கிருத்தவ மருத்துவக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 48: வரிசை 48:
[[பகுப்பு:தமிழ்நாட்டு மருத்துவமனைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு மருத்துவமனைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்]]

07:07, 29 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
அமைவிடம் வேலூர், தமிழ்நாடு, இந்தியா
நிறுவல் 1900
வலைத்தளம் கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
பட்டியல்கள்
சமூக நலம் மற்றும் மேம்பாடு கட்டிடம், பாகாயம் கிராமம், வேலூர்

கிருத்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்று. 1900ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி வேலூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும். இதன் நிறுவனர் மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் ஆவார். இந்த மருத்துவக்கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ஐடா ஸ்கட்டர்

வரலாறு

மருத்துவர் ஐடா சோபியா ஸ்கட்டர் என்பவரின் முயற்சியால் வேலூரில் ஒரு மருத்துவமனையும், பின்னர் 1908 இல் செவியர் பயிற்சி பள்ளியும் தொடங்கப்பட்டன. பின்னர் அவரின் தொடர் முயற்சியால் 1918 ஆகத்து 12 இல் யூனியன் மிஷனரி பள்ளி என்ற பெயரிலான பெண்களுக்கான மருத்துவப் பள்ளியாக தொடங்கப்பட்ட இதை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது முதல், இங்கு பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். [1]

மேற்கோள்கள்

  1. வ. செந்தில்குமார் (2018 மே 12). "சி.எம்.சி. 100: தென்னக மருத்துவப் பெருமிதம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்