வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 114: வரிசை 114:
* [http://www.sun.in Sun Group] {{en icon}}
* [http://www.sun.in Sun Group] {{en icon}}


{{வார்ப்புரு:TV program order}}
{{வார்ப்புரு:TV program order
|Broadcasting station = [[சன் தொலைக்காட்சி]] :
|Broadcasting slot = [[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்|திங்கள் - சனிக்கிழமை இரவு 9:30 மணி தொடர்கள்]]
|Previous program = செல்லமே
|Title = வாணி ராணி
|Next program = [[சந்திரகுமாரி]]
}}


{{சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
{{சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}

17:08, 24 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

வாணி ராணி
வகைநாடகம்
உருவாக்கம்ராதிகா சரத்குமார்
எழுத்துராதிகா சரத்குமார்
இயக்கம்ஓ. என். ரத்தினம்
படைப்பு இயக்குனர்ராதிகா சரத்குமார்
நடிப்புராதிகா சரத்குமார்
வேணு அர்விந்த்
பப்லு பிருத்விராஜ்
நீலிமா ராணி
அருண் குமார்
முகப்பு இசைசத்யா
முகப்பிசை"ஒரு பறவை" -சக்திஸ்ரீ கோபாலன்
பிண்ணனி இசைசத்யா & தரன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்1,743
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஎஸ். சங்கர் & சண்முகம் பிரசாத்
தயாரிப்பாளர்கள்ராதிகா சரத்குமார்
படப்பிடிப்பு தளங்கள்இந்தியா
தொகுப்புகே. கணேஷ் & வி. டி. விஜயன்
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராடன் மீடியா
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
படவடிவம்ஹெச்டி (HD)
ஒளிபரப்பான காலம்21 சனவரி 2013 (2013-01-21) –
8 திசம்பர் 2018 (2018-12-08)
Chronology
முன்னர்செல்லமே
பின்னர்சந்திரகுமாரி

வாணி ராணி என்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நெடுந்தொடர். இது நடிகை ராதிகாவின் ராடன் மீடியாவின் தயாரிப்பில் ஜனவரி 21, 2013 முதல் திசம்பர் 8, 2018 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிறுவனத்தின் தயாரிப்பான ’செல்லமே’ தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இத்தொடர் ஒளிபரப்பானது, தற்பொழுது இந்த தொடருக்கு பதிலாக என்ற சந்திரகுமாரி சரித்திட தொடர் ஒளிப்பரப்பாகின்றது.

சித்தி, அண்ணாமலை, அரசி தொடர்களில் இரட்டை வேடத்தில் நடித்த ராதிகா, நான்காவது முறையாக வாணி ராணி தொடரில் இரட்டை வேடத்தில் நடித்தார், இவருடன் சேர்ந்து வேணு அர்விந்த், பப்லு பிருத்விராஜ், நீலிமா ராணி, அருண் குமார், விக்கி கிரிஷ், மானச் சவளி, நவ்யா, நேஹா, சாந்தி வில்லியம்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[1] [2][3]

இந்த தொடர் 2014 முதல் சன் குடும்பம் விருதுளில் பல பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு பல விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிக பகுதிகளில் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமை இந்தொடரையே சேரும்.

கதைச் சுருக்கம்

அக்கா தங்கையான வாணி ராணி அண்ணன் தம்பிகளான சாமிநாதன் பூமிநாதனை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள். அக்கா வாணி பெரிய வழக்கறிஞராக இருக்க, தங்கை ராணியோ படிப்பு ஏறாத பெண்ணாக அதே சமயம் குடும்ப நிர்வாகத்தில் கெட்டிக்காரியாகவும், அப்பாவியாகவும் இருக்கிறார்.

கூட்டுக் குடும்பமாக வாழும் இவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும், இருவருக்கும் புகுந்த வீட்டில் ஒரு சிக்கல் வருகிறது. அந்தச் சிக்கலால் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சனை உருவாகி அதன் மூலம் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து ஒரே வீட்டில், ஒரே குடும்பமாகவே வாழும், இவர்களது வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் தான் வாணி ராணி மெகா தொடரின் கதை.

நடிகர்கள்

  • ராதிகா - வாணி/ராணி
  • வேணு அரவிந்த் - பூமிநாதன்
  • பப்லு பிருத்விராஜ் - சுவாமிநாதன்

ராணி குடும்பம்

  • மானச் சவளி - சரவணன் பூமிநாதன் (மகன்)
  • நிகிலா ராவ் → நிரஞ்சனி அகர்வால் - செல்வி ராஜேஷ் (மகள்)
  • நேஹா - தேன்மொழி பூமிநாதன் (மகள்)
  • சுருதி சண்முக பிரியா - பவித்ரா சரவணன் (மருமகள்)

வாணி குடும்பம்

  • அருண் குமார் - சூர்யா நாராயணன் (மகன்)
  • விக்கி கிரிஷ் - கெளதம் கிருஷ்ணன் (மகன்)
  • நீலிமா ராணி - டிம்பில் சூர்யா நாராயணன் (மருமகள்)
  • நவ்யா - பூஜா கெளதம் கிருஷ்ணன் (மருமகள்)
  • சாந்தி வில்லியம்ஸ் - அங்கயர் கன்னி (பூமிநாதன், ஜோதியின் தாய் மற்றும் சுவாமிநாதனின் மாற்றான் தாய்)

ஜோதி குடும்பம்

  • ரவிக்குமார் - மாணிக்கம்
  • சிவாஜி மனோகர் - மனோகர் மாணிக்கம்
  • காயத்ரி → ஜோதி ரெட்டி → ருபா ஸ்ரீ → பிரேமி வெங்கட் - ஜோதி மனோகர்

துணை காதாபாத்திரம்

  • மமீலா ஷைலாஜா பிரியா - அகிலாண்டேஸ்வரி
  • ராஜேந்திரன் - பொன்னம்பலம்
  • ஸ்ரீ லேகா - அலமேலு பொன்னம்பலம்
  • ஜோக்கர் துளசி - பாயிண்ட்
  • ராமேஸ்வரம் - சதாசிவம்
  • தரணி - மைதிலி
  • முரளி கிரிஷ் - ஆட்டோ ஆறுமுகம்

மொழிமாற்றம் & மறுதயாரிப்பு

  • இந்த தொடர் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் மொழி மற்றம் செய்யப்பட்டு சில பகுதிகளுடன் நிறுத்தப்பட்டது.
  • இந்த தொடர் ஹிந்தி மொழியில் வாணி ராணி என்ற பெயரில் மறு தயாரிப்பு செய்யப்பட்டு & தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
  • பெங்காலி மொழியில் சீமரேகா என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது, இந்த தொடரின் கதை மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒளிபரப்பு

இவற்றை பார்க்க

ஆதாரங்கள்

  1. Krishnamoorthy, Mohan (2018-12-07). "Radhika Tweet : ரசிகர்களை கதற விட்ட ராதிகா". Kalakkal Cinema (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-07.
  2. "சன்டிவியில் வாணி ராணி 1000" (in ta). tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/television/radhika-s-vani-rani-tv-serial-1000th-episode-041014.html. 
  3. "Vani Rani completes 1700 episodes" (in en). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/vani-rani-completes-1700-episodes/articleshow/57493465.cms. 

வெளி இணைப்புகள்

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனிக்கிழமை இரவு 9:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி வாணி ராணி அடுத்த நிகழ்ச்சி
செல்லமே சந்திரகுமாரி