பேச்சு:தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பக்கச்சார்புக்குப் பெயர் நடுநிலைமை அல்ல: முறிந்த இணைப்பு திருத்தம்
வரிசை 119: வரிசை 119:
{{ping|5anan27}}, மறுபடியும் ஒருபுறம் செண்டால் அடித்து மறுபுறம் கத்தியால் குத்துகிறீர்கள். நீர்த்துப் போகவில்லை. அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும் வடமொழி ஆண்டுகளை தமிழ் ஆண்டுகளாக ஏற்காதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள். வடமொழி ஆண்டை தமிழாண்டுகளாக ஏற்றுக்கொண்டோரின் தமிழுணர்வுதான் நீர்த்துப் போயுள்ளது. உங்களைப் போன்றவர்களால் தமிழ் வடமொழியின் காலடியில் மண்டியிட வைக்கப்பட்டுள்ளது. இதற்கு செந்தமிழ்த் தெய்வமான முருகனே கூலி கொடுப்பான் என்று சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். --[[பயனர்:Rchennai12|rchennai12]] ([[பயனர் பேச்சு:rchennai12|பேச்சு]]) 17:52, 27 ஏப்ரல் 2017 (UTC)
{{ping|5anan27}}, மறுபடியும் ஒருபுறம் செண்டால் அடித்து மறுபுறம் கத்தியால் குத்துகிறீர்கள். நீர்த்துப் போகவில்லை. அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும் வடமொழி ஆண்டுகளை தமிழ் ஆண்டுகளாக ஏற்காதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள். வடமொழி ஆண்டை தமிழாண்டுகளாக ஏற்றுக்கொண்டோரின் தமிழுணர்வுதான் நீர்த்துப் போயுள்ளது. உங்களைப் போன்றவர்களால் தமிழ் வடமொழியின் காலடியில் மண்டியிட வைக்கப்பட்டுள்ளது. இதற்கு செந்தமிழ்த் தெய்வமான முருகனே கூலி கொடுப்பான் என்று சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். --[[பயனர்:Rchennai12|rchennai12]] ([[பயனர் பேச்சு:rchennai12|பேச்சு]]) 17:52, 27 ஏப்ரல் 2017 (UTC)


::முதலில் ஒன்றை அறியுங்கள் ஐயா. வடமொழி சம்வத்சரப் பெயர்களை தமிழாண்டுகள் என்று [[பேச்சு:தமிழ் ஆண்டுகள்#தலைப்பு மாற்றம், மீண்டும்|நான் ஏற்கவேயில்லை]]. அப்படி ஏற்காதவர்களைக் குறிப்பாகச் சொல்லி எங்கும் இழிவுபடுத்தவும் இல்லை. என் மீது வீண்பழி சுமத்துகிறீர்கள். உண்மையான நடுநிலையாளருக்கு, இக்கட்டுரை சொல்லவருவது என்னவென்று தெளிவாகவே புரியும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வந்தேறிய அறுபது சம்வத்சரப் பெயருக்காகவும், நூறாண்டுகளுக்குள் அபிதான சிந்தாமணியில் வந்த கண்ணன் - நாரதன் கதைக்காகவும், அதற்கும் முன்பு எப்போதோ இருந்து நீடிக்கும் தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் வரலாற்று வகிபாகத்தை - தமிழ் இனத்துக்கு அதன்மீதுள்ள உரிமையை, முற்றாக மறுதலித்துப் புறக்கணிப்பவர் நீங்கள். கிடைக்கின்ற இடைவேளையெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து, தன்னார்வமாக நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது, தமிழுணர்வு நீர்த்துப்போனதாலும் தமிழை வடமொழிக்கு மண்டியிடச்செய்யும் உள்நோக்கத்திலும் தான் என்பது உண்மையானால், தமிழ்த்தெய்வம் மீது ஆணையிட்டுள்ள தங்கள் தீச்சொல் பலிக்கட்டும். நன்றி. --[[பயனர்:5anan27|5anan27]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 16:59, 27 ஏப்ரல் 2017 (UTC)
::முதலில் ஒன்றை அறியுங்கள் ஐயா. வடமொழி சம்வத்சரப் பெயர்களை தமிழாண்டுகள் என்று [[பேச்சு:அறுபது ஆண்டுகள்#தலைப்பு மாற்றம், மீண்டும்|நான் ஏற்கவேயில்லை]]. அப்படி ஏற்காதவர்களைக் குறிப்பாகச் சொல்லி எங்கும் இழிவுபடுத்தவும் இல்லை. என் மீது வீண்பழி சுமத்துகிறீர்கள். உண்மையான நடுநிலையாளருக்கு, இக்கட்டுரை சொல்லவருவது என்னவென்று தெளிவாகவே புரியும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வந்தேறிய அறுபது சம்வத்சரப் பெயருக்காகவும், நூறாண்டுகளுக்குள் அபிதான சிந்தாமணியில் வந்த கண்ணன் - நாரதன் கதைக்காகவும், அதற்கும் முன்பு எப்போதோ இருந்து நீடிக்கும் தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் வரலாற்று வகிபாகத்தை - தமிழ் இனத்துக்கு அதன்மீதுள்ள உரிமையை, முற்றாக மறுதலித்துப் புறக்கணிப்பவர் நீங்கள். கிடைக்கின்ற இடைவேளையெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து, தன்னார்வமாக நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது, தமிழுணர்வு நீர்த்துப்போனதாலும் தமிழை வடமொழிக்கு மண்டியிடச்செய்யும் உள்நோக்கத்திலும் தான் என்பது உண்மையானால், தமிழ்த்தெய்வம் மீது ஆணையிட்டுள்ள தங்கள் தீச்சொல் பலிக்கட்டும். நன்றி. --[[பயனர்:5anan27|5anan27]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 16:59, 27 ஏப்ரல் 2017 (UTC)


==தனிநபர் வலைப்பூ==
==தனிநபர் வலைப்பூ==

17:26, 3 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்


இதற்கும் இந்து புத்தாண்டு முறைமைக்கும் என்ன வித்தியாசம் ??. இதை இந்து புத்தாண்டு என்று அல்லவா இலங்கையில் அனேகமாக குறிப்பிடுவர்  ??. மேலும் சிங்களவர்களும் இந்த தமிழ்ப் புத்தாண்டு முறைமையை தானே பயன்படுத்துகின்றனர். - சுரேன்.


"சூரியன் மேட இராசியுள் புகுவதை இது குறிக்கும்." யாரவு விளக்கம் தர முடியுமா? --Natkeeran 13:38, 14 ஏப்ரல் 2007 (UTC)

இதனை தமிழ்ப் புத்தாண்டு என சொல்வது பொருத்தமாக இருக்காது என்பது என் கருத்தாகும். --டெரன்ஸ் \பேச்சு 14:05, 14 ஏப்ரல் 2007 (UTC)

இந்துக் காலக்கணிப்பு முறையை ஒட்டி இருப்பதால் இதை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது முழுமையாகப் பொருந்தாது தான். ஆனால், தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டாகத் தான் அறியப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள், இசுலாமியர்கள் இதைக் கொண்டாடுகிறார்களா என்பதில் எனக்கு தெளிவில்லை. தமிழ்நாட்டு இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியைப் பின்பற்றக்கூடும். தமிழ்நாட்டுக் கிறித்தவர் குறித்து அறியேன். மாதப் பெயர்கள் தமிழில் இருப்பதால் இதைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சொல்லும் வழக்கம் இருக்கலாம். சமய நம்பிக்கை இல்லாத தமிழர்களும் கூட, குறிப்பாக வேளாண்மை போன்ற துறைகளில், தமிழ் நாட்காட்டியையே பின்பற்றுகிறார்கள். தவிர, தமிழர் வரலாற்று தகவல்கள் பலவும் இந்நாட்காட்டி முறையை ஒட்டி இருப்பது கவனிக்கத்தக்கது. இம்முறையின் தோற்றம் இந்தக் கணிப்பு முறையை ஒட்டி இருந்தாலும் பயன்பாட்டில் தமிழ் நாட்காட்டி என்று கூறப்படுவதற்கு அதிக பொருத்தம் உண்டு. முழுமையாக இதை இந்துப் புத்தாண்டு என்றும் சொல்ல இயலாது. இந்தியாவின் பல மாநிலங்களின் புத்தாண்டுகள் வெவ்வேறு நாட்களில் வருவது கவனிக்கத்தக்கது. தமிழ் இந்துப் புத்தாண்டு என்று சொல்வது பொருந்துமா?--ரவி 14:20, 14 ஏப்ரல் 2007 (UTC)


இந்துக்கள் அல்லாத தமிழர்களும் இதைக் கொண்டாடுவார்கள். குறுப்பாக சமயம் சாராதவர்கள், நாத்திகர்கள். எனவே இந்து என்ற சொல் பொருந்தாது. --Natkeeran 14:27, 14 ஏப்ரல் 2007 (UTC)


தமிழ் காலக்கணிப்பு முறை என்ற ஒன்று இருக்கின்றதா? --Natkeeran 14:26, 14 ஏப்ரல் 2007 (UTC)


எனது கருத்து என்னவென்றால் இது தமிழர் எல்லோரும் கொண்டாடுவதில்லை. மேலும் இதன் ஆரம்பம் தமிழ் சார்ந்ததாக இல்லை இந்தியாவில் ஏனைய மொழியினர் இதைக் கொண்டாடுகின்றனரா? எனக்குத் தெரிய தாய்லாந்திலும் இதே நாளில் கொண்டாட்டம் ஒன்று உள்ளது.--டெரன்ஸ் \பேச்சு 14:50, 14 ஏப்ரல் 2007 (UTC)


சில கருத்துக்கள்

இந்த கட்டுரையில் திருவள்ளுவர் ஆண்டு பற்றி குறிப்பு இல்லை திருவள்ளுவர் நாட்காட்டி தமிழக அரசின் அதிகார பூர்வ நாட்காட்டி என்பதால் அந்த நாட்காட்டியின் முதல் நாள் தை 1 தமிழ் புத்தாண்டு இந்து புத்தாண்டு என்பது வேறு இந்த சுட்டிகளை பார்க்கவும் : http://beta.thehindu.com/news/national/article244197.ece http://www.breakingnewsonline.net/politics/1253-bjp-president-nitin-gadkari-announces-new-team.html இந்து புத்தாண்டு வேறு, கொல்லம் புத்தாண்டு வேறு, இந்திய புத்தாண்டு வேறு http://www.ularal.com/2009/01/asa-aaaaya-aaaaaa/ http://vediceye.blogspot.com/2009/04/blog-post_09.html உள்ள என் மறுமொழிகள் புருனோ மஸ்கரனாஸ் 10:26, 14 ஏப்ரல் 2010 (UTC)

காரணம் என்ன?

இந்த கட்டுரையில் இரண்டு பகுதிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அதுவும் விக்கிப்பயனர் அல்லாத ஒருவரால் நீக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணமும் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடப்பட வில்லை. இதற்கான எந்த விளக்கத்தையும் விக்கி நிர்வாகத்தினர் குறிப்பிடவும் இல்லை. விக்கி நிர்வாகத்தினருக்கு தெரியாமாலா இந்நீக்கம் நடைப்பெற்றுள்ளது? காரணம் என்ன? http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&diff=next&oldid=358709

தமிழ் புத்தாண்டா தமிழ் இந்து புத்தாண்டா?

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கிறித்தவர்கள் ஆங்கிலப்புத்தாண்டையும் இசுலாமியர்கள் ஹிஜிரி ஆண்டையும் கொண்டாடுகின்றனர். இந்துக்களுக்கு என்று இந்திய அளவில் ஒரு புத்தாண்டு கிடையாது. சந்திரனின் போக்கை ஒட்டி தெலுங்கர், கன்னடர், மற்றும் சில மாநிலத்தினர் யுகாதி கொண்டாடுகின்றனர். இதனை தமிழக அரசு தெலுங்குப்புத்தாண்டு என்று அறிவித்து விடுமுறை அளித்துள்ளது. ஆனால் உண்மையில் இது தெலுங்கு பேசும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவது அல்ல. இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் சித்திரை முதல் நாள் இந்துப்புத்தண்டு என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுள்ளது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். இன்று தமிழ்நாட்டில் உள்ள இந்து மக்கள் பலரும் ஆங்கிலப்புத்தாண்டான சனவரி 1ஆம் தேதியும் புத்தாண்டாகக் கொண்டாடி கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர் (அது கிறித்தவரின் புத்தாண்டாக இருந்தாலும் கூட). எனவே முதல் நாள் என்ற வழக்கத்தை பின்பற்றியே கோவில் வழிபாடு சித்திரை முதல் நாள் அமைந்தது என்பது தெளிவு. இது மட்டுமல்லாமல் தமிழர் திருநாள் என்று கூறப்படும் தைப்பொங்கல் கூட உண்மையில் இந்து தமிழர்களால் மட்டுமே கொண்டாடப்படுகின்றது, பிற மதத்தினர் இதைக் கொண்டாடுவதில்லை. இது போக தைப்பொங்கலை குறிக்க எந்த பஞ்சாங்கத்தை திமுக மற்றும் அதன் தோழர்கள் பிற்போக்கானது என்று சாடுகிறார்களோ அந்த பஞ்சாங்கமே இன்னமும் பயன்படுகின்றது. அதாவது, தைப்பொங்கல் இன்றைக்கும் மகர ராசிக்குள் சூரியன் நுழைவதைப் பொருத்தே குறிக்கப்படுகிறது. எனவே இந்த மாற்றம் எந்த அளவில் பகுத்தறிவோடு செய்யப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை.Shaan 20:22, 14 ஏப்ரல் 2010 (UTC)


புத்தாண்டு சமயச் சார்பற்றதாக இருப்பதே நல்லது

உரோமைப் பேரரசு சனவரி முதல் டிசம்பர் வரை என்று ஆண்டைக் கணித்தது. கி.மு. 700இலிருந்தே இவ்வழக்கம் உள்ளது. இன்று உலகெங்கும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கிரகோரியன் நாள்காட்டி (Gregorian Calendar) கிறித்தவ சமயத்திற்கென்று உருவாக்கப்பட்ட நாள்காட்டி அல்ல. கிறித்தவ வழிபாட்டு ஆண்டு (liturgical year) சனவரி முதல்நாள் தொடங்குவதில்லை. மாறாக, 27 நவம்பருக்கும் 3 டிசம்பருக்கும் இடையே தொடங்கும். எனவே சனவரி முதல் தேதி கிறித்தவப் புத்தாண்டு எனல் சரியன்று.

தமிழ் புத்தாண்டு தமிழர் கொண்டாட்டம் என்பதே சரி. தமிழ்க் கிறித்தவர்கள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்; பொங்கலும் கொண்டாடுகிறார்கள். இன்றும்கூட, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் அந்தோனியார் பொங்கல் சிறப்பாக நடைபெறுகிறது (தைப்பொங்கல் காலத்தில்). மேலும், தமிழ்க் கத்தோலிக்க கிறித்தவ வழிபாட்டில் தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா ஆகியவற்றிற்கென சிறப்பு இறைவேண்டல்கள் வழக்கில் உள்ளன.

எனவே, தமிழ் இந்து புத்தாண்டு என்பதைவிட தமிழ்ப் புத்தாண்டு என்பதே அதிகப் பொருத்தமானது என்பது என் கருத்து. --George46 00:00, 15 ஏப்ரல் 2010 (UTC)

ஜார்ஜ்46, தமிழ் கிறித்துவர்கள் தமிழ்புத்தண்டு எந்த மாதம் எந்த நாள் கொண்டாடுகிறார்கள் என்று கூறுகிறீர்கள்?

கட்டுரையில் இடம் பெறச் செய்யலாமா?

  • எனக்கு மின்னஞ்சல் வழியில் வந்த தமிழ்ப்புத்தாண்டு சித்திரை முதல்நாள் என்பதை விளக்கும் 19 சித்திரங்களைக் கட்டுரையில் இடம் பெறச் செய்யலாமா? --Theni.M.Subramani 12:02, 15 ஏப்ரல் 2010 (UTC)
அப்படங்களின் காப்புரிமம் என்ன, அவற்றின் ஆக்குனர் அவற்றை விக்கிக்கு ஏற்ற அளிப்புரிமையின் கீழ் வெளியிட இசைவாரா? ஆம் எனில் பொருத்தமான படங்களை இங்கே நாம் சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:19, 15 ஏப்ரல் 2010 (UTC)

சமூக-பண்பாட்டு மரபுகளை வேரோட்டமாக மாற்றியமைக்க அரசுக்கு உரிமையுண்டா?

தமிழ்ப் புத்தாண்டு தைத்திங்கள் தொடங்குகிறதா, சித்திரைத் திங்கள் தொடங்குகிறதா என்பது குறித்த விவாதம் அதைவிடவும் அடிப்படையான ஒரு கேள்விக்கு நாம் அளிக்கும் பதிலைப் பொறுத்து அமைய வேண்டும் என நினைக்கின்றேன். ஒரு சமுதாயம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கின்ற மரபு அச்சமுதாயத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும்/மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், சித்திரையிலிருந்து தைக்கு மாறுவதால் என்ன நன்மை விளையப்போகிறது?

  • 60 ஆண்டு சுழற்சி வராது
  • தொடர்ச்சியாக ஆண்டு கணக்கிடலாம்
  • தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் திருவள்ளுவருக்கு நினைவாக அமையும்
  • தமிழர் விழாவான பொங்கல் தனிச்சிறப்படையும்

வரலாறு கற்பிக்கும் பாடம் என்ன?

உரோமையில் வழக்கத்திலிருந்த நாள்காட்டி (Roman Calendar) தெளிவாக இல்லை என்று ஜுலியசு சீசர் (Julius Caesar) கி.மு. 45இல் உருவாக்கிய நாள்காட்டி ஜூலியன் நாள்காட்டி என்னும் பெயரில் கி.பி. 1582 வரை வழக்கத்தில் இருந்தது. அப்போது ஐரோப்பாவில் பாப்பரசர்களின் (Popes) செல்வாக்கு அதிகமாக இருந்தது. 13ஆம் கிரகரி (Pope Gregory XIII) என்னும் பாப்பரசர் இயேசு கிறித்து உயிர்த்தெழுந்த விழாவை எந்த ஞாயிறு சிறப்பிப்பது என்பது குறித்து எழுந்த குழப்பத்தைத் தீர்க்க எண்ணி, ஜூலியன் நாள்காட்டியைத் திருத்தினார். வானவியல் மற்றும் வரலாற்று அறிஞர்களின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே அச்சீர்திருத்தம் கொணரப்பட்டது. அந்தப் புதிய முறை கிரகோரியன் நாள்காட்டி (Gregorian Calendar) என்று அழைக்கப்படலாயிற்று.

1582, பெப்ருவரி 4ஆம் நாள் வியாழன். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை பெப்ருவரி 15 என்று கணக்கிடப்பட்டது. இவ்வாறு 10 நாட்கள் காணாமற் போயின. கத்தோலிக்க கிறித்தவ நாடுகள் இச்சீர்திருத்தத்தை உடனே ஏற்றுக்கொண்டன. ஆனால் புராட்டஸ்டாண்டு நாடுகள் மாற்றத்தை ஏற்கத் தயங்கின. இங்கிலாந்து 1752இல் தான் புதிய நாள்காட்டி முறையை ஏற்றது. உருசிய நாடு அக்டோபர் புரட்சிக்குப் பின்னரே (1917) அடுத்த ஆண்டிலிருந்து கிரகோரியன் நாள்காட்டியை ஏற்றது.

பிரஞ்சு நாட்டில் புரட்சி ஏற்பட்டு, முடியரசு ஒழிக்கப்பட்ட பின் (செப்டம்பர் 21, 1792), 1805 வரை புத்தாண்டு செப்டம்பர் 21இல் கொண்டாடப்பட்டது.

இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிவது என்ன? தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்குப் பதிலாகத் தைமாதம் கொண்டாட போதுமான அடிப்படை இருப்பதாகத் தெரிகிறது. சீனா, வியத்நாம், ஜப்பான் போன்ற கீழை நாடுகள் சனவரி-பெப்ருவரியில் தான் கொண்டாடுகின்றன. இந்தியாவிலும் மாநிலத்திற்கு மாநில வேறுபாடுகள் உண்டு. மறைமலை அடிகள் உட்பட பல தமிழறிஞர்கள் 1921இல் திருவள்ளுவர் ஆண்டை பரிந்துரைத்துள்ளார்கள்.

திருவள்ளுவர் கி.மு. 31இல் பிறந்தார் என்பதற்கு வரலாற்று அடிப்படை இல்லாமல் இருக்கலாம். ஆனால் புராதன (legendary) கணிப்பு முறை வேறு நாடுகளிலும்/கலாச்சாரங்களிலும் கூட உண்டு.

பயனர் ஒருவர் கிறித்தவர்கள் புத்தாண்டு எப்போது கொண்டாடுகிறார்கள் என்று கேட்டிருந்தார். மரபுப் படி சித்திரை முதல் நாள்தான். ஆனால் தைபிறந்தால் வழிபிறக்கும் என்பதால் பொங்கலை ஒட்டி புத்தாண்டு கொண்டாடுவதற்கு உடன்பாடு இருக்கும் என்பதே என் கருத்து. --George46 17:03, 15 ஏப்ரல் 2010 (UTC)

இப்போதும் தொடர்ச்சியாகத் தான் தமிழ் ஆண்டுகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் பஞ்சாங்கத்தில் பல ஆண்டுகளாகவே சக வருடமும், திருவள்ளுவர் வருடமும், கலியுக ஆண்டும், ஏன் பிற்பஞ்சத்தின் பிறப்பிலிருந்து இப்போது என்ன வருடம் என்பதுவும் கூட குறிக்கப்பட்டு வந்துள்ளன. பிரபவ போன்ற ஆண்டுப்பெயர்கள் சீனர்கள் ஆண்டுகளுக்கு பூனையாண்டு புலியாண்டு என்று வைப்பதைப் போலத்தான். கல்வெட்டு போன்றவற்றில் தெளிவாக ஆண்டு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அது போலவே திருமணம், கோவில் விழாக்கள் போன்றவற்றின் அழைப்பிதழ்களிலும் கூட ஆண்டு எண்கள் குறிப்பப்படுகின்றன (பொதுவாக சக வருடம்).

தை முதல் தேதி சமய ரீதியாக பொதுவானது என்பதில் உள்ள பிழை என்னவென்றால் அந்த தை முதல் நாள் கணக்கிடப்படுவதே இந்துக்களின் பஞ்சாங்கத்தின்படி தான். தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதே நாம் திரூவள்ளுவருக்கு செய்யும் சிறப்பாக அமையும். Shaan 16:23, 16 ஏப்ரல் 2010 (UTC)

தமிழ்ப் புத்தாண்டு விளக்கப்படங்கள்

தமிழ்ப் புத்தாண்டு கட்டுரையில் எனக்கு மின்னஞ்சலில் வந்த கேலிச்சித்திர வடிவிலான 19 படங்கள் தமிழ்ப் புத்தாண்டு விளக்கப்படங்கள் எனும் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் தேவையில்லை என்று கருதினால் இதை நீக்கி விடலாம். எனக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை.--Theni.M.Subramani 18:36, 15 ஏப்ரல் 2010 (UTC)

இந்தப் படங்கள் விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியங்களுக்கு ஒவ்வாதவை. நீக்கிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 21:38, 15 ஏப்ரல் 2010 (UTC)
திரு சுப்பிரமணி, அந்த படத்தில் பிழை இருக்கிறது. சூரியன் உச்சிக்கு வரும் நாளை ஒட்டி தமிழ் புத்தாண்டு கணக்கிடப்படுவது அல்ல. சூரியன் எந்த நாளில் முதல் ராசியான மேட ராசிக்குள் வருகிறதோ அன்று தான் சித்திரை முதல் நாள், அதுவே இதுவரை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அந்த படம் ஒவ்வாதது என்பது சரியே. கனகு கூறியபடி அதை நீக்கிவிடுகிறேன். Shaan 16:31, 16 ஏப்ரல் 2010 (UTC)

கட்டுரையை ஓரளவு சீர் செய்துள்ளேன். நடுநிலைமை கேள்விக்குறி என்ற எச்சரிக்கை செய்தியை எடுத்து விடலாமா? :வின்சு 10:01, 10 சூன் 2011 (UTC)[பதிலளி]

புரியவில்லை

இந்த பேச்சுப்பக்கத்தின் அடிப்படையே எனக்கு புரியவில்லை.

எந்த மதத்தவர் கொண்டாடினால் என்ன?

எந்த மொழியினர் கொண்டாடினால் என்ன?

கொண்டாடப்படும் பெயர் தமிழ் புத்தாண்டு என்பது தானே. அதன்படி தமிழ் புத்தாண்டு என்பதே சரி. வேறு எந்த புத்தாண்டு தலைப்புக்கும் இப்பிரச்சினை எழவில்லை. இங்கு மட்டும் ஏன்?

நடுநிலை தண்மை வார்ப்புரு இக்கட்டுரையை கேவலப்படுத்துவது போல் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 12:23, 24 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ்ப் புத்தாண்டு குறித்த ஒரு இணைப்பு இங்கே -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:25, 12 ஏப்ரல் 2012 (UTC)


சித்திரை 1 தமிழ் புத்தாண்டா?

இவை தான் உண்மையான தமிழ் மாதங்கள் சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை.... சூரியன் மகர ரேகை ,கடக ரேகை என மாறும் நிலைகளை வைத்து தான் ஆண்டின் பிறப்பு தீர்மானிக்கப்படுகிறது.சித்திரை முதல் பங்குனி வரை அழைக்கப்படும் மாதங்கள் சைத்ரா முதல் பகுனா வரை உள்ள சம்ஸ்கிருத மாதங்களே. தமிழ் இலக்கியத்திற்கும் இந்த மாதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவை இடையில் திணிக்கப்பட்ட ஒன்றே. இந்த தவற்றை முதலே உணர்ந்த தமிழறிஞர்கள் 1921 -ம் ஆண்டிலேயே ஒன்றுகூடி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென முடிவெடுத்தனர். மேலும் சுறவம் (தை) முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பாகவும் கொண்டாட முடிவெடுத்தனர். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகி பண்டிகை கொண்டாடுகிறோம். போக்கி என்பதன் மருவலே போகி ஆனது. பழையனவற்றை கழிக்கும் ஒரு நாளாக இதை தமிழர்கள் காலம் காலமாய் கொண்டாடுகிறார்கள். பழையனவற்றை மார்கழியின் கடைசி நாளில் கழித்தால், தை முதலாம் தேதியன்று புதிதாக எதையோ துவங்குவதாகத்தானே ஆகும்.சமூக மற்றும் வரலாற்றியல் ரீதியாக இந்த நாளில் வீட்டை புதுப்பித்து வர்ணம் பூசி, தோரணம் கட்டி, சர்க்கரைப் பொங்கலிடுதல் என அடிப்படையில் ஒரு கொண்டாட்ட தினமாகவே இருந்து வருகிறது. வேறெந்த மாத துவக்கத்தின் முதல் நாளுக்கும் இத்தகைய கொண்டாட்டஙக்ள் இல்லை என்பதை மனதில் கொள்ளவும். நவீன அறிவியலின் படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மூன்றாம் தேதிதான் பூமி சூரியனுக்கு மிக அருகில் வருகிறது. சூரியனை நெருங்கி வரும் இந்த நாளில் தமிழர்கள் சூரியனுக்கு பொங்கலிடுவதையும் பொருத்திப் பார்க்க வேண்டும். இது தற்செயலாக நிகழ்கிறதா இல்லை நமது முன்னோர்கள் தீர ஆராய்ந்து இந்த நாளை ஆண்டின் துவக்கமாக அமைத்திருக்கலாம்.தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.இந்த ஏப்ரல் 13 அன்று தொடங்கும் சித்திரை மாதம் ஆரியம் புகுத்திய ஆண்டின் பெயர் நந்தன. இது மட்டுமல்ல,இந்த வரிசையில் உள்ள ஆண்டுகளின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.செம்மொழித்தமிழில் பெயர்கள் அமையாத ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகள் ஆகும்? கிறிஸ்துவுக்கும் பின் எனக் கணக்கிட்டு 2012 என்று கூறிவிட முடியும். கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் மூத்தவர் வள்ளுவர்,(அதாவது கி.மு.31) என்று தமிழ் அறிஞர்கள் வகுத்தபடி 2012 உடன் 31 அய் கூட்டி 2048 அய் திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்லி விட முடியும். ஆனால், இந்த நந்தன எத்தனையாவது நந்தன ஆண்டு என்று சொல்லமுடியுமா?

பெயரில் தமிழ் இல்லை;கணக்கிலும் ஒழுங்கில்லை,அப்புறம் என்ன தமிழ் புத்தாண்டு? யாராவது விளக்க இயலுமா?

பக்கச்சார்புக்குப் பெயர் நடுநிலைமை அல்ல

@Rchennai12:, முதலில் ஐபி முகவரியை விட்டு நேரடியாகவே திருத்தம் செய்தமைக்கு நன்றி. இது தமிழ்ப்புத்தாண்டு பற்றிய கட்டுரை. அறுபது வடமொழி ஆண்டுகள் பற்றிய விடயங்களும் அவை தமிழில் இடைச்செருகல் என்பதும் விரிவாக தனிக்கட்டுரையில் பேசப்பட்டிருக்கிறது. இங்கும் அது முதன்மைக்கட்டுரையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தைப்புத்தாண்டும் அது 'உருவான' வரலாறும் இங்கும் புறக்கணிக்கப்படாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது. பின்பு ஒருதலையான கருத்து என்று எதைச் சொல்கிறீர்கள்? சனாதனவாதிகள் என்று யார் மீது விரல் சுட்டுகிறீர்கள்? வடமொழி ஆண்டைத் திணிப்பதாகக் கருதுகின்ற அந்தத் தமிழறிஞர்கள் யார்? சுயபிடித்தங்களுக்கு விக்கிப்பீடியாவில் இடமில்லை. மேற்கோள்களோ ஆதாரமோ இல்லாத வரிகளைச் சேர்த்துவிட்டு அவற்றை நடுநிலைமை என்று உரிமைகோருவது எவ்விதத்திலும் தகாது. உங்கள் திருத்தங்களை மீண்டும் மீளமைக்கிறேன். --5anan27 (பேச்சு) 18:18, 25 ஏப்ரல் 2017 (UTC)

@5anan27:, அவை இடைச்செருகல் என்றால் அதை இங்கு குறிப்பிடுவதில் என்ன தயக்கம்? அதை மறைத்து நீர்த்துப் போயின என்று சொல்வது யாரை ஆதரிப்பதற்காக? தமிழ்ப் புத்தாண்டு என்று தொகுக்கப்பட்ட பக்கத்தில் அது தொடர்பான இடைச்செருகல் என்ற தகவலும் சேர்ந்திருப்பதும் தானே முறை. அதைக் குறிப்பிட்டு பதிவைத் திருத்தங்கள். நீர்த்துப்போயின என்ற சொல்லையும் நீக்குங்கள். என்னுடைய திருத்தங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்னுடைய கருத்து தனிப்பட்ட கருத்து அல்ல. நீங்கள் ஏற்றுக்கொள்ளாத கருத்துக்கு தனிப்பட்ட கருத்து என்று முலாம் பூசி ஒதுக்குவது அறிவுடமையாகாது. --rchennai12 (பேச்சு) 14:36, 26 ஏப்ரல் 2017 (UTC)

"நீர்த்துப்போயின" என்ற சொல் மீது இத்தனை கோபம் ஏன்? குறித்ததோர் விடயம் எதிர்வாதங்களால் முழுக்க முழுக்க சோடிக்கப்பட்ட ஒன்று என்பது நிரூபிக்கப்பட்டால் அவ்வாதம் பலமிழந்துபோனது என்பதைக் குறிப்பிடுவதில் தவறொன்றும் இல்லை, அல்லவா? நீர்த்தல் என்றால் செறிவுகுறைதல் என்றே பொருள். முற்றாக மறைந்தே போனது என்று சொல்லவில்லை. வருந்தவேண்டாம். தைப்புத்தாண்டு விவாதத்தில் சம்வத்சரப் பெயர்களையும் இணைத்துக்கொள்ளலாம் அறுபது ஆண்டுகள் இடைச்செருகல் என்பதை இங்கு குறிப்பிடுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆம். இணைத்தும் விட்டேன். --5anan27 (பேச்சு) 16:00, 26 ஏப்ரல் 2017 (UTC)

@5anan27:, மறுபடியும் ஒருபுறம் செண்டால் அடித்து மறுபுறம் கத்தியால் குத்துகிறீர்கள். நீர்த்துப் போகவில்லை. அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும் வடமொழி ஆண்டுகளை தமிழ் ஆண்டுகளாக ஏற்காதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள். வடமொழி ஆண்டை தமிழாண்டுகளாக ஏற்றுக்கொண்டோரின் தமிழுணர்வுதான் நீர்த்துப் போயுள்ளது. உங்களைப் போன்றவர்களால் தமிழ் வடமொழியின் காலடியில் மண்டியிட வைக்கப்பட்டுள்ளது. இதற்கு செந்தமிழ்த் தெய்வமான முருகனே கூலி கொடுப்பான் என்று சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். --rchennai12 (பேச்சு) 17:52, 27 ஏப்ரல் 2017 (UTC)

முதலில் ஒன்றை அறியுங்கள் ஐயா. வடமொழி சம்வத்சரப் பெயர்களை தமிழாண்டுகள் என்று நான் ஏற்கவேயில்லை. அப்படி ஏற்காதவர்களைக் குறிப்பாகச் சொல்லி எங்கும் இழிவுபடுத்தவும் இல்லை. என் மீது வீண்பழி சுமத்துகிறீர்கள். உண்மையான நடுநிலையாளருக்கு, இக்கட்டுரை சொல்லவருவது என்னவென்று தெளிவாகவே புரியும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வந்தேறிய அறுபது சம்வத்சரப் பெயருக்காகவும், நூறாண்டுகளுக்குள் அபிதான சிந்தாமணியில் வந்த கண்ணன் - நாரதன் கதைக்காகவும், அதற்கும் முன்பு எப்போதோ இருந்து நீடிக்கும் தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் வரலாற்று வகிபாகத்தை - தமிழ் இனத்துக்கு அதன்மீதுள்ள உரிமையை, முற்றாக மறுதலித்துப் புறக்கணிப்பவர் நீங்கள். கிடைக்கின்ற இடைவேளையெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து, தன்னார்வமாக நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது, தமிழுணர்வு நீர்த்துப்போனதாலும் தமிழை வடமொழிக்கு மண்டியிடச்செய்யும் உள்நோக்கத்திலும் தான் என்பது உண்மையானால், தமிழ்த்தெய்வம் மீது ஆணையிட்டுள்ள தங்கள் தீச்சொல் பலிக்கட்டும். நன்றி. --5anan27 (பேச்சு) 16:59, 27 ஏப்ரல் 2017 (UTC)

தனிநபர் வலைப்பூ

@5anan27: “அறிவியலும் சித்திரையும்” என்ற 20 ஆவது மேற்கோளானது தனிநபர் வலைப்பூவாக உள்ளது (\\"அறிவியலும் சித்திரையும்". 11 மார்ச்சு 2013. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)\\). தனிநபர் வலைப்பூ தளங்களை மேற்கோளாகச் சுட்டுவது விக்கிக் கொள்கைக்குப் புறம்பானது. அதனால் அதனை நீக்கிவிடுகிறேன். வேறு தகுந்த மேற்கோளை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:51, 27 ஏப்ரல் 2017 (UTC)

@Booradleyp1: உரிய சான்றுகள் சேர்த்து சில குழப்பகரமான வரிகளை மாற்றியமைத்திருக்கிறேன். இப்போது சரியா என்று பாருங்கள். நன்றி. --5anan27 (பேச்சு) 17:56, 27 ஏப்ரல் 2017 (UTC)