சந்திரயான்-2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 62: வரிசை 62:
* [[சந்திரயான்-1]]
* [[சந்திரயான்-1]]


== வெளியிணைப்புக்கள் @dazling-queen-d-d ==
== வெளியிணைப்புக்கள் ==
* [http://www.viparam.com/விஞ்-தொ.நு/34997--.html viparam.com]
* [http://www.viparam.com/விஞ்-தொ.நு/34997--.html viparam.com]
*[http://www.ariviyal.in/2018/03/2.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FCEsJJ+%28அறிவியல்புரம்%29 சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை]
*[http://www.ariviyal.in/2018/03/2.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FCEsJJ+%28அறிவியல்புரம்%29 சந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை]

02:03, 10 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

சந்திரயான்-2
Chandrayaan-2
சந்திராயன்-2 தரை இறங்கு கலன் மற்றும் விண்சுற்றுக்கலன் ஒருங்கிணைந்த அடுக்கு
திட்ட வகைநிலா சுற்றுக்கலன், தரையிறங்கி கலன், ஆய்வுக்கலன்
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இணையதளம்www.isro.gov.in/chandrayaan2-home
திட்டக் காலம்சுற்றுக்கலன்: 1 ஆண்டு
விக்ரம் தரையிறங்கி: <15 நாட்கள்[1]
பிரக்யான் ஆய்வுக்கலன்: <15 நாட்கள்[1]
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புஇந்திய விண்வெளி ஆய்வு மையம்
ஏவல் திணிவுகூட்டு (ஈரம்): 3,850 kg (8,490 lb)[2][3][4]
கூட்டு (உலர்): 1,308 kg (2,884 lb)[5]
ஏற்புச்சுமை-நிறைசுற்றுக்கலன் (ஈரம்): 2,379 kg (5,245 lb)[3][4]
சுற்றுக்கலன் (உலர்): 682 kg (1,504 lb)[5]
விக்ரம் தரையிறங்கி (ஈரம்): 1,471 kg (3,243 lb)[3][4]
விக்ரம் தரையிறங்கி (உலர்): 626 kg (1,380 lb)[5]
பிரக்யான் உலாவி: 27 kg (60 lb)[3][4]
திறன்சுற்றுக்கலன்: 1 kW[6]

விக்ரம் தரையிறங்கி: 650 W

பிரக்யான் உலாவி: 50 W
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்சூலை 22, 2019, 14:43 இசீநே (09:13 ஒசநே)[7]
ஏவுகலன்ஜி. எஸ். எல். வி மார்க் III[8][9]
ஏவலிடம்சதீஸ் தவான் விண்வெளி மையம் இரண்டாவது ஏவுதளம்
ஒப்பந்தக்காரர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
நிலா சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்செப்டம்பர் 7, 2019 (திட்டம்)[10][11]
----
சந்திரயான் திட்டம்
← சந்திரயான்-1 சந்திரயான்-3

சந்திரயான்-2 (Chandrayaan-2)[12][13] என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.[14] இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,[15][16] ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019 சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.[17] [8][9] இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி (ஆய்வுக் கலன்) ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன.[18]

2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லுகளுடனான உலாவி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளும். இது தான் திரட்டிய தரவுகளை சுற்றுக்கலன் மற்றும் தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பும். சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும்.[19][20][21]

சந்திரயான் திட்டங்கள்

நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

சந்திரயான்-1 செயற்கைகோளில் இருந்த சூரிய சக்தி கருவி பழுதடைந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 100 கி.மீட்டருக்கு பதில் 200 கி.மீ. உயரத்தில் சந்திரயான் -1 சுற்றிக் கொண்டிருந்தது. எனினும் 95 சதவீத பணிகளை அது முடித்து விட்டதாக `இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சந்திரயான் 2 திட்டத்துக்கான செயற்கை கோளை தயாரிக்கும் பணிகள் முடிந்தன.

இப்பணித்திட்டங்களின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

என்னென்ன கருவிகள்

சந்திரயான்-2 திட்டத்தின் படி ஒரு செயற்கைகோள், அதை விண்ணில் எடுத்துச் செல்வதற்கான ஏவூர்தி (ஆர்பிட்டல் பிளைட் வெகிகிள்), நிலவில் தரையிறங்கி சோதனை நடத்துவதற்காக லேண்ட் ரோவர் கருவி ஆகியவை தயாரிக்கப்பட்டன. இது தவிர செயற்கை கோளில் பிற நாடுகளின் சார்பாகவும் கருவிகள் அனுப்ப திட்டமிடப்பட்டது. அது தொடர்பாக வெளிநாடுகளிடம் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த நாடுகளின் கருவிகளை சுமந்து செல்வதற்காக, இஸ்ரோவுக்கு அவை கட்டணம் செலுத்த வேண்டும்.

தொழில்நுட்பக் கோளாறுகளால் சந்திராயன்-2 ஏவுதலில் ஏற்பட்ட தாமதம்

சந்திராயன்-2, 2019 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது. விண்கலம் ஏவப்பட 56 நிமிடங்கள் இருந்த போது, சந்திராயன்-2 திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சந்திராயனை ஏவும் ஏவுதளக் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் இவ்வாறு நிகழ்ந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பின்னர் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்ப்பட்டு விட்டதாகவும், சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அறிவிக்கப்பட்டது.[22][23]

சந்திராயன்-2 ஏவுதல்

சந்திராயன்-2 சூலை 22 ஆம் நாள் பிற்பகல் 2.43 மணிக்குச் சரியாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2019, செப்டம்பர் 8 ஆம் நாள் நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்டது.[24]

இவற்றையும் பார்க்கவும்‌

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. 1.0 1.1 Nair, Avinash (31 May 2015). "ISRO to deliver "eyes and ears" of Chandrayaan-2 by 2015-end". The Indian Express. http://indianexpress.com/article/technology/science/sac-to-deliver-eyes-and-ears-of-chandrayaan-2-by-2015-end. பார்த்த நாள்: 7 August 2016. 
  2. "Launch Kit of GSLV Mk III M1 Chandrayaan-2" (PDF). ISRO. 19 July 2019. Archived from the original (PDF) on 19 July 2019. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 "Chandrayaan-2 to Be Launched in January 2019, Says ISRO Chief". Gadgets360. Press Trust of India (என்டிடிவி). 29 August 2018. https://gadgets.ndtv.com/science/news/chandrayaan-2-to-be-launched-in-january-2019-says-isro-chief-1907969. பார்த்த நாள்: 29 August 2018. 
  4. 4.0 4.1 4.2 4.3 "ISRO to send first Indian into Space by 2022 as announced by PM, says Dr Jitendra Singh". Indian Department of Space. 28 August 2018. பார்க்கப்பட்ட நாள் 29 August 2018.
  5. 5.0 5.1 5.2 "Chandrayaan-2: All you need to know about India’s 2nd Moon mission". 22 July 2019 இம் மூலத்தில் இருந்து 14 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190714030717/https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-all-you-need-to-know-about-indias-2nd-moon-mission/articleshow/70207662.cms. பார்த்த நாள்: 22 July 2019. 
  6. "Chandrayaan-2 - Home". இந்திய விண்வெளி ஆய்வு மையம். பார்க்கப்பட்ட நாள் June 20, 2019.
  7. "CHANDRAYAAN -2 LAUNCH RESCHEDULED ON 22ND JULY, 2019, AT 14:43 HRS". இந்திய விண்வெளி ஆய்வு மையம். July 18, 2019. பார்க்கப்பட்ட நாள் July 18, 2019. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  8. 8.0 8.1 Singh, Surendra (5 August 2018). "Chandrayaan-2 launch put off: India, Israel in lunar race for 4th position". The Times of India. Times News Network. https://timesofindia.indiatimes.com/india/chandrayaan-2-launch-put-off-india-israel-in-lunar-race-for-4th-position/articleshow/65275012.cms. பார்த்த நாள்: 15 August 2018. 
  9. 9.0 9.1 Shenoy, Jaideep (28 February 2016). "ISRO chief signals India's readiness for Chandrayaan II mission". The Times of India. Times News Network. http://timesofindia.indiatimes.com/city/mangaluru/ISRO-chief-signals-Indias-readiness-for-Chandrayaan-II-mission/articleshow/51178528.cms. பார்த்த நாள்: 7 August 2016. 
  10. "Press Meet - Briefing by Dr. K Sivan, Chairman, ISRO". isro.gov.in. இந்திய விண்வெளி ஆய்வு மையம். 12 June 2019. பார்க்கப்பட்ட நாள் 12 June 2019.
  11. "GSLV-Mk III - M1 / Chandrayaan-2 Mission". ISRO.gov.in. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.
  12. "candra". Spoken Sanskrit. பார்க்கப்பட்ட நாள் 5 November 2008.
  13. "yaana". Spoken Sanskrit. பார்க்கப்பட்ட நாள் 5 November 2008.
  14. "ISRO begins flight integration activity for Chandrayaan-2, as scientists tests lander and rover". The Indian Express. Press Trust of India. 25 October 2017. http://indianexpress.com/article/technology/science/isro-begins-flight-integration-activity-for-chandrayaan-2-as-scientists-tests-lander-and-rover-4905883/. பார்த்த நாள்: 21 December 2017. 
  15. Kumar, Chethan (10 June 2019). "Chandrayaan-2 nearly ready for July launch". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2019.
  16. d. s, Madhumathi (9 June 2019). "ISRO gears up for Chandrayaan-2 mission". The Hindu. https://www.thehindu.com/sci-tech/science/isro-gears-up-for-chandrayaan-2-mission/article27705909.ece. 
  17. https://www.indiatoday.in/science/story/chandrayaan-2-launch-bahubali-rocket-takeoff-2-43-pm-monday-1572017-2019-07-21
  18. Bagla, Pallava (4 August 2018). "India Slips in Lunar Race with Israel As Ambitious Mission Hits Delays". NDTV. https://www.ndtv.com/india-news/chandrayaan-2-delayed-israel-could-beat-india-in-race-to-moons-surface-1895221. பார்த்த நாள்: 15 August 2018. 
  19. Subramanian, T. S. (4 January 2007). "ISRO plans Moon rover". The Hindu. http://www.thehindu.com/todays-paper/article1777631.ece. பார்த்த நாள்: 22 October 2008. 
  20. Rathinavel, T.; Singh, Jitendra (24 November 2016). "Question No. 1084: Deployment of Rover on Lunar Surface" (PDF). மாநிலங்களவை.
  21. "Launch kit at a glance".
  22. "சந்திராயன் 2 விண்கலம் ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ". நியூஸ் 18 தமிழ். 18 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2019.
  23. "சந்திராயன் 2 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு". இந்து தமிழ் திசை. 18 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2019.
  24. "விண்ணில் பாய்ந்தது சந்திராயன் -2: இஸ்ரோ சாதனை". இந்து தமிழ் திசை. 22 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரயான்-2&oldid=2786348" இலிருந்து மீள்விக்கப்பட்டது