மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின் வருமாறு:

:''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ'' <ref>அகம்:265</ref>
:''பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
:சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
:நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ'' <ref>அகம்:265</ref>

நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.

23:01, 13 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத் திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல்.[1][2]

வாழ்க்கை

மாமூலனார் பிராமண குடியைச் சேர்ந்தவர்.[3] நந்தர்களையும் மெளரயர்களையும் பற்றி இவர் பாடுவதால் கி. மு. 320 க்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.[4] இவருடைய படைப்புகள் வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டுபவையாக உள்ளன.[4][5]

படைப்புகள்

மமாமூலனார் குறுந்தொகையில்1 பாடல், நற்றிணையில் 2 பாடல்கள், அகநானுாற்றில் 27 பாடல்கள் மற்றும் திருவள்ளுவ மாலையில் 1 பாடலையும் பாடியுள்ளார்

பாலைத் திணை பாடல்கள்

வரலாற்றுக் குறிப்புகள்

கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின் வருமாறு:

பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ [6]

நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். கோசருக்குப் பணியாத பாண்டி நாட்டு மோகூர் இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.

வெல்கொடி
துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம்முனை சிதைத்த ஞான்றை,
மோகூர் பணியாமையின், பகை தலைவந்த
மாபெருந்தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை [7]

திருவள்ளுவா் பற்றி

திருவள்ளுவரைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறார்

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

மேலும் காண்க

திருவள்ளுவமாலை

சங்கப் புலவா்கள்

சங்கப் புலவா்கள்

சங்க இலக்கியங்கள்

மேற்கோள்கள்

  1. Vedanayagam, Rama (2017). Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum (in Tamil) (1 ed.). Chennai: Manimekalai Prasuram. pp. 19–20.
  2. Mamoolanar: wikipedia
  3. Kowmareeshwari (Ed.), S. (August 2012). Kurunthogai, Paripaadal, Kalitthogai. Sanga Ilakkiyam (in Tamil). 2 (1 ed.). Chennai: Saradha Pathippagam. p. 450.
  4. 4.0 4.1 Kowmareeshwari (Ed.), S. (August 2012). Agananuru, Purananuru. Sanga Ilakkiyam (in Tamil). 3 (1 ed.). Chennai: Saradha Pathippagam. p. 251.
  5. Desikar, S. Dhandapani (1969). Tirukkural Alagum Amaippum (திருக்குறள் அழகும் அமைப்பும்) (in Tamil). Chennai: Tamil Valarcchi Iyakkam. p. 129
  6. அகம்:265
  7. அகநானூறு 251-12 மாமூலனார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமூலனார்&oldid=2690772" இலிருந்து மீள்விக்கப்பட்டது