சரளைக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 19: வரிசை 19:
சரளைக் கற்களின் வகைகளாவன:
சரளைக் கற்களின் வகைகளாவன:


* '''ஆற்றங்கரைச் சரவைக் கல்''': மணல் அல்ல்து களியுடன் கலந்ததாக ஆற்றங்கரைகளில் படிந்து கானப்படும் சரவைக் கற்கள்.
* '''ஆற்றங்கரைச் சரவைக் கல்''': மணல் அல்லது களியுடன் கலந்ததாக ஆற்றங்கரைகளில் படிந்து கானப்படும் சரவைக் கற்கள்.
* '''இருக்கை சரளைக் கல்''': பள்ளத்தாக்குகள் அல்லது ஓடைகளின் கரைகளில் மற்றும் ஓடைகளின் அடிகளில் படிந்து காணப்படும்.
* '''இருக்கை சரளைக் கல்''': பள்ளத்தாக்குகள் அல்லது ஓடைகளின் கரைகளில் மற்றும் ஓடைகளின் அடிகளில் படிந்து காணப்படும்.
*'''சிற்றோடைக் கல்''': இது கோள வடிலாக சீராக்கப்பட்டு காணப்படும். இத்தகைய கற்கள் பைஞ்சுதை தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுகின்றது.
*'''சிற்றோடைக் கல்''': இது கோள வடிலாக சீராக்கப்பட்டு காணப்படும். இத்தகைய கற்கள் பைஞ்சுதை தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுகின்றது.

10:30, 29 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

சரளைக் கல்(படத்தில் உள்ள பெரிய துண்டம் 4 cm)
ஒரு சரளைக் கல் பாதை , இந்தியானாவில்
சரளைக்கல் ஏற்றப்படுதல்

சரளைக் கல்(ஆங்கிலம்: Gravel /ˈɡrævəl/) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்(2 முதல் 4 mm or 0.079 முதல் 0.157 அங்) கூழங்கற்கள் என (4 முதல் 64 mm or 0.2 முதல் 2.5 அங்) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.

சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் பைஞ்சுதைகளால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; உருசியாவில் மட்டும் 400,000 km (250,000 mi) சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன..[1] பைஞ்சுதை உற்பத்தியிலும் மணலும், சரளைக் கல்லும் முக்கியமானதாகும்.

புவியியல் உருவாக்கம்

சரளைக் கல் படிவுகள் கானப்படுதல் பொதுவான புவியியல் கட்டமைப்பு ஆகும். பாறைகள் வானிலையாலழிதல் மற்றும் அரிப்புக்குள்ளாவதால் இவை உருவாகின்றன. நீரோட்டங்கள் மற்றும் அலைகள் சரளைக் கற்களின் தேக்கத்தை பெருமளவாக்குகின்றன. இதனால் சில வேளைகளில் சரளைக் கற்கள் இறுக்கமடைந்து கலப்புப் பாறைகள் எனப்படும் அடையற் பறைகளாக மாறுகின்றன. இயற்கை சரளைக் கற்கள் மனிதத் தேவைகளுக்கு குறைவாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சுண்ணாம்புக் கல், கருங்கள் மற்றும் மட்கல் முதலானவை கல் உடைக்கும் வேலைத்தலங்களில் உடைக்கப்படுகின்றன.

புதிய உற்பத்திகள்

2006 இன் படி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் தன் உலகில் சரளைக் கல் நுகர்வில் முன்னணியில் உள்ளனர். [2][3]

சரளைக் கற்களின் வகைகள்

கற்களுடன் கூடிய சரளைக் கல் 5 மற்றும் 15 mm
சேருமனி சரளைக் கல் குழியில் மணல் மற்றும் சரளைக் கல் வேறாக்கிS

சரளைக் கற்களின் வகைகளாவன:

  • ஆற்றங்கரைச் சரவைக் கல்: மணல் அல்லது களியுடன் கலந்ததாக ஆற்றங்கரைகளில் படிந்து கானப்படும் சரவைக் கற்கள்.
  • இருக்கை சரளைக் கல்: பள்ளத்தாக்குகள் அல்லது ஓடைகளின் கரைகளில் மற்றும் ஓடைகளின் அடிகளில் படிந்து காணப்படும்.
  • சிற்றோடைக் கல்: இது கோள வடிலாக சீராக்கப்பட்டு காணப்படும். இத்தகைய கற்கள் பைஞ்சுதை தயாரிப்பதற்கு பெருமளவில் பயன்படுகின்றது.
  • உடைக்கப்பட்ட கற்கள்:பாறைகளில் இருந்து பல்வேறு அளவுகளில் உடைக்கப்பட்ட கற்கள் இவையாகும். தேவைக்கு ஏற்ப இவை தயாராகும். பொதுவாக வீதிகள் அமைப்பதற்கு தார் உடன் இது சேர்த்துப் பயன்படும். கருங்கல், தொலமைட்டு கல் மற்றும் சுண்ணக்கல் முதலானவற்றிலிருந்து உடைக்கப்ப்ட்ட கற்கள் பெறப்படும்.[4]

மேற்கோள்கள்

  1. "1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY" (PDF). 1 KWAME NKRUMAH UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY.
  2. Mineral Commodity Summaries 2006 2009
  3. Industrial Sand And Gravel (Silica): World Production, By Country 2009
  4. "Quarry Process - QP, DGA - NJ, NY, NYC, PA". www.braenstone.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரளைக்_கல்&oldid=2825980" இலிருந்து மீள்விக்கப்பட்டது