ஓ. பன்னீர்செல்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 95: வரிசை 95:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்]] எனும் ஊரில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
[[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்]] எனும் ஊரில் பிறந்தவர். அங்குள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பில் தேறினார். பின்னர் [[உத்தமபாளையம் | உத்தமபாளையத்தில்]] உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றவர்.
இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும் [[இரவீந்திரநாத் குமார்]], ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும்<ref name = "ops">[https://www.vikatan.com/government-and-politics/politics/opanneerselvam-son-raveendranath-kumar-political-status ஆனந்தவிகடன் 8-8-2019]</ref> ஒரு மகளும் உள்ளனர். ராஜா என்ற தம்பியும் உள்ளார்.<ref name = "ops"/>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

07:37, 1 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

ஓ. பன்னீர்செல்வம்
2017 ஆம் ஆண்டில் பன்னீர்செல்வம்
துணை முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 ஆகஸ்ட் 2017
ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
முன்னையவர்மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர்
பதவியில்
6 டிசம்பர் 2016 – 15 பிப்ரவரி 2017
முன்னையவர்ஜெயலலிதா
பின்னவர்பழனிசாமி
தொகுதிபோடிநாயக்கனூர்
பதவியில்
29 செப்டம்பர் 2014 – 22 மே 2015
முன்னையவர்ஜெயலலிதா
பின்னவர்ஜெயலலிதா
தொகுதிபோடிநாயக்கனூர்
பதவியில்
21 செப்டம்பர் 2001 – 1 மார்ச் 2002
முன்னையவர்ஜெயலலிதா
பின்னவர்ஜெயலலிதா
தொகுதிபெரியகுளம்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001 – இன்று வரை
வருவாய்த்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
13 திசம்பர் 2002 – 12 மே 2006
பொதுப்பணித்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
2 மார்ச்சு 2002 – 12 திசம்பர் 2002
வருவாய்த்துறை அமைச்சர், தமிழ்நாடு
பதவியில்
19 மே 2002 – 1 செப்டம்பர் 2001
நகர்மன்றத் தலைவர் - பெரியகுளம் நகராட்சி
பதவியில்
1996–2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 14, 1951 (1951-01-14) (அகவை 73)
பெரியகுளம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅஇஅதிமுக
துணைவர்விஜயலட்சுமி
பிள்ளைகள்மூன்று
பெற்றோர்
  • ஓட்டக்கார தேவர் (father)

ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் (ஆங்கில மொழி: O.Panneer Selvam, பிறப்பு: ஜனவரி 14 1951) எனும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்றும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.

உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார்.

சட்டமன்றப் பங்களிப்புகள்

இவர் 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு தேர்தல்

2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 ஆம் ஆண்டு தேர்தல்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு தேர்தல்

2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2011 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.

2016 ஆம் ஆண்டு தேர்தல்

2016 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவர் - 16 மே 2016 முதல் பொறுப்பினை ஏற்றுப் பணியாற்றினார்.

தமிழக முதல்வராக

முதல் முறை

டான்சி வழக்கில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர முடியாத காரணத்தால் இவர் 2001 செப்டம்பர் 21 முதல் 2002 மார்ச் 1 ஆம் தேதி வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.

இரண்டாம் முறை

27 செப்டம்பர் 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பலம் வாய்ந்த அ. தி. மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து பேசி சட்டமன்றக் கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர்.[2] சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக தலைவர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து 22.05.2015 அன்று நடந்த அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மூன்றாவது முறை

5 டிசம்பர் 2016 அன்று முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, பன்னீர் செல்வம் 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.[3]

அதிமுகவின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 5 பிப்ரவரி 2017 அன்று தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.[4]

அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என ஆளுநர் அறிவித்தார். இந்நிலையில் 7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதன் பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. 12 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 8 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 10 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

துணை முதல்வர்

அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஓ பன்னீர் செல்வம் அணியும் 2017 ஆகத்து 21 இல் இணைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வரானார்.[5]

வாழ்க்கைக் குறிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் எனும் ஊரில் பிறந்தவர். அங்குள்ள விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பில் தேறினார். பின்னர் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றவர். இவருக்கு விஜயலட்சுமி என்னும் மனைவியும் இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும்[6] ஒரு மகளும் உள்ளனர். ராஜா என்ற தம்பியும் உள்ளார்.[6]

மேற்கோள்கள்

  1. Jayalalitha retains O Panneerselvam as AIADMK treasurer
  2. தமிழக முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம்
  3. "Panneerselvam sworn in as Tamil Nadu Chief Minister for third time". தி இந்து. 6 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 டிசம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "தமிழகத்தின் 21-வது முதல்வராகிறார் சசிகலா: ஆளுநர் மாளிகையில் 9-ம் தேதி பதவியேற்பு விழா". தி இந்து (தமிழ்). 6 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 பிப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை". செய்தி. தி இந்து. 2017 ஆகத்து 22. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. 6.0 6.1 ஆனந்தவிகடன் 8-8-2019

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டு முதலமைச்சர்
2001–2002
பின்னர்
ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாட்டு முதலமைச்சர்
2014–2015
தமிழ்நாட்டு முதலமைச்சர்
டிசம்பர் 6, 2016 - பெப்ரவரி 16, 2017
பின்னர்
எடப்பாடி க. பழனிசாமி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._பன்னீர்செல்வம்&oldid=2783489" இலிருந்து மீள்விக்கப்பட்டது