மு. க. ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொழுதுபோக்கு: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 70: வரிசை 70:
== குடும்ப அரசியல் வாழ்க்கை ==
== குடும்ப அரசியல் வாழ்க்கை ==
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் [[திமுக]] உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். [[1967]]-[[1968]] இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு [[கோபாலபுரம்]] இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் [[திமுக]] உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். [[1967]]-[[1968]] இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு [[கோபாலபுரம்]] இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.

==நடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்==
இவர் ஒரே '''இரத்தம்''' (1988), ''மக்கள் ஆணையிட்டால்'' என இரண்டு திரைப்படங்களிலும், ''குறிஞ்சி மலர்'' எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். <ref>[https://www.vikatan.com/anniversaries/kollywood/82353-stalin-has-acted-as-an-artist-in-cinema-and-serial-in-his-early-age மு.க.ஸ்டாலின் திரைப்பயணம்]</ref>


=== மாநிலச் செயலாளர் ===
=== மாநிலச் செயலாளர் ===
வரிசை 75: வரிசை 78:


=== சிறை செல்லல் ===
=== சிறை செல்லல் ===
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். [[1975]] இல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்<ref name="thatstamilstalinf"/>.
ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். [[1975]] இல் [[உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1973|மிசா]] சட்டத்தின் கீழ் சிறையில் சென்றார் என்பதை எதிர்கட்சிகள் மறுத்துப் பேசுகின்றனர்.<ref>[https://www.vikatan.com/news/politics/mk-stain-speech-about-misa-arrest-conspiracy மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்]</ref>


=== இளைஞரணி தலைமையகம் ===
=== இளைஞரணி தலைமையகம் ===

06:29, 1 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

மு.க. ஸ்டாலின்
தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 ஆகத்து 2018
பொதுச் செயலாளர்க. அன்பழகன்
எதிர்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
முன்னையவர்விஜயகாந்த்
துணை முதலமைச்சர்
பதவியில்
29 மே 2009 – 15 மே 2011
ஆளுநர்சுர்சித் சிங் பர்னாலா
பின்னவர்ஓ. பன்னீர்செல்வம்
பொருளாளர் திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
27 டிசம்பர் 2008 – 27 ஆகத்து 2018
முன்னையவர்ஆற்காடு வீராசாமி
உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 மே 2006 – 15 மே 2011
துணை பொது செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம்
பதவியில்
2 சூன் 2003 – 26 டிசம்பர் 2008
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர் (மேயர்)
பதவியில்
1996–2002
பின்னவர்மா. சுப்பிரமணியம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1991[1]
தொகுதிஆயிரம் விளக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 1, 1953 (1953-03-01) (அகவை 71)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
அரசியல் கட்சி தி.மு.க
துணைவர்துர்கா ஸ்டாலின்
உறவுகள்காண்க கருணாநிதி குடும்பம்
பிள்ளைகள்உதயநிதி ஸ்டாலின்
செந்தாமரை
பெற்றோர்(s)மு. கருணாநிதி
தயாளு அம்மாள்
வாழிடம்(s)தேனாம்பேட்டை, சென்னை, இந்தியா
கல்விஇளங்கலைமானி அரசியல்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), (மு. க. ஸ்டாலின்) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆவார்.[2] [3] தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.[4] இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். இவரது அண்ணன் மு.க. அழகிரியும், தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1953 ஆம் ஆண்டு கருணாநிதி - தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தார். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக ஸ்டாலின் [6][7] எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[7].

பள்ளிப்பருவம்

ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிருவாகம் மறுத்தது.[சான்று தேவை] இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.

குடும்ப அரசியல் வாழ்க்கை

தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தார்.

நடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்

இவர் ஒரே இரத்தம் (1988), மக்கள் ஆணையிட்டால் என இரண்டு திரைப்படங்களிலும், குறிஞ்சி மலர் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். [8]

மாநிலச் செயலாளர்

இதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள சான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது [6]. 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.

சிறை செல்லல்

ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் சென்றார் என்பதை எதிர்கட்சிகள் மறுத்துப் பேசுகின்றனர்.[9]

இளைஞரணி தலைமையகம்

திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.[6]

முதல் தேர்தல்

ஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.[6] அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

மேயர்

இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.[6]

2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் [6][10][11]. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்[6].

அமைச்சர்

மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.[6]

அரசியல் வளர்ச்சி

சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.

அரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளைவிட, திமுகவுக்குள்ளேயே வைகோவை சமாளிக்க ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என ஆதரவாளர்களால் கருதப்பட்டது[6]. ஒரு கட்டத்தில் வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னரே ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்று அரசியல் பார்வையாளர்களால் கருதப்படுகிறது.

2017 சனவரியில் திமுகவின் செயல் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.[12][13]

பொழுதுபோக்கு

ஸ்டாலின் துடுப்பாட்டம், கணினி விளையாட்டு, பூப்பந்தாட்டம், சதுரங்கம், கேரம் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  2. "திமுக பொதுக்குழு கூட்டம்".
  3. https://m.dinamalar.com/detail.php?id=2089975
  4. "தமிழக ஆளுனரின் பத்திரிகைக் குறிப்பு", மே 29, 2008.
  5. "ஸ்டாலின் வகித்த பதவிகள்".
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 தட்ஸ் தமிழ் மு. க ஸ்டாலின் பார்த்து பரணிடப்பட்ட நாள் 10-06-2009
  7. 7.0 7.1 மு.க.இசுட்டாலின் அறிமுகம்-பெயரின் முக்கியத்துவம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  8. மு.க.ஸ்டாலின் திரைப்பயணம்
  9. மிசா குறித்த விமர்சனங்களால் கொதித்த ஸ்டாலின்
  10. டைம்ஸ் ஆப் இந்தியா-மேயர் பதவி ஸ்டாலின் கைநழுவி அதிமுகவிற்கு போனது பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  11. ஸ்டாலினை மேயர் பதவியில் இருந்து நீக்கியதின் விளைவாக அதிமுக வெற்றிபெற்றது - இந்து நாளிதழ் பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009
  12. "MK Stalin named DMK working president". indianexpress. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
  13. "Stalin at the helm". இந்து. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._க._ஸ்டாலின்&oldid=2864792" இலிருந்து மீள்விக்கப்பட்டது