிரதான ஒப்பந்ததாரராக ஹைதராபாத் மாகாண மகபூப்நகரின் கொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி முலமால்லா செயல்பட்டார்.

வரலாறு

1860 வாக்கில் பெல்லாரி, அனந்தபூர், கர்னூல் மற்றும் கடப்பா மாவட்டத்தை உள்ளடக்கிய இராயலசீமை பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சம் பிரிட்டீஷ் பொறியாளர்கள் கவனத்திற்கு வருகிறது. பஞ்சத்திலிருந்து மீண்டு வர துங்கபத்ரா நதி நீரைத் தேக்கிக் கால்வாய்கள் மூலம் வேளாண்மைக்குப் பயன்படுத்திக் கொள்ள அணைக்கான பரிந்துரையை முன்வைக்கப்பட்டது.


இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Map of Krishna River basin
  2. "The Secret History of Hyderabad State of the Nizam (South India; 1724 – 1948)".

வெளியிணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tungabhadra Dam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=துங்கபத்ரா_அணை&oldid=2885384" இலிருந்து மீள்விக்கப்பட்டது