உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Vp1994 பக்கம் வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவு என்பதை உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு என்பதற்கு நகர்த்தினார்: More appropriate page title
(வேறுபாடு ஏதுமில்லை)

21:39, 2 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

வலிகாமம் தெற்கு
பிரதேசச் செயலாளர் பிரிவு
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
நேர வலயம்இலங்கை தர நேரம் (ஒசநே+5:30)

வலிகாமம் தெற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு (Valikamam South Divisional Secretariat) அல்லது உடுவில் பிரதேசச் செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 30 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. உடுவில், சுன்னாகம், சங்குவேலி, கந்தரோடை, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், குப்பிளான், ஈவினை, இணுவில், தாவடி ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட இப் பிரிவின் வடக்கில் தெல்லிப்பழை பிரதேசச் செயலாளர் பிரிவும், மேற்கில் சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும், தெற்கில் நல்லூர் பிரதேசச் செயலாளர் பிரிவும், கிழக்கில் கோப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவும் அமைத்துள்ளன.

இப்பிரிவு 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்[1].

முகவரி

வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம், உடுவில் கிழக்கு, சுன்னாகம், இலங்கை

குறிப்புக்கள்

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்