இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 33: வரிசை 33:


==உற்பத்தி==
==உற்பத்தி==
[[Image:NaturalGasProcessingPlant.jpg|thumb|right|A natural gas processing plant]]
இயற்கை எரிவளி பொதுவாக [[எண்ணெய்]]க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டப்படுகின்றன. உலகிலேயே அதிகமான இயற்கை எரிவளி மூலம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் (North Field) ஆகும்.
இயற்கை எரிவளி பொதுவாக [[எண்ணெய்]]க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டப்படுகின்றன. உலகிலேயே அதிகமான இயற்கை எரிவளி மூலம் [[கத்தார்]] நாட்டில் இருக்கும் வடக்கு வயல் (North Field) ஆகும்.


நிலத்தடியில் இருந்து மேலே எடுக்கப்பட்ட பிறகு, அதனில் கலந்திருக்கும் [[நீர்]], [[மணல்]], மற்றும் பிற சேர்மங்களும் [[வளிமம்|வளிமங்களும்]] பிரித்து எடுக்கப்படும். அதோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களும் பிரிக்கப்பட்டுத் தனியே விற்கப்படும். இவ்வாறாகத் தூய்மைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவளி பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே நீண்ட தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் (புழம்புகளின்) வழியாகவே அனுப்பி வைக்கப்படும்.
நிலத்தடியில் இருந்து மேலே எடுக்கப்பட்ட பிறகு, அதனில் கலந்திருக்கும் [[நீர்]], [[மணல்]], மற்றும் பிற சேர்மங்களும் [[வளிமம்|வளிமங்களும்]] பிரித்து எடுக்கப்படும். அதோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களும் பிரிக்கப்பட்டுத் தனியே விற்கப்படும். இவ்வாறாகத் தூய்மைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவளி பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே நீண்ட தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் (புழம்புகளின்) வழியாகவே அனுப்பி வைக்கப்படும்.


இது மிகவும் குறைவான [[அடர்த்தி]] கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.
இது மிகவும் குறைவான [[அடர்த்தி]] கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.


==அலகு==
==அலகு==

21:57, 20 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

உலகில் பல்வேறு பகுதிகளில் இயற்கை எரிவளி திரட்டலின் அளவுகள்
உலகில் திரட்டப்படும் மொத்த இயற்கை எரிவளி அளவில் 84% திரட்டும் 14 நாடுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது
இயற்கை எரிவளி அடுப்பில் நீல நிறத்தில் எரியும் இயற்கை வளி
இயற்கை எரிவளியால் ஓடும் பேருந்து

இயற்கை எரிவளி அல்லது இயற்கை எரிவாயு என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு புதைபடிவ எரிபொருள் (fossil fuel). இதனை மண்வளி என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல நீரியக்கரிமங்களின் (ஐதரோகார்பன்) கலவையாகக் கிடைக்கும் ஒரு வளி. பெரும்பான்மையாக மெத்தேன் வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான எத்தேன், புரொப்பேன், பியூட்டேன், மற்றும் பென்ட்டேன் ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையைப் பார்க்கவும்).

இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளி தூய்மையானதும், பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதும் கூட ஆகும். பெரும்பாலும் இது இல்லங்களுக்குச் சூடேற்றவும், மின்னாற்றல் உற்பத்தி செய்யவும் பயன்படும் ஒன்று.

2005 ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக அதிகம் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு: எரியெண்ணெய் 37% உம், நிலக்கரி 24% உம் ஆகும்.

பண்பியல்பு

இயற்கையில் கிடைக்கும் இந்த எரிவளிக்கு, அதன் கலப்பற்ற தூய வடிவில் நிறம், வடிவம், மணம் எதுவுமில்லை. அது எரியும்போது கணிசமான அளவு ஆற்றலைத் தரவல்லது. பிற புதைபடிவ எரிபொருட்களை ஒப்பிடுகையில் இது மிகவும் துப்புரவாக (தூய்மைக்கேடுகள் அதிகம் தராமல்) எரியக் கூடியது. சூழலை மாசுபடுத்தக்கூடிய பக்கவிளைவுகளை அதிகம் தராத ஒரு மூலம் இது.

ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பம் தருவதற்கு எரியும் இயற்கை எரிவளியானது பெட்ரோலியத்தை விட 30% குறைவான அளவு கார்பன்-டை-ஆக்ஸைடும், நிலக்கரியை விட 45% குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடும் வெளிவிடுகின்றது.[1]

இயற்கை எரிவளிக் கலவையின் கூறுகள்

வளி எடை %
மெத்தேன் 70~90
எத்தேன் 5~15
புரொப்பேன் மற்றும் பியூட்டேன் < 5
கார்பன் மோனாக்சைடு, நைட்ரசன், ஹைட்ரஜன், கந்தகம் (மீதி)

உற்பத்தி

A natural gas processing plant

இயற்கை எரிவளி பொதுவாக எண்ணெய்க் கிணறுகளில் இருந்தும், இயற்கை எரிவளிக் கிணறுகளில் இருந்தும் வணிகநோக்கில் திரட்டப்படுகின்றன. உலகிலேயே அதிகமான இயற்கை எரிவளி மூலம் கத்தார் நாட்டில் இருக்கும் வடக்கு வயல் (North Field) ஆகும்.

நிலத்தடியில் இருந்து மேலே எடுக்கப்பட்ட பிறகு, அதனில் கலந்திருக்கும் நீர், மணல், மற்றும் பிற சேர்மங்களும் வளிமங்களும் பிரித்து எடுக்கப்படும். அதோடு புரோப்பேன், பியூட்டேன் போன்ற பிற வளிமங்களும் பிரிக்கப்பட்டுத் தனியே விற்கப்படும். இவ்வாறாகத் தூய்மைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவளி பிறகு நீண்ட குழாய் வரிசைகளின் ஊடே நீண்ட தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும். இறுதியாக இல்லங்களுக்கும் குழாய்களின் (புழம்புகளின்) வழியாகவே அனுப்பி வைக்கப்படும்.

இது மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட வளிமம் என்பதனால் சிக்கனமாக ஒரு இடத்தில் தேக்கி வைக்க இயலாத ஒன்று.

அலகு

இயற்கை எரிவளியைப் பல வகையாக அளந்து குறிப்பிடலாம். இது ஒரு வளிமம் என்பதனால், கன அடி என்னும் அலகைக் கையாளலாம். உற்பத்தி நிறுவனங்கள் பொதுவாக ஆயிரம் கன அடி என்னும் அலகைப் பாவிப்பர். சில சமயம் மில்லியன் கன அடி எனவும் டிரில்லியன் கன அடி எனவும் பாவிப்பதுண்டு.

பிரித்தானிய வெப்ப அலகு (British Thermal Unit, BTU) என்னும் வெப்ப அலகு மிகவும் பரவலாகப் பாவனையில் (பயன்பாட்டில்) இருக்கும் ஒன்று. இது எரிஆற்றலின் அளவைக் கொண்டு் குறிக்கப்படுவது. ஒரு பி.டி.யு என்பது கடல்பட்ட சீர்நிலை அழுத்தத்தில் இருக்கும் ஒரு பவுண்டு நீரை ஓர் அலகு (ஒரு பாகை) வெப்பம் ஏற்றுவதற்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும். காட்டாக, ஒரு கன அடி இயற்கை வளியில் 1027 பி.டி.யுக்கள் இருக்கின்றன.

பயன்கள்

மின்னாற்றல்

எரிவளிச் சுழலிகள் மூலமும் நீராவிச் சுழலிகள் மூலமும் மின்னாற்றல் உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பாவிப்பதன் மூலம் (combined cycle) மின்னாற்றல் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம். சில சமயங்களில், எரிவளிச் சுழலிகளோடு கொதிகலன்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர் (cogeneration). அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிறபயன்களுக்கு உள்ளாக்கிக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவி (மட்டும்) உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியை உபயோகிப்பது உண்டு.

மேற்கோள்கள்

  1. Natural Gas and the Environment
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_எரிவளி&oldid=266440" இலிருந்து மீள்விக்கப்பட்டது