பிரம்மஞான சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19: வரிசை 19:


===சர்ப்பம்===
===சர்ப்பம்===
பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.<ref>https://en.wikipedia.org/wiki/Serpent_(symbolism)</ref>. பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்ச்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.<ref>https://en.wikipedia.org/wiki/Serpent_(symbolism)</ref>. பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.


===இரண்டு முக்கோணங்கள்===
===இரண்டு முக்கோணங்கள்===

22:28, 5 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

பிரம்மஞான சபை (The Theosophical Society) என்பது உலக சகோதரத்துவத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும்.[1] இது 1875ல் நியூயார்க் நகரில் 17ஆம் தேதி துவக்கப்பட்டது. இதன் சர்வதேச தலைமையகம் 1882 முதல் இந்தியாவின் சென்னை, அடையார் இல் அமைந்துள்ளது.

வரலாறு

நிறுவியவர்கள்

1875 செப்டம்பர் 8 இல் தியோசபிக்கல் சபை அமைப்பது குறித்த குறிப்புகள் வெளியிடப்பட்டன.

தியோசபிக்கல் சபை அதிகாரபூர்வமாக 1875 நவம்பரில் எலனா பிளவாத்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஆல்காட், வில்லியம் ஜட்ச் மற்றும் சிலரால் சேர்ந்து அமைக்கப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் ஆல்காட், பிளவாத்ஸ்கி ஆகியோர் இந்தியாவுக்கு வந்து சென்னையில் அடையாரில் தமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவினார்கள்.[2] [3]

அமைப்பின் குறிக்கோள்கள்

  1. இனம், மதம், பால், ஜாதி அல்லது வேறுபாடின்றி மனித உலகளாவிய அளவில் சகோதரத்துத்தை ஒரு மையக்கருவை வைத்து ஒரு சமுதாயம் உருவாக்குவதற்கு.
  2. சமயம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை ஒப்பீட்டு ஆய்வுகலைச் செய்து ஊக்குவிக்க.
  3. இயற்கையின் விவரிக்க முடியாத சட்டங்கள் மற்றும் மனிதன் பொதிந்த அதிகாரங்களை அறிய முற்படுவது.

இலச்சினை விளக்கம்

ஓம் என்ற எழுத்து

இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுத்து (ஓம்) இந்து, புத்த மற்றும் பிற மதங்களாலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தைக் குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. [4]

ஸ்வஸ்திக் சின்னம்

வலப்புறமாக சுற்றும் வகையில் அமைந்துள்ள சிலுவை போன்ற அமைப்பு. "ஸ்வஸ்திக்" என்ற சமஸ்கிரத சொல்லுக்கு நலம் என்ற அடிப்படையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. அதனை சுற்றி உள்ள வட்டம் ஒரு எல்லையில் தான் இந்த பரிணாம் நடக்கும் என்பதை விலக்குகிறது. பரிணாம வளர்ச்சியின் அடைப்படையில் சக்தி ஒரு இடத்தில் சேர்ந்து பின்பு பிரியும் என்பதற்கான தத்துவத்தை குறிக்கிறது. [5]

சர்ப்பம்

பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.[6]. பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.

இரண்டு முக்கோணங்கள்

இந்திய சாஸ்திரங்களில் இது ஸ்ரீ யந்த்ரா அல்லது சத்கோண சக்கரம் என்றழைக்கப்படுகிறது. இது ஆறு புள்ளிகளை கொண்ட நட்சத்திர வடிவம் கொண்டுள்ளது. இது பல ஜுடையிசம், இந்து மதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதத்தை பொறுத்த வரையில் தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி எனவும், இந்து மதத்தில் சிவா, விஷ்ணு மற்றும் பிரம்மா எனவும் குறிப்பிடுகின்றனர்.

தலைமையகம்

அடையார் பிரம்ம ஞான சபையின் தலைமையிடம், 1890.

19 டிசம்பர் 1882 அன்று அடையார் பிரம்ம ஞான சபையின் தலைமையிடமானது.[7]. சென்னை அடையார் திரு.வி.க. பாலத்திற்கு அருகே சுமார் 270 ஏக்கர் பரப்பளவில் பிரம்ம ஞான சபையின் சர்வதேச தலைமையகம் அமைந்துள்ளது.[8]

அன்னி பெசண்ட் அம்மையாரின் பங்கு

பிரம்மஞான சபையைச் சேர்ந்தவர்கள் (பிரம்மஞானிகள்) பின்வரும் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் அன்னி பெசண்ட் அம்மையார்[9]:

  1. ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன்
  2. பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன்.
  3. பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்

கிளைகள்

கல்லூரிகள்

மேற்கோள்கள்

  1. "உலக சகோதரத்துவ அமைப்பு பிரம்மஞான சபை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2013.
  2. Kirby, W. F. (January 1885). "The Theosophical Society". Time (London) XII (1): 47-55. (London: Swan Sonnenschein). இணையக் கணினி நூலக மையம் 228708807. Google Books Search. Retrieved 2011-01-12. Profile by the பூச்சியியல் and folklorist William Forsell Kirby.
  3. http://www.theosophy.org.uk/index.php/about-us/history
  4. http://www.theosophical.ca/books/TheosophicalSeal_AMCoon.pdf
  5. http://www.sanskrit.org/www/Hindu%20Primer/swastika.html
  6. https://en.wikipedia.org/wiki/Serpent_(symbolism)
  7. http://www.blavatskyarchives.com/hodgson11.htm The Theosophical Society. Russian Intrigue or Religious Evolution?
  8. Madras, Chennai: A 400-year Record of the First City of Modern India, Volume 1
  9. நமது வேரைக் காட்டிய மாதரசி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மஞான_சபை&oldid=2753055" இலிருந்து மீள்விக்கப்பட்டது