அர்ஜுன் ரெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அர்ஜுன் ரெட்டி''' 2017 ஆம் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:42, 20 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

அர்ஜுன் ரெட்டி 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். இது காதல் திரைப்பட வகையைச் சார்ந்தது. இத் திரைப்படத்தை சந்தீப் வாங்கா எழுதி, இயக்கியுள்ளார். அவரது சகோதரர் பிராணே ரெட்டி வாங்காவின் நிறுவனமான பத்ரகளி பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் ராகுல் ராமகிருஷ்ணா, ஜியா சர்மா, சஞ்சய் ஸ்வரூப், கோபிநாத் பட், கமல் காமராஜு மற்றும் காஞ்சனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இது கோப மேலாண்மை சிக்கல்களைக் கொண்ட குடிகார அறுவை சிகிச்சை நிபுணரான அர்ஜுன் ரெட்டி தேஷ்முக்கை (தேவரகொண்டா) பற்றிய கதையாகும். அர்ஜுன் தனது காதலி ப்ரீத்தி ஷெட்டி (பாண்டே) திருமணத்திற்குப் பிறகு தன்னைத் தானே அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறான். இத்திரைப்படம் அர்ஜுனின் வீழ்ச்சி மற்றும் அடுத்தடுத்த எழுச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகர்கிறது.

நடிகர்கள்

  • அர்ஜுன் ரெட்டி தேஷ்முக் - விஜய் தேவரகொண்டா
  • ப்ரீத்தி ஷெட்டி - ஷாலினி பாண்டே
  • சிவா - ராகுல் ராமகிருஷ்ணா
  • ஜியா சர்மா - ஜியா சர்மா
  • தனுஞ்சய் ரெட்டி தேஷ்முக்(அர்ஜுனின் தந்தை) - சஞ்சய் ஸ்வரூப்
  • கவுதம் ரெட்டி தேஷ்முக்(அர்ஜுனின் சகோதரர்) - கமல் கமராஜு
  • அர்ஜுனின் பாட்டி - காஞ்சனா
  • தேவதாஸ் ஷெட்டி(ப்ரீதியின் தந்தை) - கோபிநாத் பட்
  • கமல் - கல்யாண் சுப்ரமண்யம்
  • அமித் - அமித் சர்மா
  • வித்யா - அதிதி மயக்கல்
  • கீர்த்தி - அனிஷா அல்லா
  • ஷ்ருதி(ப்ரீதியின் தோழி) - ஸ்ரவ்யா மிருதுலா
  • பூஷன் கல்யாண் - புனித மேரி கல்லூரியின் டீன்
  • விப்புல் - பிரியதர்ஷி புலிகொண்டா (சிறப்புத் தோற்றம்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_ரெட்டி&oldid=2818359" இலிருந்து மீள்விக்கப்பட்டது