விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 327: வரிசை 327:
# {{ஆதரவு}}-- [[பயனர்:ஞா. ஸ்ரீதர்|SRIDHAR G]] ([[பயனர் பேச்சு:ஞா. ஸ்ரீதர்|பேச்சு]]) 07:03, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}-- [[பயனர்:ஞா. ஸ்ரீதர்|SRIDHAR G]] ([[பயனர் பேச்சு:ஞா. ஸ்ரீதர்|பேச்சு]]) 07:03, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:31, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}} --[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 07:31, 8 சனவரி 2019 (UTC)
# {{ஆதரவு}}--[[பயனர்:Seesiva|சிவகார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:Seesiva|பேச்சு]]) 11:04, 8 சனவரி 2019 (UTC)


=== நடுநிலை ===
=== நடுநிலை ===

11:04, 8 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்


நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்னும் இப்பக்கம், உங்களையோ அல்லது வேறொரு பயனரையோ விக்கிப்பீடியா நிர்வாகியாக்கும்படி (sysop) வேண்டி நியமிக்கும் இடமாகும். நிர்வாகிகளின் பொறுப்பு என்ன, அவர்கள் என்ன செய்வார்கள் என்று அறிய நிர்வாகிகள் பக்கம் சென்று பார்க்கவும். ஆங்கில விக்கியில் வாசிக்க வேண்டியவற்றின் பட்டியலையும் (ஆங்கிலம்) மற்றும் "எப்படி?" வழிகாட்டியையும் பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் நடப்பிலுள்ள நிர்வாகிகளின் பட்டியலுக்கு நிர்வாகிகள் பட்டியலைப் பார்க்கவும்.

சனவரி 2, 2019 முதல் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிற புதிய நிர்வாகிகள் விக்கி நிர்வாகிகள் பள்ளித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விதிமுறைகள்

பண்புகள்

விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்த, அறிமுகமானவரும், நம்பிக்கைக்குரியவருமான விக்கிப்பீடியா சமுதாய உறுப்பினரொருவருக்கே பொதுவாக நிர்வாகி தகுதி வழங்கப்படுகின்றது. நிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,

  • குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்

மற்றும்/அல்லது

8 குறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்

ஆகியவற்றைச் செய்து

  • கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
  • பொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
  • பொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
  • பொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்

இருந்தால் போதுமானது.

நியமன முறை

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். நிர்வாகிகள் தேர்தல் என்பது இருப்பவர்களிலேயே யார் சிறந்தவர்கள் என்று ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுக்கும் போட்டி இல்லை. முன்மொழியப்படும் ஒவ்வொருவரும் சமூகத்தின் ஆதரவைப் பெற்றால் நிர்வாகி ஆகலாம். ஒவ்வொரு முறையும் ஆகக் கூடுதலாக ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று விக்கி நிர்வாகிகள் பள்ளித் திட்டம் குறிப்பிடுவதால், சற்றுப் பொறுத்திருந்து பிறகு நிர்வாகி ஆகலாம் என்று நினைப்பவர்கள் தாமாகவே விட்டுக் கொடுத்த காத்திருக்க முன்வரலாம்.

மேற்கண்ட பண்புகளை உடைய ஆறு பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஒரு வார காலம் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம்.

பயனர் விருப்பு முடிவு எட்டப்படுமளவுக்குத் தெளிவு இல்லாதிருப்பின், இக்காலம் அதிகாரிகளினால் நீட்டிக்கப்படலாம். பொதுவாக, 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது. போதிய அளவு ஆதரவைப் பெறாது எனத் தெளிவாகத் தெரியும் நியமனங்களை, தொடர்ந்து வரக்கூடிய விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்காக முன்னரே நீக்கி விடலாம். எனினும் பல பயனர்கள் ஒவ்வொரு நாளும் விக்கிப்பீடியாவுக்கு வருவதில்லை என்பதைக் கருத்தில் கொண்டு போதிய அளவு கால அவகாசம் அளிப்பது விரும்பத்தக்கது. உங்கள் நியமனம் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால், மீண்டும் நியமனம் கோருமுன் போதிய அளவு காலம் விடவும்.

இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளைப் பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது

உங்கள் வாக்கை அளிப்பதற்குக் குறிப்பிட்ட நியமிக்கப்பட்டவருடைய பகுதியைத் தொகுக்கவும். சிறிய கருத்தொன்றையும் நீங்கள் அங்கே கொடுக்கலாம், எனினும் கலந்துரையாடல்களும், பிற கருத்துக்கள் மீதான உங்கள் கருத்தும் ஒவ்வொரு நியமனத்தின் கீழும் காணப்படும் "கருத்துக்கள்" பகுதியிலேயே சேர்க்கப்பட வேண்டும்.

பயனர் கணக்குகள் இல்லாதவர்கள் நியமிக்கப்படவோ, மற்றவர்களை நியமிக்கவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது. தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதி உண்டு.

படிமுறைகள்

  1. நீங்கள் நியமிக்க விரும்புகிறவருக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்புகள், தகுதிகள் உள்ளனவா என்று சரி பார்க்கவும்.
  2. நீங்கள் நியமிக்க விரும்புபவரிடமிருந்து அனுமதி பெறவும்.
  3. இங்கு புதிய பகுதி ஒன்றில் அவரது பயனர் பெயரை இடவும்.
  4. இதன் கீழ் நீங்கள் நியமிக்கும் பயனர் ஏன் ஒரு நல்ல நிர்வாகியாக இருப்பார் என்பதை விளக்கவும். அதன் கீழ் உங்கள் ஒப்பத்தை இடவும்.
  5. குறிப்பு: நியமனங்கள் சம்பந்தப்பட்ட பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் ஒரு பயனரை நியமித்தால் அவருடைய பேச்சுப் பக்கத்தில் ஒரு தகவலை எழுதி அவர் இந்நியமனத்தை ஏற்றுக் கொண்டால் இப்பக்கத்தில் பதிலளிக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.
  6. தேதியை (00:00:00) இடவும். குறைந்தது ஏழு நாட்களுக்கு வாக்கெடுப்பு நடக்கும்.
  7. விக்கிப் பயனர்கள் ஆதரவு/எதிர்ப்பு/கருத்து எனத் தமது நிலைப்பாடுகளை முன் வைக்க அழைக்கப்படுவார்கள்.
  8. 80% ஆதரவு வாக்குகள் இருக்கும் பட்சத்தில் அந்தப் பயனர் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்படுவார்.

நடப்பு வேண்டுகோள்கள்

அருளரசன் (சனவரி 4, 2019 - சனவரி 11, 2019) (வாக்கு: 14|0|0)

நியமனம்

அருளரசன் தொடர்ந்து சீரான பங்களிப்புகளை அளித்து வருகிறார். 33,518 தொகுப்புகளைச் செய்துள்ளார். 3,608 பக்கங்களை உருவாக்கியுள்ளார். துப்புரவு பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 05:49, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

என்னை பரிந்துரைத்த நந்தகுமாருக்கு நன்றி. அதேபோல ஆதரவளித்த பயனர்களுக்கும் நன்றி. இந்த நியமனத்தை ஏற்று அதைக் கற்று செயல்பட விரும்புகிறேன்.--அருளரசன் (பேச்சு) 12:58, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், எனது நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற இயலாத நிலை ஏற்பட்டால் மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ளவும் எனக்கு சம்மதமே.--அருளரசன் (பேச்சு) 12:58, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:36, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--Kanags (பேச்சு) 07:14, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:22, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு நம்பிக்கைக்குரிய பயனர் மற்றும் தொடர் பராமரிப்புப் பணியில் அனுபவம் பெற்றவர் என்ற அடிப்படையில் ஆதரிக்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 13:47, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு - கடந்த சில ஆண்டுகளாகச் சீராகப் பங்களித்து வரும் பயனர். நிருவாகியாக பணி சிறக்க வாழ்த்துகள். -- இரவி (பேச்சு) 13:50, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு -- பல காலமாக எனக்குத்தெரிந்தவர், சிறப்பான பங்களிப்பாளர், கட்டுரைகள் எழுதுவதில் அதித ஆர்வம் கொண்டவர், பயனர்களுடன் கனிவோடு பழகுபவர், நிருவாகியாகாது விட இவரிடம் குறைகள் ஏதும் கண்டுபிடித்துவிட முடியாது...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:08, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு ஹிபாயத்துல்லா14:17, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  8.  ஆதரவு --கலை (பேச்சு) 15:27, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  9.  ஆதரவு - சிறப்பான பங்களிப்பாளர். நிருவாகியாக பணி சிறக்க வாழ்த்துகள் --TNSE Mahalingam VNR (பேச்சு) 16:16, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  10.  ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 09:19, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  11.  ஆதரவு --பயனர்:ஞா. ஸ்ரீதர்SRIDHAR G (பேச்சு) 14:07, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  12.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:09, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  13.  ஆதரவு--Maathavan Talk 19:46, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  14.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 06:18, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  15.  ஆதரவு--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 09.26, 6 சனவரி 2019 (UTC)
  16.  ஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:37, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

@Arularasan. G:

  • சான்றுகள் / உசாத்துணைகள் தொடர்பான உங்கள் நிலைப்பாடு குறித்து சில ஐயங்கள் உள்ளன. மருத்துவம், அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் நீங்கள் உசாத்துணைக்காக செய்தித்தாள்களை இணைப்பதுண்டு. எ.கா: thehindu. இது தொடர்பான உங்கள் புரிந்து கொள்ளலைத் தெரிவிக்க முடியுமா?
  • கட்டுரைத் தலைப்புகள் விடயத்தில் தமிழ் இலக்கண விதிகளைக் கருத்திற்கொள்ள வேண்டுமா? --AntanO (பேச்சு) 23:14, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

(பேச்சு)

  • மருத்துவம், அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் உசாத்துணையாக நடுநிலை செய்தித்தாள் என்று பலர் கருதும் இந்து தமிழ் இதழில் குறிப்பிட்டத் துறையில் தகுதியானவர்கள் (மருத்துவர்கள், சூழலியாலாளர்கள்) எழுதும் கட்டுரைகளையே மேற்கோளாக சுட்டுகிறேன். அண்மைக் காலமாக இயன்ற அளவு செய்தித்தாளின் ஒரு கட்டுரையை மட்டும் மேற்கோளாக கொண்டு கட்டுரைகளை உருவாக்குவதையும் தவிர்த்துவருகிறேன்.

எந்த ஒரு மேற்கோளும் இல்லாமல் ஏற்கனவே பிறர் எழுதியுள்ள கட்டுரையை மேம்படுத்தும் நோக்கில் செய்தித்தாளில் வெளிவரும் கட்டுரையை மேற்கோளாக சேர்ப்பதும் உண்டு.

  • கட்டுரைத் தலைப்புகள் விடயத்தில் தமிழ் இலக்கண விதிகளைக் கட்டாயம் கருத்திற்கொள்ள வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. சிலசமயம் பொருத்தமான தலைப்பு அமையாமல் போகும் சமயத்தில் உங்களைப் போன்ற பயனர்கள் பரிந்துரைக்கும் பொருத்தமான பெயரை விரும்பி ஏற்று மாற்றுவது என் வழக்கம்.--அருளரசன் (பேச்சு) 16:35, 6 சனவரி 2019 (UTC)--[பதிலளி]

மூர்த்தி (சனவரி 4, 2019 - சனவரி 11, 2019) (வாக்கு: 11|1|1)

நியமனம்

மூர்த்தி தொடர்ந்து சீரான பங்களிப்புகளை அளித்து வருகிறார். 19,628 தொகுப்புகளைச் செய்துள்ளார். 5,534 பக்கங்களை உருவாக்கியுள்ளார். துப்புரவு பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 12:46, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

என் மீது நம்பிக்கை வைத்து முன்மொழிந்த நண்பர் நந்தகுமார் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆர்வத்துடனும் துப்புரவு பணிகளில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுதல் என்ற இலக்கை முன்வைத்தும் நந்தகுமார் அவர்களின் முன்மொழிவை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 14:50, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.

நிர்வாகப் பணிக்கு துடிப்புடன் செயல்படக்கூடிய இளைஞர்கள் முன்வந்தால் நிருவாக அணுக்கத்தை எனக்கு எந்த காலாண்டில் வேண்டுமானாலும் அளிக்கலாம். அவசரமில்லை. --கி.மூர்த்தி (பேச்சு) 15:10, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு முனைப்பான பயனர், நிருவாகி ஆகுவதற்கான அனைத்து தகுதியும் உள்ள பண்பான விக்கியர்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:09, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு ஹிபாயத்துல்லா14:13, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:55, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு - ஒவ்வொரு பயனரும் அவர்கள் துடிப்பாகச் செயற்படத் தொடங்கும் காலத்திலேயே நிருவாக அணுக்கத்தை வழங்கிட வேண்டும். இது ரொம்ப ரொம்ப ரொம்ப தாமதம் :( முழு ஆதரவை அளிக்கிறேன். --இரவி (பேச்சு) 14:56, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:23, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு --கலை (பேச்சு) 15:27, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு - முழு ஆதரவு. நிருவாகியாக பணி சிறக்க வாழ்த்துகள் -- TNSE Mahalingam VNR (பேச்சு) 16:13, 4 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  8.  ஆதரவு --சிவகோசரன் (பேச்சு) 09:20, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  9.  ஆதரவு -- தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன். SRIDHAR G (பேச்சு) 14:00, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  10.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:55, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  11.  ஆதரவு--Maathavan Talk 19:47, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  12.  ஆதரவு முழு ஆதரவு. நிருவாகியாக பணி சிறக்க வாழ்த்துகள்--அருளரசன் (பேச்சு) 15:59, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  13.  ஆதரவு--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 09.26, 6 சனவரி 2019 (UTC)
  14.  ஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:41, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

  • அறிவியல், குறிப்பாக வேதியல் கட்டுரைகளை எழுதும் இவருக்கு நிர்வாகப் பணியைச் சுமத்தி, கட்டுரைகள் உருவாக்கத்தையும் விரிவாக்கத்தையும் குறைக்க வேண்டாம் என்பது என் கருத்து. இவ்வாறானவர்களுக்கு நிர்வாகிகள் உதவினாலே போதுமானது. --AntanO (பேச்சு) 23:23, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

  1. மூர்த்தி கட்டுரை ஆக்கத்திலேயே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். துப்புரவுப் பணியில் அண்மையிலேயே ஓரளவு ஈடுபட்டு வருகிறார். இவரது தானியங்கி அணுக்கத்தை ஒரு சில மணி நேரத்துக்குத் தடை செய்த போது, இவர் அதனைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டு சில மாதங்கள் விக்கிப்பீடியாவிலேயே பங்களிக்காமல் இருந்திருக்கிறார். இன்னும் சில காலம் பொறுத்திருந்து நிருவாக அணுக்கம் பெற முயற்சி செய்யலாம் என்பது எனது கருத்து.--Kanags (பேச்சு) 22:37, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.

வணக்கம் நீச்சல்காரன்.

விக்கிப்பிடியா என்பது வரும் தலைமுறைக்காகவும் உருவாக்கப்படும் ஒர் ஒப்பற்ற கலைக் களஞ்சியம். மொழிக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பெரும்பாலான பயனர்கள் விக்கிக்குள் வருகிறார்கள். சரியான புரிதலுடன் ஒவ்வொரு பயனரும் செயல்பட்டு இக்கலைக் களஞ்சியத்தை உருவாக்கினால் விவாதங்களுக்கு இங்கு வாய்ப்பே இருக்காது. இப்புரிதலுடன் இயங்குவதால் பொதுவாக நான் விவாதங்களைத் தவிர்த்து விடுகின்றேன். கிடைக்கும் ஓய்வு நேரத்தை விவாதத்திற்காக செலவழிப்பதைக் காட்டிலும் மேலும் ஒரு கட்டுரையை எழுதி கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாம். என்பது என் எண்ணம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு உட்பட்டு எழுதப்படும் அனைத்து கட்டுரைகளையும் தக்க வைக்க வேண்டும் என்பதே எனது பார்வை. எனவே நீக்கல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக குறைபாடுள்ள கட்டுரைகளை குறைந்த பட்சம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கட்டுரையாக மாற்றிவிட முயற்சிக்கின்றேன். என்னால் இயலவில்லை என்று நான் கருதும்போதுதான் நீக்கல் பரிந்துரையை இடுகின்றேன்.

எனது விக்கிப்பீடியா செயல்பாடுகள் என்றும் இதே கோணத்திலேயேதான் நகரும்.. நிர்வாகி என்ற சொல் பெயருடன் சேர்க்கப்படுவதால் புதியதாக நான் எதைக் கற்க வேண்டும் என்பதை அனுபவமுள்ள நிர்வாகிகள்தான் எனக்கு கற்பிக்க வேண்டும். துணிவுடன் அணுக்கத்தைப் பயன்படுத்துகிறேன் என்ற நினைப்பே ’நான் ஒரு நிர்வாகி’ என்ற தலைக்கனத்தை அளிப்பதாக உணர்கிறேன். நன்றி நீச்சல்காரன்.--கி.மூர்த்தி (பேச்சு) 03:09, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

துணிவு கொள் என்பதைத் தவறாக எண்ண வேண்டியதில்லை, விக்கிப்பீடியாவின் கொள்கையைத் தான் குறிக்கிறேன். சுட்டிக் காட்டிய இடங்களில் எழுதியவருடனோ அல்லது நாமோ அப்பிழைகளை மாற்றியிருக்க வேண்டும் அப்படியே விட்டுவிடுவதால் விக்கியின் தரம் குறைகிறது என்பதைச் சுட்டிக்காட்டவே விழைகிறேன். சிக்கலான விசமத் தொகுப்புகளில் தீர்வை நோக்கிச் செல்லவேண்டுமே அன்றி விட்டுவிலகக்கூடாது என நினைக்கிறேன் அதுவே விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும். நேரத்தைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள கட்டுரை எழுத விரும்புகையில் நிர்வாகி அணுக்கம் தேவையில்லைதானே. மேலும் தாங்கள் கட்டுரை எழுதுவதில் வல்லவர் பராமரிப்புப் பணிக்கு வருவீர்களானால் கட்டுரைப்பணியில் சுணக்கம் ஏற்படுமோ எனவும் அஞ்சினேன். இருந்தும் நீங்கள் விரும்பிக் கற்றுக்கொள்ள முனைவதால் வாழ்த்துக்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 12:20, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

Sivakosaran (சனவரி 5, 2019 - சனவரி 12, 2019) (வாக்கு: 11|0|0)

நியமனம்

சிவகோசரன் நெடுங்காலமாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். இலங்கையில் தொடர் பரப்புரை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். விக்கிப்பீடியா தொடர்பாக நடைபெற்ற பல பயிற்சிகளில் கலந்து கொண்டு கட்டற்ற அறிவு இயக்கத்தைப் பற்றிய நல்ல புரிதலைக் கொண்டுள்ளார். இவரது வெற்றிகரமான முன்னெடுப்புக்கு பஞ்சாபி மாதம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பயனர்களிடம் கனிவுடன் பழகுவதுடன் விக்கிப்பீடியா பற்றிய முதிர்ச்சியான புரிதலைக் கொண்டுள்ளார். இவருக்கு நிர்வாக அணுக்கம் அளிப்பது தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவும் என்ற நம்பிக்கையில் இப்பொறுப்பை அளிக்குமாறு முன்மொழிகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:10, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

மிக்க நன்றி இரவி. நியமனத்தை ஏற்கிறேன்.

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதால், உடனடி நிர்வாக அணுக்கம் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 09:18, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு--Kanags (பேச்சு) 09:30, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:54, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 11:21, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 11:37, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு பராமரிப்புப் பணியில் அனுபவமிக்கவர், முன்னெடுப்புகள் செய்பவர் -நீச்சல்காரன் (பேச்சு) 12:22, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு ஹிபாயத்துல்லா13:19, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:43, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  8.  ஆதரவு -- சந்தேகங்களை பொறுமையாக, கனிவுடன் தெளிவுபடுத்துபவர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்SRIDHAR G (பேச்சு) 14:04, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  9.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:09, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  10.  ஆதரவு--Maathavan Talk 19:49, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  11.  ஆதரவு--கலை (பேச்சு) 11:22, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  12.  ஆதரவு--அருளரசன் (பேச்சு) 16:00, 6 சனவரி 2019 (UTC)--அருளரசன் (பேச்சு) 16:00, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  13.  ஆதரவு--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 09.26, 6 சனவரி 2019 (UTC)
  14.  ஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:43, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

  • //தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதால், உடனடி நிர்வாக அணுக்கம் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன்.// எவ்வாறு? தெளிவு படுத்தவும்.
பயனர்களிடையேயான கருத்துக்கணிப்பை சில நாட்களுள் ஆரம்பிக்க வேண்டும். இதனை மேலே அறிவிப்புப் பெட்டியில் இட நிர்வாக அணுக்கம் உதவும். இல்லையேல் அறிவிப்பைத் தயார் செய்து யாராவது நிர்வாகி மூலம் இட வேண்டும். இது போன்ற சில பயன்பாடுகள் உள்ளன.
  • சுற்றுக்காவலர், முன்னிலையாக்கர் ஆகிய அணுக்கங்கள் இருந்தும் அவை அதிகம் பயன்படுத்தப்படவில்லை. அவ்வாறு இருக்க நிர்வாக அணுக்க எவ்விதம் பயன்படும்? நிர்வாக அணுக்க எவ்விதம் பயன்படுத்தப்போகிறீர்கள்.

--AntanO (பேச்சு) 22:33, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

அவ்வப்போது சுற்றுக்காவல் பணிகளைச் செய்கிறேன். குடும்பச் சூழல் மற்றும் பணிச்சுமை காரணமாக விக்கியில் பங்களிப்பது சில காலமாகக் குறைவாகவே உள்ளது. எனினும் விக்கி தொடர்பான கள வேலைகள் சிலவற்றை முன்னெடுக்கத் தேவையான பணிகளில் ஈடுபட்டுள்ளேன். ஏற்கனவே 2013இல் என்னிடம் நிர்வாகியாகப் பொறுப்பேற்க விருப்பமா என்று கேட்டபோது எனக்குப் போதிய முதிர்ச்சி இல்லை என்று கருதி மறுத்துவிட்டேன். இப்போது பொருத்தம் என்று கருதுவதால் நியமனத்தை ஏற்கிறேன். இது ஒரு நிர்வாகப் பள்ளியே. என்னால் முடிந்ததைச் செய்வேன். --சிவகோசரன் (பேச்சு) 03:43, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கௌதம் சம்பத் (சனவரி 5, 2019 - சனவரி 12, 2019) (வாக்கு: 8|0|1)

நியமனம்

கௌதம் சம்பத் தொடர்ந்து, தீவிரமாக துப்புரவு பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார். 7,566 தொகுப்புகளைச் செய்துள்ளார். 441 பக்கங்களை உருவாக்கியுள்ளார். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 11:19, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

Nan & Kanags அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நியமனத்தை நான் ஏற்கிறேன். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:22, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

இத்தேர்தலில் 6 பயனருக்கு மேல் பரிந்துரை செய்யப்பட்டால், எனக்கு அடுத்த காலாண்டில் கூட அணுக்கத்தை வழங்குங்கள்.

ஆதரவு

  1.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 13:31, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:44, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு --ஆர்வமாக தினமும் துப்புரவுப் பணிகளைச் செய்து வருபவர். SRIDHAR G (பேச்சு) 14:09, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு தொடக்கத்தைவிட தற்போதைய முதிர்ச்சியும், சமரசமில்லாத் துப்புரவுப் பணிக்கும், ஆதரிக்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 16:35, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு--இப்போதுள்ள புதிய பயனர்களில் மிகவும் முதிர்ச்சி பெற்றவராக இவரைக் கருதுகிறேன். நிருவாக அணுக்கம் இவரது துப்புரவுப் பணிகளை இலகுவாக்கும்.Kanags (பேச்சு) 22:11, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு - ஆரம்பத்தில் தடுமாறினாலும் தற்போது முதிர்ச்சி உள்ளது. பிற பயனர்களின் வழிகாட்டல் சிறப்பான நிர்வாகியாக மாற்றிவிடும். இவ்வாறானவர்களுக்கு நிர்வாக அணுக்கம் கொடுப்பதைத் தடுப்பது என்பது விக்கி நிர்வாகிகள் பள்ளி என்ற கருத்தியலுக்கே முரண்நகையாகிவிடும். --AntanO (பேச்சு) 23:34, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  8.  ஆதரவு--கலை (பேச்சு) 11:45, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  9.  ஆதரவு ஆர்வமாக நாளும் துப்புரவுப் பணிகளைச் செய்து வருபவர்.--அருளரசன் (பேச்சு) 16:02, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  10.  ஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:45, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

  1. @Gowtham Sampath:, என் கேள்விக்குத் தாங்கள் அளித்த பதில் நிறைவாக இல்லை. இன்னும் கூடுதல் முதிர்ச்சியோடு கருத்துகளை அணுகும் பக்குவம் பெற்ற பிறகு, இன்னும் சில காலம் கழித்து நீங்கள் நிர்வாக அணுக்கம் பெற முயலலாம் என்று நினைக்கிறேன். அருள்கூர்ந்து என்னுடைய இந்த வாக்கினால் தாங்கள் ஊக்கம் குன்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எப்படி நீங்கள் எழுதிய ஆக்கங்களைப் பிறர் திருத்தியதைப் பிறகு புரிந்து கொண்டீர்களோ, அதைப் போல் இந்தக் கருத்தின் காரணத்தையும் புரிந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது ஒரு வாக்காளர் என்ற வகையில் என் தனிப்பட்ட கருத்து. ஒட்டு மொத்த பயனர் சமூகத்தின் வாக்கு நிலவரத்துக்கு ஏற்ப அதிகாரி(களின்) முடிவு அமையும். நன்றி --இரவி (பேச்சு) 21:49, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

//அருள்கூர்ந்து என்னுடைய இந்த வாக்கினால் தாங்கள் ஊக்கம் குன்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.// இந்த நிர்வாக அணுக்கத்திற்காக நான் ஒன்னும் விக்கியில் பயணிக்கவில்லை, எனக்கு பிடித்த காரணத்தினால் தான் நான் விக்கியில் பயணிக்கிறேன். உங்களுடைய இந்த வாக்கினால் என்னுடைய ஊக்கம் என்றும் குறையாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:35, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.

@Gowtham Sampath:

  1. பயனர்:Gowtham barani - இந்தக் கணக்கு உங்களுக்குத் தொடர்புடையதா?
  2. தங்கள் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக பயனர் பக்கத்தில் தெரிவித்தமைக்கு நன்றி. அன்புமணி ராமதாஸ், ச. இராமதாசு, 1987 இடஒதுக்கீடு போராட்டம் ஆகிய கட்டுரைகளை விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு உட்பட்டு எப்படி மேம்படுத்தலாம் என்று கருதுகிறீர்கள்? அரசியல் தொடர்புடைய கட்டுரைகளில் ஏற்படும் பிணக்குகளை எப்படி அணுகுவீர்கள்?
  1. Gowtham barani என்பது என்னுடைய பயனர் கணக்கு தான், முதலில் நான் தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி வந்தேன் என தெரிந்துக் கொள்ளுங்கள். நான் Gowtham barani என்னும் பயனர் கணக்கை உருவாக்கி (அப்போது தான் விக்கிப்பீடியாவில் நான் முதல், முதலில் தொகுக்கிறேன்) அன்புமணி ராமதாஸ் பக்கத்தை மேம்படுத்துவதற்கான நோக்கத்தில் மட்டுமே தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தேன். நானும் அந்தக் கட்டுரையில் பல உள்ளடக்கங்களைச் சேர்த்தேன், அப்போது தான் kanags அந்தப் பக்கத்தில் நான் எழுதிய உள்ளடக்கத்தை சிலவற்றை நீக்கினார், நான் அவரிடம் அவருடைய பேச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பினேன், நான் எழுதிய உள்ளடக்கத்தை ஏன் நீக்குனீர்கள் என்று?? அதற்கு அவர் சான்றில்லை அதனால் நீக்கம் செய்தேன் என்றார். பிறகு நான் மீண்டும் நீக்கப்பட்ட உள்ளடக்கங்களை அதன் வரலாற்று பக்கத்தில் சென்று நகல் எடுத்து மீண்டும் கட்டுரையில் இணைத்தேன், அதில் சிலவற்றிற்கு சான்றுகளை இணைத்தேன். ஆனால் மீண்டும் Kanags அவர்கள் நீக்கம் செய்து விட்டார். மீண்டும் பேச்சுப்பக்கத்தில் கேள்வி எழுப்பினேன், அதற்கு Kanags நீங்கள் இணைத்த சான்று வரிக்கு, வரி அவரை புகழ்வது போலவும் மற்றும் நடுநிலை நோக்கில் இல்லாததாலும் நீக்கம் செய்தேன் என்றார். நான் மீண்டும் அந்த வரிகளை கட்டுரைகளில் இணைத்தேன். அப்போது Kanags என்னை தடை செய்தார் (அப்போது தான் ஒரு பயனரை தடை செய்ய முடியும் என்பதை அறிந்தேன்). பின்பு அந்த பக்கத்தை Antano காப்பிட்டார். அப்போது Kanags மீது எனக்கு வெறுப்பு வந்தது. பின்பு புதியதாக ஒரு கணக்கை உருவாக்கலாம் என எண்ணி புதியதாக ஒரு பயனர் கணக்கை உருவாக்கலாம் என முயற்சி செய்தேன், ஆனால் என்னால் கணக்கை உருவாக்க முடியவில்லை. பின்பு சில நாட்களுக்கு பிறகு Gowtham Sampath கணக்கை உருவாக்கினேன், இதை நான் உருவாக்கியதற்கு காரணம் Kanags ஆல் நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை எப்படியாவது கட்டுரையில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக, சில காலம் விக்கியில் பயணித்தேன். ஒவ்வொரு கட்டுரையாக படித்து வந்தேன் மற்றும் அதில் உள்ள எழுத்து பிழைகளை திருத்தம் செய்தேன், அப்போது ஒரு பயனர் அதற்கு நன்றியைத் தெரிவித்தார். அது எனக்கு பிடித்திருந்தது, அன்று முதல் விக்கியில் பயணிக்க ஆர்வமாக இருந்தது, அந்த காலகட்டத்தில் தான் Kanags மற்றும் Antano செய்யும் துப்புரவு பணிகளை தினமும் கவனித்து வந்தேன், ஒரு கட்டுரையானது நடுநிலையோடு எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நான் புதுப்பயனராக இருக்கும் போது அன்புமணி பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்களை Kanags நீக்கும் போது எனக்கு அவர் செய்தது தவறாகத் தெரிந்தது, ஆனால் இப்போது தான் தெரிகிறது தவறு என்னிடம் தான் உள்ளது என்று, இது நாள் வரை நான் அந்த முயற்சியும் எடுத்ததில்லை, நான் அதன் பின்பு அன்புமணி இராமதாஸ் பக்கத்தில் சில உள்ளடக்கங்களைச் சேர்த்து, அதற்கான சான்றையும் இணைத்தேன், அப்போது Kanags என்னுடைய உள்ளடக்கங்களில் சில திருத்தங்களைச் செய்தார். அப்போது தான் புரிந்துக் கொண்டேன் விக்கிப்பீடியாவின் கொள்கைகளையும், நடுநிலைநோக்குகளையும் அன்று முதல் இன்று வரை நான் அதை கடைப்பிடித்து வருகிறேன். நான் ஒரு கட்டுரையில் உள்ளடக்கத்தை சேர்க்கிறேன் என்றால் அதற்கு கண்டிப்பாக சான்றுகள் இருக்கும், முக்கியமாக நடுநிலையோடு இருக்கும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:24, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]


Dineshkumar Ponnusamy (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 0|0|0)

நியமனம்

Dineshkumar Ponnusamy கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருபவர். விக்கிப்பீடியா கொள்கைகள், நடைமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர். பல்வேறு பரப்புரை முயற்சிகள், விக்கி மாநாடுகளில் கலந்து கொண்டதன் மூலம் உலகளாவிய விக்கிமீடியா இயக்கத்தைப் பற்றியும் நல்ல புரிதல் உள்ளவர். ஆசிய மாதம் போன்ற பல்வேறு முயற்சிகளை ஒருங்கிணைத்தவர். மேற்கோள் சேர்த்தல் முதலிய துப்புரவுப் பணிகளில் தொடர் ஈடுபாடு காட்டியிருப்பவர். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் கிடைப்பது தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்பி முன்மொழிகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:08, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.

ஆதரவு

  1.  ஆதரவு --நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:46, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 15:57, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு----TNSE Mahalingam VNR (பேச்சு) 16:57, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:26, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:57, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.

Balajijagadesh (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 0|0|0)

நியமனம்

Balajijagadesh கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார். பல்வேறு விக்கி மாநாடுகள், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்று விக்கிமீடியா இயக்கத்தைப் பற்றிய சிறந்த புரிதல் உள்ளவர். விக்சனரி, விக்கிமூலம் திட்டங்களில் ஏற்கனவே நிர்வாக அணுக்கம் கொண்டுள்ளார். விக்கிமூலம் திட்டம் முனைப்பாகச் செயல்பட்டு வருவதற்கு இவருடைய நெறிப்படுத்தல் ஒரு மிக முக்கியமான காரணம் ஆகும். அதே போன்ற பங்களிப்பை தமிழ் விக்கிப்பீடியாவிலும் வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் பாலாஜியை நிர்வாகியாக முன்மொழிகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:29, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

எனது செயல்களின் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்ததற்கு நன்றி! இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி.--பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:38, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதம்.--பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:38, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு--நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:47, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 15:56, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு----TNSE Mahalingam VNR (பேச்சு) 16:59, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:26, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு--SRIDHAR G (பேச்சு) 07:05, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு--சிவகார்த்திகேயன் (பேச்சு) 10:57, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.

Neechalkaran (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 0|0|0)

நியமனம்

நீச்சல்காரன் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் விக்கிமீடியா திட்டங்களுக்குச் செழுமையான பங்களிப்புகளை நல்கியவர். இவருடைய பல்வேறு பணிகள் நுட்பம் சார்ந்தவை என்பதால் மீடியாவிக்கி அணுக்கம் முதலியவற்றை நல்கும் நிருவாக அணுக்கம் அவருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இடையில் சில காலம், அப்போதைய தமிழ் விக்கிப்பீடியாவின் மொழி நடை குறித்த கொள்கையுடன் முரண்பட்டு கட்டுரையாக்கப் பங்களிப்பை நிறுத்தி வைத்திருந்தார். எனினும், அந்தக் காலத்திலும் கூட நுட்பப் பங்களிப்புகளை வழங்கி அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றினார். பிரச்சினைகளைத் தனிப்பட எடுத்துக் கொள்ளாமல் பிரித்துப் பார்த்தல், மாற்றுக் கருத்துகளைக் கனிவுடன் முன்வைத்து திறந்த மனதுடன் இணக்க முடிவை ஏற்றுக் கொள்ளும் பண்பு சிறப்பு. இவருக்குத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாக அணுக்கம் வழங்க முன்மொழிகிறேன். --இரவி (பேச்சு) 17:19, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

ஏற்கனவே தானியங்கி வாயிலாகத் துப்புரவு செய்து வருவதாலும், நுட்ப சிக்கல்களைக் களைய ஆர்வம் கொண்டுள்ளதாலும் இந்த அணுக்கத்தைப் பெற, இப்பரிந்துரையை ஏற்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 17:24, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், அடுத்த காலாண்டில் அணுக்கம் வழங்கினாலும் ஏற்கிறேன்-நீச்சல்காரன் (பேச்சு) 17:24, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:59, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--TNSE Mahalingam VNR (பேச்சு) 00:30, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:43, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:14, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:44, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  6.  ஆதரவு--Kanags (பேச்சு) 06:09, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  7.  ஆதரவு-- கட்டுரையில் வார்ப்புருக்கள் , தொழிநுட்ப பிழைகளை எவ்வாறு களைவது என்பதனை மிக தெளிவாக , பொறுமையாக எனக்கு விளக்கியுள்ளார். புதுப்பயனர் போட்டிக்கான ஆயத்த வேலைகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.SRIDHAR G (பேச்சு) 07:02, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  8.  ஆதரவு--சிவகார்த்திகேயன் (பேச்சு) 10:58, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.

நந்தினி கந்தசாமி (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 0|0|0)

நியமனம்

நந்தினி கந்தசாமி கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்கிறார். கட்டுரைப்போட்டியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குள் நுழைந்து விரைவில் விக்கிப்பீடியவைப் பற்றி நல்ல புரிதலுடன் இருப்பவர். பல்வேறு திட்டங்களில் ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்கிறவர். இவருக்கு நல்கும் நிருவாக அணுக்கம் அவருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இவருக்குத் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாக அணுக்கம் வழங்க முன்மொழிகிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:41, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

என்னைப் பரிந்துரைத்த பார்வதிஸ்ரீ அவர்களுக்கு நன்றி. நியமனத்தை நான் ஏற்கிறேன். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:26, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் அணுக்கம் பெற சம்மதம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:26, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

  1.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 05:55, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு-- SRIDHAR G (பேச்சு) 07:03, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:31, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு--சிவகார்த்திகேயன் (பேச்சு) 11:04, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.

Hibayathullah (சனவரி 7, 2019 - சனவரி 14, 2019) (வாக்கு: 0|0|0)

நியமனம்

Hibayathullah தமிழ் விக்கிப்பீடியாவில் நீண்ட காலமாகப் பங்களித்து வருகிறார். ஆசிரியர்களுக்கான பயிற்சியில் பயிற்சி அளிப்பவராகவும், இந்திய அளவில் விக்கிப்பீடியர்களுக்காக நடந்த பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரைப் போன்ற பயனர்களுக்கு நிர்வாகிகள் பள்ளி மூலம் உரிய வழிகாட்டுதலைத் தந்தால், இன்னும் சிறப்பான புரிதலுடனும் துடிப்புடனும் தங்கள் பங்களிப்புகளைத் தொடர்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே, Hibayathullahவுக்கு நிருவாக அணுக்கம் வழங்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 18:15, 7 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நியமனம் ஏற்பு

எனது செயல்களின் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்ததற்கு நன்றி! இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி ஹிபாயத்துல்லா

நிர்வாக அணுக்கத்தை தொடங்க விரும்பும் காலம்

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், உங்கள் நிர்வாக அணுக்கத்தை உடனடியாகப் பெற விரும்புகிறீர்களா அல்லது மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதமா என்று குறிப்பிடுங்கள்.

ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் மூன்று மாதங்கள் காத்திருந்து அடுத்த காலாண்டில் பெற்றுக் கொள்ள சம்மதம். ஹிபாயத்துல்லா

ஆதரவு

  1.  ஆதரவு--TNSE Mahalingam VNR (பேச்சு) 00:31, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  2.  ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 02:42, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  3.  ஆதரவு--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:26, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  4.  ஆதரவு -- சகோதரரின் பணி சிறக்க வாழ்த்துகள்.SRIDHAR G (பேச்சு) 07:04, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]
  5.  ஆதரவு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:16, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு

கேள்விகளும் கருத்துகளும்

கேள்விகளையும் கருத்துகளையும் இங்கு இடலாம்.