பகல்/இரவுத் துடுப்பாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:Eden Gardens under floodlights during a match.jpg|thumb|310x310px|[[ஈடன் கார்டன்ஸ்]] ]]
[[படிமம்:Eden Gardens under floodlights during a match.jpg|thumb|310x310px|[[ஈடன் கார்டன்ஸ்]] ]]
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' அல்லது '''ஒளிவெள்ளத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] மற்றும் [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதல்தரத் துடுப்பாட்டத்தில்]] பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அதில் வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
'''பகல்/இரவுத் துடுப்பாட்டம்''' அல்லது '''ஒளிவெள்ளத் துடுப்பாட்டம்''' என்பது மாலை நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியா]] மற்றும் [[மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத் தீவுகள்]] ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு [[முதல்தரத் துடுப்பாட்டம்|முதல்தரத் துடுப்பாட்டத்தில்]] பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அதில் வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

14:33, 24 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஈடன் கார்டன்ஸ்

பகல்/இரவுத் துடுப்பாட்டம் அல்லது ஒளிவெள்ளத் துடுப்பாட்டம் என்பது மாலை நேரத்தில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் துடுப்பாட்டப் போட்டியைக் குறிக்கிறது. 1979ஆம் ஆண்டு ஆத்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியே உலகின் முதல் பகல்/இரவுத் துடுப்பாட்டப் போட்டியாகும். 2000ஆம் ஆண்டு முதல்தரத் துடுப்பாட்டத்தில் பகல்/இரவுப் போட்டி முறை அறிமுகமானது. அதில் வழக்கமான சிவப்புப் பந்துக்கு மாற்றாக இளஞ்சிவப்புப் பந்து பயன்படுத்தப்பட்டது. இதுவே பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தற்போது ஒருநாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டங்களில் பகல்/இரவுப் போட்டிகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. எனினும் அவை தேர்வுத் துடுப்பாட்டத்தில் அரிதாகவே இடம்பெறுகிறது. பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளை நடத்துவதற்கான வழிமுறைகளை அக்டோபர் 2012இல் ஐசிசி அறிவித்தது.[1] அதன்பிறகு தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் முதல் பகல்/இரவுப் போட்டி 27 நவம்பர் 2015இல் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் நடைபெற்றது.[2]

பகல்/இரவுத் தேர்வுப் போட்டிகளின் பட்டியல்

ஆண்கள்

எ. நாள் உள்நாட்டு அணி வெளிநாட்டு அணி நிகழிடம் தொடக்க நேரம் (உள்ளூர்) முடிவு
1 27 நவம்பர்- 1 டிசம்பர் 2015  ஆத்திரேலியா  நியூசிலாந்து அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெய்டு 14:00  ஆத்திரேலியா 3 இழப்புகளால் வெற்றி
2 13-17 அக்டோபர் 2016  பாக்கித்தான்  மேற்கிந்தியத் தீவுகள் துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய் 15:30  பாக்கித்தான் 56 இழப்புகளால் வெற்றி
3 24-28 நவம்பர் 2016  ஆத்திரேலியா  தென்னாப்பிரிக்கா அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெய்டு 14:00  ஆத்திரேலியா 7 இழப்புகளால் வெற்றி
4 15-19 டிசம்பர் 2016  ஆத்திரேலியா  பாக்கித்தான் பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன் 13:30  ஆத்திரேலியா 39 ஓட்டங்களால் வெற்றி
5 17-21 ஆகத்து 2017  இங்கிலாந்து  மேற்கிந்தியத் தீவுகள் எட்சுபாசுடன் துடுப்பாட்டத் திடல், பர்மிங்காம் 14:00[n 1]  இங்கிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 209 ஓட்டங்களால் வெற்றி
6 6-10 அக்டோபர் 2017  பாக்கித்தான்  இலங்கை துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், துபாய் 14:00  இலங்கை 68 ஓட்டங்களால் வெற்றி
7 2-6 டிசம்பர் 2017  ஆத்திரேலியா  இங்கிலாந்து அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெய்டு 14:00[n 1]  ஆத்திரேலியா 120 ஓட்டங்களால் வெற்றி
8 26-29 டிசம்பர் 2017  தென்னாப்பிரிக்கா  சிம்பாப்வே புனித ஜார்ஜ் பூங்கா, போர்ட் எலிசபெத் 13:30  தென்னாப்பிரிக்கா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 120 ஓட்டங்களால் வெற்றி
9 22-26 மார்ச் 2018  நியூசிலாந்து  இங்கிலாந்து ஈடன் பூங்கா, ஓக்லாந்து 14:00[n 1]  நியூசிலாந்து ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 49 ஓட்டங்களால் வெற்றி
10 23-27 ஜூன் 2018  மேற்கிந்தியத் தீவுகள்  இலங்கை கென்சிங்டன் ஓவல் அரங்கம், பிரிஜ்டவுன் 15:00[n 1]  இலங்கை 4 இழப்புகளால் வெற்றி
11 24-28 ஜனவரி 2019  ஆத்திரேலியா  இலங்கை பிரிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன் 13:00  ஆத்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 40 ஓட்டங்களால் வெற்றி
12 22-26 நவம்பர் 2019  இந்தியா  வங்காளதேசம் ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா 13:00
13 29 நவம்பர்- 3 டிசம்பர் 2019  ஆத்திரேலியா  பாக்கித்தான் அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெய்டு 14:00
14 12-16 டிசம்பர் 2019  ஆத்திரேலியா  நியூசிலாந்து பேர்த் அரங்கம், பேர்த் 13:00

பெண்கள்

No. நாள் உள்நாட்டு அணி வெளிநாட்டு அணி நிகழிடம் தொடக்க நேரம் (உள்ளூர்) முடிவு
1 9-12 நவம்பர் 2017  ஆத்திரேலியா  இங்கிலாந்து வடக்கு சிட்னி நீள்வட்ட அரங்கம், சிட்னி 14:30 ஆட்டம் வெற்றி/தோல்வியின்றி முடிவு


குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 முந்தைய நாள் ஆட்டம் மழை காரணமாக பாதித்ததால் மறுநாள் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டது

சான்றுகள்

  1. "ICC paves way for Day-Night Tests". Wisden India. 29 October 2012 இம் மூலத்தில் இருந்து 30 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150630231143/http://www.wisdenindia.com/cricket-news/icc-paves-day-night-tests/32709. 
  2. "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.