ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°47′N 78°42′E / 12.78°N 78.7°E / 12.78; 78.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ambur no 1 Online Media
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Ah3kalஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 242: வரிசை 242:


==ஆம்பூர் நகரத்தின் இணைய தளங்கள்==
==ஆம்பூர் நகரத்தின் இணைய தளங்கள்==
* [http://amburtimes.in/ ஆம்பூர் டைம்ஸ்]
*[http://Facebook.Com/G19Ambur G19Ambur]
* [http://amburnet.com/ ஆம்பூர் நெட்]
* [http://amburnet.com/ ஆம்பூர் நெட்]



16:25, 23 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

ஆம்பூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
ஆம்பூர்
இருப்பிடம்: ஆம்பூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°47′N 78°42′E / 12.78°N 78.7°E / 12.78; 78.7
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் சங்கீதா பாலசுப்ரமணியம்
மக்கள் தொகை

அடர்த்தி

113,856 (2011)

6/km2 (16/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

17.97 சதுர கிலோமீட்டர்கள் (6.94 sq mi)

316 மீட்டர்கள் (1,037 அடி)

குறியீடுகள்

ஆம்பூர் (ஆங்கிலம்:Ambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும்[4], ஆம்பூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும்.

ஆம்பூர் பெயர் காரணம்

'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.[5] ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்.

தொழிற்சாலைகள்

ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். பல காலணிகள் கடைகளும் உள்ளன. இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன. குறிப்பிடத்தக்க தொழிற்சாலையில் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.

சுற்றுச்சூழல் மாசுறுதல்

தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது[6]. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன[7].

இரைச்சல் மாசு (noise pollution) பரவலாக ஆம்பூரில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது[8].

சட்டமன்ற தொகுதி

வேலூர் மாவட்டத்தில் புதிதாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் வட்டத்தைச் சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை கிராமங்களும், வாணியம்பாடி வட்டத்தைச் சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்களும், ஆம்பூர் நகராட்சியும் அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°47′N 78°42′E / 12.78°N 78.7°E / 12.78; 78.7 ஆகும்[9]. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 316 மீட்டர் (1036 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[10] இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%, பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும். மக்கள் தொகையில் 12,150 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 45.80%,,முஸ்லிம்கள் 50.10%, கிறித்தவர்கள் 3.83% ஆவார்கள்.[11]

வழிபாட்டுத்தலங்கள்

கோவில்கள்

1. நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்), ஆம்பூர்

2. சாமுண்டீஸ்வரி கோவில், பெரியாங்குப்பம்

3. கைலாசகிரி மலை, கைலாசகிரி

4. முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை

5. பெருமாள் கோவில், ஆம்பூர்

6. கங்கையம்மன் கோவில், ஆம்பூர்

7. ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர்

8. சாமுண்டியம்மன் கோவில், ஆம்பூர்

9. காளியம்மன் கோவில், ஆம்பூர்

10. கங்கையம்மன் கோவில், சாணாங்குப்பம்

11. பிள்ளையார் கோவில், சாணாங்குப்பம்

12. அழகிய அம்மன் கோவில், சாணாங்குப்பம்

13. ௧ற்பக விநாயகர் கோவில், வீராங்குப்பம்

14. சாமுண்டீஸ்வரி கோவில், வீராங்குப்பம்

மசூதிகள்

1. ஜாமியா மசூதி, ஆம்பூர்

2. முகமதுபுறா மசூதி, ஆம்பூர்

3. சிறிய மசூதி, ஆம்பூர்

4. சந்தாபெட் மசூதி, ஆம்பூர்

5. அக்பர் மசூதி ரெட்டி தோப்பு, ஆம்பூர்

தேவாலயங்கள்

1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர்

2. சி.எஸ்.ஐ தேவாலயம், ஆம்பூர்

3. தென்னிந்திய தேவாலயம், ஆம்பூர்

4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூர்

கல்வி நிலையங்கள்

1. மஜாருல் உலூம் கல்லூரி

2. இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர்

3. இந்து பெண்கள் மேனிலைப்பள்ளி

4. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி

5. கேஏஆர் பாலிடெக்னிக்

6. மஜாருல் உலூம் மேனிலைப்பள்ளி

7. ஹஸ்னத்-இ-ஜாரியாஹ் பெண்கள் மேனிலைப்பள்ளி

8. டி. அப்துல் வாஹிப் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி

9.அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி

10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி

11. கன்கார்டியா மேனிலைப்பள்ளி

12. ஹபிபியா ஓரியன்டல் பெண்கள் மேனிலைப்பள்ளி

13. அல் அமீன் பள்ளி

14. பிலெசோ மெட்ரிகுலேஷன் பள்ளி

15. பெத்தேல் மெட்ரிகுலேஷன் பள்ளி

16. நடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம்

17. இந்து மேனிலைப்பள்ளி, கரும்பூர்

18. கிரெசியஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி

19. சாலமன் ஆரம்ப ஆங்கிலப்பள்ளி, பெரியாங்குப்பம்

20. ஜலாலியா ஆரம்ப ஆண்கள் பள்ளி

21.விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி

22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம்

போக்குவரத்து

ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச். 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் (வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர்) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், சென்னை-சோலையார்பேட்டை இரயில் வழியில் உள்ளதால் பல (சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம்) நகரங்களுக்குச் செல்லும் இரயில் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.

வரலாறு

  • இரண்டாம் கருனாடகப்போரில், 1749 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மூன்றாம் நாள் முஜாபர் ஜங்- சந்தா சாகிப் கூட்டு படைகளும் -பிரான்சு படைகளும் இணைந்து ஆற்காடு நவாபு முகமது அன்வருதீன்கான் படைகளுடன் ஆம்பூரில் போரிட்டன. இப்போரில், ஆற்காடு நவாபு, முகமது அன்வருதீன்கான் மரணமடைந்தார். இப்போர் ஆம்பூர் போர் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் பெரிய போர் ஆம்பூர் போராகும்[12].
  • ஆம்பூர் முற்றுகை போர் முதலாம் ஆங்கிலேய - மைசூர் போரின்போது 1767 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் - திசம்பர் 7 ஆம் தேதி வரை ஆம்பூர் நகரத்திற்கு எதிராக ஐதர் அலியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்றுகைப் போராகும். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கேப்டன் கால்வெர்ட் உள்ளூர் படையினரின் உதவியுடன், ஒரு சிறிய படையைக் கொண்டு ஆம்பூர் நகரத்தை வெற்றிகரமாக பாதுகாத்துக் கொண்டார்[13].

தட்பவெட்பநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், ஆம்பூர் (2000–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
11.0
(51.8)
10.2
(50.4)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: India Meteorological Department,[14]

புகழ் பெற்றவர்கள்

இந்திய அரசு வழங்கும் பத்மசிறீ பட்டம் பெற்றவர்கள்

1. மெக்கா ரபீக் அஹ்மத் - தொழில் மற்றும் வணிகம் - 2011

2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி - மருத்துவம் - 2011

ஆம்பூர் நகரத்தின் இணைய தளங்கள்

படங்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. ஆம்பூர் நகராட்சியின் இணையதளம்
  5. மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).
  6. Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar (March 2014). "Delineation of fresh aquifers in tannery belt for sustainable development — A case study from southern India". Journal of the Geological Society of India 83 (3): 279-289. doi:10.1007/s12594-014-0040-3. 
  7. "தமிழ்நாடு மாசு தொழிற்சாலைகள் கண்காணிக்க வேண்டுகோள்.". தினமலர். 22 செப் 2012. 
  8. Sahebrao Sonkamble, V. Satish Kumar, B. Amarender, P. M. Dhunde, S. Sethurama, K. Raj Kumar (சனவரி 2005). "Evaluation and analysis of the noise quality of Ambur, Tamil Nadu, India.". J Environ Sci Eng. 47 (1): 7-12. 
  9. "Ambur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  10. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  11. "Towns in Vellore - Religion 2011". பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
  12. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  13. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
  14. "Climatological Information for Tirupattur,India". India Meteorological Department.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பூர்&oldid=2791489" இலிருந்து மீள்விக்கப்பட்டது