ஒடிசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 74: வரிசை 74:
# [[பூரி மாவட்டம்|புரி]]
# [[பூரி மாவட்டம்|புரி]]
# [[ராயகடா மாவட்டம்|ராயகடா]]
# [[ராயகடா மாவட்டம்|ராயகடா]]
# [[சம்பல்பூர் மாவட்டம்|சம்பல்பூர்]] gg
# [[சம்பல்பூர் மாவட்டம்|சம்பல்பூர்]]
# [[சுபர்ணபூர் மாவட்டம்|சுபர்ணபூர்]]
# [[சுபர்ணபூர் மாவட்டம்|சுபர்ணபூர்]]
# [[சுந்தர்கட் மாவட்டம்|சுந்தர்கட்]]
# [[சுந்தர்கட் மாவட்டம்|சுந்தர்கட்]]

07:54, 25 செப்தெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

ஒடிசா

ଓଡ଼ିଶା

ஒரிசா
—  மாநிலம்  —
வரைபடம்:ஒடிசா, இந்தியா
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் ஒடிசா
மாவட்டங்கள் 30
நிறுவப்பட்ட நாள் 1 ஏப்ரல் 1936
தலைநகரம் புவனேசுவர்
மிகப்பெரிய நகரம் புவனேசுவர்
ஆளுநர் கணேசி இலால்
முதலமைச்சர் நவீன் பட்நாய்க்
ஆளுனர் சமீர்
முதல்வர் நவீன் பட்நாய்க்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (147 இடம்)
மக்களவைத் தொகுதி ஒடிசா
மக்கள் தொகை

அடர்த்தி

4,19,74,218 (11 வது) (2011)

270/km2 (699/sq mi)

கல்வியறிவு 72.87%% 
மொழிகள் ஒடியா மொழி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 155,820 சதுர கிலோமீட்டர்கள் (60,160 sq mi) (9 வது)
இணையதளம் http://www.orissa.gov.in

ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)) , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.[1]. ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா[2]. ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.

மாவட்டங்கள்

ஒரிசா 31 வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்;

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.87 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது.[3]

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 39,300,341 (93.63 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 911,670 (2.17 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 21,991 (0.05 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 9,420 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 13,852 (0.03 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 478,317 (1.14 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஒரியா மொழியுடன், வங்காளம், தெலுங்கு, இந்தி மற்றும் உருது மொழிகளும் பேசப்படுகிறது.

சுற்றுலா & வழிபாட்டுத் தலங்கள்

ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; கொனார்க் சூரியக் கோயில், புரி ஜெகன்நாதர் கோயில் மற்றும் லிங்கராஜர் கோயில்

விழாக்கள்

ஒரிசாவின் புரி நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் புரி ஜெகன்நாதர் தேரோட்டம் புகழ் வாய்ந்தது.

கலை

ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் ஒடிசி ஆகும்.

போக்குவரத்து

  • தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் நாட்டின் பிற பகுதிகளுடன் புவனேஸ்வரம் மற்றும் புரி நகரங்களுடன் சாலை வழியாக இணைக்கிறது.
  • புவனேஸ்வர் தொடருந்து நிலையம் அனைத்து இந்திய நகரங்களுடன் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது.

[4]

  • புவனேஸ்வர் பிஜுபட்நாயக் பன்னாட்டு விமான நிலையம் இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களுடன் இணைக்கிறது.
  • பாராதீப் துறைமுகம் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

  1. ஒடிசா என பெயர் மாற்றத்தை இந்திய அரசின் மேலவை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவர் பெயர் மாற்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். எனவே இது இனி எல்லா அரசு உத்தரவுகளிலும் ஒடிசா என்றே அழைக்கப்படும்இந்திய மேலவையில் தீர்மானம் ஏற்புகுடியரசு தலைவர் ஒப்புதல்
  2. ஒரியா ஒடியா என மாற்றம்
  3. http://www.census2011.co.in/census/state/orissa.html
  4. http://indiarailinfo.com/departures/bhubaneswar-bbs/238
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிசா&oldid=2806908" இலிருந்து மீள்விக்கப்பட்டது