பிலிஸ்தியர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 3: வரிசை 3:
[[File:Philistines pentapolis.jpg|thumb| பிலிஸ்தினிய மக்கள் வாழ்ந்தாக, [[விவிலியம்]] கூறும் [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], எக்ரோன், காத் மற்றும் அஸ்கெலோன் நகரங்கள்]]
[[File:Philistines pentapolis.jpg|thumb| பிலிஸ்தினிய மக்கள் வாழ்ந்தாக, [[விவிலியம்]] கூறும் [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], எக்ரோன், காத் மற்றும் அஸ்கெலோன் நகரங்கள்]]


'''பிலிஸ்தியர்கள்''' அல்லது '''பெலஸ்தியர்கள்''' (Philistine) தற்கால [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] - [[துருக்கி]] இடையே உள்ள [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலில்]] உள்ள [[கிரீட்]] மற்றும் [[சைப்பிரசு]] தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் [[இசுரயேலர்|இசுரவேலர்களின்]] நாட்டின் தெற்குப் பகுதியில், [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], ''எக்ரோன்'' , ''காத்'' <ref>[https://en.wikipedia.org/wiki/Gath_(city) Gath city]</ref> மற்றும் ''அஸ்கெலோன்'' <ref>[https://en.wikipedia.org/wiki/Ashkelon Ashkelon]</ref>போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.
'''பிலிஸ்தியர்கள்''' அல்லது '''பெலஸ்தியர்கள்''' (Philistine) தற்கால [[கிரேக்கம்|கிரேக்கத்திற்கும்]] - [[துருக்கி]] இடையே உள்ள [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலில்]] உள்ள [[கிரீட்]] மற்றும் [[சைப்பிரசு]] தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் [[இசுரயேலர்|இசுரவேலர்களின்]] நாட்டின் தெற்குப் பகுதியில், [[மத்தியதரைக் கடல்]] ஒட்டிய [[காசா]], [[அஸ்தோது]], ''எக்ரோன்'' , ''காத்'' <ref>[https://en.wikipedia.org/wiki/Gath_(city) Gath city]</ref> மற்றும் ''அஸ்கெலோன்'' <ref>[https://en.wikipedia.org/wiki/Ashkelon Ashkelon]</ref>போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.<ref>[https://www.britannica.com/topic/Philistine-people Philistine PEOPLE]</ref><ref>[https://www.livescience.com/55429-philistines.html Who Were the Philistines?]</ref>


வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், [[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.
வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், [[யூதர்]]களின் [[பழைய ஏற்பாடு]] நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.

15:27, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்


பிலிஸ்தினிய மக்கள் வாழ்ந்தாக, விவிலியம் கூறும் மத்தியதரைக் கடல் ஒட்டிய காசா, அஸ்தோது, எக்ரோன், காத் மற்றும் அஸ்கெலோன் நகரங்கள்

பிலிஸ்தியர்கள் அல்லது பெலஸ்தியர்கள் (Philistine) தற்கால கிரேக்கத்திற்கும் - துருக்கி இடையே உள்ள ஏஜியன் கடலில் உள்ள கிரீட் மற்றும் சைப்பிரசு தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் இசுரவேலர்களின் நாட்டின் தெற்குப் பகுதியில், மத்தியதரைக் கடல் ஒட்டிய காசா, அஸ்தோது, எக்ரோன் , காத் [1] மற்றும் அஸ்கெலோன் [2]போன்ற பிரதேசங்களில் குடியேறிய இன மக்கள் ஆவார்.[3][4]

வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், யூதர்களின் பழைய ஏற்பாடு நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.

யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் இணைச் சட்டம் (நூல்): 2:23 மற்றும் எரேமியா (நூல்): 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் கிரிட் தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.[5]

புது எகிப்திய பேரரசரும், எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 - 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் அனதோலியா, சைப்பிரசு மற்றும் சிரியாவின் பகுதிகளை தாக்கி, இறுதியில் எகிப்தை தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் உரோமானியர்கள் பாலஸ்தீனம் எனப்பெயரிட்டனர்.[6]

போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் தாவீது, பிலிஸ்தியத் தலைவனை வென்றதாக யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் தொடக்க நூல் 10:14 மற்றும் விடுதலைப் பயணம் 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.

பிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான கோலியாத்தை, இஸ்ரவேலச் சிறுவன் தாவீது கவண் கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.[7]

மேற்கோள்கள்

  1. Gath city
  2. Ashkelon
  3. Philistine PEOPLE
  4. Who Were the Philistines?
  5. Who Were the Philistines?
  6. Philistine Pepole
  7. Books of Samuel

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிஸ்தியர்கள்&oldid=2816769" இலிருந்து மீள்விக்கப்பட்டது