பயனர் பேச்சு:Selvasivagurunathan m: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2639274 இல்லாது செய்யப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: 2017 source edit
வரிசை 393: வரிசை 393:


:{{Ping|Booradleyp1}} இன்று கவனித்து, உரியன செய்கிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:20, 23 சனவரி 2019 (UTC)
:{{Ping|Booradleyp1}} இன்று கவனித்து, உரியன செய்கிறேன். --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:20, 23 சனவரி 2019 (UTC)

== 2016 சட்டமன்றத் தேர்தல் ==

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கண்ட பகுதியை சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் தரவுகள் ஏதும் இடாமல் வெற்றிடமாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் இதுபோன்றிருந்தால் விக்கியின் தரம் பாதிக்கப்படக்கூடும். (இதை நீங்கள் சேர்க்கும் போதே வேண்டாம் என்று சொன்னதாக நினைவு) தரவுகளை சேர்க்க முடியாவிட்டால் இந்தப் பகுதியை நீக்க முயற்சிக்கவும். உதா [https://ta.wikipedia.org/s/o51] நன்றி -- [[பயனர்:Mdmahir|Mdmahir]] ([[பயனர் பேச்சு:Mdmahir|பேச்சு]]) 11:40, 15 மார்ச் 2019 (UTC)

11:40, 15 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

பயனர்:Selvasivagurunathan m/திட்டம்
     
பயனர்:Selvasivagurunathan m/மணல்தொட்டி
     
பயனர்:Selvasivagurunathan m/உதவிக் குறிப்புகள்
     
பயனர்:Selvasivagurunathan m/இற்றை
     
திட்டம்
     
குறிப்பேடு
     
உதவிக் குறிப்புகள்
     
இற்றை
   



தகவல்

மாரத்தான் 2016 நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்தமைக்கு பாராட்டுகள் மற்றும் நன்றிகள். புள்ளி விவரம் அட்டவணையில் சூலை 31 தேதிக்குப் பிறகு ஆகத்து 1 என்று வரவேண்டும். ஆனால் சூலை 1 என வந்துள்ளது. சரிசெய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 05:40, 1 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

ஒரே செய்தியைப் பல்வேறு பயனர்களுக்கு அனுப்பும் கருவி

ஒரே செய்தியைப் பல்வேறு பயனர்களுக்கு அனுப்புவதற்கு சிறப்பு:MassMessage வசதி பயன்படுத்தலாம். இவ்வசதியை நிருவாக அணுக்கம் உள்ள அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட திட்டத்தில் திரும்ப திரும்ப ஒரே குழுவினருக்கு செய்தியிட இவ்வசதி பெரிதும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, இங்குள்ளது போல பயனர் பட்டியலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வசதி மூலம் அடிக்கடி செய்திகள் சென்றால் பயனர்களுக்கு அயர்வாகவும் தொந்தரவாகவும் இருக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு தேவைப்படும் போது மட்டும் இவ்வசதியைப் பயன்படுத்தலாம். --இரவி (பேச்சு) 09:04, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்! ஏதேனும் உதவி தேவைப்படின் கேட்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:29, 22 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விக்கிசெய்தி

விக்கிசெய்தியை பார்க்கவும், முதல் பக்கத்தில் மிக பழைய செய்திகளே இன்னும் உள்ளன. இற்றைபடுத்தவும் --குறும்பன் (பேச்சு) 06:57, 6 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@குறும்பன்... இந்த வாரத்து சனி, ஞாயிறு நாட்களில் கண்டிப்பாக இற்றை செய்கிறேன். அங்கு மீண்டும் பங்களிக்க பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:06, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பகுப்பு:ஈரானியத் திரைப்படங்கள்

ஈரானியத் திரைப்படங்கள் பகுப்பிலுள்ள திரைப்படங்களில் ஆங்கில ஒலி பெயர்ப்பு, பாரசீக ஒலிபெயர்ப்பு என்பன காணப்படுகின்றன. பேச்சு:புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்) - இங்கு உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இணக்க முடிவு காணப்படாமல் தலைப்பு நகர்த்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள தலைப்பு உகந்ததல்ல என்பது என் கருத்து. இதற்கான காரணங்களையும் முன்வைக்கலாம். ஆனால், மீண்டும் தலைப்பு மாற்றம் குறித்து உரையாட விரும்பவில்லை. நீங்கள் திரைப்படம் குறித்த கட்டுரைகளில் ஆர்வம் காட்டுவதால் இதை உங்கள் முன் வைக்கிறேன். அத்துடன், இவ்விடயம் தொடர்பில் வழிகாட்டல் இருந்தால் நல்லது என் கருத்தையும் உங்களிடம் முன் வைக்கிறேன். --AntanO 09:18, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

தங்களின் கருத்தை கவனத்திற் கொள்கிறேன்; வார இறுதி நாட்களில் நேரம் செலவிட்டு பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:04, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பழைய தமிழ்த் திரைப்படங்கள்

சிவகுருநாதன் கோவலன் (1934 திரைப்படம்) -இக்கட்டுரையில் நான் இணைத்துள்ள சான்று நூல் பழைய தமிழ்த் திரைப்படங்களை தவியில் ஆவணப்படுத்த நினைக்கும் உங்கள் ஆர்வத்தும் முயற்சிக்கும் ஏற்ற சான்றாக இருக்குமென நினைக்கிறேன். தமிழ்த் திரைபடங்கள் குறித்த விவரங்களின் சுரங்கமாக இப்புத்தகம் உள்ளது. விலையும் மிக அதிகம் இல்லை (500 ரூபாய்). --Booradleyp1 (பேச்சு) 15:21, 14 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம்! தற்போது வெளியூரில் இருப்பதால், இந்நூலைப் பெறுவதில் தாமதமேற்படலாம். இந்த நூலினைப் பெற்று, இத்திட்டத்திற்கு நல்லமுறையில் பயன்படுத்த விரும்புகிறேன். உன்னதமான வழிகாட்டலுக்கு மிக்க நன்றி! இவ்விதம் பலரும் துணைநிற்பதாலேயே தொடர்ந்து பங்களிக்க முடிகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:36, 15 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
கொடுக்கபட்டுள்ள இணையப் பக்கம் இதே நூலில் கொடுக்கப்பட்டுள்ள விபரம் தான். http://www.lakshmansruthi.com/cineprofiles/anandan.asp இந்நூல் இப்போது அச்சில் இல்லை. அவர் இறந்தபின் அவரது பணிமனையும் மூடப்பட்டுவிட்டது. - Uksharma3 04:21, 15 அக்டோபர் 2016 (UTC)
நானும் இந்த நூலை தேடினேன், தமிழக அரசு இந்நூலை அச்சிட்டிருக்கலாம், தற்போது இந்நூலுக்கு காப்புரிமை இல்லை என அறிகிறேன். மின்னூல் கிடைத்தால் எனக்கும் தெரியப்படுத்தவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:05, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை இணைத்தல்

இரு கட்டுரைகளை நிருவாக அணுக்கம் உள்ள ஒருவர் இணைக்கலாம். A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள மேலதிக தகவல்களை B கட்டுரையில் சேர்த்து சேமியுங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை மீண்டும் நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 00:40, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

செயல் திட்ட வேலை

வணக்கம், பயனர்:Selvasivagurunathan m/தமிழ்த் திரைப்படம்/செயல் திட்ட வேலை/கே. பி. ஜெயராமன் என்ற பக்கத்தை வழிமாற்றின்றி கே. பி. ஜெயராமன் என்ற பக்கத்திற்கு நகர்த்தியிருக்கலாம். இவ்வாறு செய்யாமல் விட்டதால் உங்கள் 23 தொகுப்புகள் வீணாகிப் போய்விட்டன.--Kanags \உரையாடுக 09:16, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@Kanags, சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! ஆனால் இச்செயலை அறிந்தே செய்கிறேன். விக்கிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாததால் இவ்விதமே தொடர விரும்புகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்

ஆங்கில விக்கியிலுள்ள இந்த கட்டுரை தமிழில் தற்போதுள்ள கட்டுரையை விட அதிக தகவல்களுடனும் முழுமையாகவும் உள்ளது. தமிழ் விக்கி ஏற்றுக் கொள்ளுமானால் அந்த ஆங்கிலக் கட்டுரையை அப்படியே மொழி மாற்றம் செய்து தருகிறேன். UKSharma3 02:24, 1 நவம்பர் 2016 (UTC)

தமிழ் விக்கி ஏற்கும்; விரிவாக்கம் செய்து உதவுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:48, 1 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

இந்தியன்

கீரன் கட்டுரையை உருவாக்கியுள்ளேன். அதில் அவரது தேசியம் இந்தியன் எனக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் அது இந்தியன் திரைப்படம் பக்கத்துக்குச் செல்கிறது. தயவு செய்து இதைச் சரிசெய்யவும். நன்றி. --UKSharma3 10:23, 6 திசம்பர் 2016 (UTC)

Uksharma3 அவர்களே, தாங்கள் கோரியதை செய்தாயிற்று. இப்போது இந்தியன் எனும் பக்கம் ஓர் வெற்றுப்பக்கமாக உள்ளது. விரும்பின் உள்ளடக்கத்தை உள்ளிட்டு மேம்படுத்தி உதவுங்கள், நன்றி.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:39, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
தேசியம் இந்தியர் என எழுதுவது நல்லது.--Kanags \உரையாடுக 10:59, 6 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
இந்தியர் என எழுதி இந்தியா பக்கத்துக்கு இணைப்புக் கொடுத்துள்ளேன். மேலே Shriheeran குறிப்பிட்ட இந்தியன் வெற்றுப் பக்கத்தை நீக்கிவிடலாம் என நினைக்கிறேன். --UKSharma3 14:27, 6 திசம்பர் 2016 (UTC)

உதவி வேண்டி

அன்பிற்கினிய ஐயா அவர்கட்கு, பணிவான வணக்கங்கள்.

கபிலன் பதிப்பகம் குறித்த விமர்சனங்களின் தங்களின் மேலான அறிவுரையும் வழிகாட்டுதலும் தேவை.... உதவுங்களேன்.... --"அருணன் கபிலன்" 12:54, 7 திசம்பர் 2016 (UTC)அருணன் கபிலன்--"அருணன் கபிலன்" 12:54, 7 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:35, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Shriheeran:, தங்களின் அழைப்பிற்கு நன்றி! தாங்கள் முன்னெடுத்துள்ள இந்த ஒருங்கிணைப்புப் பணி சிறப்பாக நடந்திட எனது வாழ்த்துகள். நான் ஏற்கனவே துவக்கியக் கட்டுரைகளை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பாக இதனைக் கருதி, பங்களிப்புகளை செய்வேன்! எனது பெயரை பதிவு செய்துள்ளேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:16, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: இம்முறை போட்டி கட்டுரைகளை உருவாக்கும் நோக்குடனேயே நடாத்தப்படுகின்றது. விரிவாக்குதல் பற்றியதாக உத்தேசமில்லை. விக்கியின் 100,000கட்டுரைகள் எனும் இலக்கே இப்போட்டியின் முக்கிய நோக்கம் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மேலும் தாங்கள் பல பல கட்டுரைகளை போட்டிக்காக முனைப்புடன் உருவாக்குவீர்கள்; என நம்புகின்றேன். இதன் மூலமா எமது விக்கியில் நான் மேற்குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடுத்த வருடத்தில் எட்ட முடியும் என நான் நம்புகின்றேன்.! மேலும் இப்போட்டியில் சிறப்பம்சமாக ஃபொஉன்டைன் கருவி புள்ளிகளைக் கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படவுள்ளதையும் அறியத்தருகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:48, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பையின் நோக்கத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் பெயரை பதிவு செய்திருந்தேன். இப்போது தெளிவுபெற்று, விலகி விட்டேன். தங்களின் முயற்சி சிறப்பான வெற்றியடைய வாழ்த்துகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:21, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:23, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதவி

பல்லேடியம் அசிட்டைலசைட்டோனேட்டு என்ற தலைப்பிலான கட்டுரையை பலேடியம்(II) அசிட்டைலசிட்டோனேடு என்ற தலைப்பிற்கு நகர்த்த வேண்டும். உதவவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 05:52, 28 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Share your experience and feedback as a Wikimedian in this global survey

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

நன்றி

பிழை திருத்தியதற்கு நன்றி புதுவைபிரபு 06:54, 28 சனவரி 2017 (UTC)

நன்றி

பிழை திருத்தியதற்கு நன்றி புதுவைபிரபு 06:54, 28 சனவரி 2017 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

(Sorry for writing in English)

References

விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:58, 26 பெப்ரவரி 2017 (UTC)

மன்னிக்கவும்; கருத்திடும் நிலையில் நான் இல்லை. தங்களின் முயற்சிகள் வெற்றியடைய எனது வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 26 பெப்ரவரி 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தாங்கள் விக்கிக்கோப்பை இடம்பெறும் போது விரிவாக்கும் போட்டி ஒன்றில் கலந்துகொள்ள விரும்பினீர்கள் அல்லவா! இதோ இபோட்டி தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற வல்லது. இப்போட்டியில் கலந்து வெற்றி பெறுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:06, 16 மார்ச் 2017 (UTC)
நன்றி, ஸ்ரீஹீரன். சொந்தப் பணிகளின் காரணமாக, விக்கியில் புதிய திட்டங்களில் கலந்துகொள்ள இயலாத நிலையிருக்கிறது. இந்தப் போட்டி சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:19, 16 மார்ச் 2017 (UTC)
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:17, 16 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:45, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:22, 26 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணியில் இணைந்தமைக்கு நன்றி. தொடர்ந்து உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 27 மே 2017 (UTC)[பதிலளி]

கட்டுரை நீக்கல்

கட்டுரை நீக்கப்பட்டதைக் காணும் பயனர் கவைலையுறுவதாகவும், பயனருக்கு வழிகாட்ட முனையும்போது கட்டுரை இல்லாது இருப்பது பயிற்சியாளர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. எனவே, நீக்கல் குறித்து யோசிக்கவும். அதைவிட பயனருக்கு கட்டுரை ஏன் நீக்கப்பட்டது என்ற கருத்தினை வழங்குவது ஏற்புடையது. --AntanO 08:32, 10 மே 2017 (UTC)[பதிலளி]

ஒரு நாள் இடைவெளி

குரு, தொஒகுக்கும் கட்டுரைகளில் உள்ள பிழைகளை உடனே சரி செய்யவேண்டாம். நான் சிலவற்றை எழுதுவது பிரதி எடுக்காததால் சேமிக்க முடிவதில்லை, எழுதியது சேமிக்கும் போது மறைந்து விடுகிறது. என் தட்டச்சு வேகம் மிக மெதுவானது--குறும்பன் (பேச்சு) 21:34, 15 மே 2017 (UTC)[பதிலளி]

மன்னிக்கவும்; இனிமேல் தங்களின் கட்டுரைகளில் பிழைத் திருத்தம் செய்வதை தவிர்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:43, 15 மே 2017 (UTC)[பதிலளி]
குறிப்பிட்ட கட்டுரையில் உங்களின் கடைசித் தொகுப்பிற்கும் எனது தொகுப்பிற்கும் உள்ள இடைவெளி 1 மணிநேரம். எம்மாதிரியான திருத்தங்களை செய்துள்ளேன் என்பதனையும் கவனியுங்கள். இம்மாதிரியான இறுக்கங்களால் இங்கு ஏன் பங்களிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:49, 15 மே 2017 (UTC)[பதிலளி]
வணக்கம் நண்பர்களே! எக்கட்டுரையைக் குறித்து உரையாடுகிறீர்கள் என அறிய விரும்புகிறேன். நாம்(தமிழ்) ஒரு மிகச்சிறிய குடும்பம் என்பதால் ஏற்பட்ட இறுக்க சூழ்நிலையை அறிய தாருங்கள். --உழவன் (உரை) 02:10, 16 மே 2017 (UTC)[பதிலளி]
[1] மேற்கொண்டு இது குறித்து உரையாட விரும்பவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:06, 16 மே 2017 (UTC)[பதிலளி]

குரு, என் கருத்து உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருந்துகிறேன். மங்கோலியப் பேரரசு விக்கி 15 போட்டிக்காக நான் விரிவாக்குவது. இதை விரிவாக்குகிறேன் என்று சில நாட்களுக்கு முன்பே அதற்கான பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதனாலேயே அதில் இப்போ பிழை திருத்தம் வேண்டாம் என்றேன். 35 கிபைட்டுக்கு மேல் விரிவாக்குவது என் நோக்கம். என் பணி விக்கி-15க்காக அதில் (விரிவாக்கம்) முடிந்து விட்டால் விக்கி-15 இல் தெரிவித்து விடுவேன். வழக்கம்போல் செயல்படுங்கள். --குறும்பன் (பேச்சு) 14:35, 16 மே 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் போட்டிக்காக விரிவாக்கம் செய்கிறீர்கள் என்பதனை நான் அறிந்திராமல் பிழைத் திருத்தம் செய்தேன். இனிமேல் பதிவேட்டுப் பக்கத்தை கவனித்துச் செயல்படுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 16 மே 2017 (UTC)[பதிலளி]
குறும்பன்... வார்ப்புரு:AEC என்பது உங்களுக்கு உதவக்கூடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:13, 22 மே 2017 (UTC)[பதிலளி]

Translating Ibero-America is back! Come and join us :)

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 00:35, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

சிறப்புப் பதக்கம்
அண்மைக்காலமாக, கட்டுரைகளைத் துப்புரவு செய்வதற்குத் தாங்கள் எடுத்து வரும் ஒருங்கிணைப்பு முயற்சிகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து உதவ வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:18, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:22, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

பகுப்பு நீக்கம்

சில கட்டுரைகளில் தீவிரவாத நிகழ்வுகள் எனும் பகுப்பை நீக்கியுள்ளீர்கள். எதனால் என அறியத்தர முடியுமா? நன்றி--இரா. பாலா (பேச்சு) 04:05, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், பாலா! எனது விளக்கம்:-
  1. பகுப்பு:தீவிரவாத நிகழ்வுகள் என்பது பொருத்தமான தலைப்புதான். அதைவிட இன்னமும் பொருத்தமான தலைப்பு பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் என்பதாகும் (more specific). எனவேதான் புதிதாக பகுப்பு ஒன்றினை உருவாக்கினேன்.
  2. மிகப் பொருத்தமான பகுப்பினை இட்டபின், தாய் பகுப்பினை நீக்கிவிடுகிறோம். ஏனெனில் இரண்டும் இருந்தால் ... தேவைக்கதிகமானதாக இருக்கும் (redundancy). உதாரணத்துக்கு பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் எனும் பகுப்பினைப் பாருங்கள். பகுப்பு:நாடுகள் வாரியாகத் தீவிரவாதத் தாக்குதல்கள் எனும் பகுப்பில் அடங்கி, இந்தப் பகுப்பானது பகுப்பு:தீவிரவாத நிகழ்வுகள் எனும் தாய்ப்பகுப்பில் அது அடங்கியிருக்கும். அங்ஙனம் இருக்கையில், தீவிரவாத நிகழ்வுகள் எனும் பகுப்பினை கட்டுரையில் இடுவதை நாம் தவிர்க்கிறோம். இதனைத்தான் நான் செய்துள்ளேன். என் தொகுப்பின் வாயிலாக, உங்களின் கட்டுரையை மேலும் மேம்படுத்தியுள்ளேன்; அவ்வளவே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:33, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]
கூடுதல் விளக்கம்:-
  1. இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் எனும் புதிய பகுப்பு இணைக்கப்பட்டதால், தமிழக அரசியல்வாதிகள் எனும் தாய்ப்பகுப்பினை கனக்ஸ் நீக்கியுள்ளார். தானியங்கி ஒன்றின் மூலமாக பல கட்டுரைகளில் அவர் அண்மையில் மாற்றங்கள் செய்தார். இதனையும் பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:50, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]
  2. பகுப்பு:இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் எனும் பகுப்பின்கீழ் 38 கட்டுரைகள் இருப்பதைக் கவனியுங்கள்.
  3. பகுப்பு:2017 தீவிரவாத நிகழ்வுகள் எனும் பகுப்பு ஒருவேளை உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டால், பகுப்பு:2017 நிகழ்வுகள் எனும் பகுப்பு நீக்கப்படல் வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:44, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]
புரிந்து கொண்டேன். நன்றி--இரா. பாலா (பேச்சு) 08:18, 20 சூன் 2017 (UTC)[பதிலளி]

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

@செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு, தாங்கள் செய்த முயற்சியை நான் அறியவில்லை. மீளவும் தாங்கள் அதைச் செய்து முடிக்க வேண்டுகிறேன். பயனர்:மணி.கணேசன்

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:50, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். விக்கித் தரவில் இணைக்கும் போது ஆ.வி. கட்டுரையில் தமிழ் மொழி தெரியவில்லை. பைசின் கட்டுரையை கவனிக்கவும். --கி.மூர்த்தி (பேச்சு) 22:50, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

கி.மூர்த்தி, வணக்கம்! இற்றை ஆவதற்கு சற்று நேரம் ஆகலாம். சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:53, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

மா. செல்வசிவகுருநாதன் சில நாட்கள் காத்திருந்தும் பார்த்தாகி விட்டது.--கி.மூர்த்தி (பேச்சு) 23:00, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

கி.மூர்த்தி, 20 நிமிடங்களுக்கு முன்புதானே செய்துள்ளீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:07, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதாரணம்:மாங்கனீசு(II) மாலிப்டேட்டு--கி.மூர்த்தி (பேச்சு) 23:09, 21 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஆலோசனை தேவை

மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம்; விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் திட்டம் தொடங்கியுள்ளேன், அத்திட்டத்தின் நோக்கம் யாதெனில், உலகளாவிய நெல்வகைகளை கண்டறிந்து நாடுகள் வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும், பாரம்பரிய மற்றும் புதிய இரகங்கள் வாரியாகவும் பட்டியலிட்டு கட்டுரைகளாக உருவாக்கும் நோக்கமுள்ளது. மூத்த விக்கிபீடியர், மற்றும் அனுபவமிக்கவரான தாங்கள், இத்திட்டத்திற்கான அறிவுரையும், ஆலோசனையும் வழங்குபடியும், மேலும் அத்திட்டத்திற்கான வார்ப்புருக்களும், வழிகாட்டுதலும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.நன்றிகள்...--[[User:Anbumunusamy|அன்பு♥முனுசாமிᗔ

கவனிக்கிறேன். என்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 30 சூலை 2017 (UTC)[பதிலளி]

உதவி

மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம்; இசுட்ரோன்சியம் சல்பேட்டு என்ற கட்டுரை தவறுதலாக Celestine (mineral) என்ற கட்டுரையுடன் விக்கித் தரவில் இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியான Strontium sulfate என்ற கட்டுரையுடன் இணைக்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 03:47, 13 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

கி.மூர்த்தி வணக்கம்! செய்துள்ளேன், முழுமையாக இற்றையாவதற்கு சற்று நேரம் ஆகலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:57, 13 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 06:32, 13 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

உதவி உதவி

உதவி வேணும், தோங்கா லா கணவாய் கட்டுரையிலுள்ள வரைபடத்துல உட்கார வேண்டிய இடம், அங்க இங்கனு கண்டபடி ஓடுது, சரியா ஒட்டித்தரனும். எது எப்படி பண்றதுன்னும் சொல்லித்தரனும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:47, 16 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. Template:Infobox mountain pass இற்றைப்படுத்தப்படவில்லை.--Kanags \உரையாடுக 23:09, 16 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

அதியமான் நெடுமிடல் - இக்கட்டுரையக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:10, 4 செப்டம்பர் 2017 (UTC)

Invitation to Blocking tools consultation

Hello,

The Wikimedia Foundation's Anti-Harassment Tools team is inviting all Wikimedians to discuss new blocking tools and improvements to existing blocking tools in December 2017 for development work in early 2018.

We are specifically contacting you for your ideas because you are one of the top users of the blocking tool on ta Wikipedia. We think that your comments will help us make better improvements. You can post to the discussion in the language that you are most comfortable expressing your ideas.

Other ways that you can help

  1. Spread the word that the consultation is happening; this is an important discussion for making decisions about improving the blocking tools.
  2. Help with translation.
  3. If you know of current or previous discussions about blocking tools that happened on your wiki, share the links.
  4. Help summarize the discussion to share back to your wiki.

If you have questions you can contact me on wiki or send an email to the Anti-Harassment Tools team.

For the Anti-Harassment Tools team, SPoore (WMF), Community Advocate, Community health initiative (talk) 20:55, 18 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

  • I apologize for posting in English.
  • Please let us know if you wish to opt-out of all massmessage mailings from the Anti-harassment tools team.

Reminder about Blocking consultation

Hello again,

The discussion about new blocking tools and improvements to existing blocking tools is happening on meta now and is in the final days.

We contacted you because you are one of the top users of the blocking tool on this wiki. We think that your comments will help us make better improvements. There is still time to share your ideas. You can post to the discussion in any language.

Thank you if you have already shared your thoughts. You can also help out by sharing a link to the meta discussion with users on this wiki. Or you can translate the summary of the discussion and share it on this wiki.

If you have questions you can contact me on wiki or by email.

  • I apologize for posting in English.

For the Anti-Harassment Tools team, SPoore (WMF), Community Advocate, Community health initiative (talk) 22:52, 16 சனவரி 2018 (UTC)[பதிலளி]

ஆதரவு

தங்கள் ஆதரவு இங்கே தரவும். நன்றி. --UKSharma3 உரையாடல் 14:14, 1 பெப்ரவரி 2018 (UTC)

Y ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 2 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)

@Sivakosaran: என்னால் இயன்ற உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளேன். விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் என்பது போன்றதொரு திட்டப் பக்கத்தினை தொடங்கி, செயலாற்றுமாறு பரிந்துரை செய்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:17, 20 பெப்ரவரி 2018 (UTC)

மிக்க நன்றி. ஆம், திட்டப்பக்கம் ஆரம்பிக்கிறேன். திட்டப்பக்கத்தின் உரையாடல் பகுதி இங்கே உள்ளது. உங்களை ஒருங்கிணைப்பாளராக இணைக்கலாமா? --சிவகோசரன் (பேச்சு) 15:24, 21 பெப்ரவரி 2018 (UTC)

@Sivakosaran: திட்டத்திற்குரிய உரையாடல் பக்கத்தை இன்றுதான் கண்டேன். வழிகாட்டியதற்கு நன்றி. தற்போது சென்னையில் இல்லாததால், ஒரு ஒருங்கிணைப்பாளராக செயலாற்ற இயலாது. இப்போதைக்கு, பொறுப்பு எதனையும் ஏற்காது பணியாற்ற விரும்புகிறேன்; உதவி செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:46, 21 பெப்ரவரி 2018 (UTC)
நன்றி. இணையவழி ஒருங்கிணைப்பில் முடியும்போது உதவலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:52, 24 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அன்புள்ள சிவகுரு,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:40, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:47, 13 மார்ச் 2018 (UTC)
அழைப்பிற்கு நன்றி, இரவி. பங்களிப்பில் எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. ஆர்வம் மீண்டும் துளிர்விடுகையில், எனது பங்களிப்பினைத் தொடர்வேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:22, 15 மார்ச் 2018 (UTC)
@Selvasivagurunathan m: பதில் உரைத்தமைக்கு நன்றி. தக்க வேளையில் திரும்பி வருவீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:32, 19 மார்ச் 2018 (UTC)
👍 விருப்பம்மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:43, 20 மார்ச் 2018 (UTC)

--கி.மூர்த்தி (பேச்சு) 01:43, 21 சூன் 2018 (UTC)[பதிலளி]

உதவி

அன்புள்ள சிவகுருநாதன், டையாக்சிடேன்கள் என்ற பகுப்பை தவறுதலாக four membered rings என்ற பகுப்புடன் விக்கித் தரவில் இணைத்துவிட்டேன். சரிசெய்ய உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொல்ஈறேன்.

@பயனர்:கி.மூர்த்தி, உரியன செய்தேன். சரி பாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:16, 21 சூன் 2018 (UTC)[பதிலளி]

Give your feedback about changes to Special:Block

Hello,

You are receiving this message because you are a top user of Special:Block on this wiki. Thank you for the important work that you do. There is a discussion happening about plans to improve Special:Block with the ability to set new types of blocks. To get the best design and new functions added, it is essential that people who use the tool join the discussion and share their opinions about these changes.

Instead of a full site wide block, you would be able to set a Partial Block. A user could be blocked from a single page, multiple pages, one or more namespaces, from uploading files, etc. There are several different ways to add this feature to Special:Block. Right now Important decisions are being made about the design and function.

Please review the page on Meta and share your feedback on the discussion page. Or you can reach me by email Also, share this message with anyone else who might be interested in participating in the discussion.

I appreciate any time that you can give to assist with making improvements to this feature. Cheers, SPoore (WMF) (talk) , Trust and Safety Specialist, Community health initiative (talk) 01:54, 10 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

  • Apologizes for posting in English.

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

அழைப்பிற்கு நன்றி! என்னால் இயன்றதைச் செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:35, 2 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கப் பரிந்துரை

ஒருவர் நிருவாக அணுக்கத்தை ஏற்க சம்மதம் தெரிவிக்கிறாரா என்பதை அவரது பேச்சுப் பக்கத்தில் அறிந்த பிறகு தேர்தல் பக்கத்தில் பரிந்துரையை முன்மொழிய வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:39, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

தெரியப்படுத்தியதற்கு நன்றி. இனி வரும் காலங்களில் இதனை கவனத்திற் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:59, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath:பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி; உங்களுக்கும் எனது வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:25, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

உதவி

வணக்கம். பயனர்: உமாநாத் உருவாக்கிய நான்கு கட்டுரைகளில்சின்ன வீடு, தோனி (திரைப்படம்), வானமே எல்லை (திரைப்படம்) ஆகிய மூன்று கட்டுரைகளிலும் மேற்கோள்கள் வழக்கமான முறையில் இல்லாது (ஒவ்வொரு பத்தியிலும் அங்கங்கே இல்லாமல்) அனைத்தும் மேற்கோள்கள் தலைப்பில் புதுவிதமாக காணப்படுகிறது. உமாநாத் விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்திதான் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார். ஆனால் அவரது நான்கு கட்டுரைகளில் ஒன்றான ஒரு கிடாயின் கருணை மனு கட்டுரையில் மேற்கோள்கள் வழக்கம்போல உள்ளன. எனக்கு இதன் காரணம் புரியவில்லை. விவரத்தை தெரிந்துகொள்ள விரும்பி உங்கள் உதவியைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:05, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1:வணக்கம்! நீங்கள் குறிப்பிட்டுள்ள 3 கட்டுரைகளில் reflist முறையில் மேற்கோள் காட்டாது, # இட்டு மேற்கோள்களை பட்டியலிட்டுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு கட்டுரையில் பொருத்தமான இடங்களில் மேற்கோள்களை இணைத்து, references முறையில் மேற்கோள்களை பட்டியலிட்டுள்ளார் (சரியான முறை). இதுவே காரணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:36, 22 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நன்றி சிவகுருநாதன். ஒருவேளை மொழிபெயர்ப்புக் கருவியே மொத்தமாக இறுதியில் மேற்கோள்களைக் காட்டுகிறதோ என்ற சந்தேகத்தினால் தான் கேட்டேன். அவரே இறுதியில் இணைக்கிறார் என்றால் அவரது பேச்சுப்பக்கத்தில் மேற்கோள்களை அந்தந்த இடங்களில் இடுமாறு ஆலோசனை கூறலாமா?

மற்றுமொரு உதவி. பயனர் ஜெ.ஜெயகிரிசாந்த்தின் கட்டுரைகளில் உள்ளிணைப்பு, முதற்பத்தியில் தலைப்பு தடித்த எழுத்துக்களில் போன்ற சில உரை திருத்தங்கள் தொடர்ந்து தேவைப்படுகிறது. அவர் விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தினால் இத்திருத்தங்கள் தேவைப்படாது. இதனால் அவருக்கு விக்கியின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்த வழிகாட்டி ஆலோசனை கூறுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் (மொழிபெயர்ப்புக் கருவியை நான் பயன்படுத்தாததால் எனக்கு அதன் வழிமுறை சரியாகத் தெரியவில்லை). நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:52, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1: இன்று கவனித்து, உரியன செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 23 சனவரி 2019 (UTC)[பதிலளி]

2016 சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கண்ட பகுதியை சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் அவற்றில் தரவுகள் ஏதும் இடாமல் வெற்றிடமாக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் இதுபோன்றிருந்தால் விக்கியின் தரம் பாதிக்கப்படக்கூடும். (இதை நீங்கள் சேர்க்கும் போதே வேண்டாம் என்று சொன்னதாக நினைவு) தரவுகளை சேர்க்க முடியாவிட்டால் இந்தப் பகுதியை நீக்க முயற்சிக்கவும். உதா [2] நன்றி -- Mdmahir (பேச்சு) 11:40, 15 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Selvasivagurunathan_m&oldid=2676095" இலிருந்து மீள்விக்கப்பட்டது