பிலிப்பீன்சு அரசியலமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎முகவுரை: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 27: வரிசை 27:
{{wikisource|Constitution of the Philippines (1987)}}
{{wikisource|Constitution of the Philippines (1987)}}
அரசியலமைப்பு முகவுரையைத் தவிர்த்து ''சட்டக்கூறு'' எனப்படும் 18 பாகங்களை கொண்டுள்ளது.
அரசியலமைப்பு முகவுரையைத் தவிர்த்து ''சட்டக்கூறு'' எனப்படும் 18 பாகங்களை கொண்டுள்ளது.
*'''சட்டக்கூறு I - தேசிய ஆட்புலம்'''
*'''சட்டக்கூறு I - தேசிய ஆள்புலம்'''

பிலிப்பைன்சு ஓர் தீவுக்கூட்டம் என்றும் பிலிப்பீன்சின் ஆட்புலம் தீவுகளையும் தொடர்புடைய நீர்ப்பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் விவரிக்கின்றது. பிலிப்பீன்சிற்கு இறையாண்மை அல்லது அதிகாரம் உள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தீவுக்கூட்டங்களின் தீவுகளுக்கு இடையே உள்ள நீர்ப்பகுதிகள் உள்நாட்டு நீர்ப்பகுதிகளாக கொள்ளப்படுகின்றன.
பிலிப்பைன்சு ஓர் தீவுக்கூட்டம் என்றும் பிலிப்பீன்சின் ஆள்புலம் தீவுகளையும் தொடர்புடைய நீர்ப்பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் விவரிக்கின்றது. பிலிப்பீன்சிற்கு இறையாண்மை அல்லது அதிகாரம் உள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தீவுக்கூட்டங்களின் தீவுகளுக்கு இடையே உள்ள நீர்ப்பகுதிகள் உள்நாட்டு நீர்ப்பகுதிகளாக கொள்ளப்படுகின்றன.
*'''சட்டக்கூறு II - கொள்கைகள் மற்றும் அரசுக் கொள்கைகளின் அறிவிக்கை'''
*'''சட்டக்கூறு II - கொள்கைகள் மற்றும் அரசுக் கொள்கைகளின் அறிவிக்கை'''
நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் கொள்கைகளை முன்மொழிகின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் செயலாக்கம், அரசின் நோக்கங்கள், அடிப்படைச் சட்டங்களின் குறிப்பிட்ட புரிதல்களின் விளக்கங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. சில முன் ஒதுக்குகைகள்:
நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் கொள்கைகளை முன்மொழிகின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் செயலாக்கம், அரசின் நோக்கங்கள், அடிப்படைச் சட்டங்களின் குறிப்பிட்ட புரிதல்களின் விளக்கங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. சில முன் ஒதுக்குகைகள்:

22:05, 15 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பிலிப்பீன்சு அரசமைப்புச் சட்டம்
உருவாக்கப்பட்டது அக்டோபர் 15, 1986
நிறைவேற்றம் பெப்ரவரி 2, 1987
இடம் பிலிப்பீன்சு கீழவை ஆவணக்காப்பகம்
குவிசோன் நகரம்
வரைவாளர் 1986ஆம் ஆண்டு அரசமைப்புக் குழு
கைச்சாத்திட்டோர் 50 பேராளர்களில் 46 பேர் ஒப்பிட்டனர்
நோக்கம் அரசுத்தலைவரின் அறிக்கை எண். 3க்கு மாற்றாக தேசிய அரசமைப்புச் சட்டம்

பிலிப்பீன்சு அரசியலமைப்பு (Constitution of the Philippines), பரவலாக 1987 அரசியலமைப்பு, பிலிப்பீன்சு நாட்டின் அரசமைப்புச் சட்டம் அல்லது மிக உயரிய சட்டம் ஆகும். இது 1987இல் பிலிப்பீன்சின் குடியரசுத் தலைவர் கொரசோன் சி. அக்கினோ ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கப்பட்டது.[1]

இதற்கு முன்னதாக மூன்று அரசியலமைப்புச் சட்டங்களுக்கு கீழ் நாடு இயங்கி வந்துள்ளது — 1935 பொதுநலவாய அரசியலமைப்பு, 1973 அரசியலமைப்பு, மற்றும் 1986 விடுதலை அரசியலமைப்பு.[2][3] இவற்றைத் தவிர குறைந்த காலமே ஆட்சியிலிருந்த இரு போர்க்கால அரசுகளும் இரண்டு அரசியலமைப்புச் சட்டங்களை பின்பற்றின: பிலிப்பீனியப் புரட்சி போது எமிலியோ அகுனல்டோ தலைமையிலான புரட்சிகரப் படைகள், இரண்டாம் உலகப் போரின் போது சப்பானிய ஆக்கிரமிப்பின்போது ஒசே பி. இலாரல் தலைமையிலான அரசு.

1987ஆம் ஆண்டு அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

முகவுரை

அரசியலமைப்பின் முகவுரைப் பகுதி இச்சட்டத்தை அறிமுகப்படுத்துகிறது; இயற்றியோர், அடிப்படைச் சட்டங்களின் நோக்கம், சட்டத்தை புரிந்துகொள்ளுவதற்கான உதவிகள், அரசின் நோக்குகளை விவரிக்கின்றது.

அரசியலமைப்பு முகவுரையைத் தவிர்த்து சட்டக்கூறு எனப்படும் 18 பாகங்களை கொண்டுள்ளது.

  • சட்டக்கூறு I - தேசிய ஆள்புலம்

பிலிப்பைன்சு ஓர் தீவுக்கூட்டம் என்றும் பிலிப்பீன்சின் ஆள்புலம் தீவுகளையும் தொடர்புடைய நீர்ப்பகுதிகளையும் உள்ளடக்கியது என்றும் விவரிக்கின்றது. பிலிப்பீன்சிற்கு இறையாண்மை அல்லது அதிகாரம் உள்ள பகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தீவுக்கூட்டங்களின் தீவுகளுக்கு இடையே உள்ள நீர்ப்பகுதிகள் உள்நாட்டு நீர்ப்பகுதிகளாக கொள்ளப்படுகின்றன.

  • சட்டக்கூறு II - கொள்கைகள் மற்றும் அரசுக் கொள்கைகளின் அறிவிக்கை

நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் கொள்கைகளை முன்மொழிகின்றது. குறிப்பாக அரசியலமைப்பின் செயலாக்கம், அரசின் நோக்கங்கள், அடிப்படைச் சட்டங்களின் குறிப்பிட்ட புரிதல்களின் விளக்கங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன. சில முன் ஒதுக்குகைகள்:

  • பிலிப்பீன்சு ஓர் சனநாயக, குடியரசு நாடு (பிரிவு 1)
  • போர் மறுப்பு (பிரிவு 2)
  • குடிமை அதிகாரத்தின் உயர்வு (பிரிவு 3)
  • குடிமக்கள் செய்யவேண்டிய சேவைகள் (பிரிவு 4)
  • திருச்சபை, அரசு பிரிப்பு (பிரிவு 6)
  • தன்னதிகாரமுள்ள பிலிப்பீனிய வெளியுறவுக் கொள்கை (பிரிவு 7)
  • அணுவாயுதத்திலிருந்து விடுதலை (Section 8)
  • நேர்மையான, இயங்கு சமூக அமைப்பு மற்றும் சமூக நீதி (பிரிவு 9 & 10)
  • அடிப்படை தன்னாட்சி அலகான குடும்பம் (பிரிவு 12)
  • நாட்டுக் கட்டமைப்பில் இளைஞர், மகளிரின் பங்கு (பிரிவு 13 & 14)
  • உழைப்பை "முதன்மை சமூகப் பொருளியல் விசையாக" உறுதியுரை (பிரிவு 14)
  • சட்டக்கூறு III - உரிமைகள்

குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள். இவை பெரும்பாலும் அமெரிக்க அரசியலமைப்பை ஒத்துள்ளன:

இந்த உரிமைகளின் வீச்சையும் கட்டுப்பாடுகளையும் பிலிப்பீனிய உச்சநீதி மன்றம் தீர்மானிக்கும்.

  • சட்டக்கூறு IV - குடியுரிமை

பிலிப்பினோ மக்களின் குடியுரிமை இங்கு விவரிக்கப்படுகின்றது; இரண்டு வகையான குடிமக்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர்:

  • இயற்கை-பிறப்பு குடிமக்கள் - பிலிப்பீன்சில் பிறந்த குடிமக்கள். இவர்களுக்கு வாக்குரிமையும் அரசுப் பதவிகளுக்கு போட்டியிடும் உரிமையும் உண்டு.
  • ஏற்பு குடிமக்கள் - வெளிநாட்டவர்கள், தன்னிச்சையாகவோ சட்ட இயக்கத்தினாலோ பிலிப்பீன்சின் குடிமக்களானவர்கள்
  • சட்டக்கூறு V - வாக்குரிமை

குடிமக்களின் தகுதி மற்றும் உரிமையை வரையறுக்கின்றது. தேர்தல் அமைப்பும் வாக்குச்சீட்டின் இரகசியம், வாக்களிக்காதிருத்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எழுத்தறிவில்லாதவர்கள் வாக்களிக்கும் முறைமை விவரிக்கப்பட்டுள்ளன.

  • சட்டக்கூறு VI- சட்டவாக்குத் துறை

மேலவை, கீழவை உறுப்பினர்களின் பொதிவு, தகுதி மற்றும் பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அமைப்பு, செயல்முறைகள், தேர்தல் மற்றும் தலைமை அதிகாரிகள் விவரிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத்தின் அதிகாரங்களில் இவை உள்ளன:

  • சட்டவாக்கத்திற்கு துணையாக புலனாய்வு அல்லது விசாரணை மேற்கொள்ளுதல் (பிரிவு 21)
  • போர் நிலையை அறிவிக்கும் அதிகாரம் (பிரிவு 26)
  • நிதிய அதிகாரம் (பிரிவு 25)
  • உட்பொதிந்த அதிகாரம்:காவல் அதிகாரம் (பிரிவு 1), வரிவிதிப்பு அதிகாரம் (பிரிவு 28), தனியார் சொத்தெடுப்புரிமை அதிகாரம் (பிரிவு 9)
  • சட்டக்கூறு VII - செயலாக்கத் துறை
  • சட்டக்கூறு VIII - நீதித் துறை
  • சட்டக்கூறு IX - அரசமைப்பு ஆணையம்
  • குடியாட்சி ஆணையம்
  • தேர்தல் ஆணையம் (COMELEC)
  • தணிக்கை ஆணையம்
  • சட்டக்கூறு X - உள்ளாட்சி அரசு
  • சட்டக்கூறு XI - பொதுத்துறை அதிகாரிகளின் பொறுப்புக்கள்
  • சட்டக்கூறு XII - தேசிய பொருளாதாரம் மற்றும் முதுசொம்
  • சட்டக்கூறு XIII - சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்
  • சட்டக்கூறு XIV - கல்வி, அறிவியல் மற்றும் தொழினுட்பம், கலை, பண்பாடு மற்றும் விளையாட்டுக்கள்
  • சட்டக்கூறு XV - குடும்பம்
  • சட்டக்கூறு XVI - பொது ஒதுக்கைகள்
  • சட்டக்கூறு XVII - திருத்தங்களும் மாற்றமைத்தல்களும்
  • சட்டக்கூறு XVIII - தற்கால ஒதுக்கைகள்

மேற்சான்றுகள்

  1. "The 1987 Constitution of the Republic of the Philippines". October 15, 1986. பார்க்கப்பட்ட நாள் 2008-04-03.
  2. Isagani Cruz (1993). Constitutional Law. Quezon City, Philippines: Central Lawbook Publishing Co., Inc.. பக். 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:971-16-0184-2. 
  3. Joaquin Bernas, S.J. (1996). The 1987 Constitution of the Republic of the Philippines: A Commentary. Manila, Philippines: Rex Book Store. பக். xxxiv-xxxix. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:971-23-2013-8.