சர்காசோக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13: வரிசை 13:

ஐரோப்பிய விலாங்கு, அமெரிக்க விலாங்கு போன்ற விலாங்கு இனங்கள் முட்டையிடுவதற்காகப் புலம் பெயர்வதில் சர்காசோக் கடலுக்கு ஒரு பங்கு உண்டு. இவை சர்காசோக் கடலில் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் அவை ஐரோப்பாவுக்கோ, வட அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கோ செல்கின்றன. முதிர்ச்சியடைந்த விலாங்குகள் முட்டையிடுவதற்காக மீண்டும் சர்காசோக் கடலை நோக்கி வருகின்றன. முட்டையில் இருந்து வெளிவந்ததும், இளம் பெருந்தலைக் கடலாமைகள் வளைகுடா நீரோட்டம் போன்ற நீரோட்டங்களைப் பயன்படுத்திச் சர்காசோக் கடலுக்குப் பயணம் செய்கின்றன என்றும், கொன்றுண்ணிகளிடம் இருந்து தப்புவதற்காக, முதிச்சி அடையும்வரை கடற்களைகளிடையே மறைந்து வாழ்கின்றன என்றும் நம்புகின்றனர்.

2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்தில், கடலின் நுண்ணுயிர்ப் பல்வகைமை பற்றி மதிப்பீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட உலகப் பெருங்கடல் மாதிரிமுறை ஆய்வின் ஒரு பகுதியாக சர்காசோக் கடலும் ஒரு மாதிரியாகக் கொள்ளப்பட்டது. முன்னைய கோட்பாடுகளுக்கு மாறாக இக்கடலில் பலவகையான முதல்நிலை உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது.

[[பகுப்பு:கடல்கள்]]
[[பகுப்பு:கடல்கள்]]

10:18, 26 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

சர்காசோக் கடல் (Sargasso Sea) என்பது நான்கு நீரோட்டங்களால் சூழப்பட்டு பெருங்கடற் சுழலோட்டமாக உருவான, வட அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதி ஆகும். கடல் என்று அழைக்கப்படும் பிறவற்றைப் போலன்றி இதற்கு நில எல்லைகள் கிடையாது. தனித்துவமான மண்ணிறமான சர்காசம் கடற்களைகளும், பெரும்பாலும் அமைதியான நீல நிறமான நீரும் இக்கடலை அத்திலாந்திக் பெருங்கடலின் பிற பகுதிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன.

இக்கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. மேற்படி நீரோட்டங்களால் உருவான மணிக்கூட்டுத் திசைச் சுழற்சியுடன் கூடிய பெருங்கடல் நீரோட்டத் தொகுதி வட அத்திலாந்திக் சுழலோட்டம் என அழைக்கப்படுகின்றது. இது மேற்கில் 70° க்கும் 40° க்கும் இடையிலும், வடக்கில் 20° க்கும் 35° க்கும் இடையிலும் பரந்துள்ளதுடன், இது ஏறத்தாழ 1,100 கிமீ (700 மைல்) அகலமும், 3,200 கிமீ (2,000 மைல்) நீளமும் கொண்டுள்ளது. பேர்முடா இக்கடலின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது.

மேற்குறித்த எல்லா நீரோட்டங்களும் தாம் கொண்டுவரும் கடற் தாவரங்களையும், குப்பைகளையும் இக்கடலுக்குள் விடுகின்றன. ஆனாலும், சர்காசோக் கடல் நீர் ஆழமான நீல நிறத்தை உடையதாகவும், விதிவிலக்காகத் தெளிவானதாகவும் காணப்படுகின்றது. இதனால் இதன் நீரடிப் பார்வைத் தன்மை 61 மீ (200 அடி) வரை உள்ளது. இக்கடல் மக்களின் கற்பனையையும் தன்பால் ஈர்த்துள்ளது. இதனால், பலவகையான இலக்கிய ஆக்கங்களிலும், கலைப் படைப்புக்களிலும், பரந்த பொதுமக்கள் பண்பாட்டிலும் இக்கடல் இடம் பிடித்துள்ளது.

வரலாறு

15 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அசோரசுத் தீவுகளிலும், வட அத்திலாந்திக் சுழலோட்டப் பகுதியிலும், கடற்களைகள் அதிகமாகக் காணப்படும் தீவுக்கூட்டத்தைச் சூழவும் அதன் மேற்கிலும் போர்த்துக்கேயரின் நடவடிக்கைகள் தொடங்கின. அக்காலத்திலேயே சர்காசம் கடற்களைகளின் பெயரைத் தழுவி சர்காசோ கடலுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது. இருந்தாலும், இக்கடல் முந்திய காலக் கடலோடிகளுக்கும் தெரிந்திருக்கக்கூடும். தற்போது கிடைக்காத கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கார்த்தேசு நகரைச் சேர்ந்த கடலோடி இமில்க்கோ எழுதிய ஆக்கம் ஒன்றைச் சான்றுகாட்டி, அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதியைக் கடற்களைகள் மூடியிருந்ததாக நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரூஃபுசு ஃபெசுட்டசு ஏவியெனசு என்பவர் தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

சூழலியல்

சர்காசம் என்னும் பேரினத்தைச் சேர்ந்த கடற்களைகள் சர்காசோக் கடலில் காணப்படுகின்றன. இவை பெருமளவில் கடல் மேற்பரப்பில் மிதந்துகொண்டு இருக்கின்றன. இவை கப்பற் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதில்லை. பாய்க் கப்பல்கள் இப்பகுதியில் மாட்டிக்கொண்டது குறித்த நிகழ்வுகள் வடகோடி அமைதிப் பகுதியில் காற்றுக் குறைவாக இருந்ததால் ஏற்பட்டவை.

ஐரோப்பிய விலாங்கு, அமெரிக்க விலாங்கு போன்ற விலாங்கு இனங்கள் முட்டையிடுவதற்காகப் புலம் பெயர்வதில் சர்காசோக் கடலுக்கு ஒரு பங்கு உண்டு. இவை சர்காசோக் கடலில் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் அவை ஐரோப்பாவுக்கோ, வட அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கோ செல்கின்றன. முதிர்ச்சியடைந்த விலாங்குகள் முட்டையிடுவதற்காக மீண்டும் சர்காசோக் கடலை நோக்கி வருகின்றன. முட்டையில் இருந்து வெளிவந்ததும், இளம் பெருந்தலைக் கடலாமைகள் வளைகுடா நீரோட்டம் போன்ற நீரோட்டங்களைப் பயன்படுத்திச் சர்காசோக் கடலுக்குப் பயணம் செய்கின்றன என்றும், கொன்றுண்ணிகளிடம் இருந்து தப்புவதற்காக, முதிச்சி அடையும்வரை கடற்களைகளிடையே மறைந்து வாழ்கின்றன என்றும் நம்புகின்றனர்.

2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்தில், கடலின் நுண்ணுயிர்ப் பல்வகைமை பற்றி மதிப்பீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட உலகப் பெருங்கடல் மாதிரிமுறை ஆய்வின் ஒரு பகுதியாக சர்காசோக் கடலும் ஒரு மாதிரியாகக் கொள்ளப்பட்டது. முன்னைய கோட்பாடுகளுக்கு மாறாக இக்கடலில் பலவகையான முதல்நிலை உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்காசோக்_கடல்&oldid=2824362" இலிருந்து மீள்விக்கப்பட்டது