தருமபுரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°07′34″N 78°09′14″E / 12.1260°N 78.154°E / 12.1260; 78.154
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 78: வரிசை 78:


== வரலாறு ==
== வரலாறு ==
சங்ககாலத்தில் [[அதியமான்]] என்னும் அரசன் தகடூரை ஆண்டுவந்தான். [[தகடூர் யாத்திரை]] என்னும் நூல் அவன்மீதோ, அவனது முன்னோன் <ref>கரும்பிவண் தந்த முன்னோன் மருக</ref> மீதோ பாடப்பட்ட நூல். [[சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை]] அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறான்.

இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் [[பல்லவர்|பல்லவ]] அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் [[இராஷ்டிரகூடர்]] பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் [[சோழர்]]களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. [[மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்|மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு]] பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), [[திப்பு சுல்தான்]] இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம்]] வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] நிர்வாக துணைப்பிரிவான, [[சென்னை மாகாணம்|மதராசு மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று [[தருமபுரி மாவட்டம்]] நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.
இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் [[பல்லவர்|பல்லவ]] அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் [[இராஷ்டிரகூடர்]] பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் [[சோழர்]]களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. [[மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்|மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு]] பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), [[திப்பு சுல்தான்]] இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம்]] வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியாவின்]] நிர்வாக துணைப்பிரிவான, [[சென்னை மாகாணம்|மதராசு மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று [[தருமபுரி மாவட்டம்]] நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] ஒரு பகுதியாக இருந்தது.



20:13, 15 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

தருமபுரி
தகடூர்
நகராட்சி
மன்னர் அதியமான் சிலை
மன்னர் அதியமான் சிலை
அடைபெயர்(கள்): தகடூர்
தருமபுரி is located in தமிழ் நாடு
தருமபுரி
தருமபுரி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
தருமபுரி is located in இந்தியா
தருமபுரி
தருமபுரி
தருமபுரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°07′34″N 78°09′14″E / 12.1260°N 78.154°E / 12.1260; 78.154
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்தருமபுரி
நிறுவப்பட்டதுகி.மு. 3 ஆம் நூற்றாண்டு
தோற்றுவித்தவர்அதியமான்
அரசு
 • வகைதேர்வு நிலை நகராட்சி
 • நிர்வாகம்தருமபுரி நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்செ. செந்தில்குமார்
 • சட்டமன்ற உறுப்பினர்பெ. சுப்ரமணி
 • மாவட்ட ஆட்சியர்S. மலர்விழி, இ. ஆ. ப.
பரப்பளவு
 • மொத்தம்25.32 km2 (9.78 sq mi)
பரப்பளவு தரவரிசை9
ஏற்றம்457 m (1,499 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்68,619
 • அடர்த்தி2,700/km2 (7,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு636701,636705
இந்தியாவில் தொலைபேசி எண்கள்4342
வாகனப் பதிவுTN-29
சென்னையிலிருந்து தொலைவு300 கி.மீ (187 மைல்)
கோவையிலிருந்து தொலைவு230 கி.மீ (142 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு207 கி.மீ (128 மைல்)
பெங்களூரிலிருந்து தொலைவு137 கி.மீ (85 மைல்)
இணையதளம்https://dharmapuri.nic.in/ta/

தருமபுரி அல்லது தர்மபுரி (ஆங்கிலம்: Dharmapuri) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது. இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.

இது சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து, பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது. தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அருவி உள்ளது. இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.

சொற்பிறப்பு

தருமபுரி ஆனது சங்க காலத்தில் தகடூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தகடூர் என்ற பெயர், இரண்டு தமிழ் சொற்களிலிருந்து உருவானது, "தகடு" அதாவது இரும்பு (இரும்பு தாது) என்று பொருள் மற்றும் "ஊர்" அதாவது "இடம்" என்று பொருள்படும். தகடூர் என்ற பெயர் சங்க காலத்திற்குப் பிறகு தருமபுரி என மாற்றப்பட்டது, இது விஜயநகரப் பேரரசு காலத்திலோ அல்லது மைசூர் அரசு காலத்திலோ இருக்கலாம்.

வரலாறு

சங்ககாலத்தில் அதியமான் என்னும் அரசன் தகடூரை ஆண்டுவந்தான். தகடூர் யாத்திரை என்னும் நூல் அவன்மீதோ, அவனது முன்னோன் [1] மீதோ பாடப்பட்ட நூல். சேரமான் தகடூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானிடமிருந்து இதனைக் கைப்பற்றி ஆண்டிருக்கிறான்.

இந்த பகுதி 8 ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 9 ஆம் நூற்றாண்டில் இராஷ்டிரகூடர் பொறுப்பேற்றனர். பின்னர் 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் தோற்கடிக்கப்பட்டு, இந்நகரம் சோழர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் போது, இன்றைய தருமபுரி மாவட்டம் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இது பாரமஹால் என்று அழைக்கப்பட்டது. மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போருக்கு பின்னர், செரிங்கப்பட்டம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக (மார்ச் 18, 1792 இல் கையெழுத்திடப்பட்டது), திப்பு சுல்தான் இன்றைய தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட தனது பிரதேசங்களில் ஒரு பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் வழங்க ஒப்புக்கொண்டார். பின்னர் இது பிரித்தானிய இந்தியாவின் நிர்வாக துணைப்பிரிவான, மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அக்டோபர் 2, 1965 அன்று தருமபுரி மாவட்டம் நிறுவப்படும் வரை, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

தருமபுரி நகராட்சி வரலாறு

1964 ஏப்ரல் 1 ஆம் தேதி மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1971 ஆகத்து 5 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1987 ஆகத்து 31 ஆம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் டிசம்பர் 02, 2008 ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் வகைப்பாடு

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
88.99%
முஸ்லிம்கள்
9.65%
கிறிஸ்தவர்கள்
0.99%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
0.01%
மற்றவை
0.33%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,136 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,619 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 85.5%மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6759 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 948 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,748 மற்றும் 98 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.99%, முஸ்லிம்கள் 9.65%, கிறிஸ்தவர்கள் 0.99%, மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[2]

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் பெ. சுப்ரமணி
மக்களவை உறுப்பினர் செ. செந்தில்குமார்

தருமபுரி நகராட்சியானது தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த பெ. சுப்ரமணி வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த செ. செந்தில்குமார் வென்றார்.

போக்குவரத்து

சாலைப் போக்குவரத்து

தருமபுரி ஆனது தேசிய நெடுஞ்சாலை 44 உடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது வடக்கு-தெற்கு பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகரிலிருந்து தோன்றி இந்நகரின் வழியாக சென்று, கன்னியாகுமரியில் முடிகிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் சாலையானது தருமபுரி வழியாக செல்கிறது.

தொடருந்துப் போக்குவரத்து

தருமபுரியில் ஒரு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையமானது, பெங்களூரு - சேலம் பாதையை இணைக்கிறது. பெங்களூரிலிருந்து தமிழகத்தின் மத்திய மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் பாதையானது, தருமபுரி வழியாக செல்கிறது. அதேசமயம் 1907 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு சுமார் 38 ஆண்டுகள் செயல்பட்டு வந்த தருமபுரி - மொராபூர் என்ற மற்றொரு பாதை, இந்திய அரசாங்கத்தால் அகற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவை காரணமாக மின்மயமாக்கலுடன் இந்த பாதை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்த புதிய பாதை தருமபுரி மாவட்ட மக்கள் சென்னை செல்லவதற்கு, மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை பெங்களூர் - சென்னை செல்வதற்கான மாற்று பாதையாகவும் (தருமபுரி வழியாக) இருக்கும்.

வானூர்தி போக்குவரத்து

இங்கிருந்து 47 கி.மீ தொலைவில் கமலாபுரம் என்னும் இடத்தில் உள்ள சேலம் வானூர்தி நிலையமும் மற்றும் 162 கி.மீ தொலைவில் பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையமும் அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும்.

சுற்றுலாத் தளங்கள்

  1. ஒகேனக்கல் அருவி
  2. தீர்த்தமலை

மேற்கோள்கள்

  1. கரும்பிவண் தந்த முன்னோன் மருக
  2. தர்மபுரி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமபுரி&oldid=2816386" இலிருந்து மீள்விக்கப்பட்டது