உடையார்கட்டு மகா வித்தியாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 9°21′17.8″N 80°36′32.11″E / 9.354944°N 80.6089194°E / 9.354944; 80.6089194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 129: வரிசை 129:
}}
}}


'''உடையார்கட்டு மகாவித்தியாலயம்''' [[இலங்கை]]யில் [[வட மாகாணத்தில்|வட மாகாணம், இலங்கை]] [[முல்லைத்தீவு மாவட்டத்தில்|முல்லைத்தீவு மாவட்டம்]] பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.
'''உடையார்கட்டு மகாவித்தியாலயம்''' [[இலங்கை]]யில் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]] [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு மாவட்டத்தில்]] பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.





09:33, 16 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம்
Mu/Udaiyarkaddu Maha Vidyalayam
முகவரி
பரந்தன் முல்லைத்தீவு வீதி
உடையார்கட்டு, வட மாகாணம்
இலங்கை
அமைவிடம்9°21′17.8″N 80°36′32.11″E / 9.354944°N 80.6089194°E / 9.354944; 80.6089194
தகவல்
வகைமாகாணப் பாடசாலை 1AB
குறிக்கோள்யாதும் ஊரே யாவரும் கேளிர்
(All us are relatives and all our places)
நிறுவல்01.04.1974
பள்ளி மாவட்டம்முல்லைத்தீவுக் கல்வி வலயம்
ஆணையம்கல்வி அமைச்சு, இலங்கை
அதிபர்வி. ஸ்ரீகரன்

உடையார்கட்டு மகாவித்தியாலயம் இலங்கையில் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் 25ஆவது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.


வரலாறு

மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம் 1974 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மு/உடையார்கட்டு அ.த.க பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது அதிபராக திரு சின்னராசா என்பவர் நியமிக்கப்பட்டு கடைமையாற்றினார். இவரைத் தொடர்ந்து திரு சங்கரப்பிள்ளை, திரு சிவப்பிரகாசம், திரு விசுவநாதர் என்பவர்கள் அதிபராக் கடமையாற்றினார்கள். அதிபர் திரு விசுவநாதர் காலத்தில் இப்பாடசாலையில் 1986ஆம் ஆண்டு முதற்தடவையாக க.பொ.த சா.த பரீட்சைக்குத் தோற்றினார்கள். இவரைத் தொடர்ந்து  இப்பாடசாலையின் பொறுப்பை அதிபர் திரு திருச்செல்வராசா ஏற்றுகொண்டார். இவரது காலத்தில் 1993 ஆம் ஆண்டு உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு பாடசாலையும்  மகா வித்தியாலயமகாத் தரமுயர்த்தப்பட்து. தொடர்ந்து திரு பரமேஸ்வரன், திரு ராஜா, திரு ராஜ்குமார், திரு ரவீந்திராசா திரு ராமநாதன் என்பவர்கள் கடமையாற்றினார்கள். இப்பாடசாலை வரலாற்றின் 1998ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் 9 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாகிச் சென்றனர். இவர்களில் செல்வி ராஜசிங்கம் செல்வந்தினி என்பவர் 4 பாடங்களிலும் விசேடசித்தி (A) பெற்றுள்ளார்.

இப்பாடசாலையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் திரு வி. ஸ்ரீகரன் என்பவர் அதிபராகப் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.  தரம் 1 தொடக்கம் 13 வரை இயங்கி வந்த வகுப்புகள் புதிய கல்விச் சீர்திருத்திற்கமைய 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1-8-2012 ஆம் திகதி தொடக்கம் ஆரம்ப் பிரிவு வேறாக்கப்பட்டு மு/உடையார்கட்டு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இயங்குகின்றது. இப்பாடசாலையில் தற்போது தரம் 6 முதல் 13 வரையான வகுப்புக்கள் உள்ளன.  2013 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பில் கணித விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்படுள்ளது.

தற்போது (2019 ஆம் ஆண்டில்) பாடசாலையில் 55 ஆசிரியர்களும் 955 மாணவர்களும் உள்ளனர். மீள்குடியேற்றத்தின் பின்பு எமது பாடசாலையானது கற்றல் கற்பித்தல் இணைபாடவிதான செயற்பாடுகளில் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

அதிபர்கள்

  1. சின்னராசா
  2. திருச்செல்வராசா
  3. பரமேஸ்வரன்
  4. ராஜா
  5. ராஜ்குமார்
  6. ரவீந்திரராசா
  7. ராமநாதன்
  8. ஸ்ரீகரன்

பாடசாலை கீதம்

உடையார்கட்டு மகா வித்தியாலயம்
உயர்வுடன் வாழ வாழ்த்துகிறோம்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

செந்தமிழ் ஆங்கிலம் சிந்தைகொள் சமயம்
தந்து சமூகத்துடன் உயர்கலை வர்த்தகம்
கணிதம், விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஈந்தாய்
வந்தனை செய்தோம் வாழியவே
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

எழுபத்துநான்கு சித்திரை ஒன்றில்
செழுமையுடன் தோன்றி திகழ்ந்தனையே
தரம் ஆறு முதலாய் பதின்மூன்று வரைக்கும்
தகுதியுடன் திகழ்ந்தாய் வாழியவே
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)

மதிநிறை அதிபர் மகத்தான ஆசிரியர்
துதித்திட மாணவர் தொண்டுறு பெற்றோர்
கதியிதி எனவே கனிவுடன் வாழ்த்துவோம்
பதியென நினைத்தே பணிந்து நாம் போற்றுவோம்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
                                                           (உடையார்கட்டு மகா வித்தியாலயம்)