குதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49: வரிசை 49:
படிமம்:Kuthilintenkasi.png|தற்காலக் குதிர்
படிமம்:Kuthilintenkasi.png|தற்காலக் குதிர்
</gallery>
</gallery>

{{Gallery
|title = பண்டைய, மரபுவகை, தற்காலக் குதிர்கள்
|lines=3
|File:Kashan granary Barry Kent.JPG| கழ்சான் குதிர்ரீரான்.
|File:Bydgoszcz Spichrze.jpg| ஒரு பெருங்குதிர், பிதுகோத்சுச், போலந்து, பிரிதா ஆற்றங்கரை.
|File:Kiszombor, emeletes magtár.jpg|முகப்புவாயில் அமைந்த பன்மாடிக் குதிர் , 1835, கிழ்சோம்போர், [[ அங்கேரி]].
<!---rather obsolete [[File:Kaufhaus 1897.jpg|thumb|Former Granary in Zürich, Switzerland (1897)]] --->
|File:Port Perry grain mill and elevator circa 1930.jpg|ஒன்டாரியோ, போர்ட்பெரி ஆலையும் கூலப்பதன்கலமும், 1930, 1873 இல் கட்டப்பட்டது.
|File:Shelby County, Iowa. These granaries are located near Irwin Village, and much of the corn which is n . . . - NARA - 522350.jpg| ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தற்கால எஃகுக் குதிர்கள்.
}}


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

14:49, 29 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஓர் எளிய குதிர்
குதிர்வடிவப் பண்டைய கிரேக்க வடிவியல்கலைப் பெட்டி, கிமு850 . ஏதென்சில் உள்ள அகோரா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இலியூட், சுந்தனிய மக்களின் மரபான குதிர், மேற்கு சாவகம், இந்தோனேசியா.
ஆப்பிரிக்க மண் குதிர்(1906-1918)

குதிர் (granary) என்பது ஒரு கொட்டிலில் அமைந்த பொருள் தேக்கும் அறை. தேக்கும் பொருள் கதிரடித்த கூலமாகவோ கால்நடைகளுக்கான தீவனமாகவோ அமையலாம். பண்டைய அல்லது முதனிலைக் குதிர்கள் மட்கலங்களாகவே அமைந்தன. தேக்கும் உண்வை எலிகளிடம் இருந்து காக்க, குதிர்கள் தரைக்கு மேலே கட்டப்படுகின்றன.

குதிரிடல் (ஆங்கிலம்-granary,bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும் முதன்மை வாய்ந்த தேக்குதல் செயல்முறையாகும். நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த கூலங்களைத் தேக்கிவைக்க இம்முறை பயன்படுகிறது.

பைஞ்சுதை, கரி போன்றவற்றையும் பேரளவில் குதிர்களில் தேக்கி வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.தமிழகத்தின் ஊர்ப்புறங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும். இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல பயன்களுக்குப் பயன்படுகின்றன.

அமைப்பு

இக்குதிர்களின் விட்டம் இரண்டு மீட்டர் முதல் ஆறு மீட்டர் வரையும், உயரம் மூன்று மீட்டர் முதல் நாற்பது மீட்டர் வரையும் அமைந்து இருக்கும்.

அடிப்பாகம் மட்டமாகவே/சமதளமாகவோ அல்லது சரிவாகவோ அமைக்கப்படுகிறது. சரிவானஅடிப்பாகம், குதிரின் அடிப்பாகத்தைத் திறந்தவுடன், குதிரில் தேக்கி வைக்கப்படும் பொருள் தாமாகவே வெளியில் வர உதவுகிறது.

இயந்திரங்களைப் பயன்படுத்தி, உள்ளிட்டப் பொருட்களைச் சில வேளைகளில் எடுப்பதும் உண்டு. இக்குதிர்கள் தரைக்குக் கீழோ, தரைக்கு மேலோ அல்லது தூண்கள் மீது உயர்த்தியோ கட்டப்படும். உயர்த்திக் கட்டப்பட்டுள்ள குதிர்களிலிருந்து பாதுகாப்பாகத் தேக்கி வைக்கப்பட்ட பொருள், நேரடியாகவே வண்டிகளுக்கு பரிமாறும் ஏற்பாடுகளும் நடப்பில் உள்ளன.

குதிர்கள் பண்ணைகளில் உள்ளது போல தனியாகவோ, அல்லது துறைமுகங்களிலும், ஆலைகளிலும் உள்ளது போல், கூட்டுக் குதிர்களாகவும் கட்டப்படுவதுண்டு. இவற்றின் குறுக்குவெட்டுத் தோற்றம் வட்டமாகவோ, அறுகோணமாகவோ, செவ்வகமாகவோ இருக்கும். குதிர்களின் மேல் கூரை அமைக்கும் வழக்கமும் உண்டு. பெருங்குதிர்களில் ஆட்கள் மூலமாகவோ, பட்டைச்செலுத்திகள் (belt conveyors) மூலமாகவோ பாதுகாக்கப் படவேண்டிய பொருட்கள் நிரப்பும் நடைமுறையும் பின்பிற்றப்படுகிறது.

விளைவுகள்

இக்காலக் குதிர்கள் எஃகு, திண் காறை போன்றவற்றாலும் கட்டப்படுகின்றன. கட்டுவதற்குப் பயன்படும் பொருள் நெருப்பினாலும், புழு,பூச்சிகளினாலும் பாதிக்கப்படாததாக இருக்க வேண்டும். ஈரத்தால் பாதிக்கப்படும் பைஞ்சுதை, மாவு, சர்க்கரை போன்றவற்றைத் தேக்கும்போது, அந்த ஈரத்தால் குதிர் பாதிக்கப்படாததாகவும் இருக்க வேண்டும். மரம், எஃகுக் குதிர்களுக்கு அடிக்கடி வண்ணப்பூச்சு கட்டாயமாக அடிக்க வேண்டும்.

தேக்கப்படும் பொருள் வெளியேற்றப்படும் பொழுது, அழுத்தத்தினாலும், உராய்வினாலும் பக்கச்சுவர்களில் ஒட்டிக் கொண்டு, சிறிது சிறிதாக தேக்கப்பட்டப் பொருள், குறைந்த அளவில் வீணாவதும் உண்டு. மேற்கூறிய விளைவுகள் ஏற்படாவண்ணம், உகந்த முறையில் தொழில்நுட்ப, பொறியியல் அறிஞர்களைக் கொண்டு, திட்டமிட்டுக் குதிர்களைக் கட்டவேண்டும்.

குதிர்

இப்பொழுது கட்டப்படும் தமிழகத்தின் ஊரக வீடுகளிலும் கூட, வேளாண்மை செய்வோர் ஓரிருவர் தவிர, பிறர் குதிர்களை அமைப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம், விளைச்சல் குறைவு. மற்றொன்று சந்தையில் உடனுக்குடன் விற்பனை செய்யப் பட்டுவிடுதல். அடுத்த பருவத்தில் பயிரிட வேண்டி விதைகள் மட்டும் தேக்கும் வழக்கம் இருக்கிறது. போக்குவரத்து வசதியும் ஊரகப் பகுதிகளுக்குத் தற்காலத்தில் அதிகரித்து விட்டபடியால், குதிர்களில் தேக்கிவைக்கும் வழக்கம் அருகி வருகிறது.

தமிழ்நாட்டில் குதிர்கள்

படிமம்:தொம்பை மலைவாழ் மக்களின் கூலக் கிடங்கு! .jpg
கல்ராயன் மலைவாழ் மக்களின் குதிர். தொம்பை என்று அம்மக்களால் அழைக்கப்படும். இதை ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அமைத்துள்ளனர்.

குதிலரை அல்லது குதிர் என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய கூலத் தேக்கக் கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய கூலங்களைத் தேக்கி வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை ஏறக்குறைய ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஓர் உறைக்கும் அதன் மீதுள்ள அடுத்த உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். வைக்கோல் விரவிச் செய்த மண்தாட்டும் பயன்ப்டுவதுண்டு. இதனால் கூலங்கள் (தானியங்கள்) எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூலத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைப்பர்.[1]

பயன்பாடு

  • கூலங்களை (தானியங்களை ) அறுவடைக்காலங்களின் போது எடுத்து வந்து குதிலின் மேல்பக்கம் உள்ள பெரும் துவாரம் வழியாக கொட்டிவிடுவர்.
  • தேவைப்படும் காலங்களில் தரையளவில் உள்ள கீழ்க்கதவைத் திறந்து தேவையான அளவுக்குக் கூலங்களை (தானியங்களை )எடுத்துவிட்டு மூடிவிடுவர்.
  • இடையில் கூல அளவை பார்ப்பதற்கு நடுத்துவாரக் கதவு ஒன்றும் உண்டு.

மேற்கோள்கள்

  1. என். முருகவேல் (2018 சனவரி 20). "வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிர்&oldid=2863555" இலிருந்து மீள்விக்கப்பட்டது