கரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°57′29″N 78°04′43″E / 10.958°N 78.0786°E / 10.958; 78.0786
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Other uses|கரூர் (பக்கவழி நெறிப்படுத்தல்)}}
{{Other uses|கரூர் (பக்கவழி நெறிப்படுத்தல்)}}
{{Infobox Indian jurisdiction|
{{Infobox Indian jurisdiction|
நகரத்தின் பெயர் = கரூர்|
நகரத்தின் பெயர் = [[கரூர்]]|
வகை = பெருநகரம் |
வகை = பெருநகரம் |
latd = 10.958 | longd=78.0786|
latd = 10.958 | longd=78.0786|

07:35, 23 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

கரூர்
—  பெருநகரம்  —
கரூர் நகராட்சி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் அமைந்துள்ளது
அமைவிடம் 10°57′29″N 78°04′43″E / 10.958°N 78.0786°E / 10.958; 78.0786
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
நகராட்சித் தலைவர் காலியாக உள்ளது
ஆணையர் ரமணி
மக்களவைத் தொகுதி கரூர்
மக்கள் தொகை

அடர்த்தி

2,33,000 (2011)

39,094/km2 (101,253/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.96 சதுர கிலோமீட்டர்கள் (2.30 sq mi)
குறியீடுகள்
இணையதளம் http://123.63.242.116/karur/


கரூர் (ஆங்கிலம்:karur) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் தலைநகராகவும், நகராட்சியாகவும்[1] உள்ளது.

கரூரானது பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களை மதுரை உட்பட தென்மாவட்டங்களோடும், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய கிழக்கு மாவட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாகவும் விளங்குகிறது.

அமைவிடம்

கரூரானது தமிழகத்தின் மைய மாவட்டமாகும். இது திருச்சிக்கு மேற்கே 78 கி.மீ தொலைவிலும், ஈரோடிற்குத் தென் கிழக்கே 60 கி.மீ தொலைவிலும், சேலத்திற்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலும், மதுரைக்கு வடக்கே 143 கி.மீ தொலைவிலும், கோவைக்குக் கிழக்கே 135 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

கரூர் பசுபதீசுவரர் ஆலயம்

2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது.

கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.

கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.

பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கரூரில் 233000 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 75.98% விட கூடியதே. கரூர் மக்கள் தொகையில் 11.22% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நகர நிர்வாகம்

கரூர் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். 5.96 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்நகராட்சி 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நகராட்சித்தலைவர் மற்றும் ஆணையரால் நிர்வகிக்கபடுகிறது. 338 தெருக்களை உடைய இந்நகராட்சியில் சொத்துவரி,குடிநீர் வரி வசூலித்தல் மற்றும் குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை நகர நிர்வாகம் மேற்கொள்கிறது.

போக்குவரத்து

கரூர் அருகில் உள்ள பெரிய நகரங்களுடன் சாலை வழியாகவும் இருப்புப் பாதை வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 7 மற்றும் எண் 67 கரூர் வழியாகச் செல்கிறது. மேலும் கரூரில் இருந்து சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு இருப்புப் பாதை இணைப்பு உள்ளது.

கல்லூரிகள்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2 அரசு கல்லூரியும், 2 மகளிர் கல்லூரியும் அடங்கும்.

மேற்கோள்கள்

  1. கரூர் நகராட்சியின் இணையதளம்
  2. - Karur District;Karur Taluk;Karur (M) Town இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்&oldid=2779667" இலிருந்து மீள்விக்கப்பட்டது